ஜவ்வரிசி உடலில் உள்ள சிவப்பு ரத்த அணுக்களை அதிகரிக்க உதவுகிறது. நமது உணவுக்குழாய், வயிறு குடல் ஆகியவற்றில் ஏற்படும் புண்களை குணப்படுத்துகிறது. எலும்புகளை ஆரோக்கியம், மூட்டுவலி, தசைகளை வலுவூட்டல், உடல் குளிர்ச்சி செல்களை புதுப்பிக்கவும் பயன்படுகிறது.
வாழைத்தண்டு, வாழைப்பிஞ்சு, வாழைப்பூ, வெண்டைக்காய், முட்டைக்கோஸ், புடலங்காய், பாகற்காய், அவரைப்பஞ்சு, சாம்பல் பூசணி, சுண்டைக்காய் ஆகிய காய்கறிகளை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.ஆரைக்கீரை, கறிவேப்பிலை, புதினா கீரை, முசுமுசுக்கை கீரை, வல்லாரை கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, முருங்கை கீரை, சிறுகீரை, மணத்தக்காளி கீரை, துத்தி கீரை ஆகிய கீரைகளில் ஏதேனும் ஒன்றை பொறியலாக தினம் உட்கொள்வது சக்கரை நோயாளிகளுக்கு நல்லது.நாவல்பழம், நெல்லிக்காய் ஆகியவற்றை வேண்டிய அளவு சாப்பிடலாம். மலைவாழை வாரத்திற்கு இரண்டு சாப்பிடலாம்.பேரீச்சம்பழம், கொய்யாக் காய் ,பப்பாளி, ஆப்பிள், விளாம்பழம் போன்றவற்றை ஒரு நாளைக்கு50 கிராம் அளவு சாப்பிடலாம். மேலே உள்ள பழ வகைகளில் ஏதேனும் ஒன்றைச் சாப்பிடலாம். ஒரே நாளில் அனைத்து பழ வகைகளையும் சாப்பிடக் கூடாது.
சுக்கு, மிளகு, கொத்தமல்லி விதை, திப்பிலி, சித்தரத்தை ஆகிய அனைத்தையும் சம அளவு எடுத்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, நன்றாக கொதித்தபின் இறக்கி வடிகட்டி லேசான சூட்டில் பருகி வர நீண்ட நாள் சளி தொல்லை நீங்கும் (3 வயதுக்கு மேல் உள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குடிக்கலாம்) .ஒரு நாளைக்கு ஒரு முறை என 2 நாட்கள் அல்லது 3 நாட்கள் குடித்துவர வேண்டும்.வைரஸ்களினால் ஏற்படும் சளித் தொல்லையை சரி செய்ய நீங்கள் பழச்சாறை தேர்வு செய்யலாம். வைட்டமின் சி நிறைந்த பழங்கள் உங்கள் உடலுக்கு சிறந்தவை. ஆரஞ்சு, அன்னாசி, தர்ப்பூசணி போன்ற பழங்களை சேர்த்துக் கொள்ளலாம். இந்த பழங்களில் உள்ள வைட்டமின் சி நோய் தொற்றுக்கு எதிராக போராடி நம்மைக் காக்கிறது.
அப்பளம் கார்போஹைட்ரேட் நிறைந்த உடல்நலத்திற்கு தீங்கு என மருத்துவர்கள் கூறுகின்றனர். உணவு. அதிகமாக சாப்பிட்டால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து நீண்ட காலத்தில் நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. எண்ணெயில் அப்பளங்கள் பொறித்து எடுக்கப்படுவதால் கொழுப்புச்சத்து அதிகமாக இருக்கும். மேலும், அப்பளத்தில் சோடியம் அதிகமாக இருப்பதால் உடல் எடையை அதிகரித்து, இதயநோய்கள், உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். எனவே அப்பளத்தை அதிகமாக சாப்பிடாமல் இருப்பது நல்லது.
காலை வெறும் வயிற்றில் 5 ஊறவைத்த பாதாம் + அத்தி (அஞ்சீர்) சாப்பிடுங்கள் -உடலுக்கு சக்தி நிரம்பும்.ஒவ்வொரு உணவிலும் புரதம் (Protein) கட்டாயம் இருக்க வேண்டும்-பருப்பு, பனீர்,தினமும் 20 புஷ்அப்ஸ் + 30 ஸ்க்வாட்ஸ் செய்யுங்கள் - ஜிம் செல்லாமலேயே உடல் கட்டு உருவாகும் பாலில் தேன் கலந்து குடித்தால்-நேராக எனர்ஜி & மாஸ் அதிகரிக்கும்.அல்லது முட்டை இதில் ஒன்றை நிரந்தரமாக சேர்க்கவும்.தினமும் 8 மணி நேரம் நன்றாக உறங்க வேண்டும்.மசில் (Muscle) உடற்பயிற்சியில் அல்ல. உறக்கத்தில்தான் உருவாகுகிறது.தினமும் 1 வாழைப்பழம் + நிலக்கடலை சாப்பிடுங்கள் பலவீனமாக இல்லாமல் உறுதியான தோற்றம் கிடைக்கும்.
எலும்புகள் பலவீனமாகும்.பல் வலி, பற்கள் விழுதல் ஏற்படலாம்.கை, கால் வலிகள் அதிகரிக்கும்.கால்களில் திடீர் பிடிப்பு (கிராம்ப்ஸ்) வரும்.நகங்கள் எளிதில் உடையும்.முடி உதிர்வு அல்லது நரம்புகள் பலவீனமாகும்.இதயத் துடிப்பு ஒழுங்கற்றதாக மாறலாம்.அதிக சோர்வு மற்றும் பலவீனம் ஏற்படும்.தூக்கப் பிரச்சனைகள் ஏற்படலாம்.கால்சியம் குறைபாடு ஏற்பட்டால் ஆஸ்டியோபோரோசிஸுக்கு வழிவகுக்கும், எலும்பு முறிவுகள் மற்றும் ஆஸ்டியோபீனியா போன்ற அபாயத்தை அதிகரிக்கும். மேலும், தசைப்பிடிப்பு, சோர்வு மற்றும் மனநிலை மாற்றங்கள் ஆகியவற்றையும் ஏற்படுத்தும்.
இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க, நார்ச்சத்து நிறைந்த (கீரை, சுவிஸ் சார்ட்), பெர்ரிகள், முழு தானியங்கள் (ஓட்ஸ்), பாகற்காய், கொட்டைகள் மற்றும் விதைகள், மெலிந்த புரதங்கள் (முட்டை, மீன்) மற்றும் யோகர்ட்** போன்ற உணவுகளை உண்ணலாம், இவை இரத்தத்தில் சர்க்கரை உறிஞ்சப்படுவதை மெதுவாக்கி, அளவைக் கட்டுக்குள் வைக்க உதவும். கீரை, கேல், ப்ரோக்கோலி போன்ற இலைக்கறிகள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும். பாகற்காய் சாறு வெறும் வயிற்றில் குடிப்பது நல்லது.வாழைக்காயை வாரம் மூன்று முறை சாப்பிட்டு வருவதால் உடலில் இன்சுலின் சுரப்பை அதிகரித்து, ரத்தத்தில் குளுக்கோஸின் அளவைக் கட்டுப்படுத்தும். மேலும் பெருங்குடல் மற்றும் ஜீரண உறுப்புகளில் தேங்கும் கழிவுகளையும், நச்சுக்களையும் வெளியேற்றும். இதில் அதிகமுள்ள வைட்டமின் ஏ கண்புரை ஏற்படுவதை தடுக்கிறது.இந்த உணவுகள் அனைத்தும் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் (Low Glycemic Index) கொண்டவை, அதாவது அவை இரத்தத்தில் சர்க்கரையின் அளவை மெதுவாக உயர்த்துவதோடு, நீரிழிவு நோயாளிகளுக்கு ஆரோக்கியமான தேர்வுகளாகும்.
கல்லீரல் கொழுப்பு பிரச்சனை இருப்பதற்கான முக்கிய அறிகுறிகள் எளிதில் உடல் சோர்வு அடையும், வயிற்றின் வலது பக்கத்தில் வலி அல்லது அதிக பாரம் இருப்பது போன்ற உணர்வு, அடிக்கடி செரிமான கோளாறு ஏற்படும். வாயில் அடிக்கடி கசப்பு போன்ற உணர்வு ஏற்படுதல், திடீர் உடல் எடை அதிகரித்தல் அல்லது குறைதல், ரத்தத்தில் கொழுப்பின் அளவு கூடும்.கண்களுக்கு கீழ் கருவளையம் இருந்தால் அது கல்லீரல் திரிபு அல்லது மோசமான நச்சுத்தன்மையை குறிக்கலாம்.கல்லீரல் நோய் புரதங்களை உருவாக்கும் கல்லீரல் திறனை பாதிக்கலாம். இது இரத்த ஓட்டம் மற்றும் திரவத்தை அகற்றும் செயல்பாட்டை பாதிக்கலாம்.கொழுப்பு கல்லீரல் நோயின் தீவிர நிகழ்வுகளில் கல்லீரல் சரியாக செயல்படாது.இந்த பிரச்சனை உள்ளவர்கள் உணவில் நெல்லிக்காய், பூண்டு, மஞ்சள், கீரைகள், வெள்ளை பூசணி ,சுரைக்காய், புடலங்காய், எலுமிச்சை சாறு, சிறுதானியங்கள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
1. வாழைப்பழம்2. திராட்சை3. பூண்டு4. புடலங்காய்5.தர்பூசணி6.இளநீர்7. மாதுளை8. கொத்தமல்லி9. எலுமிச்சை10. தக்காளி11.செலரி12. புதினா இந்த காய்கனிகள் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும்.
சளி வாட்டி வதைக்கும் போது அதில் இருந்து வெளியேற, சிம்பிளான கஷாயம் மூலம் சளியை கரைக்க முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர். அதற்கு 2 கிளாஸ் தண்ணீரில், கிராம்பு -3.மிளகு -3. சுக்குப் பொடி - கால் ஸ்பூன், மஞ்சள் பொடி - 2 சிட்டிகை, பிளாக் சால்ட் - 2 சிட்டிகை, நா.சர்க்கரை - 1 ஸ்பூன் ஆகியவை போட்டு கொதிக்கவிடுங்கள். அது 1. டம்ளராக சுண்டினால் கஷாயம் ரெடி.