தேர்தல் பாதுகாப்பு பணிக்கு, தகுதியான முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்
எதிர்வரும் 19.04.2024 அன்று நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்கு, விருதுநகர் மாவட்டத்தைச் சார்ந்த திடகாத்திரமுள்ள முன்னாள் படைவீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.இப்பணிக்காக மதிப்பூதியம் மற்றும் தினசரி உணவுப்படி அரசால் நிர்ணயிக்கப்பட்ட விகிதத்தில் வழங்கப்படும். தேர்தல் பணிக்கான உச்சக்கட்ட வயது வரம்பு 65ஆகும்.
எனவே விருப்பமுள்ள விருதுநகர் மாவட்டத்தைச் சார்ந்த திடகாத்திரமுள்ள முன்னாள் படைவீரர்கள் தங்களது அசல் படைவிலகல் சான்று மற்றும் அடையாள அட்டையுடன் திருவில்லிபுத்தூரிலுள்ள விருதுநகர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் உடனடியாக நேரில் வருகை தந்து தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்
0
Leave a Reply