25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


நலம் வாழ

Mar 24, 2026

உடல் வெப்பத்தைக் குறைக்கும் பன்னீர் ஆப்பிள் .

பன்னீர் ஆப்பிள் என அழைக்கப்படும் ஜம்புக்காய் சாறு கல்லீரல் மற்றும் மூளை சம்பந்தமான பிரச்சனைகள் வராமல் நம்மை காக்கும்.மேலும் காய்ச்சல், வாதம் மற்றும் கை கால் வலிப்பு போன்ற பிரச்சனைகளுக்கு உதவுகிறது.இது நீர்ச்சத்து நிறைந்து, உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி, உடல் வெப்பத்தைக் குறைத்து, உடலுக்குச் சக்தியளிக்கும் மருத்துவ குணங்கள் கொண்டது.பன்னீர்ஆப்பிள்(RoseApple/Jambu) 90% நீர்ச்சத்து கொண்ட சத்தான கோடைகாலப் பழமாகும். இது வெள்ளை முதல் அடர் ஊதா நிறத்தில், கேஷு ஆப்பிள் மற்றும் சாதாரண ஆப்பிள் கலந்த வடிவில் இருக்கும். இந்த பழம் கல்லீரல் மற்றும் மூளை ஆரோக்கியத்திற்கு நல்லது.தாகத்தைத் தணிக்கும், உடலுக்கு நீர்ச்சத்தளிக்கும்.வைட்டமின்B மற்றும்C சத்துக்கள் உள்ளன. பச்சையாக உண்ணலாம், சாலட் மற்றும் ஊறுகாய் செய்யப் பயன்படுகிறது.

Mar 23, 2026

கொழுப்பை குறைக்க உதவும் பப்பாளி

பப்பாளியை தினமும் சாப்பிடபித்தம் சம்பந்தமான நோய்கள் ,அல்சர் பிரச்னை குறையும்.தேவையற்ற கொழுப்பை குறைக்க உதவுகிறது.பப்பாளி பழத்தை தேனில் தொட்டு சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் நன்கு சுரக்கும். இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்.பப்பாளி செரிமானத்தை மேம்படுத்துதல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல், இதய ஆரோக்கியம் மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துதல் போன்ற பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.இதில் வைட்டமின்கள் A, C, E, நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளது.அதேசமயம் பப்பாளி பழம் மலச்சிக்கலை நீக்கி குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.இதில் உள்ள பாப்பைன் (Papain) என்சைம் புரோட்டீன் செரிமானத்தை எளிதாக்கி மலச்சிக்கலை சரிசெய்கிறது.அதிக வைட்டமின் சி இருப்பதால், உடல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து இரத்த அழுத்தத்தை சீராக்கி, இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. இதில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் (Antioxidants) உடலில் ஏற்படும் வீக்கம் மற்றும் அழுத்தத்தைக் குறைக்கிறது.வைட்டமின் A மற்றும் E சருமத்திற்கு ஊட்டமளித்து, முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.பப்பாளி இலைச் சாறு டெங்கு காய்ச்சலால் குறையும் பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும். 

Mar 21, 2026

கண்பார்வை அதிகரிக்க....

நெல்லிக்காய்ப்பொடி, சுக்குப் பொடி இரண்டையும் கொதிக்க வைத்து, வடிகட்டித் தேன் சேர்த்து அருந்த கண் பார்வை அதிகரிக்கும்.முருங்கைக்கீரை, துவரம் பருப்பு இரண்டையையும் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவடையும்.பீட்ரூட் இலைகளை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் கண் கோளாறுகள் குறையும்.மணத்தக்காளி இலைகளை சமைத்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை கூர்மையாகும்.

Mar 20, 2026

கரும்பு சாறு குடிப்பதால்......

1. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.2. ஒட்டுமொத்த செரிமான ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.3. எடை கட்டுப்பாட்டிற்கு உதவும்.4. நீரேற்றம் மற்றும் உற்சாகம் தரும்.5. உடலின் இயற்கையான நச்சு நீக்க செயல்முறைகளை ஆதரிக்கும்.6. சருமத்திற்கும் கூந்தலுக்கும் அற்புதங்களைச் செய்யும்.7. கல்லீரல் செயல்பாட்டை ஆதரிக்கிறது.8. எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

Mar 19, 2026

தினமும் ஒரு காய் சாப்பிட....

முத்து சோளம் - உடல் வலிமையை அதிகரிக்கும். தேங்காய் - ஞாபக சக்தியை அதிகரிக்கும்.பலாப்பிஞ்சு - சருமம், கண்களை காக்கும். தட்டைக்காய்(காராமணி) -  பக்கவாதத்தை தடுக்கும் அவரைக்காய் ஆக்ஸிஜனை அதிகரிக்கும். மாங்காய்-கொழுப்பை குறைக்கும். நூக்கல் -  உடல் எடையை குறைக்கும்.மொச்சை -ரத்த கொழுப்பை குறைக்கும். பரங்கிக்காய்-ரத்த அழுத்தத்துக்கு சிறந்தது.

Mar 18, 2026

முலாம்பழம் நீர் தன்மை மிகுந்த  பழங்களில் முக்கியமானது 

நீர் தன்மை மிகுந்த சில பழங்கள் உண்டு அதில் முக்கியமானது முலாம்பழம்.உடலுக்கு குளிர்ச்சி , உடனடிப் புத்துணர்ச்சி தருவதில் முலாம் பழம் பெரிதும் பயன்படும்.மலச்சிக்கல் உள்ளவர்கள் தேடிப்பிடித்து சாப்பிட வேண்டிய பழம்.முலாம் பழத்தின் விதை கூட நீர்க்கடுப்புக்கு நல்ல மருந்து.சில பெண்களுக்கு குழந்தை பிறந்ததும் தாய்ப்பால் சுரப்பதில்லை இதற்கு முலாம் பழத்தை சாப்பிட ஆரம்பித்தாலே போதும்.புரதம், சர்க்கரை சத்து, இரும்பு, கால்சியம், வைட்டமின் ஏ.சி. என்று பலவித சத்துக்கள் இதில் அடங்கியுள்ளன.

Mar 16, 2026

சர்க்கரை நோயுள்ளவர்கள் சாப்பிட கூடாத உணவுகள்.

கிழங்கு வகைகள்-உருளைக்கிழங்கு சேனைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு.இறைச்சி -ஆட்டுக்கறி, மாட்டுக்கறி, பன்றிக்கறி, ஈரல், மூளை, முட்டையின் மஞ்சள் கரு.எண்ணெய் வகைகள்-தேங்காய் எண்ணெய், வனஸ்பதி, பாமாயில் இவற்றில் சமைத்த திண்பண்டங்கள் மற்றும் உணவுகள்,பலகாரங்கள்-இனிப்பு பலகாரங்கள். சீப்ஸ், வடை முறுக்கு பூரி சமோசா போன்ற எண்ணெயில் பொரித்தவை.பால் வகைகள்-எருமை பால் வெண்ணெய், வனஸ்பதி.கஞ்சி வெள்ளை பிரெட் ப்ரைடு ரைஸ் ஃப்ரைடு நூடுலஸ் இலை அனைத்தும் அதிக ஆபத்தை விளைவிக்கும்.

Mar 14, 2026

மூட்டு வலி, மூட்டு தேய்மானம், ஜாயிண்ட் பெயின், நீர்க்கட்டு குணமாக....

சாமை அரிசி, கம்பு, மூங்கில் அரிசி ,கருப்பு உளுந்து,கருப்பு கவுனி, சிகப்பு கவுனி அரிசி.தனித்தனியாக பொன் நிறத்தில் வறுத்து பவுடர் பண்ணி வைக்கவும்.சாப்பிடும் அளவுக்கு கஞ்சி போல் காய்ச்சி சாப்பிடவும்.ஜாயிண்ட் பெயின், நீர்க்கட்டு, தசை இறுகி பையின் குறையும்.ரெண்டு ஸ்பூன் போட்டு தண்ணி போல் காட்சி டீ காபி போல் சாப்பிடலாம் நேரம் கிடையாது.நீரகட்டு குறைந்து தசை இறுகி,ஜாயிண்ட் பெயின் குறையும்.

Mar 13, 2026

சர்க்கரை கட்டுக்குள் வர மூக்கிரட்டை கீரை.

 சர்க்கரை நோயாளிகளுக்கு மிகச் சிறந்த வரபிரசாதம்.டயாலிசிஸ் வரை சென்றவர்கள் கூட இந்த மூக்கிரட்டையை மூன்று மாதம் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை சாப்பிட்டாலே போதும். டயாலிசிஸ் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. சர்க்கரை கட்டுக்குள் வரும். பூரண நலத்துடன் வாழலாம்.

Mar 12, 2026

கிட்னி கல் கரைய....

ஒரு இளநீர், நாட்டு சர்க்கரை ஒரு ஸ்பூன், பாசிப்பருப்பு ஒரு ஸ்பூன் ,சீரகம் ஒரு ஸ்பூன்,இளநீர் மூடி தொறந்து ,மூன்றும் சேர்த்து நைட்டு முழுவதும் வைத்து காலையில் சாப்பிடலாம்.11 நாள் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.11 நாள் முடிஞ்சு ஒரு நாள் விட்டு ஒரு நாள் சாப்பிட வேண்டும்.கிட்னி கல் குறைந்துவிடும். சிறுநீரக கற்கள் உருவாக பல காரணங்கள் உள்ளன. நீரிழப்பு  பொதுவான காரணியாகும். தினமும் குறைந்தது 8 முதல் 10 கிளாஸ் தண்ணீர் குடிப்பது உங்களை நீரேற்றமாக வைத்திருக்கும் மற்றும் சிறுநீரக கற்கள் உருவாகும் அபாயத்தை குறைக்கிறது. 

1 2 3 4 5 6 7 8 9 10 ... 46 47

AD's



More News