25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


நலம் வாழ

Sep 18, 2024

பூச்சிகடிக்கு ஊமத்தை செடி

ஊமத்தை செடியின் பூ, இலை, காய் அனைத்தும் மருத்துவ குணம் நிறைந்தது. தேங்காய் எண்ணெயில் ஊமத்தை இலை சாற்றை காய்ச்சி புண்கள், வீக்கத்தில் தடவினால் குணமாகும். தேன், பூரான், வண்டு போன்ற ஏதாவதொன்று கடித்துவிட்டால் ஊமத்தை இலையை அரைத்து மஞ்சள் சேர்த்து பற்று போட வேண்டும்.ஊமத்தையை உட்புற உணவாக அல்லாமல் வெளிப்புறமாக எடுத்து கொள்வது நல்லது.

Sep 17, 2024

பாதத்தில் ரத்த  ஓட்டம் சீராக....

விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் சம அளவு எடுத்து பாதத்தில் தடவி வந்தால் பாதம் மிருதுவாக இருக்கும்.லேசாக சூடு செய்த வேப்பெண்ணெயை, விரல்களின் இடுக்கில் தடவினால் சேற்றுப் புண்கள் சரியாகும்.வாழைப்பூவை  பருப்பு சேர்த்துச் சமைத்து சாப்பிட்டு வந்தால், கை, கால்களில் வரும் எரிச்சல் நீங்கும். இரண்டு கால் விரல்களையும் தினமும் ஐந்து நிமிடத்துக்கு நீட்டி மடக்கும், பயிற்சியைச் செய்து வரவேண்டும். ரத்த  ஓட்டம் சீராகும்.

Sep 16, 2024

அந்த 3 நாட்கள் பெண்கள் கட்டாயம் செய்ய வேண்டியவை

மாதவிடாய் காலங்களில் போதுமான அளவு ஓய்வும் தூக்கமும் அவசியம்..ஓய்வின்றி வேலை செய்வது, ரத்தப்போக்கையும் வலியையும் அதிகரிக்கக்கூடும்.மாதவிடாயின்போது கார்போஹைட்ரேட், புரதம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.சூடான நீரைக்கொண்டு வயிற்றுப் பகுதியில் ஒத்தடம் கொடுத்தால் வலி குறைக்கும்.அடிக்கடி நாப்கினை மாற்ற வேண்டும்.. அதிகபட்சமாக 4 முதல் 6 மணி நேரத்துக்கு ஒருமுறை நாப்கின் கட்டாயம் மாற்ற வேண்டும்..

Sep 15, 2024

ABC பானம் குடித்தால்,மருத்துவரிடமே செல்ல தேவையில்லை

ஆப்பிள் -ஏ , பீட்ரூட்-பி, கேரட்- ஸி  இவற்றின் கூட்டணிதான் ABC பானம்.ஆப்பிள் கேரட், பீட்ரூட் தலா  ஒன்று எடுத்து தோலுடன் மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டி  குடிக்க வேண்டும்காலையில் ப்ரேக் ஃபாஸ்ட்டுக்கு முன்னால் '  ABC  பானத்தை பருக வேண்டு..இதை குடித்தால் சிறுநீரகம், கணையம் இதயம் ஆகிய முக்கிய உடல் உறுப்புகள் வலுப்பெறு.மொத்த உடல் ஆரோக்கியமும் காக்கப் படுவதோடு நோய் எதிர்ப்புச் சக்தி பல மடங்கு  அதிகரிக்கும்.

Sep 09, 2024

டைப் 2 வகை சர்க்கரைநோயைக் குறைப்பதற்கு துணைபுரியும் மாதுளை

ஹார்மோன் குறைபாடுகள் நீங்கி, கர்ப்பப்பை ஆரோக்கியமாக இருக்கும். மாதுளை, வயிற்றில் குவிந்துள்ள தேவையற்றக் கொழுப்புகளை நீக்கும் தன்மை உடையது. செரிமானப் பிரச்னைகளைச் சீராக்கி, உடல் எடை குறைவதற்கும், டைப் 2 வகை சர்க்கரைநோயைக் குறைப்பதற்கும் துணைபுரியும்

Sep 08, 2024

நார்ச்சத்து  அதிகம் உள்ள துவரம் பருப்பு

துவரம் பருப்பில் அதிக நார்ச்சத்து இருப்பதால் குடல் ஆரோக்கியத்திற்கும் செரிமானத்திற்கும் உதவுகிறது.சமச்சீர் உணவை வழங்குகிறது.புரதங்கள், தாதுக்கள் போன்ற அனைத்து வகையான ஊட்டச்சத்துக்கள் சமச்சீரான அளவில் உள்ளது.இதில் உள்ள பாஸ்பரஸ் வலுவான எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.டைப் 2 சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதில் உள்ள மக்னீசியம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் இரத்த சிவப்பணுக்களை அதிகளவில் உற்பத்தி செய்கிறது.

Sep 05, 2024

ஆரம்பநிலைச் சர்க்கரை வியாதிக்கு நல்ல பலனை அளிக்கும் கோவைக்காய்

வைட்டமின் ஏ, கால்சியம்,  ஃபோன்க் அமிலம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து ஆ கியவை இதில் நிறைந்துள்ளன. வயிற்றுப் புண், வாய்ப்புண், மூல நோய் வேதனைஆகியவற்றை நீக்கும். ஆரம்பநிலைச் சர்க்கரை வியாதிக்குக் கோவைக்காய் நல்ல பலனை அளிக்கும். கோவைக்காய் சாற்றை அடிக்கடி உட்கொண்டால் சர்க்கரை வியாதிக்குப் பக்கவிளைவும் அதிகம் ஏற்படு வதில்லை. பரம்பரையில் நீரிழிவு நோய்இருப்பவர்கள் கோவைக்காயை 35 வயது முதற்கொண்டே உ ணவில் சேர்த்துக்கொண்டால் நல்லது. நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம்.வாய்ப்புண்ணுக்குப் பச்சையாகவே கோவைக்காயை மென்று துப்பிவிட்டால் வாய்ப்புண் ஆறும். வயிற்றுப்புண் இருப்பவர்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் கோவைக்காயைச் சேர்த்துக்கொள்ளலாம். நீரிழிவு நோயாளிகளுக்குக் கோவைக்காய்நல்லது.வைட்டமின் பி 6, பி 12 ஆகிய சத்துகள் அதிகளவில் நிரம்பியுள்ளன. 

Sep 03, 2024

நூக்கல்  நரம்பு தளர்ச்சி ஏற்படாமல் பாதுகாக்கிறது

நூக்கலானது நுரையீரல் தொடர்பான பிரச்சனைகளைச் சரிசெய்கிறது. சீரண சக்தியை அதிகரிக்கிறது. மார்பக புற்றுநோய், பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய் வராமல் பாதுகாக்கிறது. தாய்ப்பால் நன்றாக சுரக்க உதவுகிறது. நரம்பு தளர்ச்சி ஏற்படாமல் பாதுகாக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

Sep 02, 2024

மருத்துவ   திறன் கொண்ட  பாகற்காய்

குடற்புழுக்களை நீக்கும் திறன் கொண்டது.ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்,தோல் சம்பந்தமான நோய்கள் குணமாக்கும்.புத்திக்  கூர்மையை உண்டாக்கும்.பித்தம் கபம் ஆகியவற்றை குணமாக்கும்.உடல் எடையை குறைக்க உதவும்.நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தும்.இதய ஆரோக்கியம் அதிகரிக்கும்.நுரையிரல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.கண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

Sep 01, 2024

வாழைத்தண்டு நோய் தீர்க்கும் காய்கறி

பித்தத்தைத் தணிக்கக்கூடியது. இயல்பாகச் சூடு  நிறைந்த தண்டு என்றாலும் சிறுநீரைப் பெருக்கும் வாழைத்தண்டுப் பச்சடி உடம்பு உஷ்ணத்தைப் போக்கும். வாத பித்தம், உடல் உஷ்ணம் முதலியவற்றைத் தணிக்கும். அதை உண்டால் குடலில் சிக்கிய மயிர், தோல், ஆகியவற்றை நீக்கும். இதில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து,வைட்டமின் பி, சி ஆகியவை நிறைந்துள்ளன. ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். ரத்தத்தில் உள்ள அசுத்த நீரைப் பிரித்தெடுக்கும். சிறுநீரகத்தின் செயலைச் சீராக்கிச் சிறுநீரகக் கல் அடைப்பைத் தடுக்கும்.வாழைத்தண்டைப் பொரியல், கூட்டாகச் செய்து சாப்பிடுவது மட்டுமே நமக்குத் தெரியும். அது பல வகைகளில் நமக்கு மருந்தாக உதவுகிறது.சிறுநீரகப் பிரச்னை மற்றும் அதீத உடல் பருமன் உள்ளவர்கள் தினமும் சாப்பிடலாம். இதில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால் சிறுநீரை  நன்றாக வெளியேற்றும்.

1 2 ... 27 28 29 30 31 32 33 ... 43 44

AD's



More News