25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


விளையாட்டு (SPORTS)

Nov 29, 2025

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்.

துபாயில் ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (50 ஓவர், 19 வயதுக்கு உட்பட்ட)  டிசம்பர் 12-21ல் நடக்க உள்ளது. இந்தியா, இலங்கை, வங்கதேசம் உட்பட 8 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுபோட்டிகள் லீக் முறையில் நடக்கும். இந்திய அணி 'ஏ' பிரிவில் உள்ளது.15 பேர் கொண்ட கொண்ட இளம் இந்திய அணி அறிவிக்கப்பட்டது. ஆயுஷ் மாத்ரே 18, கேப்டனாக தேர்வானார் . பிரிமியர் தொடரில் சென்னை அணிக்காக விளையாடுகிறார். துணைக் கேப்டன் விஹான் மல்ஹோத்ரா, வைபவ் சூர்ய வன் ஷிஅணிக்கு துவக்கம் தரவுள்ளனர்.அணி விபரம்: ஆயுஷ் மாத்ரே.வைபவ் விஹான், வேதாந்த், அபிக்யான், ஹர்வன்ஷ், யுவ்ராஜ் கோஹில், கனிஷ்க்,கிலன், நமன் புஷ்பக், தீபேஷ், ஹெனில், கிஷன், உதவ் மோகன், ஆரோன் ஜார்ஜ். 

Nov 28, 2025

சென்னை, மதுரையில் ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி தொடர் இன்று துவக்கம்  .

சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் ஜூனியர் அணிகளுக்கான உலகக்கோப்பை தொடர் ,14வது சீசன் இன்று சென்னை, மதுரையில் துவங்குகிறது.சொந்த மண்ணில் களமிறங்கும் இந்திய அணியினர், சிறப்பாக செயல்பட்டு, 9 ஆண்டுக்குப் பின் கோப்பை வெல்ல காத்திருக்கிறது.  கடந்த 2023 உலக தொடரில் இந்திய அணி, வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் 1-3 என ஸ்பெயினிடம் தோற்று, நான்காவது இடம் பெற்றது. 9 ஆண்டுக்குப் பின் (கடைசியாக 2016) இந்தியா மீண்டும் இம்முறை சாதித்தால் உலக சாம்பியன் ஆகலாம்.

Nov 28, 2025

சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கிலீக் போட்டியில் இந்திய அணி வெற்றி .

சுல்தான்அஸ்லான்ஷா கோப்பைஹாக்கி 31வதுசீசன்மலேசியாவின்இபோநகரில் நடக்கும்போட்டியில்இந்தியா, மலேசியா, பெல்ஜியம் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கின்றன. நேற்று நடந்த லீக் போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்தை எதிர்கொண்டது. ஆட்டத்தின் 54வது நிமிடத்தில் தமிழகத்தின் செல்வம் கார்த்தி ஒரு 'பீல்டு' கோல் அடிக்க, இந்திய அணி 3-2 என வெற்றி பெற்றது. மற்ற போட்டிகளில் கனடா அணி 3-2 என, தென் கொரியாவை வென்றது.பெல்ஜியம் அணி 9-1 என மலேசியாவை வென்றது.நான்கு போட்டிகளின் முடிவில் 3 வெற்றி, ஒரு தோல்வி என 9 புள்ளிகளுடன் இந்தியா 2வது இடத்துக்கு முன்னேறியது. 

Nov 28, 2025

இந்திய ஆல்-ரவுண்டர் தீப்தி ஷர்மா ,பெண்கள் பிரிமீயர் லீக் தொடருக்கான ஏலத்தில் ,உ.பி அணியில் ரூ.3.20 கோடிக்கு ஏலம் ஒப்பந்தமானார் .

பெண்களுக்கான பிரிமீயர் லீக் (டி- 20) 4-வது சீசன் ஓவர் கிரிக்கெட் போட்டிஅடுத்த ஆண்டு ஜனவரி 9-ந் தேதி முதல் பிப்ரவரி 5-ந் தேதி வரை நவிமும்பை மற்றும் வதோதராவில் நடக்க இருக்கிறது. இதனை முன்னிட்டு டெல்லியில் வீராங்கனைகள் ஏலம் நேற்று நடந்தது. ஏலப்பட்டியலில் 194 இந்தியர், 83 வெளிநாட்டவர், எனமொத்தம் 277 வீராங்கனைகள் இடம் பெற்று இருந்தனர். பிரபல ஏலதாரர் மல்லிகா சாகர் ஏலத்தை நடத்தினார். போட்டியில் பங்கேற்கும் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், முன்னாள் சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் உள்பட 5 அணிகளும் தங்களுக்கு தேவையான வீராங்கனைகளை குறிவைத்து ஏலம் கேட்டனர்.

Nov 28, 2025

பார்வையற்றோருக்கான 'டி-20' உலக கோப்பை வென்ற இந்திய அணியினர், பிரதமர் மோடியை சந்தித்தனர்.

பிரதமர் மோடியை , பார்வையற்றோருக்கான 'டி-20' உலக கோப்பை வென்ற இந்திய வீராங்கனைகள் டெல்லியில் சந்தித்தனர்.அப்போது பிரதமர் மோடி, வீராங்கனைகளை  பாராட்டி, இனிப்பு வழங்கினார். 

Nov 27, 2025

ஒலிம்பிக் ஜோதி 2026 பிப். 6ல்  துவக்க விழா

அடுத்த ஆண்டு (பிப். 6-22) குளிர்கால ஒலிம்பிக் போட்டி இத்தாலியில், நடக்கவுள்ளது. இதற்காக நேற்று, ஒலிம்பிக் பிறப்பிடமான கிரீசில் உள்ள ஒலிம்பியா நகரில், ஒலிம்பிக் ஜோதி ஏற்றும் விழா நடந்தது. இந்த ஜோதி, வரும் பிப். 6ல்  துவக்க விழா நடக்கவுள்ள இத்தாலியின் மிலன் நகரில் உள்ள சான் சிரோ மைதானத்திற்கு வந்தடையும்

Nov 27, 2025

நாளை ஜூனியர் ஹாக்கி உலக கோப்பை தொடர் துவங்குகிறது.

 ஜூனியர் அணிகளுக்கான உலக கோப்பை தொடர்  சர்வதேச ஹாக்கி கூட் டமைப்பு சார்பில் நடத்தப்படுகிறது. இதன் 14வது சீசன் நாளை சென்னை, மதுரையில் துவங்குகிறது. இந்தியா, 'நடப்பு சாம் பியன்' ஜெர்மனி, ஆஸ் திரேலியா உள்ளிட்ட 24 அணிகள், 6 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன.ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடம் பெறும் 6 அணிகள், இரண்டாவது இடம் பிடிக்கும் சிறந்த 2 அணிகள் என 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறும்.

Nov 27, 2025

சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி போட்டி.

மலேசியாவின் இபோ ஹாக்கி நகரில், சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி 31வது சீசன் ,இந்தியா, தென் கொரியா, பெல்ஜியம் உட்பட மொத் தம் 6 அணிகள் பங்கேற் கின்றன.இந்திய அணி தென் கொரியா, பெல்ஜியம், மலேசியாவை  போட்டியில் சந்தித்தது. மூன்று போட்டிகளின் முடிவில் 2 வெற்றி, ஒரு தோல்வி என 6 புள்ளிகளுடன் இந்தியா 3வது இடத்தில் உள்ளது.    

Nov 27, 2025

உஸ்பெகிஸ்தானின் ஜாவோகிர் சிந்தரோவ் உலக செஸ் தொடரில் சாதனை கோப்பை வென்றார் . ரூ. 1 கோடி பரிசு.

206 பேர் பங்கேற்ற உலக கோப்பை செஸ் 11வது சீசன் கோவாவில்,  நடந்தது. இந்தியா சார்பில் உலக சாம்பியன் குகேஷ், கடந்த உலக கோப்பை தொடரின் பைனலுக்கு முன்னேறிய பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி, விதித்குஜ்ராத்தி உட்பட  24 பேர் பங்கேற்றனர். அரையிறுதிக்கு  யாரும் முன்னேறவில்லை.பைனலில் உஸ்பெகிஸ்தானின் ஜாவோகிர் சிந்தரோவ், சீனாவின் வெய் இ மோதினர். இவர்கள் மோதிய இரண்டு போட்டியும் 'டிரா' ஆக, ஸ்கோர் 1.0-1.0 என சமனில் இருந்தது. முடிவில் 2.5-1.5 என வெற்றி பெற்று சாம்பியன் ஆனார். தவிர இளம் வயதில் (19) உலக கோப்பை வென்ற வீரர் என சாதனை படைத்தார். இவருக்கு ரூ. 1 கோடி பரிசு கிடைத்தது. வெய் இ,ரூ.76 லட்சம், 3வது இடம் பெற்ற எசிபென்கோ, ரூ.54 லட்சம் பரிசு பெற்றனர்.  

Nov 27, 2025

ஆமதாபாத்தில் காமன்வெல்த் விளையாட்டு போட்டி  2030ல் நடத்த அனுமதி.

காமன்வெல்த் விளை யாட்டு கூட்டமைப்பு சார்பில், 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை காமன் வெல்த் விளையாட்டு நடத்தப்படுகிறது.  இதன் 23வது சீசன், அடுத்த ஆண்டு ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடக்கவுள்ளது. கடை சியாக, 2022ல் இங்கி லாந்தின் பர்மிங்காம் நகரில் நடந்தது.. வரும் 2030ல், 24வது காமன் வெல்த் விளையாட்டை நடத்திட இந்தியா (ஆம தாபாத்), நைஜீரியா (அபுஜா) நாடுகள் விருப்பம் தெரிவித்தன.நேற்று, ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் காமன்வெல்த் விளையாட்டு பொதுக்குழு கூட்டத்தில்,  வரும் 2030ல் போட்டியை இந்தியாவில் நடத்த முறைப்படி அனுமதி வழங்கப்பட்டது. வரும் 2034ல் இப் போட்டியை நடத்தும் உரிமம் ஆப்ரிக்க நாடுகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.காமன் வெல்த் விளையாட்டு நடத்தும் 2வது இந்திய நகரமானது ஆமதாபாத். ஏற்கனவே 2010ல் டில்லியில் நடந்தது. 

1 2 ... 47 48 49 50 51 52 53 ... 136 137

AD's



More News