முன்னாள் படைவீரர்களுக்கு ஓய்வூதியம் தொடர்பான (Sparsh Outreach programme) குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாக குறைதீர்க்கும் முகாம்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக் கூட்டரங்கில் முன்னாள் படைவீரர்களுக்கு ஓய்வூதியம் தொடர்பான (Sparsh Outreach programme) குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாக குறைதீர்க்கும் முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்களால் 01.07.2025 அன்று தொடங்கி வைக்கப்பட்டது.
அதன்படி, இம்முகாமானது 01.07.2025 மற்றும் 02.07.2025 ஆகிய நாட்களில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் மற்றும் திருவில்லிபுத்தூர் முன்னாள் படைவீரர் நல அலுவலகம் ஆகிய இடங்களில் நடைபெற்றது.இம்முகாமில், ஓய்வூதியம் தொடர்பான குறைகள், ஆதார் எண், அலைபேசி எண் மற்றும் பான் இணைப்பு, முகவரி மாற்றம், ஓய்வூதிய கொடுப்பாணை வழங்குதல், உயிர்ச்சான்று சமர்ப்பித்தல் தொடர்பான குறைகள் உடனடியாக நிவர்;த்தி செய்யப்பட்டது.
உயிர்சான்று சமர்ப்பிக்க இயலாத முன்னாள் படைவீரர்களின் குறைகள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் கேட்டறியப்பட்டு முன்னாள் படைவீரர்களுக்கு உயிர்ச்சான்று வழங்கப்பட்டது. மேலும், முன்னாள் படைவீரர்கள் சார்ந்தோர்களது பெயர் மற்றும் பிறந்த தேதி மாற்றம் தொடர்பான குறைகள் நிவர்த்தி செய்யும் பொருட்டு பரிந்துரை செய்யப்பட்டது.
மேலும், அன்று திருவில்லிபுத்தூரில் போர் நடவடிக்கையில் பணியாற்றிய 90 வயதுடைய முன்னாள் படைவீரர் இல்லத்திற்கு நேரில் சென்று ஓய்வூதியம் பெறும் விவரம் அறியப்பட்டு ஓய்வூதிய கொடுப்பாணையின் நகலினை உதவி கட்டுப்பாட்டாளர்(இந்திய பாதுகாப்பு கணக்கு பணி) திரு.விக்னேஷ் அவர்களால் வழங்கப்பட்டது.
இம்முகாமில், உதவி கட்டுப்பாட்டாளர்(இந்திய பாதுகாப்பு கணக்கு பணி) திரு.விக்னேஷ், முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர், SPARSH குழுவினர் மற்றும் நல அமைப்பாளர், பணியாளர்கள், 200 - ற்கும் மேற்ப்பட்ட முன்னாள் படைவீரர்கள்ஃ அவரை சார்ந்தோர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply