சீக்கிரமாக குறைந்து வரும் கண் பார்வை .இரவு நேரத்தில் குடிக்க இந்த Eye Booster பானம்தேவையான பொருட்கள்:1.பாதாம்-102. சோம்பு-2 ஸ்பூன்3. கற்கண்டு-1 ஸ்பூன்4.பால் மற்றும் நெய்மிக்ஸியில் பாதாம், சோம்பு, கற்கண்டு சேர்த்து அரைத்த அந்த கலவையை பசு நெய்யுடன் பால் சேர்த்து நன்கு கொதி வரும் வரை காய்ச்சி வடி கட்டிக்கொள்ளுங்கள். அதை அப்படியையே குடிக்க வேண்டியது தான். இந்த பாலை தொடரச்சியாக குடிப்பதன் மூலம் கண் பார்வை பிரச்சனை குறைகின்றது. இது எப்போதும் நம் கண்களை குளிர்ச்சியாக வைத்து கொள்ளும். கண்களுக்கு குளிர்ச்சி மிகவும் நல்லது ஏனென்றால் அப்போதுதான் கண்ணில் உள்ள நரம்புகள் மற்றும் செல்கள் வலுப்பெறும்.
நூக்கல் காயில் வைட்டமின்கள் A, E, C, போன்றவைகளும் மற்றும், மாங்கனீசு,பீட்டா,கரோட்டீன்மாவுச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின் பி மற்றும் சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற ஊட்டச்சத்துக்களும். நிறைந்துள்ளன. குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்ட காய்கறியான இது உடலின் ஒட்டுமொத்த வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதுடன் அதிக எடையைக் குறைக்கவும் உதவுகிறதுநூல்கோலில் இருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கலைப் போக்க உதவும். ரத்தச் சிவப்பு அணுக்களைப் பெருக்கும். ரத்தச்சோகையை நீக்கும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக உள்ளவர்களுக்கும் சர்க்கரை நோயாளிகளுக்கும் நூல்கோல் நல்லது.ரத்தத்தில் உப்புச்சத்து அதிகம் உள்ளவர்களுக்கு மட்டும் நூல்கோல் வேண்டாம். தவிர்த்து விடுங்கள்.இதிலுள்ள பொட்டாசியம் ஒரு வாசோடைலேட்டராக செயல்பட்டு திடீரென இரத்த அழுத்த உயர்வதைக் குறைக்கிறது. தமனிகள் மற்றும் இரத்த நாளங்களில் உள்ள பதற்றத்தை குறைத்து போதுமான இரத்த ஓட்டத்தை ஊக்குவிப்பதன் மூலம் உடலின் முக்கிய உறுப்புகளைப் பாதுகாக்க உதவுகிறது.பொட்டாசியத்துடன் நூக்கலில் இரும்புச் சத்தும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளதால் இது இரும்புச்சத்து குறைபாட்டினால் ஏற்படும் இரத்த சோகையை தடுக்க அவசியமான இரத்த சிவப்பணுக்களை (RBC) அதிகரிக்க உதவுகிறது. இதனால் உண்டாகும் பலவீனம், சோர்வு, தலைவலி, வயிற்று கோளாறுகள் போன்றவற்றைத் தடுக்கிறது.
கேக் நிறைய சாப்பிட்டால், ஒரு டம்ளர் வெந்நீர்.மாங்காய், மாம்பழம் அதிகம் சாப்பிட்டால், பால் ஒரு டம்ளர் .பலாப்பழம் அதிகம் சாப்பிட்டால், ஒரு வாழைப்பழம்.நெய் உணவுகனை அதிகம் சாப்பிட்டால், ஒரு கப் எலுமிச்சை ஜூஸ்.அசைவ உணவுகளை அதிகம் சாப்பிட்டால், சிறிதளவு சோம்பு.தேங்காய் பதார்த்தங்களை அதிகம் சாப்பிட்டால், கொஞ்சம் அரிசி.
வில்வ பூ- சுவாசத்தை சீராக்கும். காச நோயை குணப்படுத்தும்.சித்தகத்தி பூ - தலைவலியை குறைக்கும். மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவும்.தாழம்பூ- நறுமணம் விசுவதோடு சீரான தூக்கத்துக்கு உதவும் உடல் சோர்வை நீக்கும். தாமரைப்பூ - தலை எரிச்சல், தலைச்சுற்றல் போன்றவற்றை சரி செய்யும், மன உளைச்சலை நீக்கும் .மன அமைதிக்கு வழிவகுக்கும். சீரான தூக்கத்தை ஊக்குவிக்கும்.கனகாம்பரம் பூ - தலை வலி மற்றும் தலை பாரத்தை சரி செய்யும்.தாழம்பூ, மகிழம்பூ, ரோஜா பூ, செண்பகப்பூ, போன்றவை வாதம், கபத்தை குறைக்கக் கூடியது.
வாழைத்தண்டில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இதன் சாறு சிறுநீரக கற்களை கரைத்து வெளியேற்ற உதவுகிறது.இரும்புச்சத்து அதிகம் உள்ளதால் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும். வயிற்று புண்கள் ஏற்படுவதை தடுக்கிறது.வாழைத்தண்டை இடித்து, சாறு பிழிந்து அத்துடன் முள்ளங்கி சாறு அரைபாகம் சேர்த்து காலை, மாலை இரு வேளையும் 100 மி.லி. குடித்துவர கல்லடைப்பு நீங்கும்வயிற்றில் நீர்க்கட்டி இருந்தால் ,வெறும் வயிற்றில் வாழைத்தண்டு சாறு குடித்து வந்தால் நாளடைவில் குணமாகும்.வாழைத்தண்டு சாறு ஒரு நாள் மற்றும் பார்லி கஞ்சி ஒரு நாள் என்று சாப்பிட்டு வர சிறுநீர்க்கற்கள் பொடிப்பொடியாகி சிறுநீருடன் வெளியேறும்.
சுடு நீரில் ஆவாரம் பூக்களை போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பருகலாம்.ஆவாரம் பூ பொடியை வெந்நீரில் போட்டு பருகலாம் சர்க்கரை சேர்க்க கூடாது.செரிமான பிரச்னையை நீக்கும்.தலைமுடி வளர்ச்சி அதிகரிக்கும்.இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும்.உடலில் உள்ள நச்சுத் தன்மையை நீக்கும்.சரும சுருக்கங்களை குறைத்து நிறத்தை அதிகரிக்கும்.உடல் சூடு, பித்தம், மாதவிடாயின் போது அதிக இரத்தப்போக்கு , ஒழுங்கற்ற மாதவிடா, குடல் புண் இப்படி பல்வேறு வகையான பிரச்னைகளுக்கும் ஆவாரம் பூ மருந்தாக இருக்கிறது.சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் அளவு சீராக இருக்க ஆவாரம் பூ பயன்படுத்துவார்கள். கருப்பை ஆரோக்கியம் கிடைக்கும். நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாக இருக்கும்.
கம்மங்கஞ்சி காலை மதிய உணவுக்கு ஏற்றதாகும்.இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும். உடலை நோய் தாக்காமல் பாதுகாத்துகொள்ளும். கம்பு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை.கம்பு நார்ச்சத்து மிகுந்த உணவு.இதில் கொழுப்பும் குறைவாக உள்ளது. இந்த கம்பங்கூழை குடித்து வந்தால் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகள் கரைந்து உடல் எடை குறைய கூடும். உடல் எடையை குறைக்க விரும்பினால் தினசரி ஒரு வேளை கம்பு உள்ள உணவை எடுத்துகொள்வதன் மூலம் பலன் கிடைக்கும்.கம்புடன் அரிசி சேர்த்து நன்கு குழையும் படி சோறாக்கி மதிய உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் புண் வயிற்றுப்புண் சரியாகும்.காலை உணவிலும் இதனை சேர்த்துக் கொண்டால் நீண்ட நேரத்துக்கு பசி இருக்காது.கஞ்சியுடன் தொட்டுக்கொள்ள மாங்காய் பச்சை மிளகாய் வெங்காயம் வத்தல் போன்றவற்றை செய்து கொண்டால் ருசி அள்ளும்.கம்பு. மிக முக்கியமான உணவாக உள்ள இது கோடைமாதங்களில் கம்மங்கூழ் செய்வதற்கு மட்டுமே என்று இன்றைய தலைமுறையினர் நினைக்கிறார்கள். ஆனால் கம்பு எல்லா காலங்களிலும் சாப்பிட ஏற்றதே. கம்மஞ்சோறு, கம்மங்கூழ், கம்பு ரொட்டி, கம்பு தோசை, கம்பு இட்லி, கம்பு புட்டு, கம்பு கொழுகட்டை, கம்மங்களி, கம்பு பணியாரம் என்று எல்லா உணவுகளையும் ருசிபட தயாரிக்கலாம்.
அல்சர் பிரச்சனைக்கு பழங்களை எடுத்து கொள்வதன் மூலம் மிக எளிதாக இந்த பிரச்சனையை சரிசெய்துவிட முடியும்.அஜீரணத்தை அலட்சியப்படுத்தும் போது அது வயிற்று புண்ணாக மாறி விடுகிறது. அதிக அளவில் காரம், மிளகாய் வத்தல் போன்றவற்றை எடுக்கும்போது குடலின் உட்பகுதிகளிலும் , வயிற்றின் உட்பகுதிகளில் உள்ள சளி படலத்தில் சில புண்கள் உருவாகும். அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் ஆப்பிள் சாப்பிடலாம். இந்த ஆப்பிளில் உள்ள ப்ளேவோனாய்டுகுள், பைலோரி பாக்டீரியாவில் வளர்ச்சியைத் தடுக்கும்.பொதுவாக நாம் தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதினால் வயிற்று அல்சர் இருந்தாலும், அதை குணப்படுத்துவதோடு, அல்சர் வராமலும் தடுக்கும்.மணத்தக்காளி கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் வயிற்றுப் புண் மற்றும் அல்சர் விரைவில் சரியாகும்.அகத்திக்கீரை சூப் செய்தும் குடிக்கலாம்.துளசி இலை சாற்றில் மாசிக்காயை, வயிற்றுப் புண் உள்ளவர்கள் குடித்தால் நல்ல குணம் பெறலாம்.வயிற்று அல்சருக்கு மற்றொரு சிறப்பான தீர்வு நெல்லிக்காய். அதிலும் நெல்லிக்காய் ஜூஸில் தயிர் சேர்த்துகலந்து குடித்து வர நல்ல நிவாரணம் கிடைக்கும்.அதிக ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிரந்த பழங்களில் ஒன்று தான் மாதுளை. பொதுவாக செரிமான பிரச்சனைக்கு இந்த மாதுளை பழம் மிகவும் சிறந்தது.நாட்டு மருந்துக்கடைகளில் நன்னாரி வேர்(coleusroots) என்று கேட்டுவாங்குங்கள் பச்சைவேர்கிடைப்பது கஷ்டம் கிடைத்தால் வாங்கி கைப்பிடி அளவு எடுத்து சிறிது பசும்பால் விட்டு அரைத்து வெறும் வயிற்றில் ஒரு வாரம் சாப்பிட ஜெலுசிலுக்கு விடுதலை அல்சர் குணமாகும்.நன்னாரி வேர் காய்ந்திருந்தால் முன் இரவு தண்னீரில் ஊற வைத்து காலையில் பால் விட்டு அரைக்கவும்.
வயிறு முட்ட சாப்பிட்ட உடனே படுப்பதை தவிருங்கள். 2 மணிநேரம் கழித்து படுங்கள்.அதிகமாக சாப்பிடாதீர்கள். வயிறு நிறைந்த பிறகு சாப்பிடுவது உங்களுக்கு எதுக்களித்தல் பிரச்சனையை ஏற்படுத்தும்.சாப்பிடும் போது உணவை முழுசு முழுசாக விழுங்காதீர்கள். கொஞ்சம் கொஞ்சமாக மென்று சாப்பிடுங்கள்.காரசாரமான உணவுகள், அமில உணவுகள் சிட்ரஸ் உணவுகளை தவிருங்கள். இவை எதுக்களித்தல் பிரச்சனையை ஏற்படுத்தும்.உடல் பருமனாக இருப்பவர்களுக்கு இந்த பிரச்சினை அதிகமாக இருக்கும். எனவே உடல் எடையை குறைக்க முற்படுங்கள். தக்காளி மற்றும் வெங்காய ஜூஸ் குடிக்காதீர்கள். பலருக்கு இரவில் எதுக்களித்தல் பிரச்சினை அதிகமாக இருக்கும். இதனால் நிம்மதியாக தூங்க முடியாமல் அவதிப்படுபவர்கள். படுக்கும் போது உயரமான தலையணையில் தலையை வைத்து படுங்கள்.அசிடிட்டி மற்றும் எதுக்களித்தல் பிரச்சனை அதிகமாக இருந்தால் மருத்துவரை அணுகி விடுவது நல்லது.காபி சாக்லேட் எலுமிச்சை , ஆரஞ்சு இதெல்லாம் கொஞ்சம் தள்ளி வைங்க. வயிறு கொஞ்சம் அமைதியா இருக்கும். PCOS இருக்கறவங்க கவனத்துக்கு. நீங்க பால் பொருட்கள் ,வெள்ளை அரிசி, மைதான்னு சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள். அப்புறம் ஸ்வீட் ஐட்டம்ஸ், சர்க்கரை , இதெல்லாம் அவாய்ட் பண்ணுங்க. உங்க உடல்நலத்துக்கு நல்லது.
கீழாநெல்லி - மஞ்சள் காமாலை அல்சர் வயிற்றுக் கோளாறுகள் தீரும்.காசினி கீரை - ஈரல்களில் சகல தோஷங்கள் உடல் வீக்கம் தீரும்.கருவேப்பிலை -பித்தம் ,பசி மந்தம், தலைமுடி நிறம் கருமையாகும்.கருந்துளசி - இரைப்பு ,இருமல், நீர்க்கோவை, தாது பலவீனம் தீரும்.கண்டங்கத்திரி - சளி இருமல் ஆஸ்துமா ஈசிலோபீலியா பீனிசம் ஆகிய நோய்தீரும்.