,, முக்கிய அறிவிப்பு. ,, மகளின் திருமணச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் தவிக்கும் குடும்பம் உங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் உங்கள் மகளின் உறவைத் தீர்மானித்த பிறகு, கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணில் தொடர்பு கொள்ளவும். திருமணத்திற்கான முழுச் செலவையும் லாட்லி அறக்கட்டளை புதிய வாழ்க்கையை தொடங்க ஒவ்வொரு அன்பு மகளுக்கும் ரூ.1 லட்சம் வரை வீட்டு உபயோக பொருட்கள் வழங்கப்படும். லாட்லி அறக்கட்டளை 9871727415, 9873182468 9717231663 இச்செய்தியை முடிந்தவரை பகிரவும், இதன் மூலம் தேவைப்படுபவர்கள் உதவலாம். கேலி செய்வதற்கு பதிலாக மக்களுக்கு செய்தியை அனுப்புங்கள். தெரிந்து கொள்ள பள்ளி புத்தகம் விரும்பும் குழந்தைகள் மற்றும் பள்ளி கட்டணம் செலுத்த முடியாத குழந்தைகள் கீழே உள்ள எண்களில் தொடர்பு கொள்ளலாம். தொடர்பு கொள்ளவும் 9460031554 8889995733 8889995731 9826813756 9752033255 9826858785 7489587851 9098321420 9879537809 9825700070 9727215130 9879200245 8107371224 7746851284 9001236414 9549677770 9314459474 9828926151 9328620003 9826267649 9888989746 9653150004 8889712233 9926311234 8889995733 8889995731 9826813756 9752033255 9826858785 7489587851 9098321420 9879537809 9825700070 9727215130 9879200245 8107371224 7746851284 உங்களால் முடிந்தவரை இந்த செய்தியை அனுப்பவும். உங்கள் உதவி குழந்தையின் வாழ்க்கையை மாற்றும். அவசியம் படித்து மற்றவர்களுக்கும் அனுப்பவும்..... ஆனால் நீங்கள் ஒரு msg ஐ அனுப்பினால் அது மிகவும் நல்லது...!!!மணிராமன்.
தகுதி:மாணவர்கள் 2025 இல் +2 முடித்து பட்டப்படிப்பில் சேர்பவராக இருத்தல் வேண்டும்.+2 வகுப்பில் ஒவ்வொரு பாடத்திலும் 70 % பெற்றிருத்தல் வேண்டும்.பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு முன்னுரிமை.தமிழ் நாடு / ஆந்திரா / தெலுங்கானா / கர்நாடகா மற்றும் புதுவை ஆகிய மாநிலங்களில் உள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பிக்க: https://www.grtendowment.comமேலும் விவரங்களுக்கு: Mobile : 91501 10384.: மின்னஞ்சல்: grtjewellersendowment@gmail.comதொடர்பு கொள்ள வேண்டிய நேரம் - 10:30 AM மற்றும் 3:30 PM.தகுதிவாய்ந்த மாணவர்கள் GRT இலவச மாணவர் விடுதிக்கும் விண்ணப்பிக்கலாம்.
முயல் குட்டிகள் பிறக்கும்போது அவற்றின்உடலில் ரோமங்கள் இருப்பதில்லை. அவற்றுக்கு காதும் கேட்காது, அவைகளால் பார்க்கவும் முடியாது. ஏனெனில் அவைகளின் காதுகளும், கண்களும் மூடிய நிலையிலேயே இருக்கும். அவை பிறந்து மூன்று வாரங்கள் வரை ,தாய் முயலின் நெருக்கமான அரவணைப்பிலேயே வாழும். அதுவும் மறைவான பகுதியில் குட்டிகளை பாதுகாப்பாக வளர்க்கும்.
அமெரிக்காவைச் சேர்ந்த ட்யுலேன் பல் கலை மேற்கொண்ட ஆய்வில், மாலை வேளைகளை விட காலை வேளைகளில் காபி குடிப்பது, உட லுக்கு பல வகைகளில் நன்மை தரும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ப்ரோக்கோலியில் உள்ள சல்ஃபொரா /பேன் (Sulforaphane) எனும் சேர்மம் 2 நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும் என்று சுவீடன் நாட்டில் உள்ள கோதன்பர்க் பல்கலை கண்டறிந்துள்ளது.அதிக கொழுப்பு, சர்க்கரை, உப்பு ஆகியவற்றை உடைய துரித உணவுகளை உண்பது பல்வேறு நோய்களை ஏற்படுத்தும் . சமீபத்திய ஓர் ஆய்வில் துரித உணவுகள் வயதாவதை விரைவுப்படுத்தும் என்றும் தெரியவந்துள்ளது.
குடை என்ற சொல் பிரெஞ்சு வார்த்தையான 'பாராபுலி' என்ற சொல்லில் இருந்து வந்தது. பிரெஞ்சுமொழியில் 'பாரா' என்பது பாதுகாப்பு என்பதைக் குறிக்கிறது. 'அம்ப்ரலா என்ற ஆங்கில வார்த்தை நிழல் என்று பொருள் படும். இது லத்தீன் வார்த்தையான 'அம்ப்ரா' என்பதிலிருந்து உருவானது. குடை என்பது கி.மு.3500-ம் ஆண்டிற்கு முந்தைய காலத்தில் இருந்து மனித இனம் பயன்படுத்தி வருவதாக நம்பப்படுகிறது.வெயில் மற்றும் மழையில் இருந்து பாதுகாப்பாக வெளியில் சென்று வர உதவுபவை குடைகள், இந்த குடைகள் ஜப்பானில் தான் முதன்முதலில் பயன்பாட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அதற்கு முன்பே சீனர்கள் குடையை பயன்படுத்தியதாக கதைகள் உள்ளன. குடை ஆரம்ப காலத்தில் மூங்கில் குச்சிகளை கொண்டு செய்யப்பட்டன. அவற்றின் மீது பதப்படுத்தப்பட்ட விலங்குகளின் தோல் பொருத்தப்பட்டது. இந்த குடைகளை பண்டைய மனிதர்கள் வெயில் மற்றும் மழையில் இருந்து தங்களைப் பாதுகாக்க பயன்படுத்தினார் .திமிங்கலங்களின் வலுவான எலும்புகளை பயன்படுத்தி ஐரோப்பியர்கள் தங்கள் குடைகளை உருவாக்கி னர்.19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தான் இன்று இருக்கும் நீட்டி மடக்கும், சிறிய பையில் அடைக்கும் குடைகள் விற்பனைக்கு வந்தன.குடைகளுக்கான உலகளாவிய தேவை தொடர்ந்து வளர்ந்து வருகிறது மற்ற கண்டுபிடிப்புகள் போல குடைகளும் நவீனம் ஆகி வருகின்றன. இன்று மணிக்கு 120 கி.மீ. வரை காற்றின் வேகத்தைத் தாங்கக்கூடிய குடைகள், சூரிய கதிர்வீச்சு, பாது காப்பு தொழில்நுட்பம் கொண்ட குடைகள் உருவாகியுள்ளன
வியோமிகா சிங்என்.சி.சி.,யில் சேர்ந்த வியோமிகா சிங், பொறியியல் பட்டம் பெற்றுள்ளார். விமானப் படையில் பணியமர்த்தப்பட்ட வியோமிகா சிங், 2019 டிச., 18ல் நிரந்தர பணியாளராக நியமிக்கப்பட்டார். . 'வியோமிகா' ('வானத்தின் மகள்') என பொருள்.சேடக், சீட்டா போன்ற விமானங்களை ஜம்மு - காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் போன்ற மிகவும் சிரமமான நிலப்பரப்பு கொண்ட இடங்களில் இயக்கியுள்ளார். சோபியா குரேஷிநம் ராணுவத்தின், 'கார்ப்ஸ் ஆப் சிக்னல்ஸ்' என்ற பிரிவில் அதிகாரியாக உள்ள சோபியா குரேஷி, குஜராத்தைச் சேர்ந்தவர். உயிரி வேதி யியலில் முதுநிலை பட்டம் பெற்ற இவர், 1999ல் ராணுவத்தில் சேர்ந்தார். கணவரும் ராணுவ அதிகாரி.. 2016ல் 18 நாடுகள் பங்கேற்ற'எக்சசைஸ் போர்ஸ் 18' அணிவகுப்பு ஒத்திகையில் நம் ராணுவத்தை வழிநடத்திய ஒரே பெண் அதிகாரி சோபியா குரேஷி ஆவார்.எல்லைக்கோட்டை தாண்டாமலே ஏவுகணைகள், ட்ரோன்கள் வாயிலாக இந்தியா துல்லிய தாக்குதல் நடத்தி அதை இரு ஜூனியர் பெண்' ராணுவ அதிகாரிகள் மூலம் விளக்கம் அளித்து உலக நாடுகளை அசர வைத்துள்ளது. பயங்கரவாதிகளை வளர்த்து விட்டு நமக்கு தொல்லை தந்து வந்த பாகிஸ்தானை நேற்று 'ஓங்கி அடித்து தண்டனை வழங்கியது இந்தியா. ஏப். 22ல் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள், சுற்றுலா பயணிகளை சுற்றி வளைத்து, ஹிந்துக்களை அடையாளம் கண்டு 26 பேரை குடும்பத்தினர் முன்பே சுட்டுக் கொன்றனர். நாடு முழுவதும் அதிர்ச்சியையும் கோபத்தையும் உண்டாக்கியது. பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் அக்கிரமங்களை கண்டு கொள்ளாத காஷ்மீர் முஸ்லிம்கள் கூட இந்த சம்பவத்தால் பொங்கி எழுந்தனர். பாகிஸ்தான் பயங்கர வாதிகளுக்கும் அவர்களை வளர்த்து விடும் பாகிஸ்தான் அரசுக்கும் பதிலடி கொடுக்க வேண்டும் என நாடெங்கும் குரல் எழுந்தது.நதி நீர் ஒப்பந்தம் ரத்து, விசா ரத்து, இறக்குமதி நிறுத்தம், துாதரக உறவு துண்டிப்பு என, மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்தது. ஆனால், ராணுவ நடவடிக்கை தேவை என்ற குரல் தணிய வில்லை. இதை தொடர்ந்து புதன் அதிகாலை 1:05 முதல் 1:30 மணி வரை 25 நிமிடங்களில் யாரும் எதிர்பாராத தாக்குதலை இந்தியா நடத்தியது. புதன்கிழமையன்று நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை நடத்த மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது. அதை அறிந்து பாகிஸ்தான் அரசும் மெத்தனமாக இருந்தது. அதை பயன்படுத்தி, புதன்கிழமை விடிவதற்குள் தாக்குதலை அரங்கேற்றியது இந்தியா. பாகிஸ்தான் சுதாகரிப்பதற்குள், 25 நிமிடத்தில் இந்த துல்லிய தாக்குதல் நடந்து முடிந்தது. பொறுமை யாக, துல்லியமாக திட் டமிட்டு, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது பயங்கரவாத தளங்களை, 24 ஏவு கணைகள் செலுத்தி தகர்த்தது இந்தியா. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் பகுதியின் தலை நகரமான முசாபராபாத், கோட்லி, பஹவால்புர், ராவலகோடி, சக்ஸ்வாரி, பிம்பர், நீலம் பள்ளத் தாக்கு, ஜீலம், சக்வால் ஆகிய இடங்களில் செயல் பட்டுவந்த பயங்கரவாத அமைப்புகளின் பயிற்சி மையங்கள், தலைமை நிலையங்கள் குறிவைத்து தகர்க்கப்பட்டன. ஐந்து இடங்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும், நான்கு பாகிஸ்தானிலும் உள்ளன. தாக்குதலில் 80 பேர் வரை மரணம் அடைந்ததாக தெரிகிறது. அவர்களில் 3 பேர் மட்டுமே பயங்கரவாதத்துடன் சம்பந்தப்படாதவர்கள். ஏவுகணை மற்றும் ட்ரோன் தொழில்நுட்பத்தில் உலகின் முன்னோடிகளான அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் கூட இவ்வளவு குறைந்த சிவிலியன் பலிகளுடன் தாக்குதல் நடத்தியது இல்லை என்பதால்,இந்தியாவின் நடவடிக்கை உலகம் முழுவதும் வியப்பையும் பிரமிப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இந்திய ராணுவத்தின் தாக்குதலில், ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா, ஹிஜ்புல் முஜாகிதீன் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளின் தலைமையிடங்கள் அழிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பஹல்காம் தாக்குதலில் கணவரை இழந்த பெண்களுக்காக பழிதீர்க்கவே 'ஆபரேஷன் சிந்தூர்'திருமணம் ஆன பெண்கள் நெற்றி வடுகில் வைக்கும் குங்குமம் ‘சிந்தூர்’ என அழைக்கப்படும்.பஹல்காம் தாக்குதலில் பல பெண்கள் கண் எதிரில், அவர்கள் கணவன் சுட்டுக்கொள்ளப்பட்டு தங்கள் குங்குமத்தை இழந்தனர்.பெண்கள் நெற்றியில் வைக்கும் குங்குமத்தை குறிக்கவே, ராணுவ நடவடிக்கைக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்‘ என பெயர்.
'டக் வீட்' (Duck weed) என்பது குளங்களில் வளரும் ஒரு விதமான பாசி. இதை தாய்லாந்து உள் ளிட்ட ஆசிய நாடுகளில் உணவாக உண்பர். இதில் புரதச்சத்து மிகுதி யாக உள்ளது. தற்போது ஐரோப்பாவிலும் இந்த உணவு பிரபலமாகி வருகிறது.
ஜூன் முதல் செப்டம்பர் நடுப்பகுதி வரை மழைப் பொழிவு ஏற்படும் காலகட்டத்தில், வெப்பத்துடன் கூடிய ஈரமான பருவம் என்று அழைக்கப்படுகிறது. தென்மேற்கு பருவமழை தொடங்கியவுடன், அதுவரை நிலவி வந்த கோடை வெப்பம் வெகுவாக குறைந்து காற்றில் ஈரப்பதம் அதிகரிக்கும். சுற்றுப்புறத்தில் 3 டிகிரி முதல் 6 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை குறையும். பொதுவாக, தென்மேற்கு மழைக்காலம் முழுவதும்வெப்பநிலை குறைவாக சீராக இருக்கும். மேற்கு தொடர்ச்சி மலைகளில் அதிக மழைப்பொழிவு காரணமாக இந்த வெப்பநிலை குறைவு இருக்கும். ஆசிய பகுதிகளில் தென்மேற்கு பருவமழைக்காலம் முக்கியத்து வம் வாய்ந்ததுதமிழ்நாட்டின் கடலோர பகுதிகள் மற்றும் ஆந்திராவின் அருகிலுள்ள பகுதிகளில் இந்த பருவத்தில் மிகக்குறைந்த மழைப் பொழிவு காணப்படும் என்பதால், அப்பகுதிகளில் வெப்பநிலை சற்று அதிகமாக இருக்கும்.அரபிக்கடலுக்கு அருகில் இருப்பதால் கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும். இந்த பருவமழை தீவிரம் அடைந்து, இடி, மின்னல் மற்றும் பலத்த மழையாக மாறும்.மழையை கணிக்கும் அறிவியல் கருவிகளையும் கடந்து சில நேரங்களில் பருவமழை அதற்கு முன் அல்லது பிந்தைய காலத்தில் ஏற்படும் போது மனிதர்களுக்கும், விவசாய பயிர்களுக்கும் சேதத்தை ஏற்படுத்தி விடுகிறது.தென்மேற்கு பருவமழையை நம்பி பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களும், ஏராளமான குடிநீர் ஆதாரங்களும் உள்ளன.