சீத்தாப்பழம் கண் பார்வையின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும். ஏனெனில் இதில் ரிபோஃப்ளேவின் மற்றும் வைட்டமின் சி அதிகம் உள்ளது.சீதாப்பழத்தில் வைட்டமின் பி வளமாக உள்ளது.இச்சத்து மூச்சுக்குழாய் அழற்சியை குறைக்கும் மற்றும் ஆஸ்துமா பிரச்சனை அண்டாமல் பாதுகாக்கும்.சீதா பழத்தில் உள்ள பல்வேறு ஊட்டச்சத்துக்களும், கனிமச்சத்துக்களும் நம் உடலுக்கு பல நன்மைகளை அள்ளித்தருகிறது. சீதாப் பழத்தில் உள்ள மெக்னீசியம் இதய நோய், மாரடைப்பு ஏற்படாமல் நம்மை பாதுகாக்கிறது.சீதாப் பழத்திலுள்ள பல சத்துக்கள் இதயத்தைப் பலப்படுத்தி, சீராக இயங்கச் செய்யும். இதயம் சம்பந்தமான நோய்கள் வராமல் இதயத்தை பாதுகாக்கும்.சிறுநீர் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள், சீதாப்பழச் சாறுடன், சிறிது எலுமிச்சம் பழச்சாறு கலந்து பருகினால், சிறுநீர் தாராளமாகப் பிரியும். நீர்க்கடுப்பும் நீங்கும்.
வாயுத்தொல்லை, அஜீரணக்கோளாறு வந்தா வயிறு புடைச்சிக்கிட்டு மூச்சுவிட முடியாம தவிக்கிற நேரத்துல கால் ஸ்பூன் பெருங்காயப் பொடியை மோர்ல கலந்து குடிச்சா ஏப்பம் வெளியேறும். அதோட வாயு வெளியேறி வயிறும் குறையும்.பெருங்காயத்தில் புரதச்சத்து அதிகம் உள்ளது. சைவ உணவுப் பழக்கம் உள்ளவர்கள், தினசரி சமையலில் பெருங்காயத்தைச் சேர்த்துக் கொள்வதன் மூலம் புரதச்சத்தை பெறலாம்.ஆஸ்துமா தொந்தரவால் மூச்சுவிட முடியாமல் அவதிப்படுபவர்கள், பெருங்காயப் பொடியை நெருப்பில் போட்டு, அந்தப் புகையை சுவாசித்தால் மூச்சுத் திணறல் பிரச்சனை தீரும். தினமும் பெருங்காயத்தை உணவோடு சேர்த்து வந்தால் வயிற்று வலி, வயிறு உப்புசம் போன்ற தொல்லைகள் தீரும். மலச்சிக்கலை நீக்கி, குடல்புழுக்களை அழிக்கும் அற்புத சக்தி வாய்ந்தது.
1. மன அழுத்தம்?- கிரீன் டீ - போதை பழக்கம் இல்லா உங்களை அமைதிப்படுத்துகிறது.2.தலைவலி? - வாழைப்பழங்கள் - வலி நிவாரணிக அதை அடக்குகின்றன.3. மலச்சிக்கல்? - ஆப்பிள்கள் - குடலை அழிக்கும் மருந்துகளைத் தவிர்க்கவும்.4. தொண்டை வலி? - தேன் - உண்மையான சிகிச்சைமுறை ஒரு பாட்டிலில் இல்லை.5. வறண்ட முடி? - சால்மன் - உங்கள் தலைமுடிக்கு உள்ளே இருந்து உணவளிக்கவும்.6. பல்வலி? - கிராம்பு - அதிக விலை கொண்ட மாக்கிரைகளை விட வலுவான நிவாரணம்.7. குறைந்த ஆற்றல்? - ஆரஞ்சு - இயற்கையின் சுத்தமான ஊக்கம்.8.தூக்கமின்மை? - கிவி - மெலடோனின் மாத்திரைகள் தேவையில்லை.
இதயத்திற்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.மன அழுத்தத்தை குறைக்கும்.நரம்பு மண்டலத்தை சீராக்கும் .குதிகால் ,கால்வலி வீக்கத்தை குறைக்கும்.வெரிகோஸ் வெயின்ஸ் குறைய உதவும்.தலைவலி குறைக்கும்.செரிமானத்தை மேம்படுத்தும்.தினமும் 5-10 நிமிடம் செய்தால் போதும்.குறிப்பு: அதிக BP , உடல் பிரச்சனை இருந்தால் மருத்துவரை கேட்டுக்கொள்ளுங்கள்.
உடல் குளிர்ச்சி தரும் அதிக நீர்ச்சத்து (water content) இருப்பதால் வெயில் காலத்துக்கு ரொம்ப நல்லது.சுகர் patient க்கு BEST கம்மி கலோரி, கம்மி சர்க்கரை,ஜீரணத்திற்கு உதவும் - நார்ச்சத்து (fiber) இருக்கு.ஹார்ட் health க்கு நல்லது-ஆன்டி ஆக்ஸிடென்ட் இருக்கு,Dehydration ஆகாமல் காக்கும்-உடம்பு தண்ணீர் குறையாமல் help பண்ணும். நல்லா கழுவி நேரடியாக கடிச்சு சாப்பிடலாம்.நடுவுல இருக்கிற விதை (seed) இருந்தா எடுத்துட்டு சாப்பிடலாம்.சின்ன சின்ன துண்டா நறுக்கி கொஞ்சம் மிளகுத்தூள் உப்பு தூவி சாப்பிடலாம்.ஜூஸ் மாதிரி அடிச்சு குடிக்கலாம். (சர்க்கரை சேர்க்காமல்)வயிற்று சளி,குளிர் அதிகமாக இருந்தால் , ரொம்ப அதிகமாக சாப்பிடாதீங்க.
அதிமதுரம் நுரையீரலை சுத்தம் செய்து, உடலின் ஆற்றலை அதிகரிக்கும்.சாதாரணமாகவே அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் கடித்து, அதன் சாற்றை சுவைத்து விழுங்கினாலே இருமல் குறையும். அதிமதுர பொடியை 2 கிராம் அளவு தேனில் குழைத்து தினமும் இரண்டு வேளை சாப்பிட்டால், தொண்டைக் கட்டு, இருமல், சளி குணமாகும்.இது மூச்சுக் குழாய் அழற்சி தொண்டைப்புண், போன்றவற்றை சரி செய்யும். அதிமதுரம் தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால் நுரையீரலை சுத்தப்படுத்தவும், சுவாசக் கோளாறுகளை தடுக்கவும் பயன்படுகிறது.
முருங்கைக்கீரை (Drumstick Leaves) - வாரம் 2 நாள் சூப் குடிச்சா ரத்தம் ஜூவ்வுனு ஊறும்.கருப்பட்டி & பேரிச்சம்பழம் -தினமும் ரெண்டு சாப்பிட்டா இரும்புச்சத்து தானா ஏறும்.சுண்டைக்காய் (Turkey Berry) - கசக்கும்னு ஒதுக்காதீங்க, ரத்தத்தை சுத்திகரிச்சு சிவப்பணுக்களை அதிகமாக்கும்.மாதுளம் பழம் & பீட்ரூட் ஜூஸ் (Pomegranate & Beetroot Juice) - முகமே சிவப்பாயிடும்.கருப்பு உலர் திராட்சை - நைட்டு தண்ணியில் ஊற வச்சு, காலையில் குடிச்சா அயர்ன் சத்து அதிகமாகும்.சுவரொட்டி கிடைச்சா சாப்பிடுங்க.மலிவா கிடைக்கிற இந்த ஆரோக்கியமான உணவுகளையும் சாப்பிடுங்க.
சீரகம், கொத்தமல்லி விதை, சோம்பு, மிளகு, பட்டை, கிராம்பு ,தலா1 ஸ்பூன் எடுத்து,2 டம்ளர் தண்ணீரில் இரவே கொதிக்க வைத்து ,மூடி வைக்கவும். காலை வெறும் வயிற்றில் 5 நாட்கள் தொடர்ந்து குடித்தால், உடல் வலி அனைத்தும் ஆயுளுக்கும் வரவே வராது.
ஜாதிக்காய் மன அழுத்தத்தை குறைத்து மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது.பதற்றம் மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கும்.மூளையை அமைதிப்படுத்தி ஆழ்ந்த உறக்கத்தைத் தரும்.ஆழ்ந்த தூக்கத்தை தூண்ட ஜாதிக்காய் பயன்படுகிறது.ஜாதிக்காயில் உள்ள கூட்டு பொருள் நரம்பு மண்டலத்தை அமைதி படுத்துகிறது.நரம்புத் தளர்ச்சி மற்றும் உடல் சோர்வை நீக்கும்.நினைவாற்றல் அதிகரித்து மூளை டானிக்காக பயன்படுகிறது.ஜாதிக்காய் செரிமான நொதிகளை தூண்டி அஜீரணம் வயிற்று பொருமல் மற்றும் வயிறு சம்பந்தமான' கோளாறுகளை சரி செய்கிறது.வாயுத் தொல்லை மற்றும் வயிற்று வலியைச் சரிசெய்யும். சருமத்தில் உள்ள சுருக்கங்களைப் போக்கி பொலிவைத் தரும்.
தினமும் 21 முறையாவது குனிந்து காலை தொட்டு நிமிருங்கள்.அமரும் போது வலையாதீர்கள்.நிற்கும் போது நிமிர்ந்து நில்லுங்கள்.சுருண்டு படுக்காதீர்கள்.கனமான தலையணைகளை தூக்கி எறியுங்கள். தினம் 23 நிமிடங்கள் வேகமாக நடங்கள்.70 நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து உட்காராதீர்கள்.டூ-வீலர் ஒட்டும் போது குனிந்து ஓட்டாதீர்கள். பலுவான பொருட்களை தூக்கும் போது குனிந்து தூக்காதீர்கள்.காலை 20 முறை மாலை 20 முறை ,கைகளை வான் நோக்கி நீட்டுங்கள்.