25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


பதற்றமான 130 வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் வாக்குப்பதிவினை நேரடியாக கண்காணிக்க நுண்பார்வையாளர்கள் கணிணி மூலம் பகுப்பாய்வு செய்யும் பணிகள் நடைபெற்றது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பதற்றமான 130 வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் வாக்குப்பதிவினை நேரடியாக கண்காணிக்க நுண்பார்வையாளர்கள் கணிணி மூலம் பகுப்பாய்வு செய்யும் பணிகள் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கணிணி அறையில்,(17.04.2026) மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட  ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில், தேர்தல் பொது பார்வையாளர்கள் திரு.உதயன் மிஷ்ரா, I A S., அவர்கள்(இராஜபாளையம், மற்றும் திருவில்லிபுத்தூர்), திரு.அரவிந்த் மீனா,I A S, அவர்கள்(சாத்தூர் மற்றும் சிவகாசி), திரு.ரஞ்சித் குமார் லால்,I A S, அவர்கள்(விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை), திரு.சஞ்சீவ் ஸ்ரீவாஸ்தவா,I  A S., அவர்கள்(திருச்சுழி) ஆகியோர் முன்னிலையில், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 ஐ முன்னிட்டு வாக்குச்சாவடிகளை கண்காணிக்க நுண்பார்வையாளர்கள் கணிணி மூலம் பகுப்பாய்வு செய்யும் பணிகள் நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, 2026 சட்டமன்ற பொதுத்தேர்தல் 23.04.2026 அன்று நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவிற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடு மற்றும் பாதூப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள 2001 வாக்குச்சாவடி மையங்களில் பதற்றமானவை என கண்டறியப்பட்ட 130 வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் வாக்குப்பதிவினை நேரடியாக கண்காணிக்கும் வகையில் 130 தேர்தல் நுண்பார்வையாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

அதன்படி, 202-இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் 10 தேர்தல் நுண்பார்வையாளர்களும், 203-திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் 11 தேர்தல் நுண்பார்வையாளர்களும், 204-சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் 20 தேர்தல் நுண்பார்வையாளர்களும், 205-சிவகாசி சட்டமன்ற தொகுதியில் 34 தேர்தல் நுண்பார்வையாளர்களும், 206-விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் 16 தேர்தல் நுண்பார்வையாளர்களும், 207-அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 26 தேர்தல் நுண்பார்வையாளர்களும், 208-திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் 40 தேர்தல் நுண்பார்வையாளர்கள் என மொத்தம் 157 தேர்தல் நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 அதன்படி, வாக்குச்சாவடி மையங்களை கண்காணித்திட மையத்திற்கு ஒரு நுண்பார்வையாளர் என 130 நபர்களுடன், 20 சதவீதம் இருப்புடன் மொத்தம் 157 நுண்பார்வையாளர்கள் கணிணி மூலம் ஒதுக்கீடு செய்யும் பணி இன்றைய தினம் நடைபெற்றது.

 இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(தேர்தல்) திரு.சோமசுந்தர சீனிவாசன், தேர்தல் தனி வட்டாட்சியர் திரு.சீனிவாசன், தேர்தல் தொடர்பான அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News