இயக்குனரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதன் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'எல்.ஐ.கே' என்ற படத்தில் நடிக்கிறார். அடுத்து கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கிறார். இதில் நாயகியாக மமிதா பைஜூ நடிக்கிறார்.இதன் படப்பிடிப்பு துவங்கி உள்ள நிலையில் இதற்கு சாய் அபயங்கர் இசையமைப்பாளராக இணைந்துள்ளார். பாடகர்கள் திப்பு, ஹரிணியின் மகனான இவர், 'கட்சி சேர' ஆல்பம் மூலம் பிரபலமாகி அடுத்தடுத்து வாய்ப்புகளை பெற்று வருகிறார்.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன்,ராஷ்மிகா நடிப்பில் 2021ல் 'புஷ்பா', 2024ல் 'புஷ்பா 2' ஆகிய படங்கள் வெளியாகி வெற்றி பெற்றன. 'புஷ்பா 3' பற்றி தயாரிப்பாளர் ரவிசங்கர் கூறுகையில் "புஷ்பா 3" யை கண்டிப்பாக எடுப்போம். அட்லி, திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் ஆகியோரின் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் அடுத்தடுத்து கமிட்டாகி இருக்கிறார். ராம் சரணை வைத்து சுகுமாரும் ஒரு படம் இயக்குகிறார். அதனால் 2028ல் 'புஷ்பா 3' வெளியாகும் என்றார்.
அரசியலில் ஈடுபாடு காட்டியுள்ள விஜய் சென்னை மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் முதலீடு செய்திருக்கிறாராம்.இந்த ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்த தொகை மட்டும் ரூ. 500 கோடிக்கு மேல் என கூறப்படுகிறது.சூர்யா சென்னையில் நிறைய கமர்சியல் இடங்களில் முதலீடு செய்திருக்கிறார்.மும்பையில் குடியேறிய சூர்யா அங்குசொந்தமாக பிளாட் ஒன்றையும் வாங்கி இருக்கிறார்.தனுஷ் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்துள்ள இவர் குறிப்பாக சென்னையின் பிரைம் லொக்கேஷன்களில் அதிக முதலீடு செய்திருக்கிறாராம்.அஜித் சினிமாவை தாண்டி இப்போது கார் ரேஸில் கவனம் செலுத்திவரும் அஜித் சுற்றுலாத்' தளங்களில் நிறைய முதலீடு செய்திருக்கிறாராம், வெளிநாடுகளில் சொத்துக்கள் உள்ளனவாம்.
ஏழை மக்களுக்காக வருடம் தோறும் 30 கோடி ரூபாய் உதவி செய்யும் மிக பிரபல நடிகர் மகேஷ்பாபு வாழட்டும் பல்லாண்டு.
'பொன்னியின் செல்வன்' படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் சோபிதா துலிபாலா. தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். நடிகர் அஜித்தை போல, கார் ரேஸில் ஆர்வம் காட்டும் நாக சைதன்யா, மனைவி சோபிதாவுக்கு கார் ரேஸ் பயிற்சி அளித்து வருகிறார்.விரைவில் பெண்களுக்கான கார் ரேஸ் போட்டிகளில் சோபிதா கலந்து கொள்வார் என தெரிகிறது.
கமல் இயக்கி, நடித்த 'விருமாண்டி' படம் மூலம் பிரபலமானவர் அபிராமி, இவர் அளித்த பேட்டியில் 'விருமாண்டியில் நடித்தசமயத்தில் நான் சைக்காலஜி மற்றும் கம்யூனிகேஷன் படிக்க அமெரிக்காவில் ஓகியாவில் இருக்கும் கல்லுாரியில் சேர விரும்பினேன். அதற்கு இங் கிருந்து பிரபலமான ஒருவ ரின் சிபாரிசு கடிதம் இருந் தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். கதாசிரியரும், இயக்குனருமான அடூர் கோபா லகிருஷ்ணன் எனக்கு சிபாரிசு கடிதம் தந்தார். கமலிடமும் கடிதம் கேட்டேன். அதற்கு அவர் சினிமாவை விட்டு நீ போகக்கூடாது, உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கு எனக் கூறி மறுத்தார். விருமாண்டி படம் முடிந்த பின் அந்த கல்லுாரியில் அட்மிஷன் கிடைத்து படிக்க சென்றுவிட்டேன்" என்றார்.
நெல்சன் இயக்கத் தில் ரஜினி நடித்த ஜெயிலர் படம் ரூ. 650 கோடி வசூலித்து வெற்றி பெற்றது. தற்போது லோகேஷ் இயக் கும் 'கூலி' படத்தில் நடிக்கும் ரஜினி, அடுத்ததாக 'ஜெயிலர் 2' படத்தில் நடிக்கிறார். இப்ப டம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் வெளி யாகும் நிலையில் ரஜினியின் முந்தைய படங்களை விட அதிக நாடுகளில் படத்தை வெளியிடும் நோக்கில் ஆங்கில மொழியிலும் வெளியிட படக் குழு திட்டமிட்டுள்ளது.
ராணியாக வாழ்ந்த கே ஆர் விஜயா 75 ஆண்டு தமிழ் சினிமாவில் சாதித்து சொந்தமாக விமானம் கப்பல் ஹோட்டல் தனக்கென புல்லட் வைத்திருந்த முதல் நடிகையும், கடைசி நடிகையும் நம்ம கே ஆர் விஜயா அம்மா அவர்கள் மட்டும்தான் அழகிலும் சிரிப்பிலும் சிறந்து விளங்கியவர் நம்ம கே ஆர் விஜயா அம்மா.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் கவுதம் மேனன், முதன்முறையாக மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில், 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' படத்தை இயக்கினார். சுமாரான வெற்றி பெற்றது. அடுத்ததாக நடிகர்கள் மோகன்லால், பிரித்விராஜ், டொவினோ தாமஸ் ஆகியோரிடமும் அடுத்தடுத்த படங்களுக்காக பேசி வருகிறார் கவுதம்மேனன். இப்போதைக்கு தமிழில் பெரிய ஹீரோக்களுடன் படம் பண்ணும் வாய்ப்பு குறைவு என்பதால் சிறிது காலம் மலை யாளத்தில் பயணிக்க அவர் முடிவெடுத்துள்ளார்.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா நடித்த 'புஷ்பா 2' படம் ரூ.1800 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.இதற்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் பேசிய அல்லு அர்ஜூன், "சுகுமாருக்கு நன்றி சொல்ல விரும்பவில்லை. நன்றி மட்டும் அவருக்கு போதுமானது அல்ல" என்றார். இதனை கேட்ட சுகுமார் நெகிழ்ந்து கண் கலங்கினார். அதை பார்த்த அல்லு அர்ஜூன், "நீங்கள் கண் கலங்கி என்னையும் கலங்க வைக்காதீர்கள்" என்றார்.