25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


வெள்ளித்திரை

Nov 06, 2024

தமிழ் செல்வன் என்பவர் இயக்கிய படம் நாளை வெளியீடு

ஒவ்வொரு வாரமும் நான்கைந்து படங்களாவது வெளியாகும். இந்த வாரம் நவ. 8 (நாளை)  தமிழ் செல்வன் என்பவர் இயக்கிய 'இரவினில் ஆட்டம் பார்' என்ற படம் வெளியாவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. சரவணன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

Oct 31, 2024

புனித் ராஜ்குமார்

45 இலவசப் பள்ளிகள், 26 அனாதை இல்லங்கள், 16 முதியோர் இல்லங்கள், 19 கோசாலைகள், 1800 மாணவர்கள் கல்வி. மேலும் இறப்பதற்கு முன் கண்ணை தானம் செய்தார்.மாபெரும் நடிகரான புனித் ராஜ்குமாரை  நினைவுகூறுவோம், அவரைப் போல் இன்னொரு சூப்பர் ஸ்டார் இருக்க மாட்டார்

Oct 30, 2024

'ராஜா சாப்' மோஷன் போஸ்டர் புதிய சாதனை

பான் இந்தியா நடிகராக பிரபலமாகிவிட்ட பிரபாஸ் தற்போது மாருதி இயக்கத்தில் 'ராஜா சாப்' என்ற படத்தில் நடித்து வருகிறார். மாளவிகா, நிதி அகர்வால் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி 24 மணிநேரத்தில் 8.3 மில்லியன் பார்வைகளைப் பெற்று இந்திய அளவில் சாதனை படைத்தது. இதற்கு முன் பவன் கல்யாணின் 'ப்ரோ' மோஷன் போஸ்டர் 5.83 பார்வைகளை பெற்று முதலிடத்தில் இருந்தது.

Oct 30, 2024

நடிப்பில் 50 ஆண்டுகள் சிரஞ்சீவி மகிழ்ச்சி 

தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் சிரஞ்சீவி, 150 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். சினிமாவில் நடிக்க ஆரம்பித்து 50 ஆண்டுகளை கடந்ததை முன்னிட்டு 1974ல் கல்லுாரி படிப்பின்போது இ நடித்த முதல் நாடகத்தின் புகைப்படத்தை வெளியிட்ட சிரஞ்சீவி நர்சபூர் ஒய்என்எம் 'ராஜினாமா'. கோனா கோவிந்தராவ் எழுதியது ; நடிகராக முதல் அங்கீகாரம். 50 ஆண்டு நடிப்பு... தீராத மகிழ்ச்சி" என நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

Oct 30, 2024

பின்னணி இசைக்கு தனி யுடியூப் சேனல் ஆரம்பித்த இளையராஜா

இன்றையடிஜிட்டல் யுகத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களே அதிகம் கேட்கப்படுகிறது. அவருடைய பாடல்கள் பல தளங்களில் கிடைத்தாலும், தனக்கென தனியாக யுடியூப் சேனல் ஒன்றையும் வைத்து பாடல்களை வெளியிட்டு வருகிறார்.தற்போது பின்னணி இசைகளை வெளியிடுவதற்காகவும் தனியாக ஒரு யுடியூப் சேனலை துவக்கியுள்ளார். அதில் அவர் இசையமைத்த திரைப்பட பின்னணி இசை தொகுப்புகளை வெளியிட உள்ளார்.

Oct 30, 2024

மகேஷ்பாபுவுக்கு ராஜமவுலி போட்ட கண்டிஷன்

ஆர்ஆர்ஆர் படத்திற்கு பிறகு மகேஷ் பாபுவை வைத்து படம் இயக்க உள்ளார் ராஜமவுலி. இதற்காக தனது கெட்டப்பை மாற்றியுள்ள மகேஷ்பாபு, பல்வேறு பயிற்சிகளையும் எடுத்து வருகிறார். தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்குள் இதன் படப்பிடிப்பை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ள ராஜமவுலி, படம் திரைக்கு வரும்வரைஇந்த படத்திற்கான கெட்டப்பில் எந்த பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள கூடாது என மகேஷ்பாபுவுக்கு கண்டிஷன் போட்டுள்ளார்.

Oct 30, 2024

'அஜித்குமார் ரேஸிங்'ன் புதிய லோகோ

விடாமுயற்சி' படத்தை முடித்துவிட்டு 'குட் பேட் அக்லி' படத் - தில் நடிக்கிறார் அஜித். அதோடு கார் ரேஸ் களத்தில் மீண்டும் இறங்கி உள்ளார். தற்போது 'அஜித் 'குமார் ரேஸிங்' என்ற பெயரில் கார் பந்தய அணியை துவக்கி, அதற்கான லோகோவையும் அவரது மேலாளர் மூலம் வெளியிட்டுள்ளார். அணியின் உரிமையாளர் மற்றும் முதன்மை ஓட்டுநராக அஜித்தும், அவருடன் மேலும் 3 கார் ரேஸர்கள் அணியில் இடம் பெற்றுள்ளனர். ஐரோப்பியா வில் நடக்கும் 24எச் கார் ரேஸிங்கில் போர்ஷே 992 ஜிடி3 கப்' பிரிவில் இவரது அணி பங்கேற்கிறது.

Oct 30, 2024

பொறாமையில்  தவறாக பேசாதீர்கள் நெப்போலியன்

 வந்தாரை வாழவைக்கும் தமிழகம்னு சொல்லிட்டு, தமிழ் நாட்டோட மத்திய பகுதி திருச்சில இருந்து  வந்த ஒரு பையன் நடிச்சி இவ்ளோ சீக்கிரம் மேல் வரானா அவன நம்ம பாராட்டணும்,ஆதரவா இருக்கணும். சினிமாவுல ஆரோக்கியமான போட்டி வெச்சிக்கோங்க, இன்னைக்கு சிவகார்த்திகேயன் நடிச்ச படம் டாப் 5 நடிகர்கள் படத்துக்கு சமமா வசூல் ஆகுதுனா நீங்க அத விட  சிறந்த படம் குடுக்க முயற்சி பண்ணுங்க அத விட்டுட்டு பொறாமைப்படுறது, இழிவா பேசுறது சரி இல்ல! நடிகர் நெப்போலியன்

Oct 30, 2024

கார்த்தியின் நன்றிக்கடன்.

.கார்த்தியின் 25வது திரைப்படத்தை முன்னிட்டு 25 சமூகசெயற்பாட்டாளர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் வீதம் ரூ.25 லட் சமும், நிதியுதவி தேவைப்படும் பள்ளிகளுக்கு தலா ரூ. 1 லட்சம் வீதம் ரூ.25 லட்சமும், மருத்துவமனைகளுக்கு ரூ.1 லட்சம் வீதம் ரூ.25 லட்சமும், 25 நாட்களுக்கு சுமார் 25,000 பேர் பசியாற்ற ரூ.25 லட்சம் என ரூ.1 கோடி வழங்க உள்ளார் நடிகர் கார்த்திஇது ஒரு நடிகன் செய்யும் உதவி அல்ல தன்னை வளர்த்த சமூகத்திற்கு ஒரு மனிதன் செலுத்தும் நன்றிக்கடன். பாராட்டலாம். இவரை போல அனைவரும் முன்வந்தால் மகிழ்ச்சி,

Oct 30, 2024

'ஜெயிலர் 2' படத்தில் தனுஷ்.

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கடந்தாண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற படம் ஜெயிலர்'. 'இதன் இரண் டாம் பாகம் உருவாக உள் ளது. அதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. முதல் பாகத்தில் சிறப்பு தோற்றத்தில் மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெரப் ஆகியோர் நடித்த நிலை யில் இரண்டாம் பாகத்தில் ஒரு முக்கியமான வேடத் தில் நடிகர் தனுஷை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறதாம்.

1 2 ... 58 59 60 61 62 63 64 ... 79 80

AD's



More News