உலக கோப்பை ஹாக்கி: இந்திய ஆண்கள் அணி அரையிறுதி வாய்ப்பை இழந்தது.
பெல்ஜியம்/நெதர்லாந்து: பெல்ஜியத்தின் வேவ்ரே மற்றும் நெதர்லாந்தின் ஆம்ஸ்டல்வீன் நகரங்களில் உலக கோப்பை ஹாக்கி தொடரின் 16வது சீசன் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் நடைபெற்று வருகிறது.
பெண்கள் பிரிவில் இந்திய அணி 5வது இடத்தை பிடித்தது. 1974ம் ஆண்டு 4வது இடம் பிடித்திருந்ததே இதற்கு முன்பு இந்திய பெண்கள் அணியின் சிறந்த செயல்பாடாக இருந்தது. அந்த சாதனையைத் தொடர்ந்து, தற்போது 5வது இடத்தை இந்திய அணி பெற்றுள்ளது.
ஆண்கள் பிரிவில் இந்திய அணி 2வது சுற்றில் ‘இ’ பிரிவில் இடம் பெற்றது. இதில் விளையாடிய 2 போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியடைந்தது. இதனால் அந்தப் பிரிவில் 4வது இடத்தை பிடித்த இந்தியா, அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது
0
Leave a Reply