உலக பாட்மின்டன்: அரையிறுதிக்கு காயத்ரி–திரீசா ஜோடி.
டெல்லியில் நடைபெற்று வரும் உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் காயத்ரி கோபிசந்த்–திரீசா ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது.
காலிறுதியில் சீனாவின் ஜியாயிபேன்–ஷு ஜியான் ஜாங் ஜோடியை எதிர்கொண்ட இந்திய அணி, முதல் செட்டை 16-21 என இழந்தது. பின்னர் சிறப்பாக விளையாடிய காயத்ரி–திரீசா ஜோடி, இரண்டாவது செட்டை 21-15 எனக் கைப்பற்றியது.
தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய இந்திய ஜோடி, வெற்றியைத் தீர்மானிக்கும் மூன்றாவது செட்டை 21-13 என வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இதன் மூலம் 15 ஆண்டுகளுக்குப் பிறகு உலக பாட்மின்டன் பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு பதக்கம் உறுதியானது.
0
Leave a Reply