பல் துலக்காதவனுக்கு, உடம்பெல்லாம் பற்கள். அவன் யார்? - சீப்பு காதை திருகினால், கதையெல்லாம் சொல்லுவான். அவன் யார்? - வானொலி
கால் கருப்பு, முக்கால் சிகப்பு, உடைத்தால் பருப்பு, தின்றால் துவர்ப்பு. அது என்ன? குன்றிமணி கல் படாத இடத்தில், கரு இல்லாத முட்டை. அது என்ன? காளான்
.கால் இல்லாதவன், சற்று நேரத்தில் மறைகிறான்.அவன் யார்? - பாம்பு கால் இல்லாத மான், வேரில்லாத புல்லை தின்னும். அது என்ன? மீன், பாசி
.காய்க்கும், பூக்கும், கலகலக்கும், காகம் உட்கார இடமில்லை. அது என்ன?--நெற்கதிர் காரி காலை பிடிக்கப் போனால், கொக்கரக்கொம்பன் இடிக்க வருகிறான்.அவன் யார்? -சுரைக்காய் -
.தட்டு போல் இருக்கும், அதில் சொட்டு தண்ணீர் ஒட்டாது. அது என்ன? தாமரை இலை .காய் காய்க்காத மரம், பூ பூக்காத மரம். அது என்ன மரம்? கிளுவை மரம்
அவரோ பெரியவர், அவர் இலையோ சிறியது, அவர் பெற்றதெல்லாம் கோணல். அவர் யார்? - புளியமரம் தன் மேனி முழுவதும் கண்ணுடையாள், தன்னிடம் சிக்குபவர்களை சின்னா பின்னமாக்குவாள். அவள் யார்? -மீன் வலை
தலையை வெட்ட வெட்ட, கருப்பு நாக்கு நீட்டுகிறது. அது என்ன ? பென்சில். வெட்கம் கெட்ட புளியமரம், வெட்ட வெட்ட வளருது. அது என்ன?தலைமுடி.
மேகத்தின் பிள்ளை, அவன் தாகத்தின் நண்பன். அவன் யார்? மழை .அகன்ற வாய் உடையவன், திறந்த வாய் மூடாதவன். அவன் யார்? செக்கு
குதி குதி என குதிக்கிறான், கொட்டைப் பல்லால் சிரிக்கிறான். அவன் யார்?சோளப்போறி .ஒற்றை காதுக்காரன் ஓடி ஓடி வேலி அடிக்கிறான். அவன் யார்? ஊசி .
பிறந்தது முதல் வயிற்றாலே அசைந்து போகிறது. அது என்ன? - பாம்பு .கடிப்பட மாட்டாள், பிடிப்பட மாட்டாள்.அவள் யார்? - தண்ணீர்.