25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


விளையாட்டு (SPORTS)

Nov 20, 2025

இந்தியாவின் ஜெய்ஸ்மின்லம் போரியா குத்துச்சண்டை பைனலில் …

உலக குத்துச்சண்டை கோப்பை பைனல்ஸ்  கிரேட்டர் நொய்டா வில் (உ.பி.,),. பெண்களுக்கான 57 கிலோ பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ஜெய்ஸ்மின் லம் போரியா 24, கஜகஸ்தானின் உல்சான் சர் சென்பெக் மோதினர். இதில் ஜெய்ஸ்மின் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தார்.இந்தியாவின் நிகாத் ஜரீன் (51 கிலோ) மற்றொரு அரையிறுதியில் 5-0 என கனிவா குல்சேவரை வென்றனர்.இந்தியாவின் ஜது மணிசிங்ஆண்களுக்கான 50 கிலோ பிரிவு அரையிறுதியில் 5-0 என, ஆஸ்திரேலியாவின் ஓமர் இசாசை வீழ்த்தினார். இந்தியாவின் பவான் பாத்வால்மற்றொரு அரையிறுதியில் (55 கிலோ)5-0 என இங்கிலாந்தின் எல்லிஸ் டிரோபிரிட்ஜை தோற்கடித்தார். அரையிறுதியில் இந்தியாவின் சச்சின் சிவாச் (60 கிலோ), ஹிதேஷ் குலியா (70 கிலோ) வெற்றி பெற்றனர்.அரையிறுதியில் தோல்வியடைந்த இந் தியாவின் ஜகளோ (55 கிலோ), நீரஜ் போகத் (65 கிலோ), சுமித் (75 கிலோ) அரையிறுதியில் தோல்வியடைந்து வெண்கலம் பெற்றனர்.

Nov 19, 2025

கோவாவில்,  உலக கோப்பை செஸ் 11வது சீசன் அர்ஜுன் 'டிரா' .

 உலக கோப்பை செஸ் 11வது சீசன்  கோவாவில்,  மொத்தம் 206 பேர் பங்கேற்கின்றனர்.இந்தியா சார்பில் அர்ஜூன் எரிகைசி 22, மட்டும் காலிறுதியில் பங்கேற்கிறார். இதில் அர்ஜுன், சீனாவின் வெய் இ இருவரும் மோதிய முதல் போட்டி 'டிரா' ஆனது.அர்ஜுன்,நேற்று இரண்டாவது போட்டியில் ,32 நகர்த்தலில் 'டிரா' ஆனது. ஸ்கோர் 1.0-1.0 சமனில் உள்ளது. ரஷ்யாவின் ஆன்ட்ரே -அமெரிக்காவின் ஷாக்லாந்து, உஸ் பெகிஸ்தானின் சிந்தரோவ்- மெக்சிகோவின் மார்டினஸ் இடையிலான காலிறுதியின் இரண்டாவது போட்டிகள் 'டிரா' ஆகின.இன்று வெற்றியாளரை முடிவு செய்ய 'டை பிரேக்கர்' நடக்கிறது. இதில் சிறப்பாக செயல்படும் வீரர்கள் அரையிறுதிக்கு முன்னேறலாம்.உலக சாம்பியன், இந்தியாவின் குகேஷ், கடந்த உலக கோப்பை தொடரின் பைனலுக்கு முன்னேறிய பிரக்ஞானந்தா, விதித் குஜ்ராத்தி,  உள்ளிட்டோர் தோல்வியடைந்தனர்.

Nov 19, 2025

டெப்லிம்பிக்சில்' தங்கம் வென்ற இந்திய ஜோடி !

காது கேளாதோருக்கான 'டெப் லிம்பிக்ஸ்' 25வது சீசன் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், நடக்கிறது. இந்தியா சார்பில் 45 வீரர், 28 வீராங்கனைகள் என மொத்தம் 73 பேர் பங்கேற்கின்றனர். 10 மீ., 'ஏர் ரைபிள்' துப்பாக்கி சுடுதலில் கலப்பு அணி,தங்கப் பதக்கத்துக்கான  போட்டியில் இந்தியாவின் தனுஷ் ஸ்ரீகாந்த் 23, மஹித் சாந்து 21, ஜோடி, தென் கொரி யாவின் ஜியான் டெய்ன்,கிம்ஊரிம் ஜோடியை சந்தித்தது.துவக்கத்தில் முன்னிலை 4-0 என பெற்ற இந்திய ஜோடி, முடிவில் 17-7 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கம் கைப்பற்றியது. தனுஷ் டோக்கியோ 'டெப்லிம் பிக்சில்' வென்ற இரண்டாவது தங்கம். முன்னதாக இவர், தனிநபர் 10 மீ., ‘ஏர் ரைபிள்' பிரிவில் தங்கம் வென்றிருந்தார். தவிர - பெண்களுக்கான தனிநபர் பிரிவில் வெள்ளி வென்ற மஹித் சாந்துவுக்கு இது முதல் தங்கம் ஆனது.வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் 10 மீ., 'ஏர் ரைபிள்' கலப்பு அணிகள் இந்தியாவின் முர்டசா வானியா, கோமல் மிலிந்த் ஜோடி, 16-12 என உக்ரைனின் லைகோவா, ஒலெக்சாண்டர் ஜோடியை வீழ்த்தியது.இந்தியா 3 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 9 பதக்கம் வென்றுள்ளது. 

Nov 19, 2025

உலக குத்துச்சண்டை 'பைனலில் இந்திய நட்சத்திரங்கள் .

கிரேட்டர் நொய்டாவில் (உ பி,) உலக குத்துச்சண்டை கோப்பை பைனல்ஸ், பெண்களுக்கான 48கிலோ ,பிரிவு அரையிறுதியில், உலக சாம்பியன்,இந்தியாவின் மீனாக்ஷி 24, தென் கொரியாவின் பாக் சொரோங்கை 5-0 என வெற்றி பெற்று, பைனலுக்குள் நுழைந்தார். இந்தியாவின் அருந்ததி (70 கிலோ)முன்னாள்  யூத் உலக சாம்பியன் அரையிறுதியில் ஜெர்மனியின்லியோனியை வீழ்த்தி, பைனலுக்கு முன்னேறினார். 60 கிலோ பிரிவுஅரையிறுதியில் இந்தியாவின் பர்வீன், உலக குத்துச்சண்டை கோப்பையில் வெள்ளிவென்ற போலந்தின் அனெட்டாவை 3-2 என வீழ்த்தி, பைனலுக்கு முன்னேறினார்.இந்திய வீரர் அன்குஷ் பங்கல், 80 கிலோ பிரிவு அரையிறுதியில் 5-0 என ஆஸ்திரேலியாவின் மர்லான் செவ்ஹானை வீழ்த்தினார். இந்தியாவின் நுாபுர் (80+), உக்ரைனின் மரியாவை, வென்றார். இந்தியாவின் அபினாஷ் (60), பிரீத்தி (54) தங்கள் பிரிவில் பைனலுக்கு முன்னேறினர். இதுவரை இந்திய நட்சத்திரங்கள் 7 பேர் (5 வீராங்கனைகள், 2 வீரர்) பைனலுக்கு முன்னேறினர். இந்தியாவின் ஸ்வீட்டி (70), அரையிறுதியில் கிரீன்ட்ரீயிடம் (ஆஸி.,) தோற்று, வெண்கலம் வென்றார்.

Nov 18, 2025

டென்னிஸ் ஏ.டி.பி., பைனல்ஸ் சில், இத்தாலியின் ஜானிக்  சின்னர்  வெற்றி பெற்று ,மீண்டும் சாம்பியன் . இவருக்கு ரூ. 44.95 கோடி பரிசு.

ஏ.டி.பி., பைனல்ஸ் டென்னிஸ் தொடர்இத்தாலியின் டுரின் நகரில் ஒற்றையர் பிரிவு பைனலில் உலகின் 'நம்பர்-2'. இத்தாலியின் ஜானிக் சின்னர், ‘நம்பர்-1' வீரர், ஸ்பெயினின் அல்காரஸ்,. இந்த ஆண்டில் இருவரும் ஆறாவது முறையாக நேருக்கு நேர் மோதினர்.முதல் செட்டை சின்னர் 7-6 என வசப்படுத்தினார். இரண்டாவது 5-5 செட் என இழுபறியாக இருந்தது. பின் சின்னர் 7-5 என கைப்பற்றி ,வெற்றி பெற்று, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக கோப்பை தக்க வைத்துக் கொண்டார்.. இவருக்கு ரூ. 44.95 கோடி பரிசு கிடைத்தது. அல்காரஸ் ரூ 24 கோடி பெற்றார். 

Nov 18, 2025

டெப்லிம்பிக்' துப்பாக்கிசுடுதலில் இதுவரை இந்தியா 2 தங்கம், 4 வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 7 பதக்கம் வென்றுள்ளது .அனுயா பிரசாத் தங்கம் வென்றார் .

காதுகேளாதோருக்கான ஒலிம்பிக் ('டெப்லிம் பிக்ஸ்') 25வது சீசன் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில்,  இந்தியா சார்பில் 45 வீரர், 28 வீராங்கனைகள் என மொத்தம் 73 பேர் பங்கேற்கின்றனர்.பெண்களுக்கான துப்பாக்கி சுடுதல் 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவு தகுதிச் சுற்றில் ,இந்தியா சார்பில் அனுயா, பிரஞ்ஜலி பங்கேற்றனர்.டெப்லிம்பிக் தகுதிச்சுற்றில்  572 புள்ளி எடுத்து முதலிடம் பிடித்த பிரஞ்ஜலி, புதிய உலக சாதனை படைத்தார். அனுயா 564 புள்ளியுடன் மூன்றாவது இடம் பெற்றார். இருவரும் பைனலுக்கு முன்னேறினர்.இதில் அனுயா, 241.1 புள்ளி எடுத்து முதலிடம் பெற்று, தங்கம் வென்றார். பிரஞ்ஜலிக்கு (236.8) வெள்ளி கிடைத்தது.'ஏர் பிஸ்டல்' பிரிவு தகுதிச் சுற்றில், ஆண்களுக்கான 10 மீ.,  2022 டெப்லிம்பிக்கில் தங்கம் வென்ற, இந்தியாவின் அபினவ் தேஷ்வல், உலக சாதனையை 576 புள்ளி) சமன் செய்து, பைனலுக்கு முன்னேறினார். பைனலில் 235.2 புள்ளி மட்டும் எடுத்து, வெள்ளிப்பதக்கம் வென்றார்.அனுயா பிரசாத் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார். இந்தியா இதுவரை இந்தப் போட்டிகளில் இரண்டு தங்கம், நான்கு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் என மொத்தம் ஏழு பதக்கங்களை வென்றுள்ளது, மேலும் பதக்கப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. 

Nov 18, 2025

விளையாட்டு போட்டிகள் .18th November 2025

 சவுதி அரேபியாவில் ,ஆசிய கோப்பை கால்பந்து தொடர் 2027ல் நடக்க உள்ளது. இதற்கான 3வது கட்ட தகுதிச் சுற்றில் இந்தியா, ஆசிய கோப்பை வாய்ப்பை இழந்தது. இன்று தாகாவில் நடக்கும் தனது கடைசி போட்டியில் இந்திய அணி, வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவு சிட்னியில் நடக்கும் சாலஞ்சர் கோப்பை முதல் சுற்றில் இந்தியாவின் கரண் சிங் 7-6, 6-3 என்ற நேர்செட்டில் சக வீரர் ஆர்யன் ஷாவை வென்றார். இன்று சிட்னியில் ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் தொடர்,. ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, ஒற்றையர்பிரிவில் லக்சயா, பிரனாய் இதில் பங்கேற்கின்றனர்.உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் ('ரைபிள்' / 'பிஸ்டல்') தொடர் எகிப்தின் கெய்ரோவில் ,ஆண்களுக்கான 25 மீ. சென்டிரல் பயர் பிஸ்டல் பிரிவில்இந்தியாவின் குர்பிரீத் சிங், வெள்ளிப்பதக்கம் வென்றார். இத்தொடரில் 3 தங்கம், 6 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் இந்தியா 13 பதக்கம் வென்று பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்துள்ளது.

Nov 17, 2025

விளையாட்டு போட்டிகள் 17th november 2025

உலக குத்துச்சண்டை கோப்பை தொடர் பைனல்ஸ்உ.பி., மாநிலம் கிரேட்டர் நொய்டாவில்,  பெண்களுக்கான 54 கிலோ பிரிவு காலிறுதியில் இந்தியாவின் பிரீத்திபவார், உஸ்பெகிஸ்தானின் நிகினா உக்டமோவா மோதினர். உடல் நிலைகாரணமாக , ஒரு ஆண்டுக்கு பின் போட்டிக்கு திரும்பிய பிரீத்தி 5-0 என வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தார்.இந்தியாவின் மீனாக்ஷி பெண்களுக்கான 48 கிலோ பிரிவு காலிறுதியில் கஜகஸ்தானின் போலட் அக்போட்டை வீழ்த்தினார். மற்ற எடைப்பிரிவு காலிறுதியில் இந்தியாவின் அங்குஷ் பங்கால் (80 கிலோ), நரேந்தர் பெர் வால் (+90 கிலோ) வெற்றி பெற்றனர்.உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்  எகிப்தில் நடக்கும் 25 மீ., 'சென்டர் பயஸ் பிஸ்டல்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் ஹர் பிரீத் சிங் (291.10 புள்ளி) 2வது இடம் பிடித்தார்.உலக கோப்பை ஸ்னுாக்கர் லீக் போட்டிஓமனில் நடக்கும் இந்தியாவின் பங்கஜ் அத்வானி 3-0 என, பஹ்ரைனின் ஹேஷாம் அல்சாகரை வீழ்த்தினார். தொடர்ந்து 2வது வெற்றியை பதிவு செய்த அத்வானி, 'நாக்-அவுட்' சுற்றுக்கு முன்னேறினார்.பெண்களுக்கான பில்லி ஜீன்கிங் கோப்பை டென்னிஸ்பெங்களூருவில் நடந்த 'பிளே-ஆப்' போட்டியில் இந்திய அணி 0-2 என நெதர்லாந்திடம் வீழ்ந்தது. ஏற்கனவே சுலோவேனியாவிடம் தோற்ற இந்தியா, பைனலுக்கான தகுதிச் சுற்றுக்கு முன்னேறவில்லை.

Nov 17, 2025

இந்தியாவின் தனுஷ் (10 மீ., 'ஏர் ரைபிள்') காது கேளாதோர் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றார்.

காதுகேளாதோருக்கான ஒலிம்பிக் ('டெப்லிம்பிக்ஸ்') 25வது சீசன்ஜப்பான் தலைநகர் டோக்கியோவில்,  ஆண்களுக்கான துப்பாக்கி  சுடுதல் தனிநபர் 10 மீ., 'ஏர் ரைபிள்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் தனுஷ். ஸ்ரீகாந்த் (630.6 புள்ளி), முகமது முர்டசா வானியா (626.3) முதலிரண்டு இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினர்.அடுத்து நடந்த பைனலில் தனுஷ், 252.2 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். “டெப்லிம்பிக்ஸ்' வரலாற்றில் தனுஷ் கைப்பற்றிய 3வது தங்கம்.இவர், 'டெப் லிம்பிக்ஸ்' (630.6), 'டெப் பைனல்' (252.2) உலக சாதனைகளைமுறியடித்தார். இன்று நடக்கவுள்ள கலப்பு அணிகளுக்கான பிரிவில் சகவீராங்கனை  மஹித் சாந்துவுடன் இணைந்து, 'டெப்லிம் பிக்ஸ்' அரங்கில்தனது 4வது தங்கத்தை தனுஷ் கைப்பற்றலாம்.இரண்டாவது இடம் பிடித்த முர்டசா (250.1) வெள்ளி வென்றார்.மஹித் சாந்து'பெண்களுக்கான தனி நபர் 10 மீ., 'ஏர் ரைபிள்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின்(623.4), கோமல் மிலிந்து வாக்மேர் (622.0) முறையே 2, 3வது இடம்பிடித்து மஹித் சாந்து வெள்ளி வென்றார். கோமல் வாக்மேர் (228.3) வெண்கலத்தை கைப்பற்றினார்.

Nov 17, 2025

இந்திய பெண்கள் பார்வையற்றோர் CRIKET உலக கோப்பை தொடரில் அரையிறுதிக்கு முன்னேறியது.

 CRIKET 'டி-20' உலக கோப்பை தொடரில் தொடர்ந்து பார்வையற்ற பெண்களுக்கான நான்காவது வெற்றி பெற்ற இந்திய அணி,அரையிறுதிக்கு முன்னேறியது. இந்தியா, இலங்கையில், பார்வை குறைபாடுள்ள பெண்களுக்கான  'டி-20' உலக கோப்பை முதல் சீசன்  இந்தியா, இலங்கையில், இந்தியா, ஆஸ்திரே லியா, இலங்கை, நேபாளம் உள்ளிட்ட 7 அணிகள் பங்கேற்கின்றன. முதல் மூன்று போட்டியில் இலங்கை, ஆஸ்திரேலியா, நேபாள்த்தை வென்ற இந்திய அணி, நேற்று அமெரிக்காவை எதிர்கொண்டது.'டாஸ்' வென்ற அமெரிக்கா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 60 ரன் மட்டும் எடுத்தது. இந்தியாவின் சிம்ரன்ஜீத் கவுர், சுனிதா, சிமுதாஸ், கங்கா தலா ஒரு விக்கெட் சாய்த்தனர்.3.3 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 61/0 ரன் எடுத்து, 10 விக்கெட்டில் வெற்றி பெற்றது.பட்டியலில் தொடர்ந்து நான்கு வெற்றியுடன்  முதலிடத்தை உறுதி செய்து, அரையிறுதிக்கு முன்னேறியது.

1 2 ... 50 51 52 53 54 55 56 ... 136 137

AD's