25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


விளையாட்டு (SPORTS)

May 22, 2025

May 23 rd விளையாட்டு போட்டிகள்

பாட்மின்டன் 'சூப்பர் 500' மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில், நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், அயர் லாந்தின் நாட் நுயென் மோதினர். ஸ்ரீகாந்த் 23-21, 21-17 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.மற்றொரு போட்டியில் இந்தியாவின் பிரனாய் 9-21, 18-21 என ஜப்பானின் யுஷி டனகாவிடம் தோல்வியடைந்தார். கலப்பு இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் துருவ் கபிலா, தனிஷா கிராஸ்டோ ஜோடி 21-17, 18-21, 21-15 என பிரான்சின் ஜூலியன் மாயோ, லியா பலேர்மோ ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. ஹாக்கி சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில், புரோலீக் 6வது சீசன் நடக்கிறது. மொத்தம் 9 அணிகள் பங்கேற்கின்றன. இதுவரை நடந்த போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து (16 புள்ளி), பெல்ஜியம் (16), இந்தியா (15) அணிகள் 'டாப்-3' இடத்தில் உள்ளன.அடுத்து நெதர்லாந்து செல்லவுள்ள இந்திய அணி, நெதர்லாந்து (ஜூன் 7, 9), அர்ஜென்டினா (ஜூன் 11, 12) அணிகளுடன் விளையாடுகிறது. அதன்பின் பெல்ஜியம் சென்று ஆஸ்திரேலியா (ஜூன் 14, 15), பெல்ஜியம் (21, 22) அணிகளை எதிர் கொள்கிறது. இதற்கான 24 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. கேப்டனாக ஹர்மன்பிரீத் சிங் நீடிக்கிறார். குத்துச்சண்டைதாய்லாந்து ஓபன் தொடருக்கான (மே 24 ஜூன் 1),19 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. நிகில், அமித் குமார், தீபக், யாசிகா, தமன்னா உள்ளிட்டோர் தேர்வாகினர்.

May 21, 2025

21ST  MAY IPL MATCH  MUMBAI- DELHI

MAY 21-ம் தேதி  மும்பையில்,  டெல்லி, மும்பை, அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த  மும்பை அணி 180/5 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய டெல்லி அணி 121/10 ரன்கள்  எடுத்து தோல்வியடைந்தது.  59 ரன்கள் வித்தியாசத்தில்  மும்பை அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக SURYAKUMAR YADAV  தேர்ந்தெடுக்கப்பட்டார்.    

May 21, 2025

May 22 nd விளையாட்டு போட்டிகள்

துப்பாக்கி சுடுதல்  ஜூனி யர் உலக கோப்பை துப்பாக்கிசுடுதல் ஜெர்மனியில் நடக்கிறது. பெண்களுக்கான 10 மீ., ஏர்பிஸ்டல் போட்டி நடந்தது. இதன் தகுதிச்சுற்றில் இந்தியாவின் கானக் (572), பிராச்சி (571) 4, 5வது இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினர். மற்ற இந்திய வீராங்கனைகள் ராஷ்மிகா (566) 14, சான்ஸ்கிருதி (565) 15வது இடம் பிடித்தனர்.அடுத்து நடந்த பைனலில் சிறப்பாக செயல்பட்ட கானக், 239 புள்ளி எடுத்து முதலிடம் பிடித்து, தங்கப்பதக்கம் வென்றார்.இந் தியாவின் பிராச்சி (176) ஐந்தாவது இடம் மட்டும் பிடித்தார்.இதுவரை தலா ஒரு தங்கம், வெள்ளி என 2 பதக்கம் வென்ற இந்தியா, பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. டென்னிஸ் ஆண்களுக்கான சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடர் ஜார்ஜியாவில் நடக்கிறது. இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், சித்தாந்த் ஜோடி, நியூசிலாந்தின் அஜீத் ராய், லாட்வியாவின் ராபர்ட் ஜோடியை சந்தித்தது.முதல் செட் 5-5 என இழுபறி ஆனது. பின் இந்திய ஜோடி 7-5 என கைப்பற்றியது. தொடர்ந்து அடுத்த செட்டையும் 6-4 என வசப்படுத்தியது. ஒரு மணி நேரம் 6 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் இந்திய ஜோடி 7-5, 6-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றது. ஹாக்கிநான்கு நாடுகள் பங்கேற்கும் தொடருக்காக (மே 25 - ஜூன் 2) ஜூனியர் இந்திய பெண்கள் அணி, அர்ஜென்டினா சென்றது. இதில் உருகுவே, சிலி அணிகளும் விளையாடுகின்றன. 

May 20, 2025

20 TH MAY IPL MATCH  CHENNAI - RAJASTHAN

MAY 20-ம் தேதி  டெல்லியில்,  ராஜஸ்தான்,  சென்னை,அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த  சென்னை அணி 187/8 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய ராஜஸ்தான் அணி 188/4 ரன்கள்  எடுத்து  6 விக்கெட் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக AKASH MADHWAL தேர்ந்தெடுக்கப்பட்டார்.    

May 20, 2025

உ.பி., மாநில அரசு 'டி. எஸ்.பி.,' பதவி வழங்கிய இந்திய தடகள வீராங்கனை பாருல் சவுத்ரி

இந்திய தடகள வீராங்கனை பாருல் சவுத்ரி 30. உ.பி.,யின் மீரட்டை சேர்ந்த இவர், 2023, ஹாங்சு (சீனா) ஆசிய விளையாட்டு 5000 மீ., ஓட்டத்தில் தங்கம் வென்றார். அடுத்து 3000 மீ., ஸ்டீபிள் சேஸ் ஓட்டத்தில் வெள்ளி கைப்பற்றினார்.தோகா டைமண்ட் லீக் போட்டியில் 3000 மீ., ஸ்டீபிள் சேஸ் ஓட்டத்தில் புதிய தேசிய சாதனை (9 நிமி டம், 13:39 வினாடி),  படைத்தார்.இவரை கவுரவிக்கும் வகையில் உ.பி., மாநில அரசு 'டி. எஸ்.பி.,' பதவி வழங்கியது. மொரதா பாத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் போலீஸ் அகாடமியில் நேற்று பொறுப்பேற்றுக் கொண் டார். தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் பங்கேற்க இருப்பதால், பயிற்சிக்காக பெங்களூரு தேசிய அகாடமிக்கு பாருல் சவுத்ரி கிளம்பினார்.

May 20, 2025

21 ST MAY விளையாட்டு போட்டிகள்

டென்னிஸ் மே 25-ஜூன் 8ல் பிரெஞ்ச் கிராண்ட்ஸ்லாம் ஓபன் டென்னிஸ் தொடர் பாரிசில் நடக்க உள்ளது. இதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் தற்போது நடக்கின்றன. ஒற்றையர் தரவரிசையில் 170 வது இடத்திலுள்ள இந்தியாவின் சுமித் நாகல், 141 வது இடத்திலுள்ள அமெரிக்காவின் மிட்செல் குருகரை சந்தித்தார்.காலிறுதியில் நடந்த முதல் செட்டை 6-1 என எளிதாக கைப்பற்றிய சுமித் நாகல், அடுத்த செட்டையும் 6-1 என வசப்படுத்தினார். ஒரு மணி நேரம், 14 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் சுமித் நாகல் 6-1, 6-1 என்ற நேர் செட் டில் வெற்றி பெற்றார். பாட்மின்டன்மலேசிய 'மாஸ்டர்ஸ் சூப்பர் 500' தொடர் கோலாலம்பூரில் நடக்கும் தகுதி சுற்றில், இந்தியாவின் ஸ்ரீகாந்த், ஹூவாங் யுவை (சீன தைபே )வீழ்த்தி, பிரதான சுற்றுக்கு முன்னேறினார். துப்பாக்கி சுடுதல் ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் ஜெர்மனியில் நடக்கிறது. ஆண் களுக்கான 50 மீ., ரைபிள் புரோன் போட்டியில் இந்தியா சார்பில் அட்ரியன் கர்மாகர் பங்கேற்றார். இவர் 2010 டில்லி காமன்வெல்த் துப்பாக்கிசுடுதலில் தங்கம் வென்ற இந்தியாவின்  ஜோய்தீப்  கர்மாகரின் மகன் சிறப்பாக செயல்பட்ட அட்ரியன்,மொத்தம் 626.7 புள்ளி பெற்று, இரண்டாவது இடம் பிடிக்க, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. சுவீடனின் ஜெஸ்பெர் (627.0) தங்கம் வென்றார். மற்ற இந்திய வீரர்கள் ரோஹித் (620.2) 12, நிதின் வேதாந்த் (614.4) 35வது இடம் பெற்றனர்.பெண்களுக்கான 50 6., ரைபிள் புரோன் போட்டியில் இந்தியாவின் அனுஷ்கா, 623.5 புள்ளி மட்டும் பெற, 6வது இடம் தான் கிடைத்தது. மற்றொரு இந்திய வீராங்கனை பிராச்சி (618.3) 24 வது இடம் பிடித்தார். இதுவரை ஒரு வெள்ளி மட்டும் வென்ற இந்தியா, பதக்க பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. 

May 19, 2025

19 TH MAY IPL MATCH  LUCKNOW - HYDERABAD

MAY,19ம் தேதி லக்னோவில், ஹைதராபாத், லக்னோ,அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 205/7 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய ஹைதராபாத் அணி 206/4  ரன்கள்  எடுத்து  6 விக்கெட் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக ABHISHEK SHARMA தேர்ந்தெடுக்கப்பட்டார்.    

May 19, 2025

20 TH MAY விளையாட்டு போட்டிகள் 

 டென்னிஸ் ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் ஈரானில் நடந்தது. ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் கரண் சிங், ரஷ்யாவின் அலெக் சாண்டர் லோபனோவை சந்தித்தார்.முதல் செட் 'டை பிரேக்கர்' வரை சென்றது. இதை கரண்சிங் 7-6 என வசப்படுத்தினார். அடுத்த செட்டை 6-2 என எளிதாக கைப்பற்றினார்.  ஒரு மணி நேரம், 41 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் கரண் சிங் 7-6, 6-2 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார். ஐ.டி.எப்., டென்னிஸ் ஒற்றையர் அரங்கில் முதன் முதலாக கோப்பை வென்றார்.கோல்ப்நெதர்லாந்தில் நடந்த பெண்களுக்கான சர்வதேச தொடரில் இந்தியாவின் திக் ஷா தாகர், ஹிதாஷீ பக்ஷி, அவானி பிரஷாந்த் முறையே 9,12,19வது இடத்தை பகிர்ந்து கொண்டனர். குத்துச்சண்டை'சூப்பர் பைட்டர் சீரிஸ்-3' பெங்களூருவில் நடந்த தொடரில் 'வெல்டர்வெயிட்' பிரிவில் இந்தியாவின் பைசான் அன்வர், கானாவின் கபக்போ அல்லோடேவை வீழ்த்தி சாம்பியன் ஆனார். 

May 18, 2025

18 TH MAY IPL MATCH  ராஜஸ்தான் - பஞ்சாப்

MAY18ம்தேதி ஜெய்ப்பூரில், ராஜஸ்தான், பஞ்சாப், அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 219/5 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய ராஜஸ்தான் அணி 209/7 ரன்கள்  எடுத்து தோல்வியடைந்தது. 10 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக HARPREET BRAR தேர்ந்தெடுக்கப்பட்டார்.    MAY18ம்தேதி டெல்லியில், குஜராத், டெல்லி, அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 199/3 ரன்கள் எடுத்து, அடுத்து களம் இறங்கிய குஜராத் அணி 205/0 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக SAI SUDHARSAN தேர்ந்தெடுக்கப்பட்டார். 

May 18, 2025

கிராண்ட் செஸ் தொடரில் பிரக்ஞானந்தா முதன் முறையாக சாம்பியன் ஆனார்.

கிராண்ட் செஸ் தொடரின் 10வது சீசனின், இரண்டாவது ருமேனியாவில் தொடர் சூப்பர் பெட் கிளாசிக்') நடந்தது. எட்டு சுற்று முடிவில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, 5.0 புள்ளியுடன் முதலிடத்தில் இருந்தார். 9வது, கடைசி சுற்றில் வென்றால் சாம்பியன் ஆகலாம் என்ற நிலையில் பிரக்ஞானந்தா, அமெரிக்காவின் லெவான் ஆரோனியனை சந்தித்தார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக் ஞானந்தா, 43வது நகர்த் தலில் 'டிரா' செய்ய, 5.5 புள்ளி பெற்றார்.  வெற்றியாளரை  முடிவு செய்ய 'பிளே ஆப்' சுற்று நடந்தது.ஒவ்வொரு வீரரும் மற்ற வீரருடன் தலா ஒரு முறை மோதினர். பிரக்ஞானந்தா- அலிரேசா மோதிய முதல் போட்டி 'டிரா' ஆனது. வாசியர், அலி ரேசா மோதிய போட்டியும் 'டிரா' ஆனது.  அடுத்து பிரக்ஞானந்தா, வாசியர் மோதினர். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, 38 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். இதையடுத்து 1.5 புள்ளியுடன் பிரக்ஞானந்தா முதலிடம் பிடித்து, இத்தொடரில் முதன் முறையாக சாம்பியன் ஆனார். 2025ல் பிரக்ஞானந்தா வென்ற இரண்டாவது கோப்பை இது. முன்னதாக 'டாடா ஸ்டீல்' தொடரில் சாம்பியன் ஆகி இருந்தார். 

1 2 ... 102 103 104 105 106 107 108 ... 136 137

AD's



More News