கொள்ளு பொடி .
தேவையானவை : கொள்ளு 1 கப்,உளுந்து அரை கப், மிளகாய் வற்றல் 25, பெருங்காயம்1 துண்டு, கொப்பரை துருவல் கால் கப், உப்பு தேவைக்கு, எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன்.
செய்முறை: கொள்ளை சுத்தம் செய்து வெறும்வாணலியில் மொறுமொறுப்பாக வறுத்தெடுங்கள். எண்ணெயில் பெருங்காயத்தை பொரித்தெடுத்துவிட்டு, மிளகாயை நிறம் மாறாமல் வறுத்தெடுங்கள். மீதமாகும் எண்ணெயில் உளுந்தை வறுத்தெடுத்துவிட்டு, கடைசியில் தேங்காயைப் போட்டு சிவக்க வறுத்தெடுங்கள்.
வறுபட்ட அனைத்தும் ஆறியதும் ஒன்றாகக் கலந்து உப்பு சேர்த்து கரகரப்பாக பொடித்தெடுங்கள்.இந்தப் பொடியுடன் நல்லெண்ணெய் கலந்து சாதம், இட்லி, தோசை வகைகளுக்குத் தொட்டுக்கொண்டால்,சுவை பிரமாதமாக இருக்கும்.
0
Leave a Reply