25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


இந்துக்களின் ஆன்மீக நம்பிக்கை

Feb 13, 2026

பெண்கள் இடது பக்கம் மூக்கு குத்தி இருந்தால் …

பொதுவாக பெண்களுக்கு வலது பக்கம் மூக்கு குத்துவது சாஸ்திர ரீதியாகவும், உடல்நல ரீதியாகவும் சிறந்ததாகக் கூறப்படுகிறது. ஏனெனில் இடப்பக்கம் மூக்கு குத்துவதுதான் அதிக பலன்களை தருகிறதாம். குறிப்பாக, இடது பக்கத்தில் முக்கு குத்திக் கொள்வதால், பெண்களின் வலது பக்க முளை சிறப்பாக இயங்குகிறது.இடப்பக்கத்தில் குத்தி கொள்வதால், பெண்ணின் இனப்பெருக்க உறுப்புகளும் சீராக செயல்படுகிறது. மூக்கு குத்தியுள்ள பெண்களுக்கு குறைவான பிரசவ வலியை அனுபவிக்கிறார்களாம். இதனால், குழந்தை சிரமமின்றி எளிதாக பிறக்கும் என்கிறார்கள். அதேபோல மாதவிடாய் பிரச்சனைகளின் அவதியும் குறைகிறதாம்.

Feb 06, 2026

தம்பதிகளான பெருமாள் திருப்பதி மலை மீதும், தாயார் ஏன் கீழே உள்ளார்?.

பெருமாளுக்கும்பத்மாவதி தாயிருக்கும் திருமணம் முடிந்து, பத்மாவதி தாயார், பெருமிதமாக தனது சீர்வரிசைகளை பெருமாளிடம் காட்டினார். உங்களுக்கு ஏதாவது குறை இருந்தால் சொல்லுங்கள் என்றாராம். பெருமாளோ இதில் எனக்குப் பிடித்த கறிவேப்பிலை, கனகாம்பரம் இரண்டு பொருட்கள் இல்லை என்றாராம்.தாய் வீட்டிற்கு சென்று இரு பொருட்களையும் கொண்டு வருகிறேன் என்று தாயார்கூறியுள்ளார். அதற்குப் பெருமாள் சரி, இருட்டுவதற்கு முன் இங்கே வந்து விட வேண்டும் என்றாராம். பிறந்த வீட்டிலிருந்து திரும்பிய தாயார் இருட்டுவதற்கு முன் திருச்சானூர் வரை தான் வர முடிந்தது.ஆகையால்அங்கேயே இருக்க வேண்டிய சூழ்நிலை வந்தது. திருமலை பூஜையில் கனகாம்பரமும்படையலில் கறிவேப்பிலையும் இருப்பதில்லை. ஆனால் இன்று வரை பெருமாள் இரவில்திருச்சானூருக்கு சென்று விடிவதற்கு முன் திருமலைக்கு வந்து விடுவதாகஐதீகம்.

Jan 30, 2026

வீட்டில் உள்ள எதிர் மறை ஆற்றல் குறைய …

வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் குறைந்து, நேர்மறை ஆற்றல் அதிகரிக்க வீட்டு வாசலை கழுவி அலங்கரித்து வைத்துக் கொள்ள வேண்டும். வீட்டு வாசலை சுத்தமாகவும் மங்களகரமாகவும் வைத்துக் கொள்வது. அந்த வீட்டில் வசிக்கும் குடும்ப நபருக்கு சகல சௌபாக்கியம் செல்வ செழிப்பு, நற்பலன்களை அள்ளித் தரும். தலை நிலை வாசலில் மா இலை தோரணம் கட்டுவது நல்ல விசேஷமாகும். இது நேர்மறை ஆற்றலை அதிகரித்து வீட்டுக்கு அதிர்ஷ்டத்தை பெற்று தரும். வீட்டு வாசலில் உருளியில் தண்ணீர் நிரப்பி அழகான மலர்களை நீரில் போட்டு வைக்க வேண்டும். வீட்டு வாசலில் அரிசி மாவு கொண்டு,அழகான கோலம் போட்டு வைப்பது லட்சுமி கடாட்சத்தை உண்டாக்கும்.

Jan 23, 2026

விநாயகர்வழிபாடு பலன்கள்.

மஞ்சள் பொடி விநாயகர் - சகல காரியத்திலும் வெற்றி,வெல்லத்தால் செய்த விநாயகர்- வாழ்க்கையில் வளம் பெருகும்.வெள்ளெருக்கு விநாயகர்- செல்வம் பெருகும்.கல் விநாயகர் - வெற்றிகள் கிடைக்கும்.உப்பு விநாயகர்- எதிரிகள்விலகுவர்.புற்றுமண் விநாயகர் - வியாபார விருத்தி.மண்ணால் செய்த விநாயகர் - உயர் பதவிகள் கிடைக்கும்.குங்கும விநாயகர் -குழந்தையின் கல்வி மேம்படும்.விபூதி விநாயகர் - தீவினை அகலும்.சந்தன விநாயகர் -திருமணத்தடை விலகும்.அருகு விநாயகர் - வழக்குகளில் வெற்றி.சங்கு விநாயகர் -குபேரன் அருள் கிட்டும் .வெற்றிலை விநாயகர்- பிரச்னைகள் மறையும்.அரச இலை விநாயகர்- அரசு  அனுகூலம். ஆற்று மண் விநாயகர்- குழந்தைப்பேறு உண்டாகும்.

Jan 16, 2026

நாய்க்கு உணவளிக்கும் போது….

நாம் சாப்பிடுவதற்கு முன் நாய்க்கு உணவளிக்க வேண்டும் எச்சில் பட்ட கையால் நாய்க்கு உணவளிப்பது தோஷத்தை உண்டாக்கும். நாய்க்கு தொடர்ந்து அன்போடு உணவளிப்பது பெரிய புண்ணிய பலனை தரும் என்று நம்பப்படுகிறது. வீட்டில் உள்ள நாய்கள் அடிக்கடி ஊளையிட்டால், அது வரவிருக்கும் அசுப நிகழ்வுகளுக்கான அறிகுறியாகக் கருதப்படுகிறது.

Jan 16, 2026

பூஜைக்கு புதிய விளக்கு உகந்ததா?.

ஒரு விளக்கை மீண்டும் மீண்டும் தெய்வத்தின் முன் ஏற்றி பிரார்த்தனை செய்யும்போது, அதில் ஆன்மீக சக்தி அதிகரிக்கிறது. இது வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகளை படிப்படியாக குறைத்து நிம்மதியையும் மகிழ்ச்சியையும் அதிகரிக்கும்.பழைய விளக்கில் தினமும் பசு நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றுவது மிகவும் விசேஷமானது.இவ்வாறு தொடர்ந்து செய்வதன் மூலம் தெய்வத்தின் அருள் உங்கள் குடும்பத்தின் மீது நிரந்தரமாக பதியும்.எனவே, புதிய விளக்குகள் மீதான ஆசையை குறைத்து, வீட்டில் உள்ள பழைய விளக்குகளை தொடர்ந்து பயன்படுத்தினால்,அதன் முழுமையான ஆன்மீக பலனைபெற முடியும்.

Jan 09, 2026

எந்த சாமியிடம் எந்த வரம் கேட்க வேண்டும் .

எந்த சாமியிடம் எந்த வரம் கேட்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.நிம்மதியை சிவனிடம் கேளுங்கள்,வீரம் மற்றும் குழந்தை வரத்தை முருகனிடம் கேளுங்கள்,பண வரவை குபேரனிடமும்,ஐஸ்வர்யத்தை லட்சுமியிடமும் கேளுங்கள் பாதுகாப்பை முனீஸ்வரனிடம் கேளுங்கள்,நீதியை கருப்பசாமியிடம் கேளுங்கள்,திருமண வரத்தை விஷ்ணுவிடமும், ஆரோக்கியத்தை அனுமனிடமும் கேளுங்கள்.

Jan 02, 2026

வீட்டில் நல்லது நடக்க ..

முகம் பார்க்கும் கண்ணாடி வட்ட வடிவில் இருந்தால் பணவரவு அதிகரிக்கும். வீட்டை கழுவும் போது சிறிது கல் உப்பு போட்டு துடைத்தால் வாஸ்து பிரச்சனைகள் வராது. வலம்புரி சங்கில் தண்ணீர், துளசி சேர்ந்து வீட்டை சுற்றி தெளித்தால் கண் திருஷ்டி நீங்கும். வாஸ்து குறையுள்ள வீட்டிற்கு குற்றாலம், பிள்ளையார்பட்டி சென்று வந்தால் வாஸ்து பிரச்சனைகள் தீரும். திருச்சியில் உள்ள திருப்பைஞ்ஞீலி ஸ்ரீலிவனேசுவரர் கோவிலுக்கு சென்றால் திருமண தடை நீங்கும். நவக்கிரக கோயில்களுக்கு ஒரே நாளில் சென்று வந்தால் அனைத்து நவகிரக தோஷங்களும் நீங்கும்.

Dec 26, 2025

மார்கழியில் கட்டாயம் பெண்கள் செய்ய வேண்டியவை.

 பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து, குளிக்க வேண்டும்.வாசலில் சாணம் / மஞ்சள் கலந்த நீரை தெளிக்க வேண்டும்.வாசலில் கோலமிட்டு, விளக்கேற்ற வேண்டும்.பகவானுக்கு பூஜை மற்றும் நெய்வேத்தியங்களை செய்ய வேண்டும்.மாதம் முழுவதும் தினமும் காலையில் ஆலயம் சென்று வழிபட வேண்டும்.தினமும் திருப்பாவை, திருவெம்பாவை பாசுரங்களை பாட/ படிக்க/கேட்க வேண்டும்.திருமணம் ஆகாத பெண்கள் ஆண்டாள் பாசுரத்தில் கூறியபடி விரதம் இருக்க வேண்டும்.இதனை பாவை நோன்பு என்று கூறுவார்கள்.மாலையிலும் தீபம் ஏற்ற வேண்டும்.ஆலடத்திற்கு கைங்கரியம் செய்ய வேண்டும்.தான தருமங்களை மேற்கொள்ள வேண்டும்.

Dec 19, 2025

தீபம் ஏற்றும் போது…..

சுவாமிக்கு வலது பக்கம் தீபம் ஏற்ற வேண்டும்.சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது காமாட்சி அம்மன் விளக்கைக் அணைக்கக் கூடாது.காமாட்சி அம்மனுக்கு துணை விளக்காய் மண் விளக்கு ஏற்றலாம்.தீபம் ஏற்றிவிட்டு உச்சரிக்க வேண்டிய மந்திரம், "ஓம் தீப லக்ஷ்மியே நமோ நமஹ”தீபம் ஏற்றும் நேரம் அரை மணி நேரம் கழித்து மலையேறலாம். அரை மணி நேரத்துக்கு மேல் எரிவது அவரவர்கள் விருப்பம், வசதியைப் பொறுத்தது.தீபம் எப்போதும் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி ஏற்ற வேண்டும். 

1 2 3 4 5 6 7 8 9

AD's



More News