கற்றாழை ஜூஸ் குடித்தால் உடல் வெப்பம் தணியும். நீர்க்கடுப்பு, நீர்தாரை எரிச்சல் நீங்கும் .மாதவிடாய் கோளாறுகள், உடல் காந்தல் போன்ற பாதிப்புகள் குறைய உதவும். கண்களில் எரிச்சலைப் போக்கும் .வயிற்றுப்புண் ஆற உதவும், வயிற்றின் எரிச்சலை சரிசெய்யும். வெயிலில் இருந்தும் மூல நோயில் இருந்தும் நம்மைக் காக்கும் மலச்சிக்கல் நீங்க உதவும்.
துவரம்பருப்பை லேசாக வறுத்து, துவையலாக செய்து சாதத்துடன் கலந்து சாப்பிட்டால், செரிமான சக்தி அதிகரித்து உடலுக்கு பலம் கொடுக்கும். சிறுநீரகக் கற்களை வெளியேற்றுவதுடன் , சிறுநீரகப் பாதைத் தொற்றுகளை நீக்கும் வல்லமை, துவரைக்கு உண்டு. துவரம்பருப்பிலுள்ள நார்ச்சத்து மலத்தை இளக்குவதுடன் ரத்தத்தில் கொழுப்புச்சத்து அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளும்.
உடலில் பித்தம் அதிகம் உள்ளவர்கள், தினமும் 2-3 அத்திப்பழத்தை சாப்பிட்டுவந்தால் கடும் பித்தம் வியர்வை வழியாக வெளியாகிவிடும். இரவில் 3-5 பழம் வரை தண்ணீரில் ஊறவைத்து, காலையில் தண்ணீரை குடித்துவிட்டு, இப்பழத்தை சாப்பிட்டு வந்தால் உடலில் புதிய இரத்தம் உற்பத்தியாகும். இரத்தசோகை பிரச்சினை சரியாகும்கருப்பு காய்ந்த திராட்சை மூன்றை இரவே ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் பழத்தை சாப்பிட்டு தண்ணீரை குடித்து வந்தால் ரத்தம் உற்பத்தியாகும்.
1.பால்2. தயிர்3.சீஸ் 4. பன்னீர்5.பாதாம்6.சர்க்கரைவள்ளி கிழங்கு7. சோயா பீன்ஸ்8.வெண்டக்காய்9. சியா விதைகள்10. காய்ந்த அத்திப்பழம்11.ஆரஞ்சு12.சுண்டல்13. எள் விதைகள்14. சோயா பால்15.கிவி 16. கொய்யாப்பழம்17. அன்னாசிப்பழம்18. மத்தி மீன்கள்19.கீரைகள்20. ஓட்ஸ்.
சளி மற்றும் இருமல் ஏற்பட்டால், ஒரு கப் தண்ணீரில் இஞ்சி, மல்லி விதை மற்றும் மிளகு சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து , அதை வடிகட்டி, ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து சூடாக பருக வேண்டும். இது தொண்டை வலியும், சளியும் குறைய உடனடி நிவாரணம் தரும்.
.அதிமதுர பொடி ஒரு ஸ்பூன் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு இரவில் ஊறவைக்க வேண்டும் காலையில் சோறு வடித்த கஞ்சியில், கலக்கி குடித்து வந்தால் எப்பேர்ப்பட்ட அல்சரும் குணமாகும்.அதிமதுரத்தை வாயிலிட்டு சுவைக்கும்பொழுது, மிகவும் இதமான இனிப்புச்சுவை தொண்டையினுள் இறங்குவதை, வாழ்நாளில் மறக்கவே முடியாது. அதிமதுரத்தின் சுவையும், குளிர்ச்சியும் நீண்டநேரம் நாவிலும், தொண்டையிலும் நீடித்து நிற்கும். உமிழ்நீர் சுரப்பினை அதிகரித்து, நாவறட்சி, தொண்டை பிரச்சனைகளை குணமாக்குகிறது. கண்நோய்கள், எலும்புநோய்கள் இருமல், சளி தலைவலி, மஞ்சள்காமாலை, புண்கள் போன்றவற்றை குணப்படுத்தப் பயன்படுகிறது. அதிமதுர வேர் மூக்கில் ரத்தம் வடிதல், காக்கை வலிப்பு, படர்தாமரை, விக்கல், அசதி, தாகம் போன்றவற்றையும் குணப்படுத்துகிறது. நரம்புதளர்ச்சி ,பித்தம், கப நோய்களுக்கு கசப்பில்லா இனிப்பு மருந்து அதிமதுரம்.வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் அதிமதுரத்தை பொடி செய்து சாப்பிட்டால் மிகவும் நல்ல பலனை பெறலாம்.
கோதுமை மற்றும் உளுந்தை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரை குடிக்கவும். மீதமுள்ள கோதுமை மற்றும் உளுந்தை அரைத்து, ரொட்டி செய்து சாப்பிடவும். ஒன்றரை மாதங்களில் சிறுநீரகக் கல்லாக இருந்தாலும் சரி, சிறுநீர்ப்பையில் உள்ள கல்லாக இருந்தாலும் சரி,வெடித்து சிதறும்.பாதாம் பிசினை ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் நெஞ்செரிச்சல், சிறுநீர் அடைப்பு நீங்கும்.
புளி சாறு இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். புளி உடலில் கார்போஹைட்ரேட்டுகள் சேர அனுமதிக்காது, இதனால் சர்க்கரை அளவு திடீரென அதிகரிக்காது. இது தவிர, புளியில் உள்ள நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் செரிமானத்தை மேம்படுத்தி இன்சுலின் செயல்திறனை அதிகரிக்கின்றன. இந்த சாறு இரத்த சிவப்பணுக்கள் உருவாவதற்கும் உதவியாக இருக்கும். இது உடலுக்கு ஆற்றலை வழங்குகிறது மற்றும் சோர்வைக் குறைக்கிறது. புளி சாறு நீரிழிவு நோயாளிகளுக்கு மட்டுமல்ல முழு உடலின் வளர்சிதை மாற்றத்தையும் மேம்படுத்தஉதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இது இரத்தத்தில் வெள்ளை அணுக்களை அதிகரித்து, பித்தப்பை கற்களை கரைக்க உதவுகிறது. உடலுக்குள் ஏற்பட்ட காயங்களை ஆற்றி, மூட்டு வலியை குறைக்கும் தன்மை கொண்டது.
நாரத்தை இலைகள் மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். இந்த இலையை பொடி செய்து சாப்பிட்டால் அஜீரணம் சரியாகும். இந்த இலை வயிற்றுப் புண்ணை ஆற்றுகிறது. நாரத்தை இலையின் நடுவில் உள்ள நரம்பினை நீக்கி, இலையுடன் காய்ந்த மிளகாய், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் அரைத்து கெட்டியான சிறு உருண்டையாக்கி, காற்று போகாத பாட்டில் போட்டு மூடி வைத்து தொட்டு சாப்பிடலாம். தயிர் சாதத்திற்கு இன்னும் சிறந்த காம்பினேஷன். முற்றிய இலையாக இருக்கக்கூடாது. இளம் இலையாக பார்த்து பொடி செய்வது சுவை கூடுதலாக கிடைக்கும்.