May 23 rd விளையாட்டு போட்டிகள்
பாட்மின்டன்
'சூப்பர் 500' மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில், நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், அயர் லாந்தின் நாட் நுயென் மோதினர். ஸ்ரீகாந்த் 23-21, 21-17 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.மற்றொரு போட்டியில் இந்தியாவின் பிரனாய் 9-21, 18-21 என ஜப்பானின் யுஷி டனகாவிடம் தோல்வியடைந்தார். கலப்பு இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் துருவ் கபிலா, தனிஷா கிராஸ்டோ ஜோடி 21-17, 18-21, 21-15 என பிரான்சின் ஜூலியன் மாயோ, லியா பலேர்மோ ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
ஹாக்கி
சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில், புரோலீக் 6வது சீசன் நடக்கிறது. மொத்தம் 9 அணிகள் பங்கேற்கின்றன. இதுவரை நடந்த போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து (16 புள்ளி), பெல்ஜியம் (16), இந்தியா (15) அணிகள் 'டாப்-3' இடத்தில் உள்ளன.
அடுத்து நெதர்லாந்து செல்லவுள்ள இந்திய அணி, நெதர்லாந்து (ஜூன் 7, 9), அர்ஜென்டினா (ஜூன் 11, 12) அணிகளுடன் விளையாடுகிறது. அதன்பின் பெல்ஜியம் சென்று ஆஸ்திரேலியா (ஜூன் 14, 15), பெல்ஜியம் (21, 22) அணிகளை எதிர் கொள்கிறது. இதற்கான 24 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. கேப்டனாக ஹர்மன்பிரீத் சிங் நீடிக்கிறார்.
குத்துச்சண்டை
தாய்லாந்து ஓபன் தொடருக்கான (மே 24 ஜூன் 1),19 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. நிகில், அமித் குமார், தீபக், யாசிகா, தமன்னா உள்ளிட்டோர் தேர்வாகினர்.
0
Leave a Reply