25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


வெள்ளித்திரை

Sep 11, 2024

வித்தியாசமான தோற்றத்தில் சசிகுமார்

இயக்குனராக இருந்து நடிகராக மாறியதற்காக கிடைக்கும் படங்களில் எல்லாம் நடிக்காமல், சமீப காலமாக நல்ல கதை அம்சம் கொண்ட படங்களை ,தேர்தெடுத்து நடித்து வரும் சசிகுமார் என்னும் எதார்த்த நடிகர், “அயோத்தி”, “கருடன்” படத்தை தொடர்ந்து 'நந்தன்" படத்தில் வித்யாசமான லுக்கில் நடிக்கும் சசிகுமார்.

Sep 04, 2024

பாலிவுட் திரையுலகில் தொடர்ந்து தென்னிந்திய நடிகைகள் அறிமுகம்

பாலிவுட் திரையுலகில் தொடர்ந்து தென்னிந்திய நடிகைகள் அறிமுகமாகி வருகின்றனர். 'ஜவான்' படத்தின் வாயிலாக நயன்தாரா இந்தியில் அறிமுகமானார். மேலும் ராஷ்மிகா மந்தனா, கீர்த்தி சுரேஷ், பூஜா ஹெக்டே உள்ளிட்டோரும் பாலிவுட்டில் ஏற்கனவே நுழைந்துள்ளனர். இந்த லிஸ்டில் தற்போது சாய் பல்லவியும் இணைந்துள்ளார். தனது முதல் இந்தி அறிமுக படத்திலே சீதையாக நடிக்கும் வாய்ப்பு சாய் பல்லவிக்கு கிடைத்துள்ளது.

Sep 04, 2024

நடிகை சௌகார் ஜானகி

நடிகை சௌகார் ஜானகி மற்றும் அவங்களோட மகள், பேத்தி, கொள்ளு பேத்தி, எள்ளு பேத்தி அரிய புகைப்படம்எள்ளு பேத்தி எடுத்து ஐந்து தலைமுறையை பார்த்த ஒரே தமிழ் நடிகை செளகார் ஜானகிஅவர்கள் மட்டும்தான் .

Sep 04, 2024

 இமான்வி என்ற புது முக நடிகை பிரபாஸ்க்கு ஜோடி

' சீதா ராமம் ' இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கத்தில்  கதாநாயகனாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. 1940ல் நடக்கும் பீரியட் படமாக உருவாகும் இதில் கதாநாயகியாக இமான்வி என்ற புதுமுக நடிகை நடிக்கிறார். விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். தெலுங்கு நடிகர் பிரபாஸ் தற்போது ' ராஜா சாப் ' படத்தில் நடித்து  முடித்துள்ளார்.

Aug 28, 2024

ரஜினியுடன் நடித்தது பற்றி துஷாரா நெகிழ்ச்சி

ராயன் படத்தில் தனுஷின் தங்கையாக நடித்து கவனம் ஈர்த்த துஷாரா விஜயன் அடுத்ததாக ரஜினியின் 'வேட்டையன்', விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன்' படத்தில் நடித்து வருகிறார். ரஜினியுடன் நடித்தது பற்றி அவர் கூறுகையில் "அவருடன் நடிக்க வேண்டும் என்றதும் பயம் ஏற்பட்டு, காய்ச்சலே வந்துவிட்டது. ஒரு பக்கம் மகிழ்ச்சி, இன்னொரு பக்கம் பயம் என இரண்டும் கலந்த மனநிலையில் ரஜினியுடன் நடித்தேன். அது ஒரு கனவு மாதிரியே இருந்தது" என்றார்.

Aug 28, 2024

சிவகார்த்திகேயன் படத்தில் பிஜு மேனன்

அமரன் படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தனது 23வது படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். அவருக்கு ஜோடியாக ருக்மணி வசந்த், கீர்த்தி சனோன் நடிக்கின்றனர். வில்லனாக துப்பாக்கி படத்தில் நடித்த வித்யுத் ஜம்வால் நடிக்கிறார். மலையாள நடிகர் பிஜு மேனனும் தற்போது இப்படத்தில் இணைந்துள்ளார்.இவர் ஏற்கனவே தமிழில் மஜா, தம்பி, பழனி, அரசாங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

Aug 28, 2024

அவதார் 3 உருவாகிறது

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் பேன்டஸி படமாக வெளிவந்த 'அவதார்' படத்தின் இரண்டு  பாகங்களும் வெற்றிப் படங்களாக அமைந்தன. தற்போது அவதார் 3 உருவாகிறது. இதற்கு 'அவதார் பயர் அண்ட் ஆஷ்' என தலைப்பு வைத்துள்ளதாக அறிவித்துள்ளனர். படப் பிடிப்பு முடிந்து கிராபிக்ஸ் வேலைகள் நடக்கின்றன. அடுத்தாண்டு டிசம்பர் மாத கிறிஸ்துமஸ் விடுமுறையில் படம் வெளியாகிறது.

Aug 28, 2024

அர்ஜுன் மகள், மருமகனை வைத்து எடுக்கும் படம்

 புதிய இயக்குனர் இயக்க அர்ஜூன் தயாரிப்பதோடு கதையையும் எழுதுகிறார்.நடிகர் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தம்பி ராமைய்யாவின் மகன் உமாபதிக்கும் சில மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இருவரும் தனித்தனியாக சில படங்களில் நடித்தாலும் அவை வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் மகள், மருமகனை வைத்து ஒரு படத்தை எடுக்க உள்ளார் அர்ஜூன்

Aug 21, 2024

ஆக. 23ல் ரிலீஸ் ஆகும்  படங்கள்

இந்த வாரம் ஆகஸ்ட் 23ல் வாழ்க்கை பற்றி பேசும்   உணர்ச்சிகரமான படங்கள்  வெளியாக உள்ளன.'கொட்டுக்காளி, வாழை, போகுமிடம் வெகு தூரமில்லை, நாற்கரப்போர்' ஆகியவை தான் அந்த படங்கள். இவற்றுடன் "அதர்மக் கதைகள், சாலா, கடமை" என மொத்தம் 7 படங்கள் வெளியாக உள்ளன.

Aug 21, 2024

லோகேஷ் கனகராஜ் உடன் அமீர்கான்

பாலிவுட்டின் பிரபல நடிகர் அமீர்கான். ஏற்கனவே தமிழ் இயக்குனரான ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்தார். இப்போது மற்றொரு தமிழ் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் உடன் படம் பண்ண பேச்சுவார்த்தை நடக்கிறது. முற்றிலும் ஆக்க்ஷன் கதையில் இந்தப்படம் உருவாகிறது.. 'டங்கல்' படத்திற்கு அமீர்கான் நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் சரியாக போகவில்லை ஒரு பெரிய வெற்றிக்காக தமிழ் இயக்குனர் உடன் இணைகிறார்.

1 2 ... 73 74 75 76 77 78 79 ... 90 91

AD's



More News