“அடுத்த 10 ஆண்டுகளில் உலகில் 100 கோடிக்கும் அதிகமான மனித உருவ ரோபோக்கள் பயன்பாட்டிற்கு வரும். ஒரு ரோபோவின் உழைப்பும் செயல்திறனும் மனிதனை விட 5 மடங்கு அதிகமாக இருக்கும்.ரோபோக்களே பிற ரோபோக்களை உற்பத்தி செய்யவும் தொடங்கும். அப்போது அதன் வளர்ச்சி மிகப்பெரிய அளவிலும், பின்னர் கற்பனை செய்ய முடியாத வேகத்திலும் அதிகரிக்கும்.”— எலான் மஸ்க்
“விவசாயிகள், ஆசிரியர்கள், மருத்துவர்கள் மற்றும் மதகுருமார்கள் லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டவர்களாக இருக்க வேண்டுமா?” என ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு கேள்வி எழுப்பியுள்ளார்.ஒவ்வொரு மனிதச் செயல்பாட்டையும் லாபத்தை மையமாகக் கொண்டு அணுகுவது சமூகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அவர் எச்சரிக்கிறார். சந்தை என்பது மனித நாகரிகம், கலாச்சாரம் மற்றும் ஆன்மீகம் போன்ற அடித்தளங்களின் மீது கட்டமைக்கப்பட்டதே தவிர, அவற்றை சந்தை உருவாக்கவில்லை என்றும் அவர் கூறுகிறார்.எனவே, லாபத்தை இறுதி இலக்காகப் பார்க்காமல், சமூக மற்றும் கலாச்சார அடித்தளங்களைப் பாதுகாப்பதற்கான ஒரு கருவியாகக் கருத வேண்டும் என்பது வேம்புவின் கருத்து.மேலும், தொழில்நுட்பமும் ஒரு இலக்கு அல்ல; உயர்ந்த மனித நோக்கங்களை அடைவதற்கான ஒரு கருவி மட்டுமே என அவர் வலியுறுத்துகிறார்.
இன்று உயரமான கட்டடங்களில் சில நொடிகளில் பல தளங்களைக் கடந்து செல்ல லிப்ட் நமக்கு உதவுகிறது. ஆனால், இதன் வரலாறு பல நூற்றாண்டுகளைக் கடந்து வந்தது என்பது தெரியுமா?கி.மு. 3ஆம் நூற்றாண்டிலேயே கிரேக்க கணிதவியலாளர் ஆர்க்கிமிடிஸ், கயிறுகள் மற்றும் இயந்திர அமைப்புகளைப் பயன்படுத்தி பொருட்களை மேலே தூக்கும் சாதனத்தை உருவாக்கியதாக வரலாற்றுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.பின்னர் ஐரோப்பாவில் உள்ள அரண்மனைகளில், குறிப்பாக இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகளில், மனிதர்களையும் பொருட்களையும் மேலே மற்றும் கீழே கொண்டு செல்லும் உயர்த்தி அமைப்புகள் பயன்படுத்தப்பட்டன.பிரான்சில் உள்ள வெர்செய்ல்ஸ் அரண்மனையில், 1743ஆம் ஆண்டு‘பறக்கும் நாற்காலி’ என அழைக்கப்பட்ட ஒரு வகை லிப்ட் அமைக்கப்பட்டது. அதன்பிறகு ரஷ்யாவைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளர் இவான் குலிபின், 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் புதிய தொழில்நுட்ப அடிப்படையிலான லிப்ட் வடிவமைப்பை உருவாக்கினார்.19ஆம் நூற்றாண்டில் நீராவிச் சக்தியில் இயங்கும் லிப்ட்கள் பயன்பாட்டுக்கு வந்தன. லண்டனில் 1823ஆம் ஆண்டு ‘Rising Room’ என அழைக்கப்பட்ட உயர்த்தி அமைப்பு சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்தது.ஆனால், லிப்ட் வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது அமெரிக்க கண்டுபிடிப்பாளர்எலிஷா ஓடிஸ் உருவாக்கிய பாதுகாப்பு அமைப்பு.1853ஆம் ஆண்டு நியூயார்க்கில் நடைபெற்ற கண்காட்சியில், கயிறு அறுந்தாலும் லிப்ட் கீழே விழாமல் தடுக்கும் பாதுகாப்பு அமைப்பை ஓடிஸ் அறிமுகப்படுத்தினார். இந்த கண்டுபிடிப்பே நவீன பயணிகள் லிப்ட் வளர்ச்சிக்கு முக்கிய அடித்தளமாக அமைந்தது. பின்னர் அவரது பெயரில் Otis நிறுவனம் உருவானது.20ஆம் நூற்றாண்டில் மின்சார லிப்ட்கள் வேகமாக வளர்ச்சி பெற்றன. தானியங்கி கதவுகள், அவசர நிறுத்து அமைப்புகள், தொலைபேசி தொடர்பு மற்றும் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் படிப்படியாக சேர்க்கப்பட்டன.இன்று அதிவேக மின்சார லிப்ட்கள், உயரமான கட்டடங்களின் அத்தியாவசிய தொழில்நுட்பமாக மாறிவிட்டன.கயிறு மற்றும் எளிய இயந்திரத்தில் தொடங்கிய லிப்ட்... இன்று வானளாவிய கட்டடங்களை சில நொடிகளில் இணைக்கும் அற்புதத் தொழில்நுட்பமாக வளர்ந்துள்ளது!
நடிகர் அஜித்குமார் பங்கேற்கும் ‘சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்’ கார் பந்தயப் போட்டியை, தமிழக முதல்வர் விஜய் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார்.இந்திய ரேஸர்களை ஊக்குவிக்கும் வகையில், சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்டையும் முதல்வர் விஜய் தொடங்கி வைக்க உள்ளதாக லே மான்ஸ் கோப்பை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆதார் அட்டையில் உள்ள முகவரியை மாற்ற விரும்புபவர்கள், அங்கீகரிக்கப்பட்ட முகவரிச் சான்று ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி புதுப்பிக்கலாம்.பாஸ்போர்ட், PAN கார்டு, வங்கி பாஸ்புக், ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை, மின்சாரம்/தண்ணீர்/கேஸ் பில் உள்ளிட்ட ஆவணங்கள் இதில் அடங்கும்.சில சந்தர்ப்பங்களில், MP, MLA, Gazetted Officer அல்லது Tehsildar வழங்கும் புகைப்படத்துடன் கூடிய முகவரிச் சான்றிதழும் பயன்படுத்தப்படலாம்.ஆதார் புதுப்பிப்புக்கு முன், தற்போதைய UIDAI விதிமுறைகள் மற்றும் ஏற்றுக்கொள்ளப்படும் ஆவணங்களின் பட்டியலை சரிபார்ப்பது அவசியம்.
UPI மூலம் பணம் அனுப்பும்போது அனைவருக்கும் ஒரே மாதிரியான பரிவர்த்தனை வரம்பு இருப்பதில்லை. வங்கி, UPI சேவை மற்றும் பரிவர்த்தனையின் வகையைப் பொறுத்து வரம்புகள் மாறுபடலாம்.பொதுவான UPI பரிவர்த்தனைகளுக்கு ₹1 லட்சம் வரை வரம்பு இருப்பது வழக்கம். மருத்துவம், கல்வி, வரி செலுத்துதல் உள்ளிட்ட சில குறிப்பிட்ட வகை பரிவர்த்தனைகளுக்கு அதிகபட்ச வரம்பு அனுமதிக்கப்படலாம்.மேலும், புதிய UPI பயனர்கள் அல்லது PIN மாற்றியவர்கள் தொடர்பாக வங்கிகள் மற்றும் UPI அமைப்புகள் பாதுகாப்பு காரணங்களுக்காக தற்காலிக வரம்புகளை விதிக்கலாம்.அதனால், உங்கள் கணக்கிற்கான சரியான தினசரி UPI வரம்பை சம்பந்தப்பட்ட வங்கி அல்லது UPI செயலியில் சரிபார்ப்பது பாதுகாப்பானது.
ஜியோ நிறுவனம் தனது ரூ.3,599 ஆண்டு ரீசார்ஜ் திட்டத்தில் பல்வேறு கூடுதல் சலுகைகளை வழங்குகிறது.இந்த திட்டத்தில் 365 நாட்கள் வேலிடிட்டியுடன் தினமும் 2.5GB டேட்டா, அன்லிமிடெட் 5G, குரல் அழைப்புகள் மற்றும் SMS உள்ளிட்ட சலுகைகள் கிடைக்கின்றன.மேலும், ஆண்டுவிழா சலுகையாக 12 மாதங்களுக்கு JioTV Pro மூலம் 1,000-க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்களை பார்க்கும் வசதி வழங்கப்படுகிறது.இதனுடன் JioHotstar மொபைல் சந்தா, 120GB கூடுதல் டேட்டா, 50GB AI கிளவுட் ஸ்டோரேஜ் உள்ளிட்ட கூடுதல் நன்மைகளும் கிடைக்கின்றன. EaseMyTrip, AJIO, Cinepolis உள்ளிட்டவற்றில் தள்ளுபடி சலுகைகளும் வழங்கப்படுகின்றன.
புவியியலாளர்கள் மற்றும் நில அதிர்வு ஆய்வாளர்கள், பசிபிக் பெருங்கடலின் ஆழமான பகுதியில் பூமியின் மேலோடு (Earth's Crust) பிளவுபடத் தொடங்கியுள்ளதை முதன்முறையாகக் கண்டறிந்துள்ளனர். குறிப்பாக, அமெரிக்காவின் பசிபிக் வடமேற்குப் பகுதியில் உள்ள காஸ்கேடியா (Cascadia) துணை மண்டலத்தின் அடியில், 'ஜுவான் டி ஃபூகா' (Juan de Fuca) எனப்படும் டெக்டோனிக் தட்டு துண்டு துண்டாக உடையத் தொடங்கியுள்ளதை அதிநவீன ஸ்கேனிங் வட தொழில்நுட்பங்கள் மூலம் விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். இந்தப் பிளவானது கடற்பரப்பிற்கு அடியில் சுமார் 75 கிலோமீட்டர் ஆழத்தில் நிகழ்ந்து வருகிறது.
கோவையில் சுமார் ₹300 கோடி மதிப்பில்பிரம்மாண்டமாக உருவாகியுள்ள பெரியார் அறிவுலகம் விரைவில் திறக்கப்பட உள்ளது.சுமார் 1.98 லட்சம் சதுர அடி பரப்பளவில், 3 மாடிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த அறிவுலகில் நூலகம், அறிவியல் மையம், டிஜிட்டல் நூலகம், குழந்தைகள் நூலகம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.இதன் திறப்பு விழாவிற்கான தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பயணிகள் விருப்பம்போல் பேருந்துகளில் பயணம் செய்யும் வகையில் ரூ.1,000 சலுகைக் கட்டணத்தில் BUS PASS பெறும் வசதி வழங்கப்படுகிறது.தேவையான ஆவணங்கள்.ஆதார் அட்டை நகல் – 1ரூ.1,000 கட்டணம்ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதி முதல் 15-ம் தேதிக்குள் பஸ் பாஸை பெற்றுக்கொள்ளலாம்.இந்த பாஸ் மூலம் ரெட் பஸ் சொகுசுப் பேருந்துகள் மற்றும் சாதாரண கட்டணப் பேருந்துகளில் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை எத்தனை முறை வேண்டுமானாலும் பயணம் செய்யலாம்.அலுவலக நேரம்.காலை: 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை.உணவு இடைவேளை: மதியம் 1:00 மணி முதல் 2:00 மணி வரை.