25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


வெள்ளித்திரை

Oct 09, 2024

காது கேட்காம, வாய்பேச முடியாம தமிழ் சினிமாவில் 15 வருஷமா நடிக்குற ஒரே நடிகை

திரைவாழ்க்கையை நாடோடிகள் திரைப்படத்தில் தொடங்கினார். அதன்பிறகு, அத்திரைப்படத்தின் மொழிமாற்றங்களிலும் நடித்து, தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் அறிமுகமானார்.காது கேட்காம, வாய்பேச முடியாம தமிழ் சினிமாவில் 15 வருஷமா நடிக்குற ஒரே நடிகை நாடோடிகள் அபிநயா மட்டும் தான்.இவங்க திறமைக்கு வாழ்த்தலாம்..

Oct 09, 2024

என் இசை பயணம் தலைநகரில் மட்டும் அல்லாமல் தமிழகத்தில் உள்ள அனைத்து ஊர்களிலும் நடைபெறும் என இளையராஜா குறிப்பிட்டுள்ளார்.

படங்களுக்கு இசையமைப்பது மட்டுமின்றி வெளிநாடுகள் மற்றும் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இளைய ராஜா இசை நிகழ்ச்சி நடத்துகிறார். இளையராஜா வெளியிட்ட பதிவில்சமீபத்தில் கும்பகோணத்தில்''பெரும் மழையிலும், என் இசை நிகழ்ச்சியை ரசிக்க வந்த கும்பகோணம் மக்களே, உங்களின் ஆதரவை மறக்க முடியாது, நன்றி. இனி என் இசை பயணம் தலைநகரில் மட்டும் அல்லாமல் தமிழகத்தில் உள்ள அனைத்து ஊர்களிலும் நடைபெறும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Oct 09, 2024

"குட் பேட் அக்லி "

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் குட் பேட் அக்லி'. திரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ் ஆகியோரும் நடிக்கின்றனர். இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஸ்பெயினில் நடக்க உள்ளது. இதில் வில்லனாக நடிக்க பாலிவுட் நடிகர் ராகுல் தேவ் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இவர் ஏற்கனவே தமிழில் மழை, வேதாளம், ஆதவன் போன்ற படங்களில் நடித்தார்.

Oct 09, 2024

டூயட் பாடலான 'வாட்டர் பாக்கெட்' பாடல் யுடியூப் தளத்தில் 10 கோடி பார்வைகளை கடந்தது.

தனுஷ் இயக்கம், நடிப்பில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் வெளியான படம் 'ராயன்'. ரூ.100 கோடி வசூலை கடந்து வெற்றி பெற்றது. இப்ப டத்தில் இடம் பெற்ற 'அடங்காத அசுரன், வாட்டர் பாக்கெட்' உள்ளிட்ட பாடல்கள் ஹிட்டானது. இதில் சந்தீப் கிஷன், அபர்ணா பாலமுரளி இடையிலான டூயட் பாடலான 'வாட்டர் பாக்கெட்' பாடல் யுடியூப் தளத்தில் 10 கோடி பார்வைகளை கடந்துள்ளது.

Oct 02, 2024

மெய்யழகன் படம் முதல் நாள் செய்த வசூல்

96 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பிரேம் குமார் . முதல் படத்திலேயே தனக்கென்று தனி இடத்தை ரசிகர்கள் மத்தியில் பிடித்துவிட்டார்.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து6 ஆண்டுகளுக்கு பின் பிரேம் குமார் இயக்கியுள்ள திரைப்படம் மெய்யழகன்.இப்படத்தைசூர்யா- ஜோதிகா இணைந்துதயாரிக்க, கார்த்தி, அரவிந்த்சாமி இருவரும் முதல் முறையாக இணைந்துநடித்துள்ளனர். மேலும் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண், தேவதர்ஷினிஎன பலரும் முக்கியகதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். நட்பு, காதல், சிரிப்பு, அழுகை, பிரிவு, துக்கம், துரோகம்னு என்று எல்லா உணர்வுகளையும் இந்த இரண்டு பேரும் அவர்களின் உடல் மொழியில் நீயா, நானானுஎன்றுபோட்டிபோட்டுமிரட்டிவிட்டுடாங்க. அனைவரும்தவறவிடக்கூடாது.ஒருஅற்புதமானபடம்இந்த 'மெய்யழகன்பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.விமர்சன ரீதியாகவும்சிறந்த வரவேற்பை பெற்றுவரும் இப்படம் முதல் நாள் உலகளவில்செய்த வசூல் குறித்துதகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மெய்யழகன்திரைப்படம் முதல் நாள் உலகளவில் ரூ. 5 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

Oct 02, 2024

அபுதாபியில் “IIFA” எனப்படும் சர்வதேசஇந்திய திரைப்பட விழா சிறந்ததமிழ் படமாக ரஜினியின் “ஜெயிலர்' வென்றது

மணிரத்னம் இயக்கிய” பொன்னியின் செல்வன் 2 “படம் சிறந்த நடிகர்(விக்ரம்),நடிகை (ஐஸ்வர்யா ராய்),இயக்குனர்(மணிரத்னம்),குணச்சித்ர நடிகர்(ஜெயராம்),இசை(ஏஆர் ரஹ்மான்),பாடகர்(ஹரிச்சரண்),பாடகி (சக்திஸ்ரீ கோபாலன்),ஒளிப்பதிவாளர்(ரவி வர்மன்),கலை இயக்கம் (தோட்டாதரணி) என 9 விருதுகளை வென்றது. சிறந்த வில்லனாக எஸ்ஜே சூர்யா(மார்க் ஆண்டனி) தேர்வானார். சினிமாவின் சிறந்த பெண்மணி, என்ற சிறப்பு விருது சமந்தாவுக்கு வழங்கப்பட்டது. 9 விருதுகளை அள்ளிய “பொன்னியின் செல்வன் 2”படம்.

Oct 02, 2024

கருடன் தெலுங்கில் ரீமேக்

சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் நடிப்பில், துரை செந்தில்குமார் இயக்கத்தில்,  வெளியாகி வரவேற்பை பெற்ற படம் 'கருடன்'. இந்த படத்தை தெலுங்கில் இப்போது ரீமேக் செய்கின்றனர். பெல்லம் கொண்ட ஸ்ரீனிவாஸ், மஞ்சு மனோஜ், நரா ரோஹித் ஆகியோர் நடிக்கின்றனர். நாயகிகளாக ஆனந்தி, அதிதி ஷங்கர் மற்றும் திவ்யா பிள்ளை ஆகியோரை நடிக்க வைக்க பேசுகின்றனர்.

Oct 02, 2024

அமிதாப் பச்சனின் ஏஐ குரல்  'வேட்டையன்' படத்தில்... ஏஐ' படிக்கும் கமல்

ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள'வேட்டை யன்' படத்தில் ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சன் நடித் துள்ளார். சமீபத்தில் இப்பட டீசர் வெளியானது. இதில் அவருக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் குரல் கொடுத்திருந் தார். ஆனால் அது சரியாக இல்லை என பலரும் கருத்து தெரிவித்தனர். இதையடுத்து அமிதாப்பிற்கு ஹிந்தி தவிர மற்ற மொழி களில் ஏஐ மூலம் அவரின் குரலையே பயன்படுத்த பணிகள் நடக்கின்றன.அக்., 10ல் படம் ரிலீஸாகிறது. தற்போது சினிமா'ஏஐ'கட்டத்தை நோக்கி நகர துவங்கி உள்ளது. இதுபற்றி முழுமையாக தெரிந்து கொள்ள மூன்று மாத பயிற்சி வகுப்பு ஒன்றில் சேர்ந்து படிக்க கமல் அமெரிக்கா சென்றுள்ளார். அத்துடன், அவரின் கதர் ஆடை நிறுவனத்தை விரிவுப்படுத்தும் பணியையும் செய்ய உள்ளாராம். தமிழ் சினிமா வில் பல புதிய தொழில்நுட்ப விஷயங்களை அறிமுகம் செய்திருக்கிறார் கமல்.

Oct 02, 2024

ஹிந்தியில் வெளியாகும் 'கடைசி உலகப்போர்'

மீசையை முறுக்கு, சிவகுமாரின் சபதம் ஆகிய படங்களை தொடர்ந்து மூன்றாவதாக'கடைசி உலகப்போர்' எனும் படத்தை தயாரித்து, இசையமைத்து, இயக்கி, நடித்துள்ளார் ஹிப் ஹாப் ஆதி. நாயகியாக அனகா நடித்துள்ளார். போர்க்கள கதையை மையமாக வைத்து கடந்தவாரம் வெளியானது. இந்த படத்தை இப்போது ஹிந்தியில் டப்பிங் செய்து அக்.,4ல்'லாஸ்ட் வேர்ல்ட் வார்' என்ற பெயரில் வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.

Sep 25, 2024

97-வது ஆஸ்கார் விருது போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட “ லாபட்டா லேடீஸ் ”

புதிதாக திருமணமாகி முகத்தை மூடிக்கொண்டு வரும் இரண்டு பெண்கள் ஒரே ரெயிலில் பயணம் செய்யும் போது தவறுதலாக வெவ்வேறு இடங்களுக்கு சென்று விடுகின்றனர். இதில் கிராமப்புறங்களில் பெண்கள் அழுத்தப்படும் நிலைமை, முன்னேற துடிக்கும் ஆசை, சமத்துவம் போன்றவை உணர்வுப்பூர்வமாக காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. பிரதியா ரந்தா, ஸபர்ஷ் ஸ்ரீவஸ்தலா, நிதான்ஷி கோயல்,சாயா கடம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை அமீர்கான் தயாரித்து இருந்தார். கடந்த மார்ச் மாதம் திரைக்கு வந்து வரவேற்பை பெற்றது. ஆஸ்கார் விருதுக்கான சிறந்த வெளிநாட்டுப் படங்கள் போட்டி பிரிவுக்கு  “லாபட்டா லேடீஸ் ” படம் அனுப்பப்படுகிறது. 

1 2 ... 71 72 73 74 75 76 77 ... 90 91

AD's



More News