25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


வெள்ளித்திரை

Mar 26, 2025

அஜித் அணி மீண்டும் 3வது இடம் கார் ரேஸில் …

நடிகர். இத்தாலியில் நடந்த 12வது மிச்செலின் முகெல்லோ கார் பந்தயத்தில் நடிகர்.  அஜித் ரேஸிங் அணி ஜிடி992 பிரிவில் 3ம் இடம் பிடித்து அசத்தியுள்ளது. அவரது வெற்றிக்கு ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஏற்கனவே துபாயில் நடந்த கார் ரேஸிலும் அஜித் அணி 3வது இடம் பிடித்தது.

Mar 26, 2025

திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிக்கும் கீர்த்தி சுரேஷ்.

திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிக்கும் முடிவில் உள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ். அவர் “அக்கா “என்ற வெப்சீரிஸில் நடிக்கிறார். இதுதவிர ஹிந்தியில் மீண்டும் ஒரு. காமெடி கலந்த கதையில் உருவாகும் இப்படத்தில், ஹீரோவாக ரன்பீர் கபூர் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கப் போகிறார். விரைவில் இதன் படப்பிடிப்பு துவங்க உள்ளது. 

Mar 26, 2025

“அரசியல் பணிகள் பாதிக்காத அளவில்  தொடர்ந்து நடிப்பேன் “.நடிகரும், -ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண்.

'ஹரிஹர வீர மல்லு, ஓஜி, உஸ்தாத் பகத் சிங்' ஆகிய படங்களில் நடிக்கும் நடிகரும், -ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண்,. இவற்றை முடித்துவிட்டு சினிமாவிலிருந்து அவர் ஓய்வு பெற உள்ளதாக தகவல் வெளியானது.இதுபற்றி பவன் கூறுகையில்,"எனக்கு பணம் தேவைப்படும் வரை சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன். அதேசமயம் எனது அரசு, அரசியல் பணிகள் பாதிக்காத அளவில் அது இருக்கும்" என்றார். 

Mar 19, 2025

ரேவதி இயக்கத்தில் பிரியாமணி

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்த ரேவதி சில படங்களையும் இயக்கி உள்ளார். முறையாக தமிழில் ஒரு வெப் தொடரை முதன் இயக்கி உள்ளார். இதில் முதன்மை வேடத்தில் நடிகை பிரியாமணி, நடிகர் ஆரி அர்ஜூனன் ஆகியோர் நடிக்க, அம்ரிதா ஸ்ரீனிவாசன், சம்பத் ஆகியோரும் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்துவிட்டது.தலைப்பு உள்ளிட்ட மற்ற அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

Mar 19, 2025

பிரதீப் படத்திற்கு சாய் அபயங்கர் இசை.

இயக்குனரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதன் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'எல்.ஐ.கே' என்ற படத்தில் நடிக்கிறார். அடுத்து கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கிறார். இதில் நாயகியாக மமிதா பைஜூ நடிக்கிறார்.இதன் படப்பிடிப்பு துவங்கி உள்ள நிலையில் இதற்கு சாய் அபயங்கர் இசையமைப்பாளராக இணைந்துள்ளார். பாடகர்கள் திப்பு, ஹரிணியின் மகனான இவர், 'கட்சி சேர' ஆல்பம் மூலம் பிரபலமாகி அடுத்தடுத்து வாய்ப்புகளை பெற்று வருகிறார்.

Mar 19, 2025

2028ல் 'புஷ்பா 3 ' வெளியாகும்.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன்,ராஷ்மிகா நடிப்பில் 2021ல் 'புஷ்பா', 2024ல் 'புஷ்பா 2' ஆகிய படங்கள் வெளியாகி வெற்றி பெற்றன. 'புஷ்பா 3' பற்றி தயாரிப்பாளர் ரவிசங்கர் கூறுகையில் "புஷ்பா 3" யை கண்டிப்பாக எடுப்போம். அட்லி, திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் ஆகியோரின் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் அடுத்தடுத்து கமிட்டாகி இருக்கிறார். ராம் சரணை வைத்து சுகுமாரும் ஒரு படம் இயக்குகிறார். அதனால் 2028ல் 'புஷ்பா 3' வெளியாகும் என்றார்.

Mar 19, 2025

நடிகர்கள் ரியல் எஸ்டேட்டில் முதலீடு

அரசியலில் ஈடுபாடு காட்டியுள்ள விஜய் சென்னை மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் முதலீடு செய்திருக்கிறாராம்.இந்த ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்த தொகை மட்டும் ரூ. 500 கோடிக்கு மேல் என கூறப்படுகிறது.சூர்யா சென்னையில் நிறைய கமர்சியல் இடங்களில்  முதலீடு செய்திருக்கிறார்.மும்பையில் குடியேறிய சூர்யா அங்குசொந்தமாக பிளாட் ஒன்றையும் வாங்கி இருக்கிறார்.தனுஷ் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்துள்ள இவர் குறிப்பாக சென்னையின் பிரைம் லொக்கேஷன்களில் அதிக முதலீடு செய்திருக்கிறாராம்.அஜித் சினிமாவை தாண்டி இப்போது கார் ரேஸில்  கவனம் செலுத்திவரும்  அஜித் சுற்றுலாத்' தளங்களில் நிறைய முதலீடு செய்திருக்கிறாராம், வெளிநாடுகளில் சொத்துக்கள் உள்ளனவாம்.

Mar 19, 2025

நடிகர் மகேஷ்பாபு வாழட்டும் பல்லாண்டு.

ஏழை மக்களுக்காக வருடம் தோறும் 30 கோடி ரூபாய் உதவி செய்யும் மிக பிரபல நடிகர் மகேஷ்பாபு வாழட்டும் பல்லாண்டு.

Mar 19, 2025

கமலஹாசன் திறமைக்கு தீனி போடக் கூடிய கதாபாத்திரங்கள்,புதிய தேடல்.

கமலஹாசன், தன் திறமைக்கு தீனி போடக் கூடிய கதாபாத்திரங்களை தேடிப் பிடித்து நடிக்கக் கூடியவர். 'இதுவரை என்னை, ரசிகர்கள் பார்க்காத புதுமையான கதாபாத்திரம், புதுமையான தோற்றங்களில் வெளிப்படுத்தும் கதைகளை தயார் செய்யுங்கள். புதுவரவு இயக்குனர்களிடம் ,எத்தனை கடினமான காட்சிகளாக இருந்தாலும் நடிப்பதற்கு நான் தயாராக இருக்கிறேன்...' என்று கூறி வருகிறார் .ஆங்கிலம் மற்றும் கொரியன் படங்களில் உள்ள கதாபாத்திரங்களை சுட்டிக்காட்டி, 'இந்த பாணியில் தமிழ் ரசிகர்கள் ரசிக்கும் வகையில் கதை பண்ணுங்கள்...' என்றும் ஆலோசனை கொடுக்கிறார், கமலஹாசன்.

Mar 19, 2025

கார் ரேஸ் பயிற்சியில் சோபிதா

'பொன்னியின் செல்வன்' படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் சோபிதா துலிபாலா. தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். நடிகர் அஜித்தை போல, கார் ரேஸில் ஆர்வம் காட்டும் நாக சைதன்யா, மனைவி சோபிதாவுக்கு கார் ரேஸ் பயிற்சி அளித்து வருகிறார்.விரைவில் பெண்களுக்கான கார் ரேஸ் போட்டிகளில் சோபிதா கலந்து கொள்வார் என தெரிகிறது.

1 2 ... 56 57 58 59 60 61 62 ... 90 91

AD's



More News