அமெரிக்காவுடனான போர் நிறுத்த உடன்படிக்கையின் இடைக்காலத்தில், ஈரான் தனது ராணுவ பலத்தை ரகசியமாக அதிகரித்துள்ளதாகத் தகவல்கள்வெளியாகியுள்ளன. 'சில்க் ரோடு' (Silk Road) ரயில் பாதை வழியாக சீனாவிலிருந்துஆயிரக்கணக்கான FPV (First Person View) வகை ட்ரோன்களை ஈரான் இறக்குமதி செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நவீன ட்ரோன்கள், ஒருவேளை அமெரிக்கா ஈரான் மீது தரைவழித் தாக்குதலை (Ground Operation) நடத்தினால், அதை எதிர்கொள்ள மிகக் கடுமையான தடையாகவும், அதிக உயிர்ச்சேதத்தை விளைவிக்கக்கூடிய ஆயுதமாகவும் அமையும் என்று வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
ஒரு காலத்தில் அமெரிக்க விசா பெறுவதற்கே மிகுந்த சிரமப்பட்ட சென்னையைச் சேர்ந்த 'SPACE ZONE INDIA' நிறுவனர் டாக்டர் ஆனந்த் மேகலிங்கம், இன்று தனது விடாமுயற்சியால் NASA-வின் உயர்தர விண்வெளி தொழில்நுட்பப் பயிற்சிக்கு நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு சாதனை படைத்துள்ளார். ஒரு மாத கால இந்த எலைட் பயிற்சியில் கலந்துகொள்ளும் அவர், தமிழகத்தின் அடையாளமாகவும் இந்திய விண்வெளித் துறையின் எழுச்சியாகவும் உலக அரங்கில் ஜொலிக்கிறார். அன்று அமெரிக்க விசா மறுப்பு. இன்று NASA அழைப்பு.
‘வம்சத்தை ஆண்கள் அல்ல, பெண்கள்தான் கடத்துகிறார்கள்!’ - பல நூற்றாண்டுகளாக மகன்கள்தான் வம்சாவளியைத் தொடர்கிறார்கள் என்ற நம்பிக்கை இருந்து வருகிறது. ஆனால், மனித இனத்தின் மிகப்பழமையான மரபணுத் தொடரான 'மைட்டோகாண்ட்ரியல் டிஎன்ஏ' (Mitochondrial DNA) தாயிடமிருந்து மட்டுமே குழந்தைகளுக்குக் கடத்தப்படுகிறது. அதிலும் குறிப்பாக, மகள்களால் மட்டுமே இதனை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல முடியும் என கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வு கூறுகிறது.
நாம் அன்றாடம் வாங்கும் பிரீமியம் ரக கடைகளில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களிலேயே இவ்வளவு பெரிய மோசடியா? வெளிநாடுகளில் காலாவதியான பிஸ்கட்கள் மற்றும் உணவுப் பொருட்களை குறைந்த விலைக்கு வாங்கி, இந்தியாவில் புதிய பேக்கிங் செய்து, காலாவதி தேதியை மாற்றி விற்பனை செய்த கும்பலை டெல்லி காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். சுமார் ₹4.3 கோடி மதிப்பிலான 43,000 கிலோ பொருட்களைப் பறிமுதல் செய்துள்ள காவல்துறை, இந்த மோசடி நீண்ட காலமாக நடைபெற்று வந்ததாகத் தெரிவித்துள்ளது. பிரபலமான பிராண்டுகள் என்றாலும், நீங்கள் வாங்கும் எந்தவொரு பேக் செய்யப்பட்ட உணவுப் பொருளின் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதியை முறையாகச் சரிபார்க்காமல் வாங்காதீர்கள்.
தமிழகத்தில் முக்கிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணங்கள் உயர்வு. கார், ஜீப்களுக்கு ரூ.55லிருந்து ரூ.80 ஆகவும், இலகு ரக வாகனங்களுக்கு ரூ.85லிருந்து ரூ.130 ஆகவும், லாரி, பேருந்துகளுக்கு ரூ.185லிருந்து ரூ.275 ஆகவும் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.
காங்கோ ஜனநாயகக் குடியரசில் (DRC) பரவி வரும் எபோலா வைரஸ் பாதிப்பு, சர்வதேச அளவில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தொற்று பாதிப்பால் இதுவரை சுமார் 513 பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 131 பேர் உயிரிழ்ந்துள்ளதாகவும் அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, இது 'பண்டிபுக்யோ' (Bundibagyo) எனும் அரிதான வகை வைரஸ் என்பதால், இதைக் கட்டுப்படுத்த தற்போது அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ அல்லது பிரத்யேக மருந்துகளோ இல்லை என்பது கூடுதல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக சுகாதார நிறுவனம் (WHO இந்த நிலையை *சர்வதேச பொது சுகாதார அவசரநிலை" (Public Health Emergency of International Concern) என்று அறிவித்துள்ளது
லடாக்கின் லே பகுதி அருகே இந்திய ராணுவத்தின் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூன்று ராணுவ அதிகாரிகளும் காயமின்றி உயிர் தப்பிய அதிசயம் நிகழ்ந்துள்ளது. விபத்திற்குப் பிறகு, நொறுங்கிய ஹெலிகாப்டரின் சிதைவுகளுக்கு அருகில் புன்னகையுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட அவர்களது மன உறுதி ஒட்டுமொத்த நாட்டையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தொழில் நுட்பக் கோளாறு காரணமாக ஏற்பட்ட இந்த விபத்தில் இருந்து அவர்கள் மீண்டு வந்தது ஒரு மிகப்பெரிய அதிர்ஷ்டமாகக் கருதப்படுகிறது. துணிச்சலும், மன உறுதியும் கொண்ட நம் ராணுவ அதிகாரிகளின் இந்த செயல், பலரையும் ஊக்கப்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஒரு நாட்டின் உயரிய தலைமைக்கு வழங்கப்படும்,ஸ்வீடன் நாட்டின் மிக உயரிய 'ராயல் ஆர்டர் ஆஃப் தி போலார் ஸ்டார்' விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.
புற்றுநோய் சிகிச்சையில் ஒரு புதிய புரட்சிகரமான மாற்றத்தை ரோச் நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது.இந்நிறுவனம் தயாரித்துள்ள அடெசோலிசுமாப் (Atezolizumab) என்ற புதிய ஊசி வடிவிலான சிகிச்சையின் மூலம், நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை நேரம் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. இதுவரை பல மணி நேரம் மருத்துவமனையில் தங்கி, நரம்பு வழியாக (IV) செலுத்தப்பட்டு வந்த இந்த சிகிச்சை, இனி வெறும் 7 நிமிடங்களில் (7 நாட்களில் அல்ல) போட்டு முடிக்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் நோயாளிகளின் நேரமும், மருத்துவமனைகளின் நேரமும் பெருமளவு மிச்சமாகும்.இதனால் நோயாளிகள் மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த மருந்தின் ஒரு டோஸின் விலை சுமார் ரூ. 3.7 லட்சம் ஆகும்.
நம் நாட்டு குடிமக்களுக்கு, 'ஆதார்' என்ற அடையாள அட்டை வழங்குகிறது, மத்திய அரசு. இதைப்போல மாநிலங்களில் வாழ்பவர்களுக்கு, தனி அடையாள அட்டை வழங்க இருக்கிறது, அந்தந்த மாநில அரசு.நாட்டில் முதன்முதலாக இந்த அடையாள அட்டை வழங்கும் மாநிலம், கேரளம். விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வர இருக்கிற இந்த அட்டையில், ஒருவரை பற்றிய அனைத்து தகவல்களும் இருக்கும். அரசு சம்பந்தமான அனைத்துக்கும் சான்றாக பயன்படுத்தப்படும் இந்த அடையாள அட்டை, 'நேட்டிவிட்டி கார்ட்' என அழைக்கப்படுகிறது.,