கற்பூரவள்ளி இலையை காலை வேளையில் எடுத்து வந்தால் ,சளி ,இருமல், தொண்டை வறட்சி, தொண்டை கம்மல், உடனே குணமடையும்.பத்து கற்பூரவள்ளி இலைகளை எடுத்து நன்றாக தண்ணீரில் அலசி அதை தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைக்கவும். அதாவது மூன்று டம்ளர் தண்ணி அளவு2 டம்ளராக குறைய வேண்டும். அதன் பிறகு அதை வடிகட்டி, ஆற வைத்து சிறிது தேன் சேர்த்து பருகினால், சளி சம்பந்தமான நோய்கள் அனைத்தும் குணமடையும்.
காற்று மூலம் பரவக்கூடிய வைரஸ் தொற்றுகளைத் தடுப்பதற்கும் உடலுக்கு எதிர்ப்பு சக்தியை வளர்க்கவும், கொடுக்காப்புளி கிடைக்கும் போதெல்லாம் அதை சாப்பிடுவது நல்லது. கொடுக்காப்புளியில் உள்ள பைட்டோ கெமிக்கல்கள்(Phytochemicals) இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ்(Glucose) அளவைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. இதனால், நீரிழிவு நோய் அபாயத்தைக் குறைக்க அல்லது அதைக் கட்டுக்குள் வைக்க இது நன்மை பயக்கும்.
ஜலதோஷம் வருவது போல் தொண்டை கரகரப்பாக இருந்தால் அல்லது ஜலதோஷம் இருமல் சளி வந்துவிட்டால் 1 வெற்றிலையில் 5 மிளகு,1 சிட்டிகை மஞ்சள்,1 சிறிய கல் உப்பு சேர்த்து நன்றாக மென்று உமிழ் நீரோடு சாப்பிட வேண்டும் அதன் பிறகு குறைந்த பட்சம் 30 நிமிடத்திற்கு தண்ணீர் உணவு எடுத்துக் கொள்ளக்கூடாது. இது மிகச்சிறந்த கிருமி நாசினி இரவு உணவிற்கு பின் இந்த மருந்தை எடுத்துக் கொள்வது கூடுதல் சிறப்பு.
பிளாக் காபி என்றால் பால் மற்றும் சர்க்கரை இல்லாத காபி ஆகும். இது காபியை தண்ணீரில் மட்டுமே கொதிக்க வைத்து தயாரிக்கப்படுகிறது. நீங்கள் ஒரு நாளைக்கு 4 கப் கருப்பு காபி குடிக்கலாம். உங்களது கொழுப்பை எரிக்க நீங்கள் விரும்பினால் கருப்பு காபி குடிப்பது மிகவும் நல்லது.ஒவ்வொரு 1 கப் ப்ளாக் காபிக்குப் பிறகும் 2 கப் தண்ணீர் குடிக்கவும், இதனால் நீரிழப்பு ஏற்படாது. 1கப் கருப்பு காபி தோராயமாக 17 கூடுதல் கலோரிகளை எரிக்கிறது. நீங்கள் ஒரு நாளைக்கு 2 கப் கருப்பு காபி குடித்தால் அது வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கிறது.உடற்பயிற்சி செய்வதற்கு முன் நீங்கள் சுமார் 300 மில்லிகிராம் காஃபின் உட்கொண்டால், அது உங்கள் வொர்க்அவுட்டின் தீவிரத்தை அதிகரிக்க உதவுகிறது.காஃபின் உள்ளடக்கம் காபியிலிருந்து காபி வரை மாறுபடும்.
கொய்யாப்பழத்தைமாலை அல்லது இரவில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. கொய்யாவை இரவில் சாப்பிடுவதால், அதன் செரிமானமும் சரியாக நடக்காது. கொய்யாவை பகல் மற்றும் மதியம் மட்டுமே சாப்பிட வேண்டும். மதிய உணவுக்கு ஒன்றரை மணி நேரம் கழித்து கொய்யாப்பழத்தை சாப்பிடுவதால் அனைத்து வயிற்றுப் பிரச்சனைகளிலிருந்தும் நிவாரணம் கிடைக்கும்.ஜலதோஷம், இருமல் மற்றும் தொண்டை எரிச்சல் உள்ளவர்களுக்கு, அந்த பாதிப்புகளை அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. செரிமான கோளாறு மற்றும் வயிற்று தொந்தரவுகளை இரவில் ஏற்படுத்தலாம். எனினும், பழுத்த கொய்யாப்பழம் செரிமானத்திற்கு நல்லது மற்றும் ஆரோக்கியமானது.
முருங்கைக் கீரையை நீர் சேர்த்து கொதிக்க வைத்து தினமும் சில நாட்களுக்கு சூப்பு போல குடிக்கலாம். ருசிக்கு மிளகு சீரக தூள் கொஞ்சம் போட்டுக்கலாம், கழுத்து வலி, மூட்டுவலி நிரந்தரமாக குணமாகும். சர்க்கரை வியாதி, சளி, ஆஸ்துமா, இரத்தசோகை(ஹீமோகுளோபின்). உடல்சூடு, மலச்சிக்கல், தலைமுடி வளர்ச்சியின்மை, நரைமுடி, அல்சர், வாய்ப்புண், பற்கள் உறுதியின்மை. தலைவலி, தாய்பால் சுரப்பின்மை இதெல்லாம் கூட குணமாகிவிடும்.
பல் வலி, பல் கூச்சம், ஈறுகளில் வலி, பல் ஆட்டம் போன்ற பாதிப்புகளுக்கு கொய்யா இலை, மாந்தளிர் இவ்விரண்டையும், தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைக்கவும். அந்நீரால் அடிக்கடி வாய்க்கொப்பளித்தால் நல்ல பலன் கிடைக்கும்.அசைவ உணவு சாப்பிடாதவர்கள், கொண்டைக் கடலையை நிறைய சாப்பிடலாம். இதில், துத்தநாகம், இரும்பு, வைட்டமின் பி, புரதச்சத்து அதிகம் உள்ளது. கொழுப்புச்சத்து மிகவும் குறைவு. இது, நோய்தொற்றை தடுக்கும். இதில், நார்ச்சத்து அதிகம் என்பதால், ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ளும்.
வைட்டமின் A ஆரஞ்சு, கேரட் ,சக்கரவள்ளி கிழங்கு ,பசலைக்கீரை ,மஞ்சள் பூசணி ,பால் ,தக்காளி, குடை மிளகாய்.வைட்டமின்E: எண்ணெய்கள் ,எண்ணெய் விதைகள் ,நட்ஸ்.வைட்டமின் K. கீரைகள் ,பீன்ஸ் ,சோயா பீன்ஸ் ,முட்டை, ஸ்ட்ராபெரி.வைட்டமின்B: பால் மற்றும் மாமிச பொருட்கள்.வைட்டமின்C; நெல்லிக்காய், கொய்யா, சிவப்பு குடைமிளகாய், கிவி ,ஸ்ட்ராபெரி, பப்பாளி.வைட்டமின் D: முட்டை, மட்டன், டுணா, சால்மன் நிறைந்த மீன் ,சீஸ் மற்றும் சூரிய ஒளி.
ஜவ்வரிசி உடலில் உள்ள சிவப்பு ரத்த அணுக்களை அதிகரிக்க உதவுகிறது. நமது உணவுக்குழாய், வயிறு குடல் ஆகியவற்றில் ஏற்படும் புண்களை குணப்படுத்துகிறது. எலும்புகளை ஆரோக்கியம், மூட்டுவலி, தசைகளை வலுவூட்டல், உடல் குளிர்ச்சி செல்களை புதுப்பிக்கவும் பயன்படுகிறது.
வாழைத்தண்டு, வாழைப்பிஞ்சு, வாழைப்பூ, வெண்டைக்காய், முட்டைக்கோஸ், புடலங்காய், பாகற்காய், அவரைப்பஞ்சு, சாம்பல் பூசணி, சுண்டைக்காய் ஆகிய காய்கறிகளை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.ஆரைக்கீரை, கறிவேப்பிலை, புதினா கீரை, முசுமுசுக்கை கீரை, வல்லாரை கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, முருங்கை கீரை, சிறுகீரை, மணத்தக்காளி கீரை, துத்தி கீரை ஆகிய கீரைகளில் ஏதேனும் ஒன்றை பொறியலாக தினம் உட்கொள்வது சக்கரை நோயாளிகளுக்கு நல்லது.நாவல்பழம், நெல்லிக்காய் ஆகியவற்றை வேண்டிய அளவு சாப்பிடலாம். மலைவாழை வாரத்திற்கு இரண்டு சாப்பிடலாம்.பேரீச்சம்பழம், கொய்யாக் காய் ,பப்பாளி, ஆப்பிள், விளாம்பழம் போன்றவற்றை ஒரு நாளைக்கு50 கிராம் அளவு சாப்பிடலாம். மேலே உள்ள பழ வகைகளில் ஏதேனும் ஒன்றைச் சாப்பிடலாம். ஒரே நாளில் அனைத்து பழ வகைகளையும் சாப்பிடக் கூடாது.