மக்களை நேசித்த மகராசி கமலா நேரு,
37 வயது வரை தான் வாழ்வு வாய்த்தது இந்த அன்பு மனம் கொண்ட பெண்ணிற்கு. இன்னும் சில வருடங்களாவது காலம் கருணை காட்டியிருக்கலாம்.கமலா நேரு, உடல்நலம் நலிவுற்றவர். எனினும் மனநலனுக்கோ உள்ள உறுதிக்கோ எக்குறையும் இல்லை.உயர் சிகிச்சைக்காக வெளிநாடு கிளம்பும் முன் , காந்தியைச் சந்தித்து ஒரு வாக்குறுதியைப் பெறுகிறார். தான் திரும்பி வர மாட்டோம் என்று அவர் உள் மனதின் குரல் சொல்லியிருக்கலாம்.
சுயராஜ் பவனில் , ஒரு சிறிய மருந்தகத்தைக் கமலா நேரு தொடங்கியிருந்தார். அதை மருத்துவமனையாக்கி மக்களுக்குச் சேவை செய்ய வேண்டுமென்பது அவர் கனவு. எனவே, கிளம்பும் முன் ,, தான் ஒரு வேளை வராமல் போனாலும் அதை மருத்துவமனையாக மாற்றி விட வேண்டும் என்ற சொல்லுறுதியைக் காந்தியிடம் கேட்டுப் பெற்ற பிறகே சிகிச்சைக்குக் கிளம்புகிறார். காந்தியும் தன் சக்திக்கு உட்பட்டு அதை நிறைவேற்றுவதாக வாக்களிக்கிறார்.
1939 பிப்ரவரி 19 ஆம் தேதி அதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது காந்தியே அதை முன்னின்று நடத்தினார்.அது குறித்து மனதைத் தொடும் அழகான குறிப்பையும் காந்தி ஹரிஜன் இதழில் எழுதினார். Woman of spritual beauty என்று.எவ்வளவு பெரிய மருத்துவமனை. இப்படியும் மனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.
0
Leave a Reply