ராம்கோ தொழில் நிறுவனங்களின் ஸ்தாபகர் இராஜபாளையம் நகர் தொழில் தந்தைபெருந்தகை ஸ்ரீமான் பி.ஏ.சி. ராமசாமிராஜா அவர்களின் 130 வது பிறந்தநாள் உத்சவம்24.04.2024 புதன்கிழமை காலை 6.30 மணிக்கு அன்னாரின் நினைவாலயத்தில்ஸ்ரீமான் பி.ஏ.சி .ராமசாமிராஜா நினைவு இசைப்பள்ளி குழுவினரால் கீர்த்தனாஞ்சலியும், புஷ்பாஞ்சலியும் நடைபெற உள்ளது.காலை 7.45 மணிக்கு அமரர் ஸ்ரீ பி.ஏ.சி.ராமசாமிராஜா அவர்களின் திருஉருவச்சிலைக்கு பூஜைகள் நடத்தப்பட்டு அங்கு பொது மக்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். 24.04.2024 மாலை 6.30 மணிக்கு இராஜபாளையம் திருமலை திருப்பதி தேவஸ்தானம் கல்யாண மண்டபம் A/C ஸ்ரீ P.A.C.ராமசாமிராஜா அரங்கத்தில்"அக்கரை சகோதரிகளின்" கர்நாடக இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
அயோத்தி ராமர் கோயிலில், ராம நவமி தினமான ஏப்ரல் 17ஆம் தேதி, ராமரின் நெற்றியில், சூரிய ஒளிக்கதிர் பட்டு சூரிய திலகம் எனப்படும் நிகழ்வு நடந்தேறவிருக்கிறது. அறிவியல், கட்டடவியல் அனைத்தும் ஒன்றிணைத்து, ஆன்மிகச் சிந்தனையை அதிகரிக்கும் வகையில், ராம நவமி நாளில் அயோத்தி ராமர் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களுக்கு, காணக் கிடைக்காத இந்த சூரிய திலக தரிசனம் கிடைக்கவிருக்கிறது. ஆன்மிக ரீதியாகவும், அதே வேளையில், அறிவியலுடன், கட்டட அமைப்பும் ஒருங்கிணைந்து, கோயில் அறக்கட்டளையுடன் விஞ்ஞானிகள் இணைந்து, ராமரின் பிறந்தநாளைக் கொண்டாடும் ராமநவமி நாளில் மட்டும் சூரிய ஒளிக்கதிர் ராமரின் நெற்றியில் திலகம் போல படுமாறு கண்ணாடிகள், லென்ஸ்கள் கொண்ட வடிவமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. வட இந்தியர்களால் அதிகம் கொண்டாடப்படும் ராமநவமி, ஏப்ரல் 17ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கிறது. அன்றைய நாள் சூரிய ஒளிக்கதிர், அயோத்தி ராமர் கோயிலில் உள்ள கருவறைக்குள் வீற்றிருக்கும் பால ராமர்மீதுநான்குநிமிடங்கள்விழும்வகையில்வடிவமைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரியனின் பாதையை துல்லியமாகக் கணித்து, அன்றைய நாள், எந்த இடத்தில் சூரியன் பயணிக்கும் என்பதை கண்டறிந்து, இந்த செயல்முறை அமைக்கப்பட்டிருப்பதாகவும், மூன்றாவது தளத்திலிருந்து சூரிய ஒளிக்கதிர், கருவறைக்குள் இருக்கும் பால ராமர் மீது விழும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாம்.மிகச் சரியாக பாலராமரின் நெற்றியில் திலகம் போல சூரிய ஒளிக்கதிர் விழும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது..
யாகசாலை பூஜைகள் மற்றும் கலை நிகழ்ச்சி விவரங்கள்17.04.2024 சித்திரை 04ம் தேதி புதன்கிழமை முதல் நாள்காலை 7.00-10.00 மணிவிச்வரூப தரிசனம், சுப்ரபாதம், மங்களஇசை, யஜமான, ஆச்சார்ய வர்ணம், அனுக்ஞை, ஸ்ரீ சுதர்ஸன ஹோமம், மஹாசங்கல்பம்,மாலை 4.00 மணி to இரவு 8.00 மணி |ம்ருத்ஸங்கிரஹணம், புண்ணியாகவாசனம் விசேஷ பூஜைகள் துவக்கம் கலாகர்ஷணம், யாகசாலை பிரவேசம், கும்பஸ்தாபனம், ரக்ஷாபந்தனம். 18.04.2024 சித்திரை 05ம் தேதி வியாழக்கிழமை இரண்டாம் நாள்முதலாம் கால யாக பூஜைகள், காலை 8.00 மணி.காலை 11.30 மணி பூர்ணாஹுதி, தீபாராதனைகள், திருவாராதனம்கோஷ்டி18.04.2024 சித்திரை 05ம் தேதி வியாழக்கிழமை இரண்டாம் கால யாக பூஜைகள் மாலை 5.30 மணி , இரவு 8.30 மணி பூர்ணாஹுதி, தீபாராதனைகள், திருவாராதனம்கோஷ்டி 19.04.2024 சித்திரை 06ம் தேதி வெள்ளிக்கிழமை மூன்றாம் நாள்,மூன்றாம் கால யாக பூஜைகள்காலை 8.00 மணி |to காலை 11.30 மணி , பூர்ணாஹுதி, தீபாராதனைகள், திருவாராதனம்கோஷ்டிநான்காம் கால யாக பூஜைகள் மாலை 5.30 மணி |இரவு 8.30 மணி , பூர்ணாஹுதி, தீபாராதனைகள், திருவாராதனம்கோஷ்டி 20.04.2024 சித்திரை 07ம் தேதி சனிக்கிழமை நான்காம் நாள்ஐந்தாம் கால யாக பூஜைகள் பூர்ணாஹுதி, தீபாராதனைகள், திருவாராதனம் கோஷ்டிஆறாம் கால யாக பூஜைகள் மாலை 3.30 மணி |to மாலை 5.30 மணி |இரவு 8.30 மணி,, பிம்பஸுத்தி திருமஞ்சனம் ஆறாம் கால யாக பூஜைகள் பூர்ணாஹுதி, தீபாராதனைகள், திருவாராதனம் கோஷ்டி, சயனாதி வாசம் 21.04.2024 சித்திரை 08ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஐந்தாம் நாள்காலை 4.00 - 7.25 விச்வரூப தரிசனம், ஏழாம் கால யாக பூஜைகள் பூர்ணாஹுதி, தீபாராதனைகள், தசதானம், மஹாகும்ப யாத்திரை புறப்படுதல்காலை 7 .45 – 9.00 விமானங்களுக்கும் மூலவர் ஸ்ரீ வேட்டை வெங்கடேசப்பெருமாள், சஞ்சீவி ஆஞ்சநேயர், பரிவாரமூர்த்திகளுக்கும் மஹாஸம்ப்ரோக்ஷணம்.மாலை 6.30-8.00 ,கெருடோத்ஸவம் ஸ்வாமி கருட வாகன திருவீதி உலா.(வழி: வெங்கடேஸ்வரா நகர், ராமமந்திரம், சக்கராஜா கோட்டை வழியாக கோவிலுக்கு சென்றடைதல்.) நிகழ்ச்சி18.04.2024 வியாழன் ,மாலை 6.30-8.00 ,கர்நாடக இசை நிகழ்ச்சி ஸ்ரீமதி சாலை லக்ஷணா 19.04.2024 வெள்ளி மாலை 6,30 - 8.00 , ''அன்னமாச்சாரியார் கீர்த்தனைகள்" ஸ்ரீனிவாசலு குழுவினர் (TTD-திருப்பதி) 20.04.2024 சனி மாலை 6,30 - 8.00 உபந்யாஸம் "குறை ஒன்றுமில்லை கோவிந்தா" ''வாக் விலாஸ அம்ருத ரத்னம்" “சொல்லின் செல்வன்" ஸ்ரீ துஷ்யந்த் ஸ்ரீதர் அவர்கள் திருப்பணி தலைவர் திரு பி. ஆர். வெங்கட்ராம ராஜா சேர்மன் - ராம்கோகுரூப், அறங்காவலர் குழு தலைவர், அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) திருக்கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர்.
விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் (F.L-1), F.L-2/F.L-3/FL-4A மற்றும் FL-11 ஆகிய மதுபான உரிம ஸ்தலங்களை, 2003-ம் ஆண்டைய தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் விதி 12 துணை விதி (1) The Tamil Nadu Liquor (Licence and Permit) Rules 1981-ன்படி, மக்களவை பொதுத்தேர்தல் 2024 - வாக்கு பதிவினை முன்னிட்டு 17.04.2024 அன்று காலை 10.00 மணி முதல் 19.04.2024 (Poll Day) அன்று நள்ளிரவு 12.00 மணி வரை மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளான 04.06.2024 அன்று முழுவதும் தற்காலிகமாக மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.மேற்படி, உத்தரவினை மீறி செயல்படும் F.L-1, F.L-2/F.L-3/FL-4A மற்றும் FL-11 மதுபான ஸ்தலங்களின் உரிமதாரர்களின் மீது The Tamil Nadu Liquor (Licence and Permit) Rules 1981-ன்படி கீழ் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
ஜிமெயில் சேவையை நம்பித்தான் உங்களுடைய ஒவ்வொரு நாளும் ஓடுகிறதென்றால்.. கூகுளின் இந்த இமெயில் சேவை இல்லமால் உங்களால் முழுதாக ஒரு நாளைக்கூட கடக்க முடியாதென்றால்.. ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் புதிய ஜிமெயில் விதிகளை பற்றி கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும்.2024 ஏப்ரல் 1 ஆம் தேதி முதல், புதிய அங்கீகாரத் தேவைகளை பூர்த்தி செய்யாதை பல்க் செண்டர்களால் அனுப்பப்படும் இமெயில்கள் ஆனது கூகுள் நிறுவனத்தால் நிராகரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.ஜிமெயில் பயனர்களின் இன்பாக்ஸிற்கு வரும் ஸ்பேம் இமெயில்களின் அளவை குறைப்பதோடு சேர்த்து, ஜிமெயில் பயனர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டே கூகுள் நிறுவனம் இந்த கடுமையான விதியை நடைமுறைப் படுத்தி உள்ளது.அடுத்ததாக.. 24 மணி நேரத்திற்குள் தனிப்பட்ட ஜிமெயில் அக்கவுண்ட்களுக்கு 5,000 அல்லது அதற்கு மேற்பட்ட மெசேஜ்களை அனுப்பும் எவருமே.. பல்க் செண்டர்கள் தான் என்று கூகுள் நிறுவனம் வரையறை செய்கிறது. எத்தனை துணை டொமைன்கள் பயன்படுத்தப்பட்டாலும், ஒரே முதன்மை டொமைனில் இருந்து அனுப்பப்படும் அனைத்து இமெயில்ககளும் இதில் அடங்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.இப்படியாக ஒருமுறை பல்க் செண்டர் என்கிற ஸ்டேட்டஸை பெற்றுவிட்டால், அதற்கு எந்த விதமான காலாவதி தேதியும் இல்லாததால், அது நிரந்தரமாகி விடும். அதாவது ஒருவர் ஒருமுறை பல்க் செண்டர் என்ற முத்திரை குத்தப்பட்டுவிட்டால் அவர் எப்போதுமே ஒரு பல்க் செண்டர் என்று தான் அடையாளம் காணப்படுவார், பல்க் செண்டர் வழிகாட்டுதல்கள் ஆனது தனிப்பட்ட ஜிமெயில் அக்கவுண்ட்களுக்கு அனுப்பப்படும் இமெயில்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றாலும் கூட, அனைத்து அனுப்புநர்களும் கூகுளின் புதிய விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும். இதில் கூகுள் வொர்க்பிளேஸ் அக்கவுண்ட்களை பயன்படுத்துபவர்களும் அடங்குவர்!கடைசியாக.. ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் கடுமையான டொமைன் அங்கீகார விதிகளும் (Strict Domain Authentication Rules) அமலுக்கு வரும். ஜிமெயிலின் க்ரூப் ப்ராடெக்ட் மேனேஜர் ஆன நீல் குமரன் பல பல்க் செண்டர்கள் தங்களின் சிஸ்டம்களை சரியான முறையில் செக்யூர் மற்றும் கான்ஃபிகரேஷன் செய்யவில்லை. இதனால் அட்டக்கர்களால் எளிதாக தங்களை மறைந்து கொள்ள முடிகிறது என்கிறார். இதனால்தான், ஏப்ரல் 1 முதல், பல்க் செண்டர்கள் அனைவரும் தங்கள் இமெயிலை "சிறந்த நடைமுறைகளைப்" பயன்படுத்தி அங்கீகரிக்க வேண்டும். அதாவது டொமைன் அடிப்படையிலான மெசேஜ் அங்கீகாரம் (Domain-based Message Authentication), ரிப்போர்டிங் மற்றும் கன்ஃபார்ம்மென்ஸ் (Reporting & Conformance), டொமைன்கீஸால் அடையாளம் காணப்பட்ட மெயில் (DomainKeys Identified Mail) மற்றும் செண்டர் பாலிசி ஃப்ரேம்வொர்க் (Sender Policy Framework) போன்ற சிறந்த நடைமுறைகளை பயன்படுத்த வேண்டும்ஜூன் 1 முதல் இன்னொரு புதிய ஜிமெயில் விதியும் நடைமுறைக்கு வரும்! மேற்கண்ட புதிய ஜிமெயில் விதிகளை தவிர்த்து 2024 1 ஜூன் ஆம் தேதி முதல் பல்க் செண்டர்கள் அனைவரும் ஒரே கிளிக்கில் அன்சப்ஸ்க்ரைப் செய்யும் விருப்பத்தை (One-click unsubscribe option) சேர்க்க வேண்டும். மெயிலிங் லிஸ்ட்டில் (Mailing List) இருந்து அன்சப்ஸ்க்ரைப் முயற்சிக்கும் எவருக்குமே, அது மிகவும் சுலபமான செயல்முறையாக இருக்க வேண்டும் என்பதே கூகுள் நிறுவனத்தின் நோக்கமாகும். மேலும் ஜூன் 1 முதல் பல்க் செண்டர்கள் தங்களுக்கு வரும் அன்சப்ஸ்க்ரைப் கோரிக்கைகளை (Unsubscribe requests) 48 மணி நேரத்திற்குள் செயல்படுத்த வேண்டும்
விருதுநகர் மாவட்டத்தில் தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான பணிகளில் பணிபுரிந்து வரும் வெளி மாநில தொழிலாளர்கள் அவரவர் மாநிலங்களில் நடைபெற இருக்கும் சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக தேர்தல் நாளன்று அவர்களின் சொந்த ஊரில் இருக்க வசதியாக உரிய அறிவுரைகள் வழங்கி நடவடிக்கை எடுக்குமாறும், அவர்கள் தத்தமது வாக்குரிமையை செயல்படுத்துவதை உறுதி செய்யுமாறும் தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான நிர்வாகத்தினர் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.மேலும் தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான நிர்வாகத்தினர் தங்கள் தொழிற்சாலை மற்றும் கட்டுமான பணிகளில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களையும் அவர்களது ஜனநாயக உரிமையான வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் கூட்டங்கள் நடத்தி அறிவுரைகள் வழங்குவதுடன் பணியிடங்களில் பிரதான இடங்களில் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு வாசங்கள் பொருந்திய பதாகைகள் வைக்க வேண்டும் என்றும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சி நிரல்காலை 7.00 மணி-குருவந்தனம், கணபதி பூஜை, அனுக்ஞை புண்யாஹவாசனம், மஹாஸங்கல்பம்காலை 7.15 மணி-ஸ்ரீராஜகணபதிக்கு அதர்வஷீர்ஷ பாராயணத்துடன் அபிஷேகம்காலை 7.45 மணி-ஸ்ரீ ஆதிசங்கரபகவத்பாதாசார்யர்க்கு ஸ்ரீ ருத்ர பாராயண அபிஷேகம்காலை 8.30 மணி-ஸ்ரீ சாரதாம்பாளுக்கு ஸ்ரீதுர்கா, ஸ்ரீ சூக்த பாராயண அபிஷேகம்காலை 9.00 மணி-ஸஹஸ்ரநாம அர்ச்சனைகாலை 10.00 மணி-தீபாராதனை, ப்ரசாதம்மாலை 6.30 மணி-ஸஹஸ்ரநாம, த்ரிஷதீ அர்ச்சனைகள்மாலை 7.15 மணி-ரதோற்சவம்ஸ்ரீ குருப்யோ நம:தக்ஷிணாம்னாய சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடாதீச்வர அனந்த ஸ்ரீ விபூஷித ஜகத்குரு ஸ்ரீ சங்கராசார்யஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பாரதீதீர்த்த மஹாஸ்வாமிகள் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள்அவர்களின் பரிபூர்ண ஆசிகளுடன்நிகழும் மங்களகரமான 1198ம் ஆண்டு சோபகிருது வருஷம் பங்குனி 09ம் தேதி (22.03.2024) வெள்ளிக்கிழமையும் திரயோதசி திதியும் மகம் நக்ஷத்திரமும் கூடிய சுபதினத்தில்ஸ்ரீ ராஜகணபதி,ஸ்ரீ ஆதிசங்கரபகவத்பாதாசார்யர், ஸ்ரீசாரதாம்பாளுக்கு ஸம்வத்ஸராபிஷேகம் நிகழ்ச்சி நிரல்படி நடைபெற உள்ளது.ஆஸ்தீக மஹாஜனங்கள் திரளாக கலந்துகொண்டு இறையருளுக்கு பாத்திரர்களாகுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.இப்படிக்குஸ்ரீ பி.ஆர்.வெங்கட்ராம ராஜா தலைவர் -ஸ்ரீ சாரதா சமிதி,இராஜபாளையம் & ஸ்ரீவில்லிபுத்தூர்
இராஜபாளையம் சஞ்சீவிமலை இடையே ரயில் பாதையில் மலையடிப்பட்டி ரயில்வே கேட் (எண்.448) செல்கிறது. இந்த கேட் பராமரிப்பு பணிக்காக நாளை மார்ச் 22-ம் தேதி காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை மூடப்படும். இதற்கு மாற்றுப்பாதையான ரயில்வே மேம்பால ரோட்டை பயன்படுத்தி கொள்ளலாம். என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 85 வயது பூர்த்தியடைந்த மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் வாக்குப்பதிவு நாளான 19.04.2024 அன்று தங்களுக்கு உரிய வாக்குச்சாவடி மையங்களுக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே தபால் ஓட்டு மூலம் தங்களது வாக்கினை செலுத்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.இதற்காக தங்கள் பகுதிக்கான வாக்குச்சாவடி நிலை அலுவலரால் நேரில் வழங்கப்படும் “படிவம் 12D” -ஐ பூர்த்திசெய்து வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் 25.03.2024 ற்குள் நேரில்; வழங்கி பயன்பெறலாம் என 34- விருதுநகர் பாராளுமன்ற தொகுதி, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 19.04.2024 அன்று நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்கு, விருதுநகர் மாவட்டத்தைச் சார்ந்த திடகாத்திரமுள்ள முன்னாள் படைவீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.இப்பணிக்காக மதிப்பூதியம் மற்றும் தினசரி உணவுப்படி அரசால் நிர்ணயிக்கப்பட்ட விகிதத்தில் வழங்கப்படும். தேர்தல் பணிக்கான உச்சக்கட்ட வயது வரம்பு 65ஆகும்.எனவே விருப்பமுள்ள விருதுநகர் மாவட்டத்தைச் சார்ந்த திடகாத்திரமுள்ள முன்னாள் படைவீரர்கள் தங்களது அசல் படைவிலகல் சான்று மற்றும் அடையாள அட்டையுடன் திருவில்லிபுத்தூரிலுள்ள விருதுநகர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் உடனடியாக நேரில் வருகை தந்து தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்