புற்று நோயை தடுக்க மது, மாமிசத்தைத் தவிர்த்துவிட்டு, பால் குடிப்பது நல்லது.
உலகை அச்சுறுத்தும் நோய்களில் ஒன்று புற்றுநோய்.அதிலும் குடல் புற்றுநோய் என்பது மிகவும் அபாயகரமா னது. அதிலிருந்து தப்பிப்பதற்கு சிறந்த உபாயத்தை இங்கிலாந்து ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.ஏறத்தாழ 5,42,000 மக்களைக் கொண்டு ஓர் ஆய்வுநடத்தப்பட்டது.ஒவ்வொருவருடையஉணவுப்பழக்கம்பற்றியும்கேட்டறியப்பட்டுஆவணப்படுத்தப்பட்டது.அனைவரும் 16 ஆண்டுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட் டனர். அதில், 12,259 பேருக்கு குடல் புற்றுநோய் ஏற்பட்டது தெரியவந்தது. இவர்களுக்கு மட்டும் எப்படி வந்தது ? பிறருக்கு ஏன் வரவில்லை என்பது குறித்து ஆராயப்பட்டது.
இதிலிருந்து தினமும் 300 மில்லி கிராம் கால்சியம் எடுத்துக்கொண்டு வருபவர்களுக் குக் குடல் புற்றுநோய் வரும் வாய்ப்பு 17 சதவீதம் குறையும் என்று கண்டறிந்துள்ளனர். தின மும் ஒரு குவளை பால் சாப்பிட்டால் இந்தச் சுண்ணாம்புச் சத்து நமக்கு கிடைத்துவிடும்.பால் சாப்பிடப் பிடிக்காதவர்கள் டோபு அல்லது பிரக்கோலி போன்ற காய்கறிகள் மூலம் இந்த கால்சியத்தைப் பெறலாம்.அதேபோல இந்த ஆய் வில் மற்றொரு விஷயமும் தெரியவந்துள்ளது.
தினமும் 100 கிராம் ரெட் மீட் அதாவது ஆடு, பன்றி, மாடு, முயல் ஆகிய விலங்குகளின் மாமிசம் சாப்பிடுவது இந்தப் புற்றுநோய்வரும் வாய்ப்பை 29 சதவீதம் அதிகரிக்கிறது.தினமும் 200 கிராம் மது குடிப்பது புற்றுநோய் வரும் வாய்ப்பை 15 சதவீதம் அதி கரிக்கிறது. ஆகவே மது, மாமிசத்தைத் தவிர்த்துவிட்டு, பால் குடிப்பது நல்லது என்று ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
0
Leave a Reply