25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


விளையாட்டு (SPORTS)

Nov 26, 2025

டி-20' உலக கோப்பை  10வது சீசன் அட்டவணை ..

இந்தியா, இலங்கைகையில், 'டி-20' உலக கோப்பை அடுத்த ஆண்டு, மொத்தம் 55 போட்டிகள் நடக்கும். இந்தியாவில் , 'டி-20' உலக கோப்பை 10வது சீசன், அடுத்த ஆண்டு பிப்ரவரி 7- மார்ச் -8, இல் ஆமதாபாத், டில்லி, சென்னை, கோல்கட்டா, மும்பையில் போட்டிகள் நடக்க உள்ளன. ஆமதாபாத்தில் உள்ள உலகின் பெரிய மோடி மைதானத்தில் பைனல் நடக்கவுள்ளது.நான்கு பிரிவுகளாக ,20 அணிகள்,  பிரிக்கப்பட்டு, போட்டிகள் லீக் முறையில் நடக்கும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடம் பெறும் அணிகள் 'சூப்பர்-8' சுற்றுக்கு முன்னேறும். பின் இரு பிரிவுகளாக பிரிக்கப்படும். முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடம் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய்ஷா நேற்று இதற்கான அட்டவணையை வெளியிட்டார். முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா 38. வரும் 'டி-20' உலக கோப்பை தொடருக்கான தூதராக, இவர் நியமிக்கப் பட்டுள்ளார். 

Nov 26, 2025

உலகக் கோப்பை ஜூனியர் ஹாக்கி  சென்னையில் உற்சாக வரவேற்பு !

உலக கோப்பை தமிழகம் முழுவதும் வலம் வந்தது. கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர், மதுரை உட்பட பல்வேறு நகரங்களுக்கு சென்றது. சென்னை பரங்கிமலைக்கு நேற்று வந்தடைந்தது.ஆண்களுக்கான ஜூனியர் ஹாக்கி உலக கோப்பை, 14வது சீசன், தமிழகத்தின் மதுரை, சென்னையில் வரும் 28ல் துவங்க உள்ளது. இதில்மொத்தம் 24 அணிகள் பங்கேற்கின்றன.பிலிப்ஸ், கோவிந்தன், ஹாக்கி வீரர் வீராங்கனைகள், பள்ளி மாணவர்கள் தமிழகத்தின் இரண்டு ஒலிம்பியன் ஹாக்கிகள் வரவேற்பு அளித்தனர்.

Nov 26, 2025

இளம் இந்திய அணி உலக டேபிள் டென்னிஸ் பைனலுக்கு தகுதி .

உலக யூத் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர்  ருமேனியாவின் கிளஜ் நபோகா நகரில் ,19 வயது ஆண்கள் அணிகள் பிரிவு அரையிறுதியில் இந்திய அணி, வலிமையான சீன தைபேவை எதிர்கொண்டது. முதல் போட்டியில் இந்தியாவின் அன்குர் பட்டாச்சார்ஜீ, 3-2 என (11-9, 11-8, 9-11, 8-11, 12-10) ஹிசெய்னை வீழ்த்தினார்.  இந்தியாவின் அன்குர் பட்டாச்சார்ஜீ, மாற்று ஒற்றையர் போட்டியில் 0-3 என (10-12, 10-12, 10-12) வீழ்ந்தார். 5வது போட்டியில் இந்தியாவின் அபிநந்த், 3-0 என 11-4, 11-8, 11-8) என ஹிசெய்னை வென்றார். முடிவில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் வெற்றிபெற்று, முதன் முறையாக பைனலுக்கு முன்னேறி வரலாறு படைத்தது.அங்கோலிகா, தின் யான்ஷி, அனன்யா இடம் பெற்றஇந்திய அணி, பெண்களுக்கான 15 வயது பிரிவு அரையிறுதியில் தென் கொரியாவை சந்தித் தது. இதில் இந்தியா 0-3 என்ற கணக்கில் தோல்வியடைந்து, வெண்கல பதக்கம் பெற்றது.

Nov 26, 2025

டெப்லிம்பிக்சில் இந்தியாவுக்கு 20 பதக்கங்கள்  .

காதுகேளாதோருக்கான 'டெப்லிம்பிக்ஸ்' 25வது சீசன்  ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், நிறைவு விழா இன்று நடக்கிறது.இந்தியா சார்பில் 45 வீரர்கள், 28 வீராங்கனைகள் 11 போட்டிகளில் பங்கேற்றனர். கோல்ப் போட்டியில் இந்தியாவின் திக்ஷா தாகர், தங்கப்பதக்கத்தை தக்கவைத்துக் கொண்டார்.தனுஷ் (2 தங்கம்), அனுயா, அபினவ் உள்ளிட்டோர் தங்கம் வென்றனர். 7 தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கலம் என துப்பாக்கிசுடுதலில் 16 பதக்கங்களை இந்திய நட்சத்திரங்கள்  குவித்தனர். இந்தியாவின் சுமித் தாஹியா ஆண்கள் மல்யுத்தத்தில் தங்கம் கைப்பற்றினார்.அமித் கிருஷ்ணன் வெள்ளி வென்றார். கராத்தேயில் லோமா ஸ்வெய்ன், வெண்கலம் வென்றார்.இந்தியா 9 தங்கம்,7 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 20 பதக்கங்களை வென்ற இந்தியா, பட்டியலில் 6வது இடம் பிடித்தது.

Nov 25, 2025

இத்தாலி அணி டேவிஸ் கோப்பை டென்னிசில் சாம்பியன் .

டேவிஸ் கோப்பை டென்னிஸ் 113வது சீசனுக்கானஇத்தாலியில்,  'நாக்-அவுட் சுற்று நடந்தது. இதன் பைனலில் ஸ்பெயின், இத்தாலி அணிகள் மோதின. இத்தாலியின் மேட்டியோ பொரேட்டினி - 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில்,  ஒற்றையர் பிரிவு முதல் போட்டியில், ஸ்பெயினின் பாப்லோ கரெனோ புஸ்டாவை வீழ்த்தினார். இத்தாலியின் பிளாவியோ கோபோலி 1-6, 7-6, 7-5 என்ற கணக்கில்இரண்டாவது போட்டியில், ஸ்பெயினின் ஜாம்முனாவை தோற்கடித்தார்.  இத்தாலி  அணி முடிவில் 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தொடர்ந்து 3வது முறை, ஒட்டுமொத்தமாக 4வது முறையாக (1976, 2023-25) சாம்பியன் பட்டத்தை வென்றது.

Nov 25, 2025

மதுரை வந்த ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி 9 அணி வீரர்கள் !

 மதுரையில் நவ. 28 ல் நடக்க உள்ள, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்.டி.ஏ.டி.,) சார்பில் ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கிப் போட்டியில் பங்கேற்பதற்காக 9 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் மதுரை வந்தனர். மதுரை விமான நிலையம் நேற்று (நவ.24) இங்கிலாந்து, நெதர்லாந்து, நமீபியா, தென்னாப்பிரிக்கா ஹாக்கி அணியினர்.எஸ்.டி.ஏ.டி., மாவட்ட நிர்வாகம், ஹாக்கி சங்கங்கள் சார்பில் வெளிநாட்டு வீரர்களுக்கு கலை, கலாச்சார நிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.இதுவரை அயர்லாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, கனடா, எகிப்து உட்பட 9 நாடுகளைச் சேர்ந்தஅணியினர் மதுரையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் தங்கவைக்கப் பட்டுள்ளனர். நவ. 27 வரை பயிற்சி ஆட்டம் நடைபெறும்.நவம்பர் 28 காலை 9:00 மணிக்கு நடக்கும்முதல் போட்டியில் ஜெர்மனி, தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. வெளிநாட்டு வீரர்கள் விளையாடுவதால் பாதுகாப்பு கருதி  ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் போலீசாரின் பாதுகாப்புவளையத்திற்குள் கொண்டு வரப்படும்.

Nov 25, 2025

இந்தியா பெண்கள் கபடி உலக கோப்பையில் ,மீண்டும் சாம்பியன் !

பெண்களுக்கான கபடி உலக கோப்பை 2வது சீசன் வங்கதேச தலைநகர்தாகாவில்,'நடப்புசாம்பியன்' இந்தியா, நேபாளம், போலந்து உள்ளிட்ட 10 அணிகள், இரு பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடின. இந்தியா லீக் சுற்றில் தாய்லாந்து, வங்கதேசம், ஜெர்மனி, உகாண்டாவை  வீழ்த்தி, அரையிறுதியில் ஈரானை வீழ்த்தியது. மற்றொரு அரையிறுதியில் சீனதைபே அணி, வங்கதேசத்தை வென்றது. நேற்று நடந்த பைனலில்  இந்தியா, சீனதைபே அணிகள் மோதின. முதல் பாதி முடிவில் இந்திய அணி 20-16,. ஆட்டநேர முடிவில் 25-28 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தொடர்ந்து 2வது முறையாக (2012, 2025) சாம்பியன் பட்டத்தை வென்றது. 

Nov 25, 2025

இந்திய வீராங்கனை 'டெப்லிம்பிக்ஸ்' துப்பாக்கி சுடுதலில் பிரஞ்சலி (25 மீ.,  'பிஸ்டல்') பிரிவில் தங்கம் வென்றார்.

. காது கேளாதோருக்கான 'டெப்லிம்பிக்ஸ்' 25வது சீசன்ஜப்பான் தலைநகர்  டோக்கியோவில்பெண்களுக்கான துப்பாக்கி சுடுதல் 25 மீ., 'பிஸ்டல்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் பிரஞ்சலி பிரஷாந்த் துமால் (573.14 புள்ளி),  அனுயா பிரசாத் (569.15)  முதலிரண்டு இடம் பிடித்தனர். பைனலில் பிரஞ்சலி, 34 புள்ளி களுடன் முதலிடம் பிடித்துதங்கத்தை தட்டிச் சென்றார். பிரஞ்சலி கைப்பற்றிய 3வது பதக்கம். கலப்பு அணிகளுக்கான 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவில் சகவீரர்அபினவ் தேஷ்வாலுடன் இணைந்து தங்கம் வென்ற இவர், 10 மீ., 'ஏர் பிஸ்டல்' தனிநபர் பிரிவில் வெள்ளி கைப்பற்றினார்.  தனிநபர் 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவில் தங்கம் வென்ற அனுயா, 23 புள்ளிகளுடன் 4வது இடம் பிடித்தார். இம்முறை துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு 7 தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கலம் என, 16 பதக்கம் கிடைத்து உள்ளன. 

Nov 24, 2025

ஜூனியர் உலகக் கோப்பை சர்வதேச ஹாக்கியை அனைவரும் அணுகக்கூடிய ஒன்றாகமாற்ற ஆக்கி போட்டிக்கு டிக்கெட் இலவசம் !

சென்னை மற்றும் மதுரையில் வருகிற 28-ந்தேதி முதல் டிசம்பர் 10-ந்தேதி வரை 14-வது ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி(21 வயதுக்குட்பட்டோர்)நடக்கிறது. இதில்இந்தியா,ஆஸ்திரேலியா, ஜெர்மனி, நெதர்லாந்து, பெல்ஜியம், அர்ஜென்டினா உள்பட 24 அணிகள் பங்கேற்கின்றன. அவை 6 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோத உள்ளன. இதில் இந்திய அணி 'பி' பிரிவில் இடம் பிடித்துள்ளது. சிலி, ஓமன், சுவிட்சர்லாந்து ஆகியவை அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும். இந்திய அணி 28-ந்தேதி நடக்கும் தொடக்க ஆட்டத்தில் சிலியை எதிர்கொள்கிறது.தமிழ்நாட்டில் முதல்முறையாக நடக்கும் இந்த போட்டியை பார்க்க டிக்கெட்டுகள் இலவசம் என ஹாக்கி  இந்தியா அறிவித்துள்ளது. www.ticketgenie.inஎன்ற இணையத் தளத்திலோ அல்லது ஆக்கி இந்தியாவின் அதிகாரபூர்வ செயலியிலோபதிவு செய்து டிஜிட்டல் டிக்கெட்டுகளை பெற்று போட்டியை நேரில் பார்க்கலாம்.ஒரு நபருக்கு 4 டிக்கெட் மட்டுமே வழங்கப்படும்.ஆக்கி இந்தியா தலைவர் திலிப் திர்கே கூறுகையில், 'இலவச டிக் கெட்டுகளை வழங்குவதன் மூலம் தமிழகம் மற்றும் அதற்கு அப்பால் உள்ள மாணவ,மாணவிகள், இளம் விளையாட்டு வீரர்கள், அவரது குடும்பத்தினர், ஆக்கி பிரியர்களுக்கு போட்டியை நேரில் பார்ப்பதற்கான கதவினை திறப்பதே எங்களது இலக்கு. சர்வதேச ஹாக்கி யை அனைவரும் அணுகக்கூடிய ஒன்றாக மாற்ற உறுதிபூண்டுள்ளோம்' என்றார்.

Nov 24, 2025

சுப்மன் கில் கழுத்து வலி காரணமாக, புதிய கேப்டன் ராகுல் .

 சுப்மன் கில்கழுத்து வலி காரணமாக, தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் பங்கேற்கும் இந்திய அணிக்கு கேப்டனாக ராகுல் நியமிக்கப்பட்டார். மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில்  இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி பங்கேற்கிறது.  ராஞ்சியில் முதல் போட்டி வரும் நவ. 30ல் நடக் கவுள்ளது. ராய்பூர் (டிச.3),விசாகப்பட்டனத்தில் (டிச. 6) மீதமுள்ள போட்டிகள் ராய்பூரில் நடக்கவுள்ளன. 15 பேர் கொண்ட இந்திய அணி இத் தொடருக்கு அறிவிக்கப்பட்டனர்.

1 2 ... 48 49 50 51 52 53 54 ... 136 137

AD's



More News