விருதுநகர் மாவட்ட வாக்கு எண்ணிக்கை மையம் இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் நேரில் ஆய்வு.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் எண்ணப்படும் மையமான விருதுநகர் ச.வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரி (VSVNPC) வளாகத்தில், இந்திய தேர்தல் ஆணையத்தின் (ECI) விதிமுறைகளின்படி மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. என்.ஓ. சுகபுத்ரா, I A S., அவர்கள், தேர்தல் பொது பார்வையாளர்கள் திரு.உதயன் மிஷ்ரா,I A S., அவர்கள்(இராஜபாளையம், மற்றும் திருவில்லிபுத்தூர்), திரு.அரவிந்த் மீனா,I A S., அவர்கள்(சாத்தூர் மற்றும் சிவகாசி), திரு.ரஞ்சித் குமார் லால்,I A S., அவர்கள்(விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை), திரு.சஞ்சீவ் ஸ்ரீவாஸ்தவா, I A S., அவர்கள்(திருச்சுழி) ஆகியோர் (17.04.2026) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
வாக்கு எண்ணிக்கை கால அட்டவணை
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் எதிர்வரும் 23.04.2026 (வியாழக்கிழமை) அன்று நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து, பதிவான வாக்குகள் அனைத்தும் 04.05.2026 (திங்கட்கிழமை) அன்று இந்த மையத்தில் எண்ணப்பட உள்ளன.
வாக்கு எண்ணிக்கை மைய ஏற்பாடுகள்
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி), சாத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை மற்றும் திருச்சுழி ஆகிய 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இந்த ஒரே மையத்தில் நடைபெற உள்ளது.
ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனியாக வாக்குகள் எண்ணப்படும் அறைகள் (Counting Halls) தயார் செய்யப்பட்டுள்ளன.
தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, ஒவ்வொரு அறையிலும் தேவையான எண்ணிக்கையிலான மேசைகள் மற்றும் தடுப்புக் கம்பிகள் (Barricades) அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் தபால் வாக்குகள் எண்ணுவதற்குத் தேவையான பிரத்யேக வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
மைய உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு
வாக்கு எண்ணிக்கை மையத்தில் தொகுதி வாரியாக பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் அறைகள் (Counting Halls) குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) பாதுகாப்பாக வைக்கப்படும் இருப்பறைகள் (Strong Rooms) மற்றும் அவற்றிற்கான மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்துப் பார்வையிடப்பட்டது.
வாக்குச்சாவடி முகவர்களுக்கான பிரத்யேக அறைகள் மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடம் (Parking) ஆகியவற்றைத் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி அமைக்க அறிவுறுத்தப்பட்டது.
பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள்
வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வரும் முகவர்கள் மற்றும் பணியாளர்களுக்குத் தேவையான பாதுகாக்கப்பட்ட குடிநீர், தடையற்ற மின்சாரம் மற்றும் கழிப்பறை வசதிகள் ஏற்படுத்திடவும், தீயணைப்புத் துறை மற்றும் மருத்துவக் குழுவினரின் தயார் நிலையில் வைத்திருக்கவும், மூன்றடுக்கு பாதுகாப்பு முறை மற்றும் சிசிடிவி (CCTV) கேமராக்கள் மூலம் 24 மணி நேரக் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளவும், வாக்கு எண்ணிக்கை மையத்தில் எவ்விதத் தொய்வுமின்றி, தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளைப் பின்பற்றி வெளிப்படையான முறையில் வாக்கு எண்ணிக்கையை நடத்தி முடிக்க வேண்டும் என அனைத்துத் துறை அலுவலர்களுக்கும் உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
ஊடக மையம் (Media Center)
தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் பொதுமக்களுக்குத் தெரிவிக்க ஏதுவாக, உரிய வசதிகளுடன் கூடிய ஊடக மையம் அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.செய்தியாளர்கள் தடையின்றிப் பணியாற்றத் தேவையான வசதிகளை ஏற்பாடு செய்ய அறிவுறுத்தப்பட்டது.இந்த ஆய்வின் போது, பொதுப்பணித்துறை அலுவலர்கள், தேர்தல் பிரிவு அலுவலர்கள் மற்றும் பல்வேறு அரசுத் துறைச் சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
0
Leave a Reply