வீரதீரச் செயல் புரிந்தவர்களுக்கான மத்திய அரசின் ‘ஜீவன் ரக்ஷா தொடர் விருது-2025” பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
2025 -ஆம் ஆண்டிற்கான வீரதீரச் செயல் புரிந்தவர்களுக்கான மத்திய அரசின் ‘ஜீவன் ரக்ஷா தொடர் விருது 2025” வழங்கப்பட உள்ளது. கீழ்காணும் விதிமுறைகளை பின்பற்றி தகுதியுடைய நபர்கள் 25.07.2025 அன்று மாலை 5.00 மணிக்குள் விருதுநகர் புதிய மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் செயல்படும் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் விண்ணப்பிக்குமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
தகுதிகள் :
ஜீவன் ரக்ஷா தொடர் விருது : இந்திய அரசின் சார்பில் பல்வேறு நிகழ்வுகளான நீரில் மூழ்கியவரை காப்பாற்றுதல், மின்சார விபத்துகள், தீ விபத்துகள், நிலச்சரிவு, விலங்கின தாக்குதல், சுரங்க மீட்பு நடவடிக்கைகள் ஆகியவற்றில் கடந்த இரண்டு ஆண்டுகளில் (01.10.2023 ஆம் தேதிக்கு பிறகு) ஈடுபட்டு மனித உயிர்களை மீட்பவர்களுக்கு கீழ்காணும் மூன்று பிரிவுகளில் இவ்விருது வழங்கப்படுகிறது. வயது வரம்பின்றி இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
1. சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா பதக்கம் - மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளவரை வீரத்துடன் போராடி மீட்பவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.
2. உத்தம் ஜீவன் ரக்ஷா பதக்கம் - துணிச்சலுடன் தாமதமின்றி செயல்பட்டு மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளவரை போராடி மீட்பவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.
3. ஜீவன் ரக்ஷா பதக்கம் - தனக்கு காயம் ஏற்படினும், வீரத்துடன் தாமதமின்றி செயல்பட்டு உயிரை காப்பாற்றுபவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.
மேலும் தொடர்புக்கு மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், விருதுநகர் மாவட்டம். அலைபேசி எண்.04562-252701 என்ற முகவரியினை தொடர்பு கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply