காலிஃப்ளவர் சப்பாத்தி
தேவையான பொருட்கள் - கோதுமை மாவு 2 கப். நெய் 2 டீஸ்பூன், உப்பு - அரை டீஸ்பூன்,
பூரணத்துக்கு: பொடியாக துருவிய காலிஃப்ளவர் - கப், தேங்காய் துருவல் ஒரு டீஸ்பூன், துருவிய வெங்காயம் 2 டீஸ்பூன். பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய மல்லி -2 டீஸ்பூன், மஞ்சள்தூள் -அரை டீஸ்பூன், சீரகத்தூள் ஒரு டீஸ்பூன். உப்பு -தேவையான அளவு.
செய்முறை - மாவை நெய். உப்பு சேர்த்து பிசையுங்கள். காலி ஃப்ளவருடன் வெங்காயம். உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து பிசைந்து அழுத்தி வையுங்கள். 10 நிமிடம் கழித்து நன்கு பிழிந்தெடுங்கள். அதனுடன் மற்ற பொருட்களையும் சேர்த்து கலந்து வையுங்கள். இதுதான் பூரணம்.
பிறகு கோதுமை மாவை நெய், உப்பு சேர்த்து பிசைந்து, முள்ளங்கி சப்பாத்தி போலவே செய்து சுட்டெடுங்கள். ருசியான மாலை டிபன்.
0
Leave a Reply