உளுந்து1/4 டம்ளர் எடுத்து கொள்ளவும். அதை கழுவி விட்டு குக்கரில் போட்டு11/2தண்ணீர் விட்டு வேக வைத்து அரைத்து கொள்ளவும்.பிறகு கொஞ்சம் தண்ணர் சேர்த்து, தேங்காய்பால்/ பால் விட்டு நாட்டு சர்க்கரை போட்டு கொதிக்க விட்டு இறக்கவும். சுவையான உளுந்து பால் ரெடி".இதனை குடித்து வருவதனால் மலச்சிக்கல், வயிறு உப்புசம், மாதவிடாய், நரம்பு தளர்ச்சி போன்ற பிரச்சனைகள் நீங்க உதவியாக இருக்கும்.
செம்பருத்தி பூவை வெயில் காய வைத்து அதை பொடி ஆக்கி பாலில் கலந்து தினமும் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் இதயம் பலம் பெரும்.செம்பருத்தி பூ உடல் வெப்பத்தை குறைத்து குளிர்ச்சி அளிக்கும்.செம்பருத்தி பூவை தண்ணீரில் கொதிக்க வைத்து தினமும் குடித்து வந்தால் ரத்த அழுத்தம் சீராகும்.பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து10 செம்பருத்தி பூக்களை போட்டு மூடி அடுப்பை அணைத்து விடவும், செம்பருத்தி கலந்த நீர் ஆறிய பின் வடிகட்டி அதனுடன்1/4 ஸ்பூன் எலுமிச்சை சாறு, தேவையான அளவு பனங்கற்கண்டு சேர்த்து நன்றாக கலக்கி குடித்து வந்தால் இதயத்தை பலப்படுத்தும்.
சக்கரை நோயாளிகளுக்கு,வாழைத்தண்டு, வாழைப்பிஞ்சு, வாழைப்பூ, வெண்டைக்காய், முட்டைக்கோஸ், புடலங்காய், பாகற்காய், அவரைப்பிஞ்சு, சாம்பல் பூசணி, சுண்டைக்காய் ஆகிய காய்கறிகளை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. அரைக்கீரை, கறிவேப்பிலை, புதினா கீரை, முசுமுசுக்கைகீரை, வல்லாரை கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, முருங்கை கீரை, சிறுகீரை, மணத்தக்காளி கீரை, துத்தி கீரை ஆகிய கீரை வகைளில் ஏதேனும் ஒன்றை பொறியலாக தினம் உட்கொள்வது சக்கரை நோயாளிகளுக்கு நல்லது. நாவல்பழம், நெல்லிக்காய் ஆகியவற்றை வேண்டிய அளவு சாப்பிடலாம். மலைவாழை வாரத்திற்கு இரண்டு சாப்பிடலாம். பேரிச்சம்பழம்,கொய்யா காய், பப்பாளி, ஆப்பிள், விளாம்பழம் போன்றவற்றை ஒரு நாளைக்கு50 கிராம் அளவு சாப்பிடலாம். மேலே உள்ள பழ வகைகளில் ஏதேனும் ஒன்றை சாப்பிடலாம். ஒரே நாளில் அனைத்து பழ வகைகளையும் சாப்பிட கூடாது.
கால் பிடிப்பு ( leg cramps):மெக்னீசியம் குறைபாடு.பசியின்மை (No Appetite): துத்தநாகம் (Zinc )குறைபாடு.உலர்ந்த கண்கள் மற்றும் வாய் (Dry Eyes & Mouth): வைட்டமின் A குறைபாடு.நாள் முழுவதும் சோர்வு (Tired All Day) வைட்டமின் D குறைபாடு.முடி உதிர்தல் (Hair Falling Out): இரும்புச்சத்து குறைபாடு,மனநிலை சோகமாக இருத்தல் (Feeling Low): வைட்டமின் B6 குறைபாடு.கைகள் மரத்துப்போதல் (Numb Hands: வைட்டமின் B12 குறைபாடு.உலர்ந்த அல்லது அரிப்புள்ள தோல் (Dryitchy Skin): வைட்டமின் E குறைபாடு.இனிப்பு உணவுகள் மீது ஏக்கம் (Sugar Cravings): மெக்னீசியம் குறைபாடு.குளிர்ச்சியான கைகள் மற்றும் மூச்சுத் திணறல். ( Cold Hands & Short of Breath): இரும்புச்சத்துகுறைபாடு.ஈறுகளில் ரத்தம் வடிதல் (Bleeding gums) வைட்டமின் C குறைபாடு.குழப்பமான மனநிலை (Foggy Mind): வைட்டமின்B12 குறைபாடு.
சளி, இருமல், வறட்டு இருமல் போன்றவற்றுக்கும் மருந்தாகும். தொற்றுநோய்களை எதிர்க்கும்.சீரண சக்தியை அதிகரித்து பசியை அதிகரிக்கும்.வயிற்றுப் பொருமலைத் தணிக்கும் .ஞாபக சக்தியை அதிகரிக்கும்.வெண்தோல், ஆஸ்துமா, மூச்சிறைப்பு.இடுப்புப்பிடிப்பு, சிறுநீரகப் பிரச்சினைகள் போன்றவற்றுக்கும் மருந்தாகும்.
இஞ்சியைத் தோல்நீக்கி, நறுக்கி உப்பு கலந்த மோரில் ஊறவைத்து வெயிலில் காயவைத்து எடுத்து வைத்துக்கொண்டு, அஜீரணம் இருக்கும்போது. சிறிது மென்று தின்றால் நிவாரணம் கிடைக்கும். தயிர் சாதத்துக்கும் தொட்டுக் கொள்ளலாம். |அல்சர் நோயால் அவதிப்படுபவர்கள் முட்டைக்கோஸை வேகவைத்து, அந்தச் சாறை தினசரி காலை வெறும் வயிற்றில் அரை தம்ளர் குடித்து வந்தால் தக்க நிவாரணம் கிடைக்கும்.சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு சிறுகாயம் ஏற்பட்டாலும் புண்கள் சீக்கிரம் ஆறாது.வாணலியில் போட்டு அதற்கு ஆவாரம் இலை விழுதை நல்லெண்ணெய் விட்டு, கைபொறுக்கும் அளவில் சூடு படுத்தி, புண்ணின் மீது வைத்து சுத்தமான பருத்தித் துணியால் கட்டவும். ஒருநாள் விட்டு ஒருநாள் செய்து வந்தால் புண்கள் காய்ந்து ஆறிவிடும்.
உப்பு சாப்பிடுவதை நிறுத்தினால் என்ன ஆகும் .முதல் நாளே உடல் மாறத் தொடங்கும். உடலில் தேங்கியிருந்த தேவையற்ற நீர் வெளியேற ஆரம்பிக்கும், வீக்கம் குறையும், உடல் லேசாக உணரும். இரண்டாம் நாளில்BloodPressure கீழே இறங்கும். மூன்றாம் நாளில் சிறுநீரகம் ஒரு நிம்மதி மூச்சு விடும். ஏனென்றால் அதிக உப்பை வடிகட்ட கஷ்டப்பட்ட அது இப்போது சுலபமாக வேலை செய்யும்.ஆனால் இங்கே ஒரு உண்மை இருக்கிறது. உப்பே வேண்டாம் என்பது தப்பு. உடலுக்கு சோடியம் அவசியம். நரம்புகள் செயல்பட தசைகள் இயங்க, இதயம் துடிக்க ,உப்பு வேண்டும். ஆனால் நாம் சாப்பிடுவது தேவையின் 3 மடங்கு அதிகம். அதனால் நாம் உப்பு அளவாக சாப்பிட வேண்டும்.
உலர் திராட்சையை தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், நெஞ்சில், சளி இருப்பவர்களுக்கு, நல்ல நிவாரணம் கிடைக்கும்.உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பையும் அகற்றும்.ரத்தசோகையை குணப்படுத்தும்.ஒரு டம்ளர் நீரில்10 உலர் திராட்சைகளை ஊற வைத்து, மறுநாள் காலையில் நீருடன் சேர்த்து உண்டால் சிறுநீரக தொற்று நோய்கள் குணமாகும்.உலர் திராட்சைகளை நீரில் கொதிக்க வைத்து, அருந்தினால் குடல் புண்கள் குணமாகும்.தினசரி இரவில் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் இந்த நீரை அருந்தி, திராட்சையைச் சாப்பிடுவது, சிறுநீரகத்தை சுத்திகரிக்கவும், கழிவுகளை வெளியேற்றவும், தொற்றுகளைத் தடுக்கவும் உதவும். இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.
* ரத்த அழுத்தம் குறையும்.*இதய நோய் வரும் அபாயம் குறையும்.* மூளை சிறப்பாக செயல்படும்.* களைப்பு, உடல் சோர்வு குறையும். *அதிகமாக தினமும் தூங்கினால் மன நலம் குறையும் அபாயம் உண்டு.* மதியத்தில் 1 - 3 மணி நேரத்துக்குள் 15-30 நிமிடங்கள் தூங்குவது சிறந்தது.
மூச்சுக்குழல் தசையின் திடீர் கருக்கத்தால்விக்கல் ஏற்படுகிறது, பெரும்பாலான நேரங்களில் தானாகவே நிற்கும், ஆனால் நீண்ட நேரம்விக்கல் தொடர்ந்தால் என்ன செய்ய வேண்டும் .குளிர்ந்த தண்ணீர் குடிக்கலாம்.ஒரு டிஸ்பூன் வெண் சர்க்கரையை நாக்கில் வைத்து மெதுவாக சாப்பிடவும். இது நரம்புகளை மறுசீரமைக்க உதவும்.ஒரு சொட்டு எலுமிச்சை சாறு நாக்கில் இட்டால் விக்கல் நிற்கும்.ஆழமாக மூச்சை இழுத்து, 10 முதல் 15 வினாடிகள் வரை மூச்கை பிடித்துக்கொண்டு பின்னர் மெதுவாக வெளியே விடவும்.மூக்கையும் வாயையும் மூடி சில விநாடிகள் மூச்சை வெளியில் விடாமல் இருக்க வேண்டும்.கவனத்தை மாற்றி வேறு ஒரு விஷயத்தில் ஈடுபட்டால் சில நேரங் களில் விக்கல் தானாக நிற்கும்.வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், நரம்புதளர்ச்சி போன்ற காரணங்களால் விக்கல் உண்டாகலாம். விக்கல் அடிக்கடியோ, தொடர்ந்தோ ஏற்பட்டால் சில உடல்நல பாதிப்புகள் அதற்கு காரணமாகஇருக்கலாம். மருத்துவரை கண்டிப்பாக அணுகுவது அவசியமானது.