25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >> இராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியும், ரகுபதி ராஜா நினைவு நூலகமும், இராஜபாளையம் ரோட்டரி சங்கமும் இணைந்துதேசிய நூலக தினத்தை - வாசிப்பின் உன்னத விழாவாக சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் TEACHERS DAY CELEBRATION >> ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் அதிநவீன வசதிகளுடன் கூடுதல் கட்டிட பணிகள் >> ராஜபாளையம் ஏ. கே.டி தர்மராஜா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் முதல் முன்னாள் மாணவர் சங்கமம் நிகழ்ச்சி  >> இராஜபாளையம் கல்வி பள்ளிகளுக்கான குறுவட்ட விளையாட்டு போட்டிகள் >> ரெயில்வே சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் ராஜபாளையத்தில் தொடங்கி உள்ளனர். >> சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு திரளான பக்தர்கள் தரிசனம் >> ராஜபாளையம்தொழில் வர்த்தக சங்கத்தின் 86வது ஆண்டு பொதுக் குழு கூட்டம் >>


வேளாண்மை

Sep 10, 2024

மழைக்காலத்தில் செடிகள் செழிப்புடன் வளர்வதற்கு மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு முறைகள். 

மழை மண் வளத்திற்கும், மரம் செடி வளர்ச்சிக்கும் இயற்கையின் கொடை இருந்தாலும் மழைக் காலத்தில் மாடித்தோட்டத்தை சரியாக பராமரிக்கவில்லை என்றால் பல பாதிப்புகள் ஏற்படக்கூடும்.மழைக்காலத்தில் செடிகளின் தேவைக்கு அதிகமாகவே தண்ணீர் தேங்கி நிற்கும். அப்படி பூந்தொட்டியில் தண்ணீர் தேங்கி இருந்தால் உடனே வெளியேற்றிவிட வேண்டும்.பிளாஸ்டிக் வாளியில் செடி வைத்தால், அதில் துளை இட வேண்டும். செடிகளுக்கு ஊற்றும் தண்ணீரில் தேவைக்கு அதிகமான தண்ணீர் வடிய இந்தத் துவாரங்கள் அவசியம் .தண்ணீர் வெளியேற முடியாத அளவுக்கு ஏதேனும் அடைப்புகள் இருந்தால் அதனை உடனே சீர்படுத்த வேண்டும்.இந்த பருவத்தில் பூஞ்சை தாக்குதல்கள் அதிகம் என்பதால் 10-15 நாட்களுக்கு ஒருமுறை வேப்ப எண்ணெய் போன்ற பூஞ்சைக் கொல்லியைப் பயன்படுத்தலாம்.ஆடி மாதத்தில் காற்றும் பலமாக இருக்கும் என்பதால் மரக்கிளைகளை கொண்டு பாதுகாப்பு அரண் அமைக்க வேண்டும் இந்த காலத்தில் கண்டிப்பாக செடிகளுக்கு கூடுதலாக தண்ணீர் ஊற்ற வேண்டாம். இது செடிகள் அழுகுவதற்கு வழிவகுக்கும்.நிறைவாக இந்த பருவம் இறுதிவரை ஒவ்வொரு நாளும் செடியின் இலைகள், தண்டுகள் ஆரோக்கியமாக இருக்கிறதா என பார்ப்பது, அவற்றை அழுகாமல் பாதுகாக்கும்.

Sep 03, 2024

சித்திரையில் உழவடிச்சா வருஷம் முழுசும் விவசாயம் செழிக்கும்.மானாவாரியில் மகத்தான மகசூல்

 தமிழகத்தில் மொத்த விவசாயப் பரப்பில் பெரும்பாலானவை மானாவாரி நிலப்பகுதிகள்தான். சித்திரை மாதம் என்பது மானாவாரி விவசாயிகளுக்கு விவசாய வேலைகளைத் தொடங்குவதற்கான தலை மாதம். ஆண்டு முழுவதும் நல்ல மகசூல் கிடைக்க வேண்டுமென்று சித்திரையின் முதல் நாள் உழுவது ஒரு மரபு உழவுத் தொழில் ஒரு வேலையைப்போல் இல்லாமல் ஒரு விழாவாகவே நடக்கும். இதை `சித்திரை ஏர் பூட்டுதல்' எனவும், பொன்னேர் பூட்டுதல்' எனவும் சொல்வார்கள்தமிழ்ப் புத்தாண்டின் தலை மாதமான சித்திரையில்  உழவு செய்தால் நல்ல மகசூல் கிடைக்கும் என்பது நம்பிக்கை அதனாலேயே ”சித்திரை மாத உழவு, பத்தரை மாற்றுத் தங்கம்" எனவும் சொல்வார்கள் தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகேயுள்ள குருவார்பட்டி கிராமத்தில் சித்திரை முதல் நாளன்று பொன்னேர் உழவு நடைபெற்றது.பொன்னேர் உழவு குறித்து அயன்வடமாலாபுரத்தைச் சேர்ந்த கரிசல் பூமி விவசாயிகள் கூறும்போது சித்திரையில மழை பெய்ஞ்சா பொன் ஏர் கட்டலாம்னு கிராமத்தில் சொல்வடையே இருக்கு சித்திரை மாசப் பிறப்பு நாளில் முதல் நிலத்தை உழுவோம்.மாடுகளைக் குளிப்பாட்டி, பொட்டு வச்சு மாலை போட்டு, வீட்டில் சாணி மொழுகி, விளக்கேற்றி மஞ்சளில் பிள்ளையார் பிடித்து அதுல அறுகம்புல் செருகி வைப்போம். நாழி நிறைய நெல்லு வச்சு தேங்காப்பழம் உடைச்சு மாடுகளுக்கும். ஏர்கலப்பைக்கும் சாம்பிராணி காட்டி, தோள்ல ஏரைத்தூக்கிக்கிட்டு கையில மாட்டையும் பிடிச்சுக்கிட்டு ஊர்க்காளியம்மன் கோயிலுக்கு முன்னால் கொண்டு வந்து மாடுகளை நிப்பாட்டி ஏர்கலப்பையை கோயில் வாசல்ல ஒண்ணுபோல வரிசையா வச்சிடுவோம் ஒவ்வொரு வீட்டுலயும் அவரவர் வீடுகளில் கம்பு, சோளம், குதிரைவாலி, கேழ்வரகுனு என்ன விதை இருக்கோ, அதுல ஒரு கைப்பிடி விதையை ஓலைப்பெட்டியில சேகரிச்சு ஊர்க்கோயிலில் விதைப் பெட்டியை வச்சு சாமி கும்பிடுவோம். எல்லா விவசாயிகளோட ஏர்கலப்பைக்கும் மாடுகளுக்கும் மஞ்சள் தண்ணீர் தெளிச்சு, சூடம் காட்டினதும், ஒவ்வொரு ஜோடி மாடுகளும் ஒண்ணுக்குப் பின்னால ஒண்ணா வரிசையாப் போய், கோயிலுக்குப் பாத்தியப்பட்ட நிலத்துல வரிசையா ஏர்பூட்டி நிற்போம் சாட்டைக்குச்சி, களைக் கொத்துவான் கலப்பை ஆகியவற்றை நிலத்தில் இரு இடத்துல வச்சுட்டு சூரிய பகவானை  நோக்கி சாமி கும்பிடுவோம்.பிறகு, ஊரிலுள்ள வயதான விவசாயி ஒருவர் களைக் கொத்துவானை எடுத்து விவசாயிகளிடம் கொடுக்க, ஆளுக்கு 3 களைச் செடிகளைக் கொத்தி எடுப்பார்கள். பிறகு. அவரவர் கலப்பையை எடுத்து ஏர்பூட்டி, அன்றைய நாளில் வடக்கு சூலமாக இருந்தால்  தெற்கு நோக்கியும், தெற்கு சூலமாக இருந்தால் வடக்கு நோக்கியும் உழவு செய்வோம் இப்படி நல்ல நேரம்  திசை பார்த்து உழவு செய்வதால்  நல்லேர் பூட்டுதல்'னு சொல்வோம். உழவு செய்ததும் அந்த வயதான விவசாயி விதைகளை அப்படியே பரவலாக   தூவி விதைப்பார்.பிறகு, மாடுகளை அங்கிருந்து விரட்டி விடுவோம். அதில் வெள்ளை நிற மாடு வேகமாக ஊருக்குள் ஓடி வந்தால் அந்த வருஷம் பருத்தி, வெள்ளைச் சோளம் ஆகிய வற்றின் மகசூலும், செவலை நிற மாடுகள் வேகமாக ஓடி வந்தால் வத்தல், துவரை, சிவப்புச் சோளம் ஆகியவற் றின் மகசூலும் அதிகரிக்கும்னு எங்களுக்கு ஒரு நம்பிக்கை. வீட்டுக்கு வந்த மாடுகளுக்கு பருத்தி விதை, புண்ணாக்கு, வைக்கோல், புற்கள் ஆகியவற்றை மகிழ்ச்சியில் வழக்கத்தைவிட கூடுதலாகக் கொடுப்போம்ஊருக்குப் பொதுவான நிலத்தில் உழுதுவிடும் விவசாயிங்க அவரவர்கள் சொந்த நிலத்துலயும் உழுதுட்டு வீட்டுக்கு வருவோம் உழவுக்குப் போன வீட்டு ஆம்பள களைப்போட வீட்டுக்கு வரும் போது களைப்பு தீர மோர், பானக்கம்னு ஏதாவது குடிக்கக் கொடுப்பாங்க. இது இன்னைக்கு நேத்து இல்ல ரொம்ப வருசமாவே நடக்குது. . சித்திரையில் உழவடிச்சா வருஷம் முழுசும் விவசாயம் செழிக்கும்னு எங்களுக்கு நம்பிக்கை "என்றார்

Aug 27, 2024

விதை பரிசோதனையே விளைச்சலுக்கு ஆதாரம்.

விதைப்பரிசோதனை என்பது புறத்துாய்மை, ஈரப்பதம், முளைப்புத்திறன், பிற  ரக  கலப்பு போன்றவற்றை ஆய்வு செய்வதே.விதைச் சான்றளிப்பு மற்றும் உயிர்மச் சான்றளிப்புத் துறையின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் விதைப் பரிசோதனைநிலையங்கள் செயல் படுகின்றன.விவசாயிகள், உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் ஆகியோர் தங்களிடம் உள்ள விதைகளின் தரம் பற்றி அறிந்து கொள்ள ஒரு விதை மாதிரிக்கு ரூ.80 கட்டணம் செலுத்த வேண்டும். விதை மாதிரி பெற்ற 30 நாட்களுக்குள் விதையின் தரம் குறித்த அறிக்கையை பெறலாம்.குறைந்த தரம் உள்ள விதைகளை நிராகரிக்க விதைப் பரிசோதனை முடிவுகள் உதவுகின்றன. நல்ல முளைப்புத்திறன் உள்ள விதைகளை பயன்படுத்துவதன் மூலம் விதைச்செலவை குறைக்கலாம்.புறத்துாய்மை பரிசோதனையில் பிற பயிர் விதைகள், களை விதைகள் மற்றும் துாசு கண்டறியப்படுகிறது. ஈரப் பதப் பரிசோதனையின் மூலம் பூச்சி நோய் தாக்குதலின்றி விதைகளை சேமித்து அடுத்த கால விதைப்பு வரை விதைகளை பாதுகாக்கலாம்.

Aug 20, 2024

சேறடித்து நடும் முறையுடன் ஒப்பிடும் போது சொட்டுநீரில் நெல்நடுவது ….

1. தண்ணீர் 2.5% போதுமானது. 2.சேறு அடிக்க தேவையில்லை. 3.உரச்செலவு 20% போதுமானது. 4.ஆட்கூலி 25%மட்டுமே 5 சமனற்ற நிலங்களிலும் நடவு செய்யலாம். 6 இடைவெளி அதிகம் இருப்பதால் நோய்கள் 95% வருவதில்லை. 7.10-15% நாற்றுகள் போதுமானது.

Aug 13, 2024

மண்ணுக்கு ஏற்ற மரங்கள்

கரிசல் மண்ணுக்கு ஏற்ற மரங்கள் : புளி, புங்கன், நாவல்,நெல்லி சவுக்கு,வேம்பு,வாகை வண்டல் மண்ணுக்கு ஏற்ற மரங்கள் : தேக்கு,மூங்கில்,வேம்பு கருவேல், சவுண்டல்,புளி களர்மண்ணுக்கு ஏற்ற மரங்கள் : குடை வேல்,வேம்பு, புளி, பூவரசு, வாகை உவர் மண்ணுக்கு ஏற்ற மரங்கள் : சவுக்கு, புண்கள்,இலவம்,புளி, வேம்பு அமில நிலம் : குமிழ், சில்வர் ஓக் சதுப்பு நிலம், ஈரம் அதிகம் உள்ள நிலம் : பெரு மூங்கில்,நீர்மருது, நாவல்,இலுப்பை, புங்கன் வறண்ட மண்ணுக்கு ஏற்ற மரங்கள்: ஆயிலை, பனை, வேம்பு ,குடைவேல், செஞ்சந்தனம். சுண்ணாம்பு படிவம் உள்ள மண் : வேம்பு,புங்கன், புளி, வெள்வேள் சுபாபுல் குறைந்த அழமான மண் : ஆயிலை,ஆச்சா, வேம்பு, புளி, வாகை,பனை களிமண்ணுக்கு ஏற்ற மரங்கள் :வாகை,புளி, வேம்பு, புங்கன், சுபாபுல், நெல்லி, கரிமருது, கருவேல் 

Aug 06, 2024

மகசூலை அதிகரிக்கும் உரங்கள்

டி.ஏ.பி.உர பயண்பாட்டினை குறைத்து அதே அளவுஊட்டச்சத்தை சூப்பர் பாஸ்பேட்மற்றும்   காம்ப்ளக்ஸ் உரங்களை பயன்படுத்தி அதிக மகசூல் பெறலாம்.சூப்பர் பாஸ்பேட் - 50 கிலோ டி.ஏ.பி. உரத்தில்.9 கிலோ தழைச்சத்து மற்றும் 23 கிலோ மணிச்சத்து உள்ளது.இதே அளவு சத்தை கீழ்க்கண்ட மூன்று வழி களில் ஏதேனும் ஒரு வழியினை பயன்படுத்தி பெறலாம் என மத்திய அரசு அறிவுரை வழங்கி யுள்ளது.3 மூடை (150 கிலோ) சூப்பர் பாஸ்பேட் மற்றும் 20 கிலோ யூரியா அல்லது 1 மூடை (50 கிலோ) 20-20-0-13 காம்ப்ளக்ஸ் மற்றும் 75 கிலோ சூப்பர் பாஸ்பேட் அல்லது 1 மூடை (50 கிலோ) 16: 20: 0: 13 காம்ப்ளக்ஸ் மற்றும் 75 கிலோ சூப்பர் பாஸ்பேட்பயன்படுத்தலாம்.காம்ப்ளக்ஸ் உரம்-காம்ப்ளக்ஸ் உரங்கள் பயன்படுத்துவதன் மூலம் 13 சதவீதம் கந்தக சத்தும், சூப்பர் பாஸ்பேட் உரத்தில் 12 சதவீதம் கந்தக சத் தும் கிடைக்க செய்வதால் பயிரின் வளர்ச்சி மற்றும் மகசூல் அதிகரித்து டி.ஏ.பி. உர மிட்ட வயலை போன்றே மகசூல் அதிகம் பெற்று பயன்  பெறலாம்.

Jul 30, 2024

இரட்டிப்பு லாபம் பெற ஆடிப்பட்டம் தேடி விதைப்போம்

ஆடிப்பட்டம் தேடி விதை' என்பது பழ காய்கறி விதைகளை விதைப்பது அதிக மக சூலை தரும். ஆடி மாதத்தில் விதைகளை விதைக் கும் போது விவசாயிகள் பின்வரும் தொழில் நுட்பங் களை கடைபிடித்தால் மகசூல் அதிகரித்து லாபம் இரட்டிப்பாகும்.காய்கறி விதை களை 100 மி.லி. கோமியம் மற்றும் 900 மி.லி. தண்ணீர் கலந்த கலவையில் ஊற வைத்து 1 மணி நேரம் கழித்து விதைத்தால் விதைகளின் முளைப்பு திறன் கூடுவதுடன் விதைகள் மூலம் பரவும் நோய்களும் கட்டுப் படும். மேலும் 1 கிலோ விதைக்கு டிரைக்கோ டெர்மா விரிடி 4 கிராம் அல்லது சூடோமோனஸ் 10 கிராம் கலந்து 24 மணி நேரம் கழித்து விதைத்தால் விதைகளின் மூலம் பரவும் நோய் கள் கட்டுப்படும். பொதுவாக, கரை, பீர்க்கங் காய், புடலை, பாகல், பூசணி போன்ற கொடி வகை விதைகளை 24 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்தபின் விதைத்தால் விரைவில் முளைக்கும்.நல்ல வீரியமுள்ள விதைகளை தேர்வு செய்வது வீரியமுள்ள நாற்றுக்களை அளிப்பதுடன் தரமான விதை உற்பத்திக்கும் வழிவகுக்கும். வீரியமான நாற்றுக்களை நடவு செய்தால் பூச்சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரிப்பதுடன் நடவு வயலில் இடும் உரங்களையும் நல்ல முறையில் எடுத்துக் கொள்ளும்.விதைப்பதற்கு முன் விவசாயிகள் தாங்கள் வைத்திருக்கும் விதைகளை தங்கள் மாவட்டங்களில் இயங்கிவரும் அரசு விதை பரிசோதனை நிலையங்களில் கொடுத்து தரத்தினை பரிசோதனை செய்து தரமான விதைகளை மட்டும் விதைத்து நிறைவான மகசூல் பெறலாம்.கோடை மாதங்களான சித்திரை முதல் ஆனி வரை (ஏப்ரல்-ஜீலை) மாதங்களில் கடுமையான வெப்பம் நிலவும். ஆடி மாதம் வந்தவுடன் மழை தொடங்கும் போது, நிலம் ஈரப்பதமாக இருப்பதால்விதைப்பதற்கு ஏற்ற சூழல் உருவாகிறது. கடும் கோடையில் இறுகிக் காணப்படும் மண் ,ஆனி மாத மிதமான மழையால் இளகத் தொடங்கி விடுகிறது. ஈரப்பதமான மண்ணில் நுண்ணுயிர்கள், மண் புழு, நத்தைகள் உள்ளிட்டவை உருவாகத் தொடங்ககின்றன. இதனால் மண் செழிப்புற்று புற்கள், சிறு செடிகள் முளைக்கத் தொடங்குகின்றன. புதிதாக முளைத்த தாவரங்களை மேயவரும் கால்நடைகளின் கழிவுகளும் மண்ணில் சேர்ந்து உரமாகிறது. இதனால் செழிப்பான மண் உழவுக்குத் தயாராகிறது. இதன் காரணமாகவே ஆடிப்பட்டத்தில் விதைத்தால், பயிர்கள் நல்ல வளர்ச்சி அடைந்து, நல்ல விளைச்சல் கிடைக்கும் என்கின்றனர் விவசாயிகள்.ஆடிப்பட்டத்தில் விதைக்க ஏற்ற பயிர்கள் தேர்வு செய்யப்படுகின்றன. பெரும்பாலும் தானியங்களே விதைக்கப்படுகின்றன. ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழி இதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது.

Jul 30, 2024

ஒவ்வொரு வீட்டிலும் இந்த 10  மரங்கள் இருக்க வேண்டும்,

வீட்டுக்கு முன் வேப்ப மரம், பக்கத்தில் ஒரு முருங்கை மரம், வெளியே பப்பாளி மரம் இருக்க வேண்டும். குளிக்கும் தண்ணீர் போகும் இடத்தில் வாழை மரம் இருக்க வேண்டும், பாத்திரங்கள் கழுவும் இடத்தில் தென்னை மரம் இருக்க வேண்டும், ஒரு எலுமிச்சை மரம் அவசியம், அதன் நிழலின் கீழ் பகுதியில் கறுவேப்பிலை செடி இருக்க வேண்டும்.ஒரு நெல்லிச் செடி  இருக்க வேண்டும்,வேலியில் நான்கு இடத்தில் சீதா மரம் இருக்க வேண்டும்,ஒரு மா மரம் வைக்க வேண்டும் இந்த 10 மரங்கள் வீட்டில் இருந்தால் ஒருவர் கூட பசியுடன் தூங்க மாட்டார்கள்..

Jul 23, 2024

மட்டை அரிசி ( புழுதி புரட்டி ) 

இன்று கேரள மக்களால் அதிகளவு உண்ணப்படும் சற்று  பழுப்புநிற அரிசி. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் குறிப்பாக பழைய ஒன்றுபட்ட மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்களில் ஆதியில் விளைந்த நெற்பயிராகும். இதற்கு அதிக தண்ணீர் தேவையில்லை. இந்த நெற்பயிரிலே ஆன்டி ஆக்ஸிடென்ட் (anti -oxidant) இருப்பதால் பூச்சி மருந்துகள் அடிக்க வேண்டியதில்லை உரங்களும் அதிகமாக தேவைப்படுவது  இல்லை.நீரில்லாமல் வெறும் மண்ணிலே விளைவதால் இதை நாட்டுப்புறத்தில்' புழுதிபுரட்டி' என்பார்கள். சாதாரண மற்ற நெல்களை விட இந்த நெல் நான்கு மடங்கு விளைச்சலைத் தரும். இதை குறித்து இங்கிலாந்து ஹெல்த் பல்கலைக்கழகம் ஆய்வு செய்த போது இந்த நெல் உடலுக்கு நல்லது.தமிழகத்தின் தென்மாவட்ட மக்கள் இந்த அரிசியினால் நீண்ட நாட்கள் பலமுடன் வாழ்ந்தார்கள் சர்க்கரை நோயும் நெருங்காது என தங்களுடைய ஆய்வில் 1982 இல்  தெரிவித்தனர்.நானும் இந்த அரிசியை கடந்த பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறேன் இந்த அரிசியில் மொச்சைக் குழம்பு, நாட்டுக் கோழிக் குழம்பு வத்தக் குழம்பு ரசம்,கட்டி எருமைத் தயிரும் - ஊறுகாய்க்கும் ஒரு பொருத்தமானமதிய உணவாக உள்ளது. இதன் சுவையே தனி எவ்வளவு தான் சன்ன அரிசி சாப்பிட்டாலும் இந்த சுவைக்கு ஈடாகாது.இதை செந்நெல்  என்றும் குறிப்பிடுவதுண்டு. கிராமப்புறத்தில் கடுமையாக உழைப்பவர்கள் இந்த அரிசியை விரும்பி சாப்பிடுவதுண்டு.புழுதிபுரட்டி,  பாற்கடுக்கன். பனைமூக்கன் சிறைமீட்டான். மலைமுண்டன்கருஞ்சூரையானைக்கொம்பன்போரிறங்கல், வாள்சுருணை வாலன்,  தென்னரங்கரன், செம்பாளை, கறுத்ததிக்கராதி, கண்டசாலி, திருக்குறுங்கை,  காடைக்கழுத்தன், குடவாழை முத்துவெள்ளை,  திருப்பதிசரம் நாம் தவறவிட்ட சில பாரம்பரிய நெல் ரகங்கள்.

Jul 16, 2024

பாஸ்மதி அரிசி உலகின் சிறந்த அரிசியாக தேர்வு

இந்தியாவில் மட்டும் சுமார் 34 பாஸ்மதி  அரிசி ரகங்கள் பயிரிடப்படுகிறது.2023-24 ஆம் ஆண்டின் உலகின் மிகச்சிறந்த அரிசியாக பாஸ்மதி அரிசியைப் பிரபல உணவு வழிகாட்டி வழிகாட்டி நிறுவனமான அட்லஸ்  அறிவித்துள்ளது. சமீபத்தில் டேஸ்ட் அட்லஸ் வெளியிட்ட சிறந்த உணவுகள் கொண்ட 100 நாடுகளில், 11ஆவது இடம் அளித்திருந்தது.நீளமான தனித்துவமான சுவை வாசனை கொண்ட பாஸ்மதி அரிசி, இந்தியத் துணைக்கண்டத்தில் அதிகளவில் உற்பத்தியாகிறது.பாஸ்மதிக்கு அடுத்தபடியாக இத்தாலியைச் சேர்ந்த அர்போரியோ மற்றும் போர்ச்சுக்கலின் கரோலினோ ரைஸ் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

1 2 3 4 5 6 7 8 9 10

AD's



More News