ரேஷன் அட்டைதாரர்களுக்குTN அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. சொந்தமாக கார் வைத்திருப்பவர்கள், வருமான வரி செலுத்துபவர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்டோர் முன்னுரிமை ரேஷன் கார்டு பெற தகுதியற்றவர்கள். அவர்கள் உடனே தங்கள் கார்டை பொது ரேஷன் கார்டாக மாற்ற வேண்டும். இதை உறுதிப்படுத்த அரசு அதிகாரிகள் வீடு வீடாக சென்று கள ஆய்வு நடந்த உள்ளனர். விதிகளை மீறினால் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும்.
உணவு, இனப்பெருக்கம், காலநிலைக்காக பறவைகள் வலசை (இடம் பெயர்தல்) செல்கின்றன.இடைநில்லாமல் ஆயிரக்கணக்கான கி.மீ., துாரம், கண்டங்கள் தாண்டி இலக்கை அடைகின்றன. இதற்காக பறவைகள் ஒரு யுக்தியை கடைபிடிக்கிறது என விஞ்ஞானிகள் ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். இதன்படி சஹாரா போன்ற பாலைவன பகுதியில் இரவு நேரத்தில் பறக்கின்றன. இதுவே பகலில் எனில், வெப்பத்தில் இருந்து தப்பிக்க மேலும் உயரே பறக்கிறது. ஆனால் கடல் பகுதியில் மிக தாழ்வாக பறக்கிறது. அதிலும் சில பகுதியில், சில மீட்டர் உயரம் தான் வித்தியாசம் இருக்கும் என தெரிவித்துள்ளனர்.
ஒருவருடன் பேசும்போது அடிக்கடி அவர்களது பெயரைப் பயன்படுத்திப் பேசுங்கள். ஒரு மனிதருக்குப் பிரபஞ்சத்திலேயே மிகவும் பிடித்தமான சத்தம் அவர்களது பெயர்தான். இது உடனடியாக உங்கள் மீது ஒரு நன்மதிப்பை உருவாக்கும்.நீங்கள் ஒருவரைச் சந்திக்கும்போது மிகுந்த உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் அவர்களை வரவேற்றால், அடுத்த முறை அவர்கள் உங்களைப் பார்க்கும்போதும் அதே உற்சாகத்தை அவர்கள் வெளிப்படுத்துவார்கள்யாராவது உங்களிடம் ஒரு கேள்வி கேட்டு,அதற்கு அவர்கள் முழுமையாகப் பதில் சொல்லவில்லை என்று நீங்கள் கருதினால், பேசாமல் அவர்களது கண்களைப் பார்த்துக் கொண்டே இருங்கள். அந்த அமைதி அவர்களை சங்கடப்படுத்தும், இதனால் அவர்கள் மீதமுள்ள தகவலையும் தானாகவே சொல்லிவிடுவார்கள்.'உங்களுக்கு ஒரு பெரிய உதவி தேவைப்பட்டால், முதலில் ஒரு மிகச்சிறிய உதவியைக் கேளுங்கள் (உதாரணமாக: "ஒரு பேனா கிடைக்குமா?"). ஒருமுறை சிறிய உதவி செய்தவர், அடுத்த முறை நீங்கள் கேட்கும் பெரிய உதவியைச் செய்வதற்கான வாய்ப்பு 80% அதிகம்.
அமீரக அரசு விடுத்துள்ள அவசர 'சைபர்' எச்சரிக்கை!அமீரகத்தில் சைபர் தாக்குதல் அபாயம் அதிகரித்துள்ளதால், கணினியில் உள்ள தரவுகளை அழிக்கும் 'வைப்பர்' மால்வேர் குறித்து அரசு எச்சரித்துள்ளது. பொதுமக்கள் தங்களதுமுக்கியத்தகவல்களைப்பாதுகாப்பாகப்பேக்அப்எடுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், வெயிலின் தாக்கமும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெப்பநிலை 106 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரும் என்றும், வரும் மே மாதத்தில் கடுமையான வெப்ப அலை (Heatwave) வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் நண்பகல் நேரங்களில் வெளியே செல்வதைத் தவிர்க்கவும், போதுமான அளவு தண்ணீர் பருகவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
1. ரிட்டயர் ஆகுற வயசுக்குள்ள உன்னோட எல்லா கடன்களையும் (EMI) முழுசா அடைச்சிடுங்க. 2. எந்த நோய் வந்தாலும் உன் சேமிப்பு அழியாம இருக்க ஒரு தரமான ஹெல்த் இன்சூரன்ஸ் வெச்சுக்கோங்க. 3. பிள்ளைகளை நம்பி உன் பைனான்ஸை விட்டுக்கொடுக்காத, உனக்குனு தனியா பணம் இருக்கணும். 4. ரிஸ்க் அதிகமா இருக்குற ஷேர் மார்க்கெட்டை விட, நிலையான வருமானம் தர்ற இடத்துல முதலீடு பண்ணு. 5.உனக்கு சொந்தமா, வாடகை கட்ட தேவையில்லாத ஒரு வீடு கட்டாயமா இருக்கணும். 6. Passive Income மாசா மாசம் உங்க அக்கவுண்ட்டுக்கு வர்ற மாதிரி ஒரு செட்டப் பண்ணுங்க. 7.உனக்கு அப்புறம் உங்க சொத்து யாருக்குனு எந்த குழப்பமும் இல்லாம உயில் (Will) எழுதி வைங்க. 8. ஆடம்பரத்தை குறைச்சுக்கிட்டு, நிம்மதியான சிம்பிள் லைஃப்ஸ்டைலுக்கு உன்னை மாத்திக்கோங்க, உங்க ரிட்டயர்மென்ட்க்கு நீங்க பிளான் பண்ணிட்டீங்களா?
நாசாவின் ஆர்டெமிஸ் விண்வெளி வீரர்கள் நிலவைச் சுற்றி 7 மணி நேரப் பயணத்தைத்தொடங்கி, இதுவரை யாரும் காணாத நிலவின் மறுபக்கத்தை ஆய்வு செய்து வருகின்றனர்.பூமியிலிருந்து 2,52,752 மைல் தொலைவைக் கடந்து, அதிக தூரம் பயணம் செய்த மனிதர்கள்என்ற அப்பல்லோ 13-ன் சாதனையை முறியடித்தனர்.நிலவு பழுப்பு நிறமாகக் காட்சியளிப்பதாகவும், அங்குள்ள பள்ளங்கள் ஒளி ஊடுருவும்,துளைகளைப் போல இருப்பதாகவும் வீரர்கள் கூறுகின்றனர்.
"தமிழகத்தில் வெப்பநிலை நாளுக்கு நாள் அதிகரிப்பு. காலை 11 மாலை 3 மணி வரைகுழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். கட்டாயதேவைக்காக வெளியே சென்றால் குடை, உடல் முழுவதும் மறைக்கும் அளவிற்கு பருத்திஆடைகள் பயன்படுத்த வேண்டும்".
வவ்வால் வகைகளில் ஒன்று 'பம்பிள்பீ' எனும் 'பெரும் தேனீ வவ்வால்'. இவை மேற்கு தாய்லாந்து, தென்கிழக்கு மியான்மரில் ஆற்றங்கரை, குகைகளில் காணப்படுகின்றன. ஒரு குகையில் குறைந்தது 100 எண்ணிக்கையில் குழுவாக வாழ்கின்றன. மாலை, அதிகாலையில் குறைந்த துாரத்தில் இரை தேடி செல்லும். நீளம் (2.9-3.3 மி.மீ.) அடிப்படையில் இது உலகின் சிறிய பறக்கும் பாலுாட்டி உயிரினம். எடை 2 கிராம். இதன் மூக்கு, பன்றியின் மூக்கை போல இருக்கும். பழுப்பு, சாம்பல் நிறத்தில் இருக்கும். இவை அழிந்து வரும் உயிரினங்கள் பட்டியலில் உள்ளன.
நாம் தினமும் பயன் படுத்தும் தலையணையில் என்ன இருக்கிறது தெரியுமா?ஒரு ஆய்வில், ஒரு தலையணை உறையில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டது!தூசி,இறந்த தோல் செல்கள்,வியர்வை,தலைமுடி கழிவுகள்,ஏன் இவ்வளவு கிருமிகள்?'டஸ்ட் மைட்' என்ற நுண் பூச்சிகளுக்கு விருந்து ஆகிறது.தோல் பிரச்சினைகள்,அலர்ஜி, சுவாச சிக்கல்கள்இந்தக் கண்ணுக்கு தெரியாத பூச்சிகள்போன்றவை ஏற்படுத்தலாம்.தலையணை உறைகளை அடிக்கடி துவைக்கவும். வெயிலில் நன்றாக உலர்த்தவும். தலையணையையே நேரடி வெயிலில் வைக்கவும் ”வெயில் = இயற்கை கிருமிநாசினி!சூரிய ஒளி உங்கள் தலையணையை சுத்தமாகவும், பாதுகாப்பாகவும் மாற்றும் எளிய தீர்வு.