நடிகர் சங்கத்தின் கட்டிடம் கட்டும் பணிகள் பணம் இல்லாத காரணத்தால் நின்று இருந்தது. அதனை தொடர்ந்து விஜய் ஒரு கோடி ரூபாயும், கமல் ஒரு கோடி ரூபாயும் அளித்து இருந்தனர்.இதனை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன்50 லட்சம் ருபாய் வழங்கினார். தற்போது கட்டிட பணிகள் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.இந்நிலையில் நடிகர் நெப்போலியன் நடிகர் சங்க கட்டிடத்திற்காக ஒரு கோடி ருபாய் நன்கொடையாக வழங்கி இருக்கிறார். அதற்காக நடிகர் சங்கம் அவருக்கு நன்றி கூறி இருக்கிறது.நடிகர் நெப்போலியன் தற்போது அமெரிக்காவில் செட்டில் ஆகி இருப்பது குறிப்பிடத்தக்கது. அங்கு சொந்தமாக ஐடி நிறுவனம் நடத்தி வருகிறார். அது மட்டுமின்றி பல நூறு ஏக்கரில் விவசாயமும் அங்கு செய்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திரிஷா மற்றும் நயன்தாரா வலம் வருகின்றனர். இவர்கள் இருவரும் ஹீரோக்களுக்கு சமமாக சம்பளம் வாங்கி வருவதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.சுமார்20 ஆண்டுகளுக்கும் மேலாக ஹீரோயின்களாக நடித்து வரும் திரிஷா மற்றும் நயன்தாரா, பெண்களுக்கு முக்கியத்துவம் கதைகளை பெரும்பாலும் தேர்வு செய்து நடித்து வருகிறார்கள்.திரிஷாவும் நயன்தாராவும் என்னதான் கோடிகளில் சம்பளம் வாங்கினாலும், தமிழ் சினிமாவில் முதன் முதலில் ரூ.100 கோடி வசூலித்தபடத்தில் நடித்தவர்கள் இவர்கள் இருவருமே இல்லை. தமிழ் சினிமாவில் முதன் முதலாக ரூ.100 கோடி வசூலித்த படத்தில் நடித்தது நடிகை ஸ்ரேயா தான்.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த சிவாஜி திரைப்படம் தான் அது.இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை ஸ்ரேயா நடித்திருப்பார்.சுமார் ரூ80 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் ரூபாய்160 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது.
நடிகர் விஜயகுமாரின் குடும்பம் மிகவும் பிரபலமானது.. அவருடைய இரண்டு மனைவிகளுக்கும் தலா மூன்று குழந்தைகள். கவிதா, அனிதா, அருண் விஜய் ஆகியோர் மூத்த மனைவி முத்துக்கண்ணுக்கு பிறந்தவர்கள். இரண்டாவது மனைவி மஞ்சுளாவுக்கு வனிதா, பிரீதா, ஸ்ரீதேவி என மூன்று மகள்கள் உள்ளனர்.அனிதாவைத் தவிர விஜயகுமாரின் வாரிசுகள் அனைவரும் படங்களில் நடித்துள்ளனர். அனிதாவுக்கு சினிமாவில் ஆர்வம் இல்லாததால் மருத்துவம் படித்துவிட்டு டாக்டராக பணியாற்றி வருகிறார். அனிதா விஜயகுமாருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவரது மகள் மகள் வுக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது.அனிதா விஜயகுமார் தனது மகளின் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்தி முடித்துள்ளார். தியாவுக்கு கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. நடிகை நயன்தாரா திருமணம் நடைபெற்ற மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தியாவின் திருமணமும் நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டனர்.திருமணம் முடிந்து விட்டாலும் திருமண கொண்டாட்டங்கள் இன்னும் ஓயவில்லை. அனிதா விஜயகுமார் சமீபத்தில் தனது மகளின் திருமணத்திற்காக உழைத்த உறவினர்களுக்கு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ராஜ விருந்து அளித்தார்.இந்தநிலையில் இயக்குனர்ஷங்கரின் மூத்தமகள் திருமணம்இன்று நடைபெற்றது.அதில் தந்தைவிஜயகுமார், மகள்கள்அனிதா விஜயகுமார், பிரீதா, ஸ்ரீதேவிமற்றும் பலர்கலந்து கொண்டனர். இந்த புகைப்படங்கள்சமூக வலைத்தளங்களில்வைரலாகி வருகிறது...
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில்அடுத்த படமான குட் பேட் அக்லி படத்தில் அஜித் நடிக்கவுள்ளார். படம்2025ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது.பிரபலநடிகர் அஜித்- திரிஷா நடிக்கும் புதிய படம் விடாமுயற்சி. இதனைஇயக்குனர் மகிழ் திருமேனி இயக்குகிறார். இப்படத்தில்வில்லனாக ஆக்ஷன் கிங் அர்ஜூன் மற்றும் ஆரவ் நடிக்கின்றனர். இப்படத்தைலைகா நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார்அனிரூத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.இதன் படப்பிடிப்புகள் கடந்தஆண்டு அக்டோபர் மாதம் அஜர்பைஜானில் தொடங்கியது.தொடர்ந்து3 மாதம் அங்கு ஷூட்டிங் நடந்தது. அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள்சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. சில வாரங்களுக்கு முன்வெளியாகிய அஜித் கார் ஓட்டும் ஸ்டண்ட் காட்சி சமூக வலைத்தளங்களில் மிகவும்வைரலாகியது. இந்நிலையில்ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில்அடுத்த படமான குட் பேட் அக்லி படத்தில் அஜித் நடிக்கவுள்ளார். தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கும் இப்படத்தைமைத்ரிமூவி மேக்கர்ஸ்தயாரிக்கின்றனர். படம்2025ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது. படத்தில்அஜித் மூன்று வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகியது.மகேஷ்பாபு நடித்த குண்டூர் காரம் படத்தின் கதாநாயகியான ஸ்ரீலீலா'குட் பேட் அக்லி' படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகதகவல் வெளியாகியுள்ளது. இந்ததகவல் ரசிகர்களிடையே மிகப்பெரியஉற்சாகத்தை உண்டாக்கியுள்ளது.
மாதுரி தீட்சித், கரீனா கபூர் கான்ஐஸ்வர்யா ராய் மற்றும் பலர், தோல்விகளுடன் தங்கள் வாழ்க்கையைத் தொடங்கிய பல நடிகைகள், பின்னர் தங்கள் சக்திவாய்ந்த நடிப்பால் பொழுதுபோக்குத் துறையை ஆண்டார்கள்..உலக அழகி போட்டியில் வென்ற பிறகு, ஐஸ்வர்யா ராய் நடிகையாக மாற முடிவு செய்வதற்கு முன்பு மாடலிங் செய்து கொண்டிருந்தார். நடிகை மணிரத்னத்தின் இருவர் படத்தின் மூலம் அறிமுகமானார். இது விமர்சன ரீதியாக வெற்றியைப் பெற்றது. ஆனால் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது. பின்னர் அவர் பாலிவுட்டில் அடியெடுத்து வைத்து அவுர் பியார் ஹோ கயாவில் பாபி தியோலுடன் நடித்தார்.இப்படம் வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் தோல்வியடைந்தது. அவரது அடுத்த ரிலீஸ் ஆ அப் லாட் சலேனும் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது. இருப்பினும், அவர் சஞ்சய் லீலா பன்சாலியின் ஹம் தில் தே சுகே சனம் படத்தில் நடித்தார். இது அவரது வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க திருப்புமுனையாக அமைந்தது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.பின்னர் மொஹப்பதீன், தால், தேவதாஸ், தூம்2 போன்ற பல வெற்றிகள் மற்றும் பிளாக்பஸ்டர்களில் நடித்தார். மேலும் அவர் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன்I மற்றும்II பாகங்களில் நடித்து முன்னணி நடிகை என்று நிரூபித்தார். இருப்பினும், பல படங்களில் இருந்து நடிகை நீக்கப்பட்ட ஒரு கட்டமும் இருந்தது.ஏ தில் ஹை முஷ்கில் படத்தில் ஷாருக்கானுடன் நடித்தார். தகவல்களின்படி, ஐஸ்வர்யா ராய்800 கோடி ரூபாய் சொத்து மதிப்பைக் கொண்டுள்ளார். மேலும் அவர் இந்திய பணக்கார நடிகை ஆவார். , நாட்டிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகை. .ஒரு படத்திற்கு ரூ. 10 கோடி சம்பளம் என்றும் கூறப்படுகிறது.
காதலன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான பிரபுதேவா தொடர்ந்து ராசைய்யா, விஐபி, மின்சாரக்கனவு, டைம் என ஏராளமான படங்கள் நடித்தார். இந்தியாவின் சிறந்த நடன அமைப்பாளர் பிரபுதேவாவின் கோரியோ கிராஃபியயில் அனைத்து நடிகர்களுமே சிறப்பான நடனத்தை வெளிப்படுத்துவார்கள். ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு நடனம் அமைத்தார் 90களில் முன்னணி நடிகர்கள் வரிசையில் பிரபுதேவா இருந்தார். காதல் கொண்டேன் படத்துக்கு ஹீரோவாக நடிக்க முதலில் செல்வராகவன் பிரபுதேவாவைத்தான் அணுகினார். ஒரு நிகழ்ச்சியில் பேசிய மீனா; இருப்பதிலேயே ரொம்பவும் கடினமான கோரியகிராஃபர் என்றால் அது பிரபுதேவாதான் என கூறினார்பிரபுதேவா இந்தியாவில் புகழ் பெற்ற நடன அமைப்பாளர்களில் ஒருவர். அதுமட்டுமின்றி பல படங்களில் ஹீரோவாக நடித்து அப்ளாஸை அள்ளிய அவர் வெற்றிகரமான இயக்குநர் என்ற பெயரையும் பெற்றிருக்கிறார். அவர் தமிழில் இயக்கிய போக்கிரி திரைப்படம் மெகா ப்ளாக்பஸ்டர் ஆனது. தற்போது விஜய்யுடன் GOAT படத்தில் நடித்துவருகிறார் பிரபுதேவா. ஒரு நடன அமைப்பாளராக மட்டுமின்றி பிரபுதேவா நடிகராகவும் புகழ் பெற்றவர்..நடிகர், நடன அமைப்பாளராக கலக்கிவந்த பிரபுதேவா 2005ஆம் ஆண்டு இயக்குநராகவும் அறிமுகமானார். அவர் தெலுங்கில் இயக்கிய முதல் படம்தான் தமிழில் சம்திங் சம்திங் படமாக ரீமேக்காகியது. அதனையடுத்து தமிழில் போக்கிரி, வில்லு, வெடி, எங்கேயும் காதல் உள்ளிட்ட படங்களை இயக்கிய அவர் ஹிந்தியில் வாண்டட் (போக்கிரி ரீமேக்), ரவுடி ரத்தோர், ராமையா வஸ்தாவையா, தபாங் 3 உள்ளிட்ட பல படங்களை இயக்கினார். பிரபுதேவாவை சுற்றி சர்ச்சைகளும் வட்டமடித்தன. தன்னுடன் நடனம் ஆடிய ரமலத் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்தச் சூழலில் பிரபுதேவாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி அவருக்கு கிட்டத்தட்ட 100லிருந்து 150 கோடி ரூபாய்வரை சொத்து இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அவருக்கு சென்னை, மும்பை உள்ளிட்ட இடங்களில் சொகுசு வீடுகளும் இருக்கின்றன. இதற்கிடையே, பிரபுதேவா நடிக்கும் புதிய படம் பற்றிய அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதன்படி மனோஜ் என்.எஸ்.இயக்க பிரபுதேவாவுடன் யோகிபாபு, அஜு வர்கீஸ், அர்ஜுன் அசோகன் உள்ளிட்டோரும் நடிக்க கமிட்டாகியிருக்கின்றனர் .
தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுன் சிறுவயதிலேயே சினிமாவில் நடித்து வரும் இவருக்கு கடந்த சில வருடங்களாக தொடர்ந்து ஹிட் கொடுக்கும் வகையில் படங்கள் அமைந்து வருகிறது.அல்லு அர்ஜுன் கேரியரில் மைல் கல் ஆக அமைந்த படம் தான் புஷ்பா. சுகுமார் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் மிரள விட்டிருந்தார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு புஷ்பா 2 படத்தின் டீசர் வெளியாகி இருந்தது.இப்படம் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம்15 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் அல்லு அர்ஜுன் ஒரு படத்திற்கு சுமார்100கோடி வரைசம்பளம் பெற்று வருகிறார். விளம்பரங்களில் நடிக்க நான்கு கோடி வரை அல்லு அர்ஜுனுக்கு கிடைக்கிறது.ஹைதராபாத்தில் அல்லு அர்ஜுனுக்கு சொகுசு பங்களா மதிப்பு 100 கோடி ஆகும் இருக்கிறது. அல்லு அர்ஜுன் 80 கோடி மதிப்பில் சொந்தமாக பிரைவேட் ஜெட் வைத்துள்ளார். 450 கோடி மதிப்பில் அல்லு அர்ஜுனுக்கு சொத்து உள்ளது.மேலும் கார் மீது அதிகம் ஆர்வம் உடைய அல்லு அர்ஜுன் ஐந்து வகையான கார்களை வைத்திருக்கிறார்.7 கோடி மதிப்பிலான ஃபால்கான் என்ற வேனிட்டி வேன் வைத்துள்ளார். மேலும் 6.5 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ், 1.78 கோடி மதிப்பிலான ரேஞ்ச் ரோவர் கார்களும் இருக்கிறது.மெர்சிடிஸ், ஜாகுவார் 99 லட்சம் மற்றும் ஹம்மர் 75 லட்சம் போன்ற கார்களும் அல்லு அர்ஜுன் கைவசம் இருக்கிறது. தொடர்ந்து ஹிட் படங்கள் கொடுத்த வசூல் மன்னனாக புஷ்பா நாயகன் அல்லு அர்ஜுன் வலம் வர இருக்கிறார்.
விஜய் தொலைக்காட்சியில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து சாதித்து.கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் தனது திறமையை வெளிப்படுத்தி அடுத்தடுத்து விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பணியாற்றி வெள்ளித்திரைக்கு வந்தவர் ரோபோ ஷங்கர்.இவரது மகள் இந்திரஜா ஷங்கர், விஜய்யின் பிகில் படத்தின் மூலம் நடிக்க தொடங்கினார்.கடந்த சில மாதங்களாகவே ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா திருமண கொண்டாட்டம் நடந்து வருகிறது. பல கோடி செலவில் தனது மகளின் திருமண விழாவை பிரம்மாண்டமாக நடத்தி வருகிறார் ரோபோ ஷங்கர்.இந்திரஜா தனது தாய்மாமன் கார்த்திக் என்பவரை தான் திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்களது திருமண ரிசப்ஷன் மார்ச்23, நடந்தது. பல பிரபலங்கள் கலந்துகொண்டுள்ள நிலையில் நடிகர் சூரியும் மணமக்களை வாழ்த்தி பேசினார்.மணமக்களுக்கு அறிவுரைகள் கூறிய சூரி, மேடைக்கு வந்ததுமே கவரில் பணக்கட்டுடன் மொய் வைத்திருக்கிறார்.அதை வாங்கிய ரோபோ சங்கர் ரொம்ப வெயிட்டா இருக்கே என ரியாக்ட் செய்தது அங்கிருந்த பிரபலங்களையும் சொந்தக்காரர்களையும் சிரிப்பலையில் ஆழ்த்தியுள்ளது..
உலகநாயகன்கமல்ஹாசன் நடிப்பில் 2022-ம் ஆண்டுவெளியான விக்ரம்படத்தை அடுத்து, இந்தியன் 2, இந்தியன் 3 மற்றும் தக்லைஃப் ஆகியபடங்கள் தயாராகிவருகின்றன. நடிகர்கமல்ஹாசன் அரசியலில்ஈடுபட்டுவரும் அதேநேரத்தில் சினிமாவிலும்கவனம் செலுத்திவருகிறார். கமல்ஹாசன்இந்தியன்2 படத்தின்போஸ்ட் புரொடக்ஷன்பணிகள் நடந்துவருவதாகவும் இந்தியன்3 படத்தின் படப்பிடிப்புநிறைவடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.இந்தியன்3 படத்தின் போஸ்ட்புரொடக்ஷன்வேலைகளைத் தொடங்குவோம்” என்று தெரிவித்துள்ளார்.இயக்குனர்மணிரத்னம் இயக்கத்தில்,‘தக் லைஃப்’படத்தில் நடிக்ககமல்ஹாசன் ஒப்பந்தம்செய்யப்பட்டுள்ளார். இந்தபடம் பற்றிகமல்ஹாசன் பேசுகையில்,“மணிரத்னத்தின்‘தக்லைஃப்’ படப்பிடிப்புதேர்தல் பிரச்சாரம்முடிந்தவுடன் விரைவில்தொடங்கும். மேலும், கல்கி 2898 கி.பிஎன்ற படத்தில்கௌரவத் தோற்றத்தில்நடித்துள்ளதாகத் தெரிவித்தார்.இயக்குனர்ஷங்கர் இயக்கத்தில்கமல்ஹாசன் நடிப்பில்,1996ம் ஆண்டுவெளியான இந்தியன்திரைப்படம் மாபெரும்வெற்றி பெற்றது.தற்போது இந்தியன்2 படத்தில் கமல்ஹாசன்நடித்துள்ளார். இந்தபடத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியாபவானி சங்கர்,காஜல் அகர்வால்,சித்தார்த், ரகுல்ப்ரீத் சிங்,நெடுமுடி வேணு,விவேக், காளிதாஸ்ஜெயராம் உள்ளிட்டபலர் நடித்துள்ளனர்.
மஞ்சுமெல் பாய்ஸ்' கேரளத்தைவிட தமிழகத்தில் பெரும் வெற்றியைப் பெற்று அதிக வசூலைக் குவித்து வருகிறது சென்னை, இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம்'மஞ்சுமெல் பாய்ஸ்'. இப்படத்தில் நடிகர்கள் சவுபின் சாகிர், ஸ்ரீநாத் பாசி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கொடைக்கானல் குணா குகையை மையப்படுத்தி கடந்த22ம் தேதி வெளியான இப்படம் கேரளத்தைவிட தமிழகத்தில் பெரும் வெற்றியைப் பெற்று அதிக வசூலைக் குவித்து வருகிறது'மஞ்சுமெல் பாய்ஸ்' திரைப்படம் உலக முழுவதும் ரூ.175 கோடி வசூலை கடந்துள்ள நிலையில் மலையாள திரைப்படத்துறையில் உலக அளவில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் மட்டும் இந்த திரைப்படம் ரூ.50 கோடி வசூலை கடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இதனால் இதுவரை, தமிழகத்தில் வெளியான மலையாளப் படங்களிலேயே அதிக வசூலைக் குவித்த படம் என்கிற சாதனையை மஞ்சுமெல் பாய்ஸ். படைத்திருக்கிறது .