25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


தெரிந்து கொள்ளுங்கள்

May 25, 2026

GIRLSக்கு ₹3000, BOYSக்கு ₹2500, SCHOLARSHIP..! உடனே APPLY பண்ணுங்க.

பெண்களுக்கு மாதம் ₹3000, ஆண்களுக்கு ₹2500 வரை ஸ்காலர்ஷிப் வழங்கப்படுகிறது. 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்; குடும்பத்தில் யாரும் அரசு பணியில் இருக்கக்கூடாது. National Scholarship Portal மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ராணுவத்தில் உயிரிழந்தோரின் குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்

May 25, 2026

ராகவ் சதா எம்.பி கேள்வி?. மாதம் Phone Allowance .

மாதம் Phone Allowance என்று ஒவ்வொரு "MLAக்கும் " 9000ரூ எதற்கு?Unlimited Recharge ரூ .350க்கு கிடைக்கும் போது மாதம் 9000ரூ வரைAllowance ஏன் வழங்கப்படுகிறது? மக்கள் பணம் ஏன் வீணடிக்கப்படுகிறது? ராகவ் சதா எம்.பி கேள்வி?.

May 23, 2026

ஒரே நாளில் உயிரை பறிக்கும்'Meningococcal B' எனப்படும் பாக்டீரியா .

ஆஸ்திரேலியா: 21 வயது இளைஞர் ஒருவருக்கு 'Meningococcal B' எனப்படும் பாக்டீரியா தொற்று, காய்ச்சலாக மாறிய சில மணிநேரத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கழுத்து விறைப்பு, தோலில் தடிப்புகள் போன்ற அறிகுறிகள் தென்பட்டவுடன் தாமதிக்காமல் சிகிச்சை பெறுவதும், தடுப்பூசி போட்டுக் கொள்வதும் இதிலிருந்து தப்ப ஒரே வழி என மருத்துவர்கள் தகவல்!

May 23, 2026

( செஸ் ) சதுரங்க விளையாட்டின் வரலாறு .

 இந்தியாவில் சுமார் 1,400 ஆண்டுகளுக்கு முன் செஸ் விளையாட்டு முதன்முதலில் சதுரங்கம் என்ற பெயரில் உருவாக்கப்பட்டது. பண்டைய இந்திய போர்ப்படையின் அமைப்பை அடிப்படையாக கொண்டது. ஒரு போர்ப்படையில் இருக்கும் யானை, குதிரை, மந்திரி, சிப்பாய்கள், ராஜா போன்ற உருவங்கள் ரூக், நைட், பிஷப், பான், கிங் என்ற பெயரில் சதுரங்கத்தில் இருக்கும்.  செஸ் விளையாட்டு  ராஜாவை எதிரியிடம் இருந்து காக்க வேண்டும் அல்லதுராஜா எங்கும் நகராதபடி சிக்கிக்கொண்ட நிலையில் தோல்வி அடைவது என்பதே சதுரங்க ஆட்டத்தின் அடிப்படை.இந்தியாவில் இருந்து அன்றைய பெர்சியா நாடான இன்றைய ஈரானுக்கு அறிமுகமான போது 'சத்ரஞ்ச்' எனசதுரங்க விளையாட்டு அழைக்கப்பட்டது. அரபு தேசத்தில் இருந்துஸ்பெயின் மற்றும் ஐரோப்பா முழுவதும் பரவியபோது செஸ் விளையாட்டாகபுகழ்பெற்றது.இந்தியாவில் சதுரங்கம் ஆடப்பட்டபோது, ஆரம்பத்தில் ராணிக்கு முழுமையாக சக்திஎதுவும் கிடையாது. இத்தாலி, பிரான்ஸ் நாடுகளில் அறிமுகம் ஆன பிறகு, ராணிக்கு முழு சக்தி வழங்கப்பட்டு  ,வேறு சில மாற்றங்கள் மற்றும் விதிமுறைகள் உருவாக்கப்பட்டன.பிரான்ஸ் நாட்டில் உலக செஸ் அமைப்பு 1924-ல் உலகின் பெரும்பாலான நாடுகளில் விரும்பி விளையாடப்படும் ஒன்றாக பிரபலமடைந்த நிலையில் தொடங்கப்பட்டது. பல்வேறு தந்திரமான நகர்த்தலுக்கு பின்னர், எதிரிப்படையின் ராஜா எங்கும் தப்பிக்காதபடி 'செக்மேட்' செய்யும் போது ஆட்டம் நிறைவடையும். அதே வேளையில், ராஜா செக்கில் இல்லை, ஆனால் எந்த காயையும் நகர்த்த முடியாது என்ற நிலையில் ஸ்டேல்மேட் அல்லது ஆட்டம் டிரா என்ற நிலையில் நிறைவு பெறும்.இதை உன்னிப்பாக கவனிக்கும்போது மூளைக்கு கடுமையான சவால் விடும் விளையாட்டு என்பதை உணரலாம். 

May 23, 2026

 இந்தியாவின் தலைசிறந்த கொடையாளர் சிவ நாடார் .

ஒரு தகவல் தொழில்நுட்பக் கூட்டமைப்பானHCL டெக்னாலஜிஸின் நிறுவனரும் தலைவருமான இவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் நான்கு முறை இந்தியாவின் தலைசிறந்த கொடையாளராகத் திகழ்ந்து,2025ஆம் ஆண்டில்320 மில்லியன் டாலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளார். மொத்தத்தில்,80 வயதான நாடார், தனக்குப் பிறகும் நிலைத்திருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் சுகாதார வழங்குநர்கள் போன்ற நிறுவனங்களின் வலையமைப்பிற்காக 1.7 பில்லியன் டாலர்களை வழங்கியுள்ளார்.கல்விக்கான அவரது ஆதரவில் வித்யாக்யான் என்ற இரண்டு உறைவிடப் பள்ளிகளும் அடங்கும். இவை உத்தரப் பிரதேசத்தின் கிராமப்புறங்களில் உள்ள 75 மாவட்டங்களில், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் திறமையான குழந்தைகளைக் கண்டறிந்து, 2009 முதல்2,000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இலவசமாகக் கல்வி அளித்து வருகின்றன. பிப்ரவரியில், வித்யாக்யான் பட்டதாரிகள் இருவர் இல்லினாய்ஸ் டெக் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தனர். இதன் மூலம், அவர்கள் தங்கள் மாவட்டங்களிலிருந்து அமெரிக்காவில் உயர்கல்வியைத் தொடரும் முதல் நபர்கள் என்ற பெருமையைப் பெற்றனர்.இந்தியாவின் ஐந்தாவது பணக்காரரான நாடார், வெளிப்படையான நிர்வாகத்துடன் நிறுவனங்களை உருவாக்குதல், ஆண்டு அறிக்கைகளை வெளியிடுதல் மற்றும் நிதி விவரங்களை வெளிப்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கிய தனது அணுகுமுறையை “ஆக்கப்பூர்வமான கொடை” என்று குறிப்பிடுகிறார்.“கல்வி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது, மேலும் அது சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கான திறவுகோலாகும்,” என்று நாடார்2023ஆம் ஆண்டு இந்தியாவின்‘தி எகனாமிக் டைம்ஸ்’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறினார்.“தனிநபர்களுக்கும் சமூகங்களுக்கும் அதிகாரம் அளிப்பதற்கும், ஒரு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் அதற்கு முழுமையான ஆற்றல் உள்ளது.”

May 23, 2026

BIGGEST DATA CENTER ,விசாகப்பட்டினத்தில் ....

விசாகப்பட்டினத்தில் ரூ.1.6 லட்சம் கோடியில் 1.5 GW திறன்கொண்ட நாட்டின் மிகப் பெரிய Data Centre-ஐ அமைக்க Reliance நிறுவனம் திட்டம்.இதற்காக 935 ஏக்கர் நிலத்தை வாங்க ஆந்திர மாநில அரசிடம், அந்நிறுவனம் கோரியுள்ளதாக தகவல். ஏற்கனவே, அதே பகுதியில்/ரூ.1.4 லட்சம் கோடியில் 1 GW Data Centre-ஐ அமைக்கும் பணிகளை Google தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

May 23, 2026

அனைத்து டாக்ஸிகளிலும் Panic Button கட்டாயம்! 

இந்தியாவில் உள்ள அனைத்து பொது சேவை வாகனங்கள்& டாக்சிகளில் லொகேஷன் ட்ராக்கிங் டிவைஸ், பேனிக் பட்டன்கள், வேக கட்டுப்பாட்டு கருவிகள், கட்டாயமாக பொருத்தப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தவறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.

May 23, 2026

தாய்லாந்தில் பிரம்மாண்டமான டைனோசர் இனம்.

27 டன் எடையுள்ள இந்த'நாகாடைட்டன்' புதிய நீண்ட கழுத்து கொண்ட டைனோசர்,தென்கிழக்கு ஆசியாவில் இதுவரை கண்டறியப்பட்டதிலேயே மிகப்பெரிது.

May 23, 2026

நிலவில் தண்ணீர்.! அப்டேட் தந்த சந்திரயான்-2..

இந்திய விண்வெளி ஆய்வு மையமான ISRO-வின் சந்திரயான்-2 விண்கலம், நிலவில் நீர் இருப்பதை கண்டறிந்து சாதனை.. நிலவின் மேற்பரப்பிற்கு அடியில் பெருமளவிலான நன்னீர் இருப்பதை உறுதி செய்தது இந்த விண்கலம்.. மனிதர்கள் நிலவில் குடியேறுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து வரும் வேளையில், இந்த கண்டுபிடிப்பு உலக நாடுகளின் கவனத்தை இந்தியாவின் பக்கம் திருப்பியுள்ளது..

May 23, 2026

விண்வெளியில் மிதக்கும் வைர மழை!

நெப்டியூன் மற்றும் யுரேனஸ் கிரகங்களின் வளிமண்டலந்தில் நிலவும் அதீத அழுத்தம் காரணமாக, அங்குள்ள கார்பன் அணுக்கள் இறுகி வைரங்களாக மாறுகின்றன. இதனால் அந்த கிரகங்களில் உண்மையாகவே வைர மழை பொழிகிறது என விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். விண்வெளியின் விந்தைகள் என்றும் வியப்பானவை!

1 2 ... 7 8 9 10 11 12 13 ... 103 104

AD's



More News