இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://isro.gov.in இல் பார்வையிடலாம்.இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ அதிகாரப்பூர்வ YouTube சேனல் https://youtube.com/watch?v=DLA_64yz8Ss ஐ பார்வையிடலாம். இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ அதிகாரப்பூர்வ Facebook பக்கமான https://facebook.com/ISRO இல் பார்க்கலாம். மற்றும், DD தேசிய தொலைக்காட்சியிலும் காணலாம்.
நாடு முழுவதும் அதிகளவு மக்கள் பயன்படுத்தும் போக்குவரத்து சேவையாக ரயில் சேவை உள்ளது. குறைந்த கட்டணத்தில் கிடைக்கும் பயணம் என்பதால் மக்கள் ரயில் போக்குவரத்தை அதிகம் விரும்பி வருகின்றனர். இந்நிலையில் சமீப காலமாக ரயில் டிக்கெட் முன்பதிவில் போலி செயலிகள் மூலம் அதிகளவு மோசடிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகள் ஐஆர்சிடிசி செயலி அல்லது அதன் வெப் சைட்டில் டிக்கெட்டுகளை புக் செய்வார்கள். இந்நிலையில் ஐஆர்சிடிசியில் தளத்தின் பெயரில் போலியாக எஸ்எம்எஸ்களில் சில ஃபிஷிங் இணைப்புகளை கொடுத்து பயணிகளிடம் பெருமளவில் பண மோசடி நடைபெறுவதாக இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது.இந்த மோசடிகளில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து தனது அதிகாரப்பூர்வ ரயில் கனெக்ட் மொபைல் செயலிகளை பயன்படுத்துமாறு வாடிக்கையாளர்களுக்கு ஐஆர்சிடிசி அறிவுறுத்தியுள்ளது. மேலும் ஐஆர்சிடிசியில் இருந்து அனுப்பப்படுவதாக வரும் போலி எஸ்எம்எஸ்களில் உள்ள லிங்குகளை க்ளிக் செய்ய வேண்டாம் என்றும் ஐஆர்சிடிசி கோரிக்கை விடுத்துள்ளது.போலி செயலிகளின் மூலம் பயணிகள் மோசடிக்கு ஆளானால் உடனடியாகCare@irctc.co.in என்ற இ மெயில் முகவரிக்கு உடனடியாக புகார் அளிக்குமாறும் இந்தியன் ரயில்வே அறிவுறுத்தியுள்ளது. மேலும் ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது செயலிகள் சரியானதுதானா என்று உறுதிப்படுத்திக்கொள்ளுமாறும் இந்தியன் ரயில்வே எச்சரித்துள்ளது.அதிகாரப்பூர்வ செயலிகளை தவிர மற்ற இணையத்தில் கிடைக்கும் செயலிகளை நம்ப வேண்டாம் என்றும் இந்திய ரயில்வே எச்சரித்துள்ளது. ஆன் லைன் பண மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில் ஐஆர்சிடிசி பெயரிலும் போலி புழக்கத்தில் இருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கத்தின் 85-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம்13.08.2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணிக்கு நமது நகர் தென்காசி சாலையில் உள்ள மாண்புமிகு P.S. குமாரசாமிராஜா நூற்றாண்டு ஞாபகார்த்த திருமண மண்டபத்தில் நமது சங்கத் தலைவர் உயர்திரு. P.R. வெங்கட்ராம ராஜா அவர்கள் (சேர்மன். ராம்கோ குழுமம்) தலைமையில் நடைபெறும். உயர்திரு.A.M.விக்கிரமராஜா அவர்கள்(மாநிலதலைவர் தமிழ்நாடு வணிகர்சங்கங்களின் பேரமைப்பு )முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுவார்கள்.தாங்கள் இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு வருகைதந்து சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். தங்கள் அன்புள்ள- M.C.வெங்கடேஸ்வர ராஜா, R.நாராயணசாமி (செயலாளர்கள் ),இராஜபாளையம்.குறிப்பு : தலைவர் அரிக்கும் இரவு விருந்தில் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தாம்பரத்தில் தொடர்ந்து நின்று செல்லும் , என தென்னக ரயில்வே அறிவிப்பு.சென்னை எழும்பூரில் இருந்து மதுரை செல்லும், தேஜஸ் விரைவு ரயில் இனி ,தாம்பரம் ரயில் நிலையத்திலும் நின்று செல்லும்.ஆகஸ்ட்26ஆம் தேதி வரை தாம்பரத்தில் நின்று செல்லும், என ஏற்கனவேஅறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தொடர்ந்து நின்று செல்லும் என அறிவிப்பு.
இந்தியா முழுவதும் பிரதமர் நரேந்திர மோடி. U. C. C. சீரான சிவில் கோட். சீரான சிவில் சட்டத்தை கொண்டு வர வேண்டும். இதற்கு அந்நாட்டு குடிமக்கள் தங்கள் கருத்தை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். ஏற்கனவே இரண்டு நாட்களில் 04 கோடி முஸ்லிம்களும் 02 கோடி கிறிஸ்தவர்களும் UCC க்கு எதிராக வாக்களித்துள்ளனர். எனவே, இறுதித் தேதியான ஜூலை 6 ஆம் தேதிக்கு முன், நாட்டில் உள்ள அனைத்து இந்துக்களும் UCC க்கு ஆதரவாக வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். UCC ஐ ஆதரிக்கவும், நாட்டைக் காப்பாற்றவும் 9090902024 என்ற எண்ணிற்கு தவறவிட்ட அழைப்பை வழங்கவும். உங்கள் அழைப்பு UCC க்கு ஆதரவாகப் பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படும். இந்த தகவலை அனைத்து இந்துக்களுக்கும் பகிரவும். 9090902024 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்த அனைவருக்கும் வணக்கம். ஜெய் பாரத் மாதா.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி மற்றும் அருப்புக்கோட்டையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, 24.06.2023 அன்று இலவச பன்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீட்டுத் திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் முகாம் நடைபெறவுள்ளது.தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை கொண்டாடுகிற விதமாக, தமிழ்நாடு முழுவதும் 100 இலவச பன்நோக்கு சிறப்பு முகாம்களை நடத்திட தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில் காரியாபட்டி அமலா உயர்நிலைப்பள்ளி மற்றும் அருப்புக்கோட்டை APTSMPS மெட்ரிக் பள்ளி ஆகிய இடங்களில் 24.06.2023, சனிக்கிழமை அன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.இந்த சிறப்பு மருத்துவ முகாமில் பொது மருத்துவம், மகளிர் மருத்துவம், கண்,காது மூக்கு, தொண்டை மருத்துவம், எலும்பியல் மருத்துவம், மனநல மருத்துவம் உள்ளிட்ட பன்னோக்கு மருத்துவ ஆலோசனைகள் சிறப்பு மருத்துவர்களால் வழங்கப்பட இருக்கிறது.இந்த சிறப்பு மருத்துவ முகாமில் ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை, இசிஜி, எக்கோ, பெண்களுக்கான மார்பக புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை, தொழு நோய் கண்டறியும் பரிசோதனை, காசநோய் பரிசோதனை, கர்ப்பப்பை வாய் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகளும்;, ஆலோசனைகளும் இலவசமாக வழங்கப்பட இருக்கிறது.மேலும், பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, மகளிர் மருத்துவம், கண் மருத்துவம், காது மூக்கு தொண்டை, பல் மருத்துவம், எலும்பியல் மருத்துவம், மனநல மருத்துவம் உள்ளிட்ட சிறப்பு சிகிச்சைக்கான ஆலோசனைகளும் இலவசமாக வழங்கப்பட இருக்கிறது.இந்த மருத்துவ முகாமில், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை 2022-2023 ஆம் ஆண்டிற்கான விளையாட்டு போட்டிகள் விருதுநகர் மாவட்டத்தில் 11.02.2023 முதல் 26.02.2023 வரை நடைபெற்று முடிவு பெற்றுவிட்டது.முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் தொடர்பான தகவல்கள் இணைதளத்தில் பதிவதற்கு பல்வேறு செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது, போட்டிகள் இனிதே நிறைவு பெற்றது.தற்போது,முதலமைச்சர் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ், பதக்கம், மற்றும் பரிசு தொகை வங்கி பரிவர்தனை மூலம் விடுவித்து வழங்கிட தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக அமைச்சர் பெருமக்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள்/ சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்டு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கும் விழாவினை சிறப்புடன் நடத்திட தெரிவிக்கப்பட்டுள்ளது.மேற்படி சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கும் விழாவினை விருதுநகர் மாவட்ட மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள கூட்டரங்கத்தில் 23.06.2023 அன்று காலை 11.00 மணிக்கு நடத்திட விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அனுமதி வழங்கி உள்ளார் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் முன்னிலையில் விழா சிறப்பாக நடைபெற உள்ளது.இது தொடர்பாக முதலமைச்சர் விளையாட்டு போட்டியில் அனைத்து பிரிவுகளில் வெற்றி பெற்ற வீரர்/வீராங்கனைகள் 23.06.2023 அன்று காலை 9.00 மணிக்கு விருதுநகர் மாவட்ட மருத்துவ கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள கூட்டரங்கத்திற்கு வருகை தருமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
விருதுநகர் மாவட்டம் தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நல வாரியத்தில் தாட்கோ அலுவலகத்தின் மூலம் உறுப்பினர் அட்டை பெற்ற தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளில் எவரேனும் பன்னிரெண்டாம் வகுப்பு 2022-2023-ஆம் கல்வி ஆண்டு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பின், அதில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ/மாணவியர்களுக்கு ஊக்கத்தொகையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்க வேண்டியுள்ளது. எனவே பன்னிரெண்டாம் வகுப்பு 2022-2023-ஆம் கல்வி ஆண்டு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ/மாணவியர்களின் விபரங்களுடன் மதிப்பெண் பட்டியல் மற்றும் தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நல வாரிய உறுப்பினர் அடையாள அட்டை நகலுடன் விருதுநகர் தாட்கோ மேலாளர் அலுவலகத்தினை எதிர் வரும் 20.06.2023-ம் தேதிக்குள். தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நல வாரிய உறுப்பினர்கள் அனுகுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன். I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்கள்,
“உயிர்த்திறள் ஒன்றெனக்கோரி தனிப்பெரும் கருணை ஆட்சி நடத்திய வள்ளல் பெருமானாரின் தருமசாலை துவக்கி 156வது ஆண்டு தொடக்கமும் (25.06.2022) வள்ளல் பெருமான் இவ்வுலகத்திற்கு வருவிக்க உற்ற 200-வது ஆண்டு தொடக்கமும் (05.10.2022) ஜோதி தரிசனம் காட்டுவித்த 152-வது ஆண்டும் (05.02.2023) வரவிருப்பதால் இம்மூன்று நிகழ்வுகளையும் இணைத்து அவரது 200-வது அவதார ஆண்டான அக்டோபர் 2022 முதல் 2023 வரை 52 வாரங்களுக்கு முக்கிய நகரங்களில் முப்பெரும் விழா அரசு சார்பாக அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது“. இதனைத்தொடர்ந்து, மதுரை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மண்டலம் சார்பில் 02.07.2023 அன்று வள்ளலார் முப்பெரும் விழா விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம், அருள்மிகு சொக்கநாதசுவாமி திருக்கோயில் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற உள்ளது.அதற்கு முன்னோடியாக விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மாணவ, மாணவியர்கள் கலந்து கொள்ளும் வள்ளலார் அவர்களின் வாழ்க்கை மற்றும் பாடல்கள் குறித்த பேச்சுபோட்டி, கட்டுரை போட்டி, பாடல் போட்டி, ஓவியம் வரைதல் போட்டி ஆகியன விருதுநகர், கே.வி.எஸ். வித்யாசலா மேல்நிலைப்பள்ளியில் வைத்து 20.06.2023 அன்று காலை 9.00 மணியளவில் நடைபெறவுள்ளது.மேற்படி போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ மாணவிகளுக்கு 02.07.2023 அன்று நடைபெறும் முப்பெரும் விழாவின் போது பரிசுகள் வழங்கப்படும். இது குறித்த கூடுதல் விவரங்களை விருதுநகர், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் தெரிந்து கொள்ளலாம் என இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அவர்கள் தெரிவித்துள்ளார்.மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்:தலைமை எழுத்தர் அலைபேசி எண் - 9688041776பிரிவு எழுத்தர் அலைபேசி எண் - 9360687563அலுவலக தொலைபேசி எண் - 04562 294607
. 2023-ம் ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழக நிதி அமைச்சர் அவர்கள் ஆற்றிய உரையின்படி, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளைச் சேர்ந்த அனைத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளில் செயல்பட்டு வரும் தொடக்கப்பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தினை விரிவுபடுத்தி ,செயல்படுத்துவது தொடர்பாக அரசிடமிருந்து வரப்பெற்றுள்ள கீழ்க்காணும் நிலையான வழிகாட்டி செயல்முறைகளின்;படி காலை உணவு சமையல் செய்வதற்கு சுய உதவிக்குழு உறுப்பினர்கள்ஃசமையலர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இப்பணி முற்றிலும் தற்காலிகமானது. இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் சுய உதவிக்குழு உறுப்பினரின் குழந்தைகள் அதே பள்ளியில் படிக்க வேண்டும். அக்குழந்தை வேறு பள்ளிக்கு மாற்றப்படும் பட்சத்தில்,சமையலர்,சுய உதவிக்குழு உறுப்பினர் மாற்றப்பட்டு, அதே பள்ளியில் படிக்கும் குழந்தையின் தாயாரும் சுயஉதவிக்குழு உறுப்பினருமான வேறு நபர் பணியமர்த்தப்படுவார். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அனுபவம் உள்ள சுயஉதவிக்குழுக்கள் ஊராட்;சி அளவிலான கூட்டமைப்புஃபகுதி அளவிலான கூட்டமைப்புகளில் உறுப்பினர்களாக இருத்தல் வேண்டும்.தேர்ந்தெடுக்கப்படும் சுயஉதவிக்குழுக்கள்ஃஊராட்;சி அளவிலான கூட்டமைப்பு பகுதி அளவிலான கூட்டமைப்புகளில் உள்ள உறுப்பினர்கள் அதே கிராம ஊராட்சியில்ஃநகர்ப்புற பகுதியில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.சுய உதவிக்குழு உறுப்பினர்கள் குறைந்த பட்சக்கல்வித்தகுதியாக 10-ஆம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும்.முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கு தகுதியின் அடிப்படையில் தற்காலிமாக தேர்வுசெய்யப்படும் சுய உதவிக்குழு உறுப்பினராக உள்ள சமையலர் பணியிடமானது முற்றிலும் தற்காலிகமானது. இப்பணிக்கு சமையலர் தேர்வு செய்யும்பொழுது பணம் பெறுதல் உள்ளிட்ட புகார்கள் வந்தால் சம்மந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்I.A.S. அவர்கள் தெரிவித்துள்ளார்.சமையலர் தேர்வு செய்யும்பொழுது பணம் பெறுதல் உள்ளிட்ட புகார்கள் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்