21 ST MAY விளையாட்டு போட்டிகள்
டென்னிஸ்
மே 25-ஜூன் 8ல் பிரெஞ்ச் கிராண்ட்ஸ்லாம் ஓபன் டென்னிஸ் தொடர் பாரிசில் நடக்க உள்ளது. இதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் தற்போது நடக்கின்றன. ஒற்றையர் தரவரிசையில் 170 வது இடத்திலுள்ள இந்தியாவின் சுமித் நாகல், 141 வது இடத்திலுள்ள அமெரிக்காவின் மிட்செல் குருகரை சந்தித்தார்.காலிறுதியில் நடந்த முதல் செட்டை 6-1 என எளிதாக கைப்பற்றிய சுமித் நாகல், அடுத்த செட்டையும் 6-1 என வசப்படுத்தினார். ஒரு மணி நேரம், 14 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் சுமித் நாகல் 6-1, 6-1 என்ற நேர் செட் டில் வெற்றி பெற்றார்.
பாட்மின்டன்
மலேசிய 'மாஸ்டர்ஸ் சூப்பர் 500' தொடர் கோலாலம்பூரில் நடக்கும் தகுதி சுற்றில், இந்தியாவின் ஸ்ரீகாந்த், ஹூவாங் யுவை (சீன தைபே )வீழ்த்தி, பிரதான சுற்றுக்கு முன்னேறினார்.
துப்பாக்கி சுடுதல்
ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் ஜெர்மனியில் நடக்கிறது. ஆண் களுக்கான 50 மீ., ரைபிள் புரோன் போட்டியில் இந்தியா சார்பில் அட்ரியன் கர்மாகர் பங்கேற்றார். இவர் 2010 டில்லி காமன்வெல்த் துப்பாக்கிசுடுதலில் தங்கம் வென்ற இந்தியாவின் ஜோய்தீப் கர்மாகரின் மகன் சிறப்பாக செயல்பட்ட அட்ரியன்,மொத்தம் 626.7 புள்ளி பெற்று, இரண்டாவது இடம் பிடிக்க, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. சுவீடனின் ஜெஸ்பெர் (627.0) தங்கம் வென்றார். மற்ற இந்திய வீரர்கள் ரோஹித் (620.2) 12, நிதின் வேதாந்த் (614.4) 35வது இடம் பெற்றனர்.
பெண்களுக்கான 50 6., ரைபிள் புரோன் போட்டியில் இந்தியாவின் அனுஷ்கா, 623.5 புள்ளி மட்டும் பெற, 6வது இடம் தான் கிடைத்தது. மற்றொரு இந்திய வீராங்கனை பிராச்சி (618.3) 24 வது இடம் பிடித்தார். இதுவரை ஒரு வெள்ளி மட்டும் வென்ற இந்தியா, பதக்க பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது.
0
Leave a Reply