சென்னையில் வசிக்கும் ஷ்ரவண் மற்றும் சஞ்சய், ஆண்டுக்கு ரூ.120 கோடிக்கு மேல் சம்பாதிக்கும் இளைய தலைமை நிர்வாக அதிகாரி,இந்தியாவின் இளைய தொழில்முனைவோர். இருவரும் சேர்ந்து,2012 இல்"வடிவமைப்பு பரிமாணம்" செயலியை அறிமுகப்படுத்தினர். இந்த இரண்டு சகோதரர்களும் தங்கள் முதல் செயலியை உருவாக்கியபோது அவர்கள் முறையே7 ஆம்8 ஆம் வகுப்பு மாணவர்கள்.இதுவரை, அவர்கள்11க்கும் மேற்பட்ட செயலிகளை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
பனிப்பாறைகள் என்பது பனிக்கட்டிகளாக மாறிய உறைந்த ஆறுகள் ஆகும். ஆண்டு முழுவதும் பனி ஒரே பகுதியில் இருக்கும் போது பனிப்பாறைகள் என்ற பெரிய அளவிலான திட வடிவ படிகமாக உருவாக தொடங்குகின்றன. ஒவ்வொரு ஆண்டும், புதிய பனி அடுக்குகள் முந்தைய அடுக்குகளை புதைத்து சுருங்க வைக்கின்றன. சிறிய ஐஸ் துண்டுகள் போல உருவாகும் பனிப்பாறைகள் 100 ஆண்டுகளில் மலை போல் மிகப்பெரிய அளவை எட்டுகிறது.பனிப்பாறைகள் அனைத்து வடிவங்களிலும், அளவிலும் காணப்படுகின்றன. ஐஸ்-க்யூப் அளவிலான துண்டுகள் முதல் ஒரு சிறிய நாட்டின் அளவிலான பனித்தீவுகள் வரை உள்ளன. பனிப்பாறை என்ற சொல் 16 அடி விட்டம் கொண்ட பெரிய பனித் துண்டுகளை குறிக்கிறது. பெர்கிபிட்ஸ் மற்றும் க்ரோலர்ஸ் என்று அழைக்கப்படும் சிறிய பனிப்பாறைகள், கப்பல்களுக்கு மிகவும் ஆபத்தானவை. ஏனெனில் நீரில் அமிழ்ந்து கிடக்கும் இவற்றை கண்டறிவது கடினம். வடக்கு அட்லாண்டிக் மற்றும் அண்டார்டிக் கண்டத்தை சுற்றியுள்ள குளிர்ந்த நீர்நிலைகளில் தான் பூமியில் உள்ள பெரும்பான்மையான பனிப்பாறைகள் காணப்படுகின்றன.இந்த பனிப்பாறைகள் அதன் நீட்சியாக பனி படலங்களை தோற்றுவிக்கின்றன. பனிப்படலம் என்பது நிலத்தில் அமைந்து 50,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரவி காணப்படும் மிகப்பெரிய உறைபனி ஆகும். இப்போது பூமியில் இரண்டு பனிப்படலங்கள் மட்டுமே உள்ளன. ஒன்று உலகின் மிகப்பெரிய தீவானகிரீன்லாந்தின்பெரும்பகுதியைஉள்ளடக்கியது, மற்றொன்று அண்டார்டிக் கண்டம் முழுவதும் பரவியுள்ளது.
பிரேசில் நட் எனப்படும் பருப்பு வகையில் செலினியம் சத்து அதிகமாக உள்ளது. இதனால், இது பெண் களின் குடல் ஆரோக்கி யத்தை மேம்படுத்து வதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.உலகின் மிகப் பழமையான பாலாடைக்கட்டி (சீஸ்) சீனாவில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதன் வயது 3,600 ஆண்டுகள் என, வரலாற்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
முகம் பார்த்தல், கண் பார்வை, வாகனம், ஜன்னல், அறிவியல் ஆய்வக கண்ணாடி என பல விதமான கண்ணாடிகள் உள்ளன. இதில் சில ஒளி ஊடுருவும், சில ஊடுருவாது. கண்ணாடியானது சிலிக்கா (மணல்). கால்சியம் கார்பனேட் (சுண்ணாம்புக்கல்), சோடியம் கார்பனேட் வேதிப்பொருள்களால் ஆனது. இவற்றை அதிக வெப்பநிலையில் அக்கலவை உருகிப் பாகுபோல ஆகிவிடும். உருகிய கண்ணாடியை வெவ்வேறு வடிவிலான வார்ப்புகளில் ஊற்றி அதை ஒரே சீராகவும், மெதுவாகவும் குளிரச் வெப்பப்படுத்தும்போது செய்து கண்ணாடிப் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன .
ஒருவர் மற்றவர்களை சார்ந்து இயங்குவதே சமூகம். ஒரு துறையைசார்ந்தவர், பிறதுறையினருடன்இணைந்தேசெயல்படுகின்றனர். அதற்கு, இதர துறைகள் குறித்த திறனையும், அறிவையும் வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.அதேபோல், இன்றைய காலத்தில் எந்த ஒரு இன்ஜி னியரும் தனித்து செயல்பட இயலாது. மெக்கானிக்கல் இன்ஜினியர் மெக்கானிக் கல் துறை சார்ந்த அறிவை மட்டுமே கொண்டு செயல் பட முடியாது. கம்ப்யூட்டர் இன்ஜினியர் கம்ப்யூட்டர் துறை சார்ந்த அறிவை மட் டுமே கொண்டு செயல்படமுடியாது.எந்தஒருதுறைஇன்ஜினியரும்அவர்களதுதுறையில்ஆழ்ந்தஅறிவைவளர்த்துக்கொள்ளவேண்டும்.அதேதருணம், இதரதுறைகள்சார்ந்தசெயல்பாட்டுஅறிவையும்வளர்த்துக்கொள்ளவேண்டியதுஅவசியம்.ஆட்டோமேஷன், ஆர்ட்டி பிசியல் இன்டெலிஜென்ஸ் அனைத்தும் மனிதர்களின் வாழ்க்கையை எளிதாக்கு கின்றன. இத்தகைய முன்னேற்றங்கள் தொடரும் பட்சத்தில், ஒரு காலகட்டத் தில் சமுதாய கட்டுப்பாடுகள்உடையும், ஏற்றத்தாழ்வுகள் குறையும், நீண்ட காலத்தை ஒப்பிட்டால் புதிய வாய்ப் புகளும், பணி செய்யும் முறையும் மாற்றம் காணுமே தவிர, வேலைவாய்ப்புகள் குறையாது, எதிர்காலத்தில் ஏராளமான முன்னேற்றங்கள் தொடர்ந்து, அனைவருக்கும் அனைத்தும் சாத்தியமாகும்நிலை உருவாகும். மனிதர்கள் செய்யும் பெரும்பாலான வேலைகளை இன்று, 'ஹியுமானாய்டு' செய்யும் வகையில் நவீன தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருகின்றன.மனித மூளை செயல்பாடுகளை அடிப்ப டையாகக் கொண்டே, இன்று 'ஆர்ட்டிபிசியல் இன்டெலி ஜென்ஸ்' செயல்படுகிறது. அதேபோல், மனித கை மற்றும் கால் செயல்பாடு களை அடிப்படையாகக் கொண்டே 'மெக்கானிக்கல் இன்ஜினியரிங்' செயல் படுகிறது. இவ்வாறு, இயற்கையை பார்த்து, புரிந்து அவற்றில் இருந்தே அனைத்து கண்டுபிடிப்புகளும் நிகழ்கின்றன. இதுவரை இயற்கையில் இருந்து மனிதர்கள் கற்ற வற்றை, இயந்திரங்களை கற்றுக்கொள்ளச் செய் கிறோம். அதுவே, 'ஆர்ட்டி பிசியல் இன்டெலிஜென்ஸ்'.இச்சூழலில், அனைத்து மாணவர்களையும் முழுமையான மனிதராக்க வேண்டும் என்பதே எங்களது கல்வி நிறுவனத்தின் பிரதான குறிக்கோள். அத்தகைய குறிக்கோளை அடைய, ஒரு இன்ஜினியர் பல்வேறு விதமான துறை சார்ந்த அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். ஆக வேதான், அனைத்து துறை சார்ந்த மாணவர்களுக்கும் வேளாண்மை பாடம் செயல் முறையில் கற்பிக்கப்படுகிறது.ஆட்டோமொபைல் சார்ந்த பயிற்சியும், பயாலஜி குறித்த அறிவையும் அனைத்து துறை சார்ந்தவர்களுக்கும் வழங்குகிறோம்.
ஐந்து மில்லி மீட்டருக்கும் குறைவான அளவுள்ள நெகிழிகள், நுண் நெகிழிகள் என்று அழைக்கப்படுகின்றன. இவை உலகின் எல்லா இடங்களையும் மாசுபடுத்தி வருகின்றன. மேகங்களில் உள்ள நுண் நெகிழிகளால் பருவ கால நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த பென்சில்வேனியா பல்கலை கூறியுள்ளது.வட பசிபிக் பெருங்கடலின் கிழக்குப் பகுதியில் ஒரு புதிய கடல்நத்தை இனத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதற்கு பாத்திதேவியஸ் காவ்டாக்டைலஸ் என்று பெயரிட்டுள்ளனர். இது ஒளிரும் ஆற்றல் பெற்ற நத்தைகளில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஆசிய பகுதிகளில் தென்மேற்கு பருவமழைக்காலம் முக்கியத்துவம் வாய்ந்தது. ஜூன் முதல் செப்டம்பர் நடுப்பகுதி வரை மழைப் பொழிவு ஏற்படும் இந்த காலகட்டம் வெப்பத்துடன் கூடிய ஈரமான பருவம் என்று அழைக்கப்படுகிறது. தென்மேற்கு பருவமழை தொடங்கியவுடன், அதுவரை நிலவி வந்த கோடை வெப்பம் வெகுவாக குறைந்து காற்றில் ஈரப்பதம் அதிகரிக்கும். சுற்றுப்புறத்தில் 3 டிகிரி முதல்6 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை குறையும். பொதுவாக, தென்மேற்கு மழைக்காலம் முழுவதும் வெப்பநிலை குறைவாக சீராக இருக்கும். மேற்கு தொடர்ச்சி மலைகளில் அதிக மழைப்பொழிவு காரணமாக இந்த வெப்பநிலை குறைவு இருக்கும்.தமிழ்நாட்டின் கடலோர பகுதிகள் மற்றும் ஆந்திராவின் அருகிலுள்ள பகுதிகளில் இந்த பருவத்தில் மிகக்குறைந்த மழைப் பொழிவு காணப்படும் என்பதால், அப்பகுதிகளில் வெப்பநிலை சற்று அதிகமாக இருக்கும்.அரபிக்கடலுக்கு அருகில் இருப்பதால் கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும். இந்த பருவமழை தீவிரம் அடைந்து, இடி, மின்னல் மற்றும் பலத்த மழையாக மாறும்.மழையை கணிக்கும் அறிவியல் கருவிகளையும் கடந்து சில நேரங்களில் பருவமழை அதற்கு முன் அல்லது பிந்தைய காலத் தில் ஏற்படும் போது மனிதர்களுக்கும், விவசாய பயிர்களுக்கும் சேதத்தை ஏற்படுத்தி விடுகிறது.எப்படி இருந்தாலும், தென்மேற்கு பருவமழையை நம்பி பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களும், ஏராளமான குடிநீர் ஆதாரங் களும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள்GPay,PhonePe உள்ளிட்ட பணப்பரிவர்த்தனை செயலிகளை பயன்படுத்தி வரும் நிலையில் அதில் குறிப்பிட்ட வகை பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்தியா முழுவதும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அதிகரித்துள்ள நிலையில்GPay,PhonePe,PayTm என பல பணப்பரிவர்த்தனை செயலிகள் இலவச பரிவர்த்தனை சேவைகளை வழங்கி வருகின்றன. இதன்மூலம் மக்கள் கடைகளில் பொருட்களை வாங்குவது தொடங்கி, மின்சார கட்டணம், ரீசார்ஜ் உள்ளிட்டவற்றையும் இந்த செயலிகளின் வழியாக எளிதாக செய்கின்றனர். இந்நிலையில் கடந்த2023ம் ஆண்டு முதலாக ரீசார்ஜ் பணப்பரிவர்த்தனைகளுக்குGooglePay கட்டணம் பிடித்தம் செய்யத் தொடங்கியது. தற்போது தங்கள் செயலிகள் வழியாக டெபிட் மற்றும் கிரெடிட் கார்டை பயன்படுத்தி பில் செலுத்துபவர்களுக்கு 0.5 சதவீதம் முதல் 1 சதவீதம் வரை சேவை கட்டணம் பிடிக்க தொடங்கியுள்ளன ஜிபே, போன்பே உள்ளிட்ட செயலிகள். ஆனால் வழக்கமாக மக்கள் தங்கள் வங்கி கணக்குகளைUPI மூலமாக இணைத்து மேற்கொள்ளும் பரிவர்த்தனைகளுக்கு எந்த வித கட்டணமும் விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அது நமது பாரதம்தான் சோழர்காலம் முதல் இன்று வரையில் கப்பல் துறையில் சிறந்து விளங்கும் நா. இவ்வுலகில் சுமார் 70 சதவீதத்திற்கு அதி மான ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகள் கப்பல் மூலமாகவே நடைபெறுகிறது. நமது தேசிய கல்விக் கொள்கை 2020வும் திறன்மிகு கல்வியை ஊக்குவிக்கும் நிலையில், கடல்சார் கல்வி அவசியம் பெறுகிறது. இத்துறைக்கான வேலை வாய்ப்பும், ஊதியமும் சுமார் லட்சம் வரை மாத சம்பளமாக பெரும் வாய்ப்புள்ளது.பி.எஸ்சி, நாட்டிக்கல் சயின்ஸ், பி.இ. மரைன் இன்ஜினியரிங் படிப்புகளை முடித்த பிறகு கப்பலில் மாலுமிகளாகவும், பொறியாளராகவும் வாய்ப்புள்ளது.கடல்சார் சர்வதேச அமைப்பானது கப்பல் துறையில் பெண்களின் பங்கை ஊக்குவிக்கிறது. கப்பல் துறையில் உலகின் தலைசிறந்த நிறுவனங்களான மெர்ஸ்க், சி.எம்.ஏ.சி.ஜி.எம்.வி.,ஷிப் போன்றநிறுவனங்கள் பெண்களுக்கு முன்னுரிமை வழங்குகின்றன. பெண்களும் சாதிக்கலாம்தகுதிகள்பி.எஸ்சி., நாட்டிக்கல் சயின்ஸ், பி.இ., மரைன் இன்ஜினியரிங் படிப்புகளை வழங்க, ஒவ்வொரு உயர்கல்வி நிறுவனமும் கப்பல் போக்குவரத்து இயக்குனரகத் தின் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.இப்படிப்புகளில் சேர்க்கை பெற போக்குவரத்து இயக்குன ரகத்தின் அனுமதி பெற்றிருப்ப தும் அவசியமாகிறது.இத்தகைய படிப்புகளை பயில மாணவர்கள் உடற்தகுதியும், சரியான கண்பார்வையையும் பெற்றிருப்பது மிகவும் அவசியம்.கலர் பிலைண்டர்ஸ் இருத்தல் கூடாது. கப்பலில் பயணித்து வேலைபார்க்க உள்ளதால், இத்தகைய உடற்தகுதிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.இந்ததுறையில்சேர்ந்துபயிலஇயற்பியல், கணிதம்மற்றும்வேதியியல்பாடங்களில்குறைந்தது 60 சதவீதமதிப்பெண்ணும், ஆங்கிலத்தில் 50 சதவீத மதிப்பெண்ணும் எடுத்திருக்க வேண்டும்.இந்த படிப்புகளில் சேர்க்கை பெற இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் சார்பில் நடத்தப்படும் ஐ.எம்.யு., சி.இ.டி., என்ற நுழைவுத்தேர்வை எழுத வேண்டும்.
அணில்கள் தங்களின் உணவுக்காக கடினமான விதைகளைச் சேகரித்து பூமிக்குள் புதைத்து வைக்கிற செயலை வழக்கமாக செய்து வருகின்றன. பெரும் பாலும் அந்த செயல்பாட்டை அணில்கள் மறந்துவிடுகின்றன. எனவே பல லட்சக் கணக்கான மரங்கள் அந்த விதைகளால் வளர்ந்திருக்கின்றன. அந்தவகையில் அணில்களுக்கு நன்றி செலுத்த நாம் கடமைப்பட்டு இருக்கிறோம். அணில்களை போல விதைகளை விதைப்போம். விதை பந்துகளை உருவாக்கி பல இடங்களில் வீசுவோம். அதனால் மரங்கள் வளர வாய்ப்புகள் இருக்கின்றன. நம்மை காக்கும் இயற்கையை காக்கும் செயல்களில் அணில்களை பின் பற்றுவோம்.