25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


வெள்ளித்திரை

Jul 19, 2023

சும்மா நின்னு பேசுது மாமன்னன் படம்

.பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னன் படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்தனர்இந்தப்படத்தில் நடிகர் வடிவேலு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்: மாமன்னன் திரைப்படம் இரண்டாவது வாரத்தில் வசூலை அள்ளி வருகிறதுபெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் மாமன்னன் திரைப்படம் ஜூன் 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நிகழ்த்தப்படும் சாதிய வன்முறையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.உதயநிதி, கீர்த்தி சுரேஷ்,பகத் பாசில் என அனைவரும் தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர். படத்தில் மாமன்னாக நடித்த வடிவேலு, மாமன்னன் படத்தை தன் தோள்களில் தாங்கியிருக்கிறார். சிறப்பாக நடித்த வடிவேலுவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைக்கும் என்ற பேச்சும் சோஷியல் மீடியாவில் எழுந்துள்ளது.மகத்தான வசூல்: இந்நிலை மாமன்னன் திரைப்படம் வெளியாகி இன்றோடு சரியாக இரண்டு வாரம் ஆகி உள்ள நிலையில், படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரித்துள்ள இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படம் உலக அளவில் ரூ.62.58 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் ரூ. 48 கோடியும், வெளிநாடுகளில் 13 கோடியும் வசூல் செய்துள்ளது. 

Jul 12, 2023

தனுஷை வைத்து இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ள திரைப்படத்தை கமல்ஹாசன் தயாரிக்கிறார்.

நெல்சன் திலிப் குமார் தற்போது ரஜினி நடிப்பில் ஜெயிலர் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். படத்தில் தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.பான் இந்தியா முறையில் உருவாகும் இப்படம் வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. சுதந்திர தின விடுமுறையையொட்டி படம் வெளியாகிறது.இதைத் தொடர்ந்து தனுஷ் நடிக்கும் படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்க உள்ளார். அந்த திரைப்படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கான முதற்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் படுதோல்வியை தழுவியது. இதன் காரணமாக ஜெயிலர் திரைப்படத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அதே சமயம் நடிகர் கமல்ஹாசனுக்கு ஒரு கதை கூறியிருந்தார்.அந்த திரைப்படத்திற்கு முன்பு கமல்ஹாசன் தயாரிப்பில் நெல்சன் ஒரு படத்தை இயக்க ஒப்பந்தமாகி விட்டார். அதில் தனுஷ் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார், ஜெயிலர் திரைப்படத்தின் பணிகள் முடிவடைந்து படம் வெளியான பிறகு, அடுத்த படத்திற்கான பணிகளை நெல்சன் மேற்கொள்ள உள்ளார்.

Jul 12, 2023

மனைவி சொல்லை தட்டாத ஏ.ஆர்.ரஹ்மான்!

இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தான். ஒரு பாடலுக்கு அவர் ரூ.3 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். அவர் தலைமையிலான மேடை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாட்டாளர்கள் கோடிக்கணக்கான ரூபாய்களை கொட்டுகிறார்கள். இவ்வளவு வருமானம் இருந்தும் ஸ்டைலிஸ்ட் கூட இல்லாத நபர் ஏ.ஆர்.ரஹ்மான் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அதற்குப் பின்னால் ஒரு காரணம் இருக்கிறது.. கடந்த15 வருடங்களாக பல பொது நிகழ்ச்சிகளிலும், மேடை நிகழ்ச்சிகளிலும் சாய்ரா பானு தேர்ந்தெடுக்கும் ஆடைகளை அணிந்து தான் பங்கேற்று வருகிறார் ரஹ்மான்.அவர் எதை அணியச் சொல்கிறாரோ, அதையே தான் அணிந்துக் கொள்வதாக ரஹ்மான் கூறுகிறார். அவர் கடந்த பத்து, பதினைந்து வருடங்களாக என்னுடைய ஆடைகள் அனைத்தையும் வாங்கிக் கொடுக்கிறார். அவர், என்றார் ரஹ்மான்.எல்லாக் கிரெடிட்டும் அவருக்கே சொந்தம் எனும் ரஹ்மான், தனது மனைவி பரிந்துரைக்கும் எந்த ஆடையும் தனக்கு பொருந்தவில்லை என்று தான் உணர்ந்ததில்லை என்றும், அணிய முடியாது என்று அவரிடம் சொன்னதில்லை என்றும் கூறியுள்ளார்.என் மனைவி ஓரளவு பாரம்பரியமானவர். பெரும்பாலும் கருப்பு நிறத்தை தான் விரும்புவார். நான் அதை மற்றும் அவ்வப்போது மாற்ற முடியுமா என்று கேட்பேன். அதை அவர் ஏற்றுக் கொள்வார் என்றார். ரஹ்மானுக்கும் சாயிராபானுவுக்கும்1995ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு கதீஜா, ரஹீமா மற்றும் அமீன் ரஹ்மான் என 2 மகள்களும் 1 மகனும் இருக்கிறார்கள்.இந்திய திரைப்பட இசை உலகின் ஹாட் மேன் ஏ.ஆர்.ரஹ்மான். அவர்'மெட்ராஸ் மொஸார்ட்’ போன்ற பல அடைமொழிகளால் குறிப்பிடப்படுகிறார். ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் மூலம் ஆஸ்கர் விருதை வென்று, இசை உலகிற்கு பெருமை சேர்த்த ரஹ்மான் தான், தயாரிப்பாளர்களின் முதல் சாய்ஸ். ஏ.ஆர்.ரஹ்மானின் அன்பு மனைவி சாய்ரா பானு தான், அவரது ஒப்பனையாளர். வேலையை அனுபவித்து செய்கிறார்  என்றார் ரஹ்மான்.

Jul 05, 2023

ராம் சரண்-உபாசனா தம்பதிக்கு 11 ஆண்டுகளுக்கு பின் பிறந்த குழந்தை...!

. தெலுங்கில் பிரபல நடிகராக வலம் வருபவர் ராம் சரண். இவர் நடிகர் சிரஞ்சீவியின் மகன் ஆவார்.ராம் சரண்உபாசனா தம்பதிக்கு11 ஆண்டுகளுக்கு பின் சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. ராம் சரண் கடந்த2012ஆம் ஆண்டு உபாசனா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.ராம் சரண்உபாசனா தம்பதியின் குழந்தைக்கு பெயர் சூட்டு விழா நடைபெற்றது. பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற இந்த விழாவில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிரபலங்கள் பங்கேற்றனர். அதன்படி, குழந்தைக்கு'க்ளின் காரா கொனிடேலா' என பெயர் வைத்துள்ளனர்.இதனை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள நடிகர் சிரஞ்சீவி. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.இதை அறிந்த ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அவர்களை வாழ்த்து மழையில் நனைத்தனர்.

Jul 05, 2023

மறைந்த நடிகர் மயில்சாமியின் "ஆசை”யை நிறைவேற்றிய நடிகர் ரஜினிகாந்த்..

சில மாதங்களுக்கு முன்பு காமெடி நடிகர் மயில்சாமி நெஞ்சு வலி காரணமாக திடீரென்று உயிரிழந்தார்.அவருடைய திடீர் இறப்பு பலரையும் இப்ப வரைக்கும் பீல் பண்ண வைத்துக் கொண்டிருக்கிறது.இந்த நிலையில் அவர் ஆசைப்பட்டு கேட்ட ஒன்றை நடிகர் ரஜினிகாந்த் செய்து முடித்து இருக்கிறார். மயில்சாமி காமெடி டைம் நிகழ்ச்சியும் அவருக்கு பெரிய அளவில் பிரபலத்தை கொடுத்தது. இந்த நிலையில் பல திரைப்படங்களிலும் அவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்திருந்தது.சில நடிகர்கள் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்து கலக்கிக் கொண்டிருப்பது போல மயில்சாமியும் அந்த காலத்திலேயே சின்னத்திரை வெள்ளித்திரை என இரண்டிலும் தன்னுடைய திறமையை காட்டி ரசிகர்களின் மத்தியில் பிரபலமாக இருந்திருந்தார். அந்த நேரத்தில் தான் கடந்த பிப்ரவரி மாதம் தன்னுடைய 57 வது வயதில் நெஞ்சுவலியின் காரணமாக திடீரென மரணம் அடைந்தார்.நடிகர் மயில்சாமியின் இறப்பு செய்தி கேட்டு அவருடைய உறவினர்களை போலவே அவருடைய ரசிகர்களும் அக்கம் பக்கத்தினரும் திரை பிரபலங்கள் பலரும் தங்களுடைய வேதனைகளை தொடர்ந்து தெரிவித்து கொண்டு இருந்தனர். ஒரு சில பிரபலங்கள் தான் தாங்கள் வாழும் போதே பலருக்கும் உதவி செய்து மறைந்த பிறகு அந்த உதவியாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் மயில்சாமியும் ஒருவர்.மயில்சாமியின் இறப்பிற்கு பல பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தனர். அப்போது நடிகர் ரஜினிகாந்த் நடிகர் மயில்சாமியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி விட்டு நான் திருவண்ணாமலை சென்று சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்பது மயில்சாமியின் ஆசை அதை சீக்கிரமாக நிறைவேற்றுவேன் என்று கூறியிருந்தார்.இந்த நிலையில் இன்று ரஜினிகாந்த் திருவண்ணாமலையில் சாமி தரிசனம் செய்திருக்கிறார். தற்போது அந்த படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதைத் தொடர்ந்து ரசிகர்கள் ஒரு வழியாக பல மாதங்கள் கழித்து மயில்சாமியின் ஆசையை நிறைவேற்றி விட்டார் ரஜினிகாந்த் என்று கூறி வருகின்றனர்..

Jun 28, 2023

ஸ்டண்ட் காட்சிகள், வில்லன் இல்லாமல் ஹிட் அடித்த 6 படங்கள்.

திரைப்படங்களில் காதல், காமெடி காட்சிகள் எந்த அளவுக்கு ரசிக்கப்படுகிறதோ அதே அளவுக்கு படத்தின் வில்லன் மற்றும் ஸ்டண்ட் காட்சிகள் அதிகமாக எதிர்பார்க்கப்படும். ஆனால் இந்த 6 படங்கள் எந்த ஒரு சண்டை காட்சி இல்லாமல் எடுக்கப்பட்டிருக்கிறது.  வில்லன் என்ற கேரக்டரே அவசியம் இல்லாமல் ,உணர்வுபூர்வமான காட்சிகளை வைத்து இந்த படங்கள் ஜெயித்திருக்கின்றன.நண்பன்,3 இடியட்ஸ் என்னும் இந்தி படத்தின் தழுவலாக தமிழில் சங்கர் இயக்கிய திரைப்படம் தான் நண்பன். இந்த படத்தில் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் நடித்து இருந்தும் எந்த ஒரு மாஸ் காட்சிகளும், சண்டை காட்சிகளும் கிடையாது. கல்வி முறை மற்றும் நண்பர்கள் என மையப்படுத்தி வந்த இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்: படத்தின் ஒளிப்பதிவாளர் வாழ்க்கையில் நடந்த உண்மை கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம். தலையில் அடிபட்டு குறிப்பிட்ட காலத்தில் நடந்தது அத்தனையும் மறந்து விடும் நண்பனின் திருமணத்தை எந்த பிரச்சினையும் இல்லாமல் நடத்த நண்பர்கள் படும் பாடுதான் இந்த படம். இதில் பக்கத்தில் நிற்பது தன் காதலி என்பதை கூட மறந்து அவருடைய மேக்கப் பார்த்து “பா…. யாருடா இந்த பொண்ணு” என்று விஜய் சேதுபதி கேட்கும் வசனம் இன்று வரை பாப்புலராக இருக்கிறது.தெய்வத்திருமகள்: நடிகர் சீயான் விக்ரமின் வித்தியாசமான நடிப்பில் வெளியான திரைப்படம் தெய்வத்திருமகள். சாமி, அருள் போன்ற அதிரடி ஆக்சன் கதைகளில் நடித்துக் கொண்டிருந்த விக்ரம் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு முழுக்க முழுக்க சென்டிமென்ட்டை மட்டுமே நம்பி நடித்த திரைப்படம் இது. இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.அபியும் நானும்: மகளை மட்டுமே மொத்த உலகமாக பார்க்கும் அப்பாவின் மனநிலையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் அபியும் நானும். இந்த படத்தில் பிரகாஷ்ராஜ் மற்றும் திரிஷா அவர்களுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்கள். 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் வில்லனான பிரகாஷ்ராஜ் இருந்தும் இந்த படத்தில் சண்டைக் காட்சிகள் என்று எதுவுமே கிடையாது.மொழி: ஜோதிகா, பிரகாஷ் ராஜ் மற்றும் பிரித்விராஜின் சிறந்த நடிப்பில் வெளியான திரைப்படம் மொழி. மொழி என்பது வெறும் வார்த்தைகளால் மட்டுமே பேசுவது இல்லை என்பதை உணர்வுபூர்வமாக எடுத்து சொன்ன திரைப்படம் இது. எப்போதும் தன்னுடைய முரட்டுத்தனமான நடிப்பில் மிரட்டி கொண்டு இருந்த பிரகாஷ்ராஜ் இந்த படத்தில் முதன்முதலாக காமெடி காட்சிகளிலும் கலக்கி இருந்தார்.அழகிய தீயே: சினிமாவில் சாதிக்க துடிக்கும் ஒரு இளைஞனை சுற்றி நடக்கும் அழகான காதல் பின்னல் தான் அழகிய தீயே திரைப்படத்தின் கதை. இந்த படத்தை ராதா மோகன் இயக்கியிருந்தார். பிரசன்னா, நவ்யா நாயர், பிரகாஷ்ராஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்கள். சண்டைக் காட்சிகளை இல்லாத இந்த படமும் ரசிகர்களிடையே நேர்மறை விமர்சனத்தை பெற்றது

Jun 21, 2023

மலையாள வில்லன் ஜெய்ஸி ஜோஸ் தமிழ் சினிமாவில்...

 ஜெய்ஸி ஜோஸ்.2013ம் ஆண்டு வெளியான'திரி டாட்ஸ்' படத்தின் மூலம் மலையாள திரையுலகில் நடிகராக அறிமுகமான ஜெய்ஸி ஜோஸ், தொடர்ந்து பல படங்களில் குணச்சித்திரம் மற்றும் வில்லன் வேடங்களில் நடித்து மலையாள சினிமாவின் முக்கியமான நடிகராக உயர்ந்தார். லூசிபர், காபா, நாயட்டு, ஆபரேஷன் ஜாவா உள்ளிட்ட70க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற'2018',  கொரோனா பேப்பர்ஸ்' ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். லால், நெடுமுடி வேணு, மனோஜ் கே.ஜெயன், திலகன், சுரேஷ் கோபி, கலாபவன் மணி, ராஜன் பி.தேவ் உள்ளிட்ட பல மலையாள நடிகர்கள் தமிழ் சினிமாவில் வில்லனாகவும், குணசித்தர வேடங்களிலும் நடித்தனர். வருகிறார். தற்போது சுந்தர்.சி நடிப்பில், வி.இசட்.துரை இயக்கத்தில் நாளை(ஜூன்23) வெளியாக உள்ள'தலைநகரம்2' படம்...மூலம் தமிழ் சினிமாவில் ஜெய்ஸி ஜோஸ்.அறிமுகமாகிறார். சென்னையை மையப்படுத்தி கேங்ஸ்டர் படமாக உருவாகியுள்ள படம். இதில்அவர் சுந்தர்.சிக்கு வில்லனாக நடித்துள்ளார். அதிலும் 3 கெட்அப்களில் நடித்திருக்கிறார். இதை தொடர்ந்துசூர்யாவின்2டி நிறுவனம் தயாரிப்பில், ஜிவி பிரகாஷ் குமார் ஹீரோவாக நடிக்கும்'ரெபல்' படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Jun 21, 2023

பாடகி சின்மயி  இரட்டை குழந்தைகள்

பாடகி சின்மயி  இரட்டை குழந்தைகள் மகன்களின், புகைப்படத்தை முதன்முதலில் வெளியிட்டார்.நடிகர் ராகுல் ரவீந்திரனை திருமணம் செய்து கொண்டார் பாடகி சின்மயி இருவருக்கும் கடந்த ஆண்டு இரட்டை குழந்தைகள் பிறந்தனர். தனது மகன்களுக்கு த்ரிப்தா. ஷர்வாஸ் என பெயர் வைத்துள்ள சின்மயி, மகன்களின் புகைப்படத்தை நீண்ட நாட்கள் சோஷியல் மீடியாவில் வெளியிடாமல் இருந்தார். சமீபத்தில் சின்மயியின் குழந்தைகளை பார்க்க போட்டோக்களை வெளியிடும் படி ரசிகர்கள் கேட்க, முதன்முதலாக தனது இரட்டை குழந்தைகளின் புகைப்படங்களை சின்மயி தனது இண்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். க்யூட் குழந்தைகளான த்ரிப்தா ஷர்வாஸுக்கு பலரும் தங்களது அன்பினை பகிர்ந்து வருகின்றனர்.

Jun 21, 2023

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லியோ

 அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை 7ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர் . .லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லியோ த்ரிஷா, -அர்ஜுன், சஞ்சய் தத், மிஷ்கின் மேத்தியூ தாமஸ், கவுதம் மேனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர் நாளை விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ஏற்கனவே “நா ரெடி” என்ற பாடல் வெளியாவதாக அறிவித்துள்ளனர் இதன் முன்னோட்டமாக ஒரு வீடியோவையும் வெளியிட்டனர் அந்த நான்கு வரி பாடலிலேயே விஜய்யின் அரசியல் ஆசை பற்றிய வெளிப்பாடு தெரிகிறது இந்த நிலையில் நள்ளிரவு 12 மணிக்கு விஜய் பிறந்தநாளை முன்னிட்டு லியோ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று படக்குழுவினர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.இன்னும் இரு தினங்களுக்கு லியோ சத்தம் தான் அதிகம் ஒலிக்கும் இதை விஜய்யின் பிறந்தநாளுக்கு டபுள் ட்ரீட் என ரசிகர்கள் கொண்டாட்டத்தை துவக்கி உள்ளனர் .லோகேஷின் வழக்கமான அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகிறது .

Jun 14, 2023

விஜய்யின் " லியோ " படம் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. 

லோகேஷ் கனகராஜ் இயக்கும் "லியோ"படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்த படத்தில் அவருடன் த்ரிஷா, பிரியாஆனந்த், சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின் உட்பட பலர் நடிக்க, அனிருத் இசை அமைக்கிறார். இப்படம் இந்த ஆண்டுஅக்டோபர்19ஆம் தேதி திரைக்கு வருகிறது. தற்போது படம் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித்குமார் தயாரிக்கிறார். இந்த நிலையில் விஜய்யின் முந்தைய படங்களை காட்டிலும் இந்த படத்திற்கான பிசினஸ் விறுவிறுப்பாக நடக்கிறது. மேலும் உலகம் முழுக்க அதிகளவில் வெளியிடவும. திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது

1 2 ... 71 72 73 74 75 76 77 78 79 80

AD's



More News