25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


நலம் வாழ

Oct 04, 2025

உடல் சூட்டை தணிக்கும்உளுந்து பால்.

. உளுந்து 1/4 டம்ளர் எடுத்து கொள்ளவும். அதை கழுவி விட்டு குக்கரில் போட்டு 1 1/2  கப் தண்ணீர் விட்டு வேக வைத்து அரைத்து கொள்ளவும்.பிறகு கொஞ்சம் தண்ணீர் சேர்த்து, தேங்காய்பால் அல்லது பால் விட்டு நாட்டு சர்க்கரை போட்டு கொதிக்க விட்டு இறக்கவும். "சுவையான உளுந்து பால் ரெடி".இதனை குடித்து வருவதனால் உடல் சூட்டை தணிக்கும்.மலச்சிக்கல், வயிறு உப்புசம், மாதவிடாய், நரம்பு தளர்ச்சி போன்ற பிரச்சனைகள் நீங்க உதவியாக இருக்கும்.

Sep 29, 2025

தேங்காய் எண்ணெயும், அரிசி சாதமும்...!

அமெரிக்க வேதியியல் சங்கம் சில ஆண்டுகளுக்கு முன்பு,  ஒரு ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டது. அதில், கொதிக்கும் நீரில் ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் விட்டு அரிசியை சமைத்தால் அது உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதை கட்டுப்படுத்த உதவும். உடலால் உறிஞ்சப்படும் கலோரிகள் எண்ணிக்கையை குறைக்கும் என ஆராய்ந்து கூறினர்.மேலும், இந்த செயல்முறை காரணமாக அரிசியில் உள்ள மாவுச்சத்து உடலால் உறிஞ்சப்படுவது கணிசமாக தடுக்கப்படுகிறது. தேங்காய் எண்ணெயை சேர்த்து அரிசியை சூடு படுத்துவதால் உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது, உண்பதற்கு சுவையாகவும், ஏராளமான நன்மைகளை  கொண்டுள்ளதாகவும் இருக்கும் எனவும் அந்த ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். 

Sep 26, 2025

ஹீமோகுளோபினை அதிகரிக்கும் உணவுகள்.

நெல்லிக்காய் - தினமும் ஒன்று. பேரீச்சை பழம் - தினம் நான்குமுருங்கை கீரை - வாரம் 2 முறை பீட்ரூட் ஜூஸ் - தினம் 100ml சுண்டைக்காய் - வாரம் 2 முறை முளைக்கட்டிய சுண்டல்/பாசிப்பயறு வாரம் 4 முறை கருப்பட்டி, வெல்லம், நாட்டுச் சர்க்கரை -தினமும் மாதுளை, திராட்சை வாரம் 2 முறை ஊற வைத்த கருப்பு உலர் திராட்சை தினமும் 4பீர்க்கங்காய் - வாரம் 2 முறை வைட்டமின் ஏ மற்றும் ஃபோலிக் அமிலம் நிறைந்த உணவுகளை உட்கொள்வதும் ஹீமோகுளோபினை அதிகரிக்க உதவும். சிவப்பு இறைச்சி,  கோழி, மீன் ஆகியவை நல்ல இரும்புச்சத்து உள்ளவை.இரும்புச்சத்து நிறைந்த தானியங்கள்,பலப்படுத்தப்பட்ட தானியங்கள்.எள் ஹீமோகுளோபினை அதிகரிக்க உதவும்.  

Sep 25, 2025

புடலங்காய் சாப்பிட்டால் நெஞ்செரிச்சல் பிரச்சனை தீரும்.

புடலங்காய் கூட்டு சாப்பிட்டால் செரிமாணம் சீராகும். மலச்சிக்கல் குறையும்புடலங்காயை சாறு எடுத்து குடித்து வந்தால் உடல் வெப்பம் குறைந்து, வெயில்கால அலர்ஜி தீரும்.புடலங்காயை அரைத்துப் பேஸ்ட் போட்டால் சருமம் பளிச்சிடும். அலர்ஜி குறையும்.புடலங்காயை இரலில் சூப்பாக வைத்து குடித்தால் நெஞ்செரிச்சல், செரிமானக் கோளாறுகள் கட்டுப்படும்.உடல் குளிர்ச்சி அதிகமாக இருக்கிறவர்கள் தினசரி சாப்பிடாமல் பத்து நாளைக்கு ஒரு முறை போதும்.

Sep 24, 2025

நோய் எ திர்ப்பு சக்தி அதிகரிக்கும்வெற்றிலை கஷாயம்.

இருமல்,சளி போன்றவற்றிற்கு வெற்றிலை ஒரு சிறந்த மருந்தாக பயன்படுகிறது ஐந்து மிளகுடன் வெற்றிலையை மென்று சாப்பிட்டால் சளி நீங்கும். கடுகு எண்ணெயில் சூடு படுத்திய வெற்றிலையை மார்பில் தடவினால் சளி குறையும், ஏலக்காய் கிராம்பு மற்றும் லவங்கப் பட்டையுடன் வெற்றிலையை சேர்த்துகொதிக்க வைத்த  வெற்றிலை கஷாயம் மார்பு சளியை வெளியேற்ற உதவும்.வெற்றிலை,துளசி,கற்பூரவள்ளி இலைகளை நன்றாக கழுவி தண்ணீரில் போட்டு மஞ்சள் தூள்,மிளகு தூள்,பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க விட்டு வெதுவெதுப்பான சூட்டில் குடித்தால் நல்ல நோய் எ திர்ப்பு சக்தி அதிகரிக்கும்.குழந்தைகளுக்கு வரும் காய்ச்சல், ஜன்னிக்கு, வெற்றிலைச் சாற்றில் , கஸ்தூரி, கோரோசனை, சஞ்சீவி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை மசித்து தேனுடன் கொடுக்க குணமாகும். சளி, இருமல், மாந்தம், இழுப்பும் குணமாகும். சிறுவர்களுக்கு அஜீரணத்தைப் போக்கி பசியைத் தூண்ட வெற்றிலையோடு மிளகு சேர்த்து கஷாயம் செய்து கொடுத்து வரலாம்.

Sep 23, 2025

கொழுப்பை கரைக்கும் ஆற்றல் உடைய சின்ன வெங்காயம்.

பசலைக்கீரை - ரத்த அழுத்தத்தை குறைக்கும்.அன்னாசி பழம் - ஜூரண சக்தியை அதிகரிக்கும்.பீட்ரூட்- ரத்த சோகையை நீக்கும்.வல்லாரைக்கீரை - ஞாபக சக்தியை கொடுக்கும்.மாம்பழம் இருதயம் வலிமை பெறும்.திராட்சை -வாய்க்குமட்டல், வாந்தி. வாய்க்கசப்பு சரியாகும்.சின்ன வெங்காயம் -கொழுப்பை கரைக்கும் ஆற்றல் உடையது.

Sep 22, 2025

எலும்பு பிரச்சனை நீங்க உளுந்து பால்

உளுந்து - 1/4 கப் எடுத்து நன்கு கழுவி குக்கரில் சேர்த்து அதோடு 11/2 கப் தண்ணீர், உப்பு - ஒரு சிட்டிகை சேர்த்து 2 விசில் விட்டு இறக்கி, நன்கு மசித்து கொள்ளுங்கள். அதோடு தேங்காய் பால் -1கப், நாட்டு சர்க்கரை - தேவைக்கு, ஏலக்காய் பொடி -1/4 ஸ்பூன், சுக்கு பொடி -1/4 ஸ்பூன் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி பரிமாறலாம். இதை குடிப்பதால் உடல் சூடு குறையும்,மலச்சிக்கல், மாதவிடாய் பிரச்சனை நீங்கும். கை, கால், இடுப்பு வலி, எலும்பு பிரச்சனை நீங்கும். பெண்கள், பெண் குழந்தைகள் கண்டிப்பாக பருக வேண்டும்.

Sep 20, 2025

வாய்ப்புண் குறைய...

மோரில் சிறிது உப்பை சேர்த்து அதை ஐந்து நிமிடம் வாயில் வைத்திருந்து பின்பு கொப்பளிக்க வேண்டும். அல்லது மோரில் சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்து வாயில் ஐந்து நிமிடம் வத்திருந்து கொப்பளிக்க வேண்டும். இதனை ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால் வாய்ப்புண் குறையும்.பழுத்த நாவல் பழத்தை உப்பு அல்லது சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால், வாய்ப்புண் குறையும்.ஒரு நாளைக்கு4 முதல்6 முறை உப்புநீரில் வாயைக் கொப்புளித்தால் மவுத் அல்சர் விரைவில் குணமாகும்.சிவந்த புண்கள், வலி மற்றும் எரிச்சலை உணர்ந்தால், நீங்கள் தேனைப் பயன்படுத்தலாம். தேனில் உள்ள மருத்துவ குணங்கள், எரிச்சலைக் குறைத்து பாக்டீரியா தொற்றுக்கு நிவாரணம் அளிக்கும்.

Sep 16, 2025

நினைவாற்றல் அதிகரிக்க...

தேனுடன் மிளகு பொடி சேர்த்து சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.கீழாநெல்லி இலையை அரைத்து உடலில் தேய்த்து குளிக்க தோல் அரிப்பு குறையும்.பெருங்காயத்தை வெந்நீரில் கரைத்து குடித்து வர இருமல் நிற்கும்.பேரிச்சம் பழத்தை தேனில் ஊறவைத்து காலை உணவுக்கு முன் சாப்பிட மார்பு வலி குறையும்.குங்குமப்பூவுடன் தேன் கலந்து சாப்பிட்டு வர  ரத்தம் சுத்தமாகும்.

Sep 12, 2025

 இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க ஆவாரம் பூ டீ.

டேனர்ஸ் காசியா என்றும் அழைக்கப்படும் ஆவாரம் பூ, இந்தியா மற்றும் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட ஒரு பூக்கும் தாவரமாகும்.ஆவாரம் பூ டீ பசியைக் குறைக்கவும், வயிறு முழுமையின் உணர்வை ஊக்குவிக்கவும் உதவும்.ஆவாரம் பூ தேநீர் இரத்த குளுக்கோஸ் அளவை உறுதிப்படுத்த உதவும், இது நீரிழிவு அல்லது முன்கூட்டிய நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது. வெறும் வயிற்றில் ஆவாரம் பூ தேநீர் குடிப்பதன் மூலம், நாள் முழுவதும் உங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.அதிக உதிரப்போக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய்,பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதலை அறவே நீக்கும்.நீரிழிவு நோயாளிக்கு இது மிகவும் சிறந்த மூலிகைக் குடிநீர்,உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வியர்வை மூலம் வெளியேற்றி, சருமத்திற்கு மினுமினுப்பைக் கொடுக்கும்.

1 2 ... 19 20 21 22 23 24 25 ... 53 54

AD's



More News