25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் அவர்கள் தகவல்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் அவர்கள் தகவல்

விருதுநகர் மாவட்டத்தில் தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான பணிகளில் பணிபுரிந்து வரும் வெளி மாநில தொழிலாளர்கள் அவரவர் மாநிலங்களில் நடைபெற இருக்கும் சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக தேர்தல் நாளன்று அவர்களின் சொந்த ஊரில் இருக்க வசதியாக உரிய அறிவுரைகள் வழங்கி நடவடிக்கை எடுக்குமாறும், அவர்கள் தத்தமது வாக்குரிமையை செயல்படுத்துவதை உறுதி செய்யுமாறும் தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான நிர்வாகத்தினர் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான நிர்வாகத்தினர் தங்கள் தொழிற்சாலை மற்றும் கட்டுமான பணிகளில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களையும் அவர்களது ஜனநாயக உரிமையான வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் கூட்டங்கள் நடத்தி அறிவுரைகள் வழங்குவதுடன் பணியிடங்களில் பிரதான இடங்களில் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு வாசங்கள் பொருந்திய பதாகைகள் வைக்க வேண்டும் என்றும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *