புதினா ஒரு மருத்துவ மூலிகை.
புதினாMint(Puthina)Leaves புதினா ஒரு மருத்துவ மூலிகையாகும். இது வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல், செரியாமை முதலிய தொல்லைகளுக்கு வீட்டு மருந்தாக பயன்படுத்தலாம்.கறிவேப்பிலை மற்றும் கொத்துமல்லியைப் போலவே புதினாவும் உணவுக்கு மண மூட்டுவதற்காகப் பயன் படுத்தப்படுகிறது.நல்ல வாசம் மட்டும் அல்ல,16 பல்வேறு ஊட்டச்சத்துகளும் நிறைந்தது. இதில், ஆன்டி ஆக்சிடெண்ட்ஸ் மற்றும் பைட்டோ நியூட்ரியன்ஸ் உள்ளது. மேலும் பாஸ்பரஸ், கால்ஷியம் உள்ளது. வைட்டமின் சி, டி, இ, ஏ போன்ற நோய் எதிர்ப்பு காரணிகளும் உள்ளன. இது செரிமானம் மற்றும் வாய் துர்நாற்றம் போக்கும். குளிர்ச்சி தன்மையை கொண்டது. புதினா. இதை வாயில் போட்டு மென்றால், வாய் துர்நாற்றம் நீங்கி விடும்.தினமும் உணவில் புதினாவை சேர்த்து கொள்வதால், கோடையில் ஏற்படும் செரிமான கோளாறு மற்றும் மலம் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் ஆகியவற்றுக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
0
Leave a Reply