25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


வெள்ளித்திரை

Jan 15, 2025

ஜெயம் ரவி நடித்துள்ள 'காதலிக்க நேரமில்லை'

 ஜெயம் ரவி நடித்துள்ள 'காதலிக்க நேரமில்லை' படம் பொங்கலுக்கு வெளியாகி உள்ள நிலையில், இனி ஜெயம் ரவி என்ற பெயரில் என்னை அழைக்க வேண்டாம். ரவி அல்லது ரவி மோகன் என அழையுங் கள். ஜெயம் படத்தில் அறிமுகமான ரவி இப்பட ம் தந்த வெற்றியால் ஜெயம் ரவி ஆனார் .மேலும் 'ரவி மோகன் ஸ்டூடியோஸ்' என்ற தயாரிப்பு நிறுவனம், புதிய துவக்கத் திற்கு ஆதரவு தாருங்கள்" என தெரிவித்துள்ளார். அடுத்து 'டாடா' பட இயக்குனர் கணேஷ் பாபு இயக்கத் தில் நடிக்கிறார். இதுபற்றி ரவி கூறுகையில், "இது என்னுடைய 34வது படம். அரசியல் சார்ந்த கதையில்  உருவாகிறது. வெகுஜன மக்களை கவரக்கூடிய படமாக இருக்கும்" என்றார் ஜெயம் ரவி.

Jan 15, 2025

 'தி இந்தியா ஸ்டோரி' என்ற புதிய ஹிந்தி படத்தில் காஜல் அகர்வால்

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி படங்களில் நடிகை காஜல் அகர்வால் நடிக்கிறார். தமிழில் இந்தியன் 3, தெலுங்கில் கண்ணப்பா, ஹிந்தியில் சிக்கந்தர் ஆகிய படங்களில் நடிக்கும் இவர். இப்போது விவசாயம் மற்றும் பூச்சிக் கொல்லி மருத்து ஆகியவற்றை மையப்படுத்தி உருவாகும்  'தி இந்தியா ஸ்டோரி' என்ற புதிய ஹிந்தி படத்தில் நடிக்கிறார். ஷ்ரேயாஸ் தல்படே 3 ஹீரோவாக நடிக்க, சேத்தன் டிகே இயக்குகிறார்.

Jan 15, 2025

மோகன்லாலை இயக்கும் தமிழ் இயக்குனர் விஜய் சந்தர்

ஐந்து ஆண்டுகளுக்கு முன்,   வாலு, ஸ்கெட்ச், சங்கத்தமிழன் போன்ற படங்களை இயக்கியவர் விஜய் சந்தர், தற்போது விஜய் சந்தர் அடுத்த படத்திற்காக மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லாலிடம் கதை கூறி யுள்ளார். மோகன்லாலுக்கும் கதை பிடித்து போன தால் அடுத்தடுத்த பணிகள் நடக்கின்றன.

Jan 08, 2025

ஜன.26ல் வெளியாகும் இளையராஜாவின் சிம்பொனி

இசை மேதை இளையராஜா. 1500 படங்களுக்கு இசையமைத்துள்ள இவர், ஏற்கனவே ஒரு சிம்பொனி இசையை வெளியிட்டு இருந்தார். இப்போது இங்கிலாந்தில் தான் பதிவு செய்தசிம்பொனிஇசையைஜன.,26ல்வெளியிடுவதாகதெரிவித்து,இது தொடர்பாக ஒரு இசை வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார்.

Jan 08, 2025

மார்ச்சில் வரும் பிசாசு 2'

 பூர்ணா முக்கிய வேடத்திலும்,சிறப்பு வேடத்தில் விஜய் சேதுபதியும்  மிஷ்கின் இயக்கத்தில், ஆண்ட்ரியா முதன்மை வேடத்தில் நடித் துள்ள படம் 'பிசாசு 2'. படத்தில் நடித்துள்ளனர். ஹாரர் கலந்த திரில்லர் படமாக உருவாகி உள்ள, இந்த படம் முடிந்தும் சில பிரச்னையால் ரிலீஸில் தாமதமாகிறது. இந் நிலையில் 2025, மார்ச் மாதம் எப்படியாவது படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

Jan 08, 2025

பாலிவுட்டில் கால் பதிக்கும் 'அமரன்' இயக்குனர்

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் திரைக்கு வந்த 'அமரன்' படம், ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்தது. அடுத்ததாக நடிகர் தனுஷின் 55வது படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார். இதைத்தொடர்ந்து பாலிவுட்டில் டி சீரியஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஹிந்தியில் ஒரு படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் பணிகள் விரைவில் துவங்குகிறது.

Jan 08, 2025

அஜித்தின் ' விடா முயற்சி ' ,'குட் பேட் அக்லி'

 முதலில் மகிழ்திருமேனி இயக்கி உள்ள ,அஜித்தின் ' விடா முயற்சி ' படம் இந்த பொங்கலுக்கு வெளியாவதாக அறிவித்து பின்னர் தள்ளி வைக்கப்பட் டது.இந்தாண்டு அவரின் இரு படங்கள் வெளியாகின் றன. மற்றொருபுறம் ஆதிக் ரவிச்சந் திரன் இயக்கத்தில் 'குட் பேட் அக்லி' படத்திலும் நடித்துள்ளார். இதன் படப் பிடிப்பு இறுதிக் கட்டத்தில் உள்ள நிலையில் ஏப்., 10ல் படம் வெளியீடு என அறிவித்துள்ளனர். 

Jan 08, 2025

180 மில்லியன் பார்வைகளை பெற்ற.  'கேம் சேஞ்சர்' டிரைலருக்கு வரவேற்பு

 அரசியல் கலந்த ஆக்ஷன் படமாக உருவாகி உள்ள ,ஷங்கர் இயக்கத்தில், சரண், இயாரா அத்வானி நடிப்பில் தெலுங்கில் பான் இந்தியா படமாக ஜன., 10ல் திரைக்கு வரும் படம் 'கேம் சேஞ்சர்'. இதன் டிரைலர் ஜன 2 ல் வெளியானது. 24 மணி நேரத்தில் தெலுங்கு டிரைலர் 36.24 மில்லியன் பார்வைகளை யுடியூபில் பெற்றது. இப்படம் அனைத்து விதமான தளங்களிலும்  180 மில்லியன் பார்வைகளை பெற்றது. 

Jan 08, 2025

அமீர்கான் படத்தில் சிவகார்த்திகேயன்

சிவ கார்த்திகேயன் அளித்த பேட்டியில் "அமீர்கான் என்னை அழைத்து அவரது தயாரிப்பில் ஒரு ஹிந்தி படத்தில் நடிக்கும்படி கூறினார். என்  கைவசம் உள்ள படங்களை முடித்ததும், அவர் தயாரிப்பில் நடிப் பேன்" என்றார். இதன்மூலம் பாலிவுட்டில் களமிறங்க  உள்ளார் சிவகார்த்திகேயன். அமரன் படத்திற்கு பின் ஏ.ஆர். முருகதாஸ், சுதா கெங்கரா, சிபி போன்ற இயக்குனர்களின் படங்களில் நடிக்கிறார் சிவ கார்த்திகேயன். 

Jan 01, 2025

விஜய் சேதுபதி நடித்த முதல் தமிழ் திரைப்படம்  “மகாராஜா” 10 மில்லியன் அமெரிக்க டாலர்களைக் கடந்தது சீன பாக்ஸ் ஆபிஸில் முத்திரை பதித்துள்ளது.

மகாராஜா தமிழ் திரைப்படம் ஒரு அசாதாரண நிகழ்வில் தனது மகளுக்கு நீதி தேடும் ஒரு மனிதனைச் சுற்றி வருகிறது. நிகழ்வுகளின் வியத்தகு திருப்பத்தில், பாதிக்கப்பட்டவரின் உண்மையான தந்தை முக்கிய எதிரியாக இருப்பதைக் காணலாம். இப்படத்தில்விஜய்சேதுபதி, அனுராக்காஷ்யப், மம்தாமோகன்தாஸ், சச்சனா நமிதாஸ், திவ்யபாரதி, அபிராமி, சிங்கம்புலி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜூன் 14, 2024 அன்று இந்திய திரையரங்குகளில் வெளியிடப்பட்ட இப்படம் தற்போது Netflix இல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.விஜய் சேதுபதியின் தமிழ் திரைப்படத்தின் தற்போதைய பாக்ஸ் ஆபிஸ் வசூலைப் பாருங்கள். இப்படம் சமீபத்தில் வெளிநாட்டு சந்தையில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியதுவர்த்தக ஆய்வாளர் ரமேஷ் பாலாவின் கூற்றுப்படி, ஒரு வெளிநாட்டு சந்தையில் இவ்வளவு நல்ல வியாபாரம் செய்த முதல் தமிழ் திரைப்படம் மகாராஜா. இப்படம் சீனாவில் நவம்பர் 29, 2024 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இந்தியாவை விட அண்டை நாட்டில் சிறப்பாக செயல்பட்டது.  டிக்கெட் விண்டோஸில் படம் பலமான வேகத்தில் தொடர்வதால், படம் விரைவில் சீனாவில் ரூ 100 கோடியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கலாம்.

1 2 ... 53 54 55 56 57 58 59 ... 80 81

AD's



More News