25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


நலம் வாழ

Aug 30, 2024

இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் வாழை பூ 

வாழை பூ கொழுப்புகளை கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். இரத்த அழுத்தம், இரத்த சோகை வராமல் தடுக்கும். இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். உடலுக்கு தேவையான இன்சுலின் சுரக்க செய்யும். வயிற்று புண்களை ஆற்றும். செரிமான மண்டலம் சீராக செயல்பட உதவும். வாய் துர்நாற்றத்தை போக்கும். மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்யும். மேலும் மாதவிடாய் சுழற்சியை சீராக்கும்.

Aug 29, 2024

வெந்தயம்

வெந்தயம் பசியைக் குறைத்து உணவின் அளவைக் குறைப்பதோடு, உடல் பருமன் கொண்டவர்களின் பெரும் பிரச்னையாக உள்ள ரத்த அழுத்த உயர்வுக்கும் தீர்வு தருகிறது. வெந்தயம், நீரிழிவைக் கட்டுப்படுத்தும்., நீரிழிவு உள்ளவர்களுக்கு உடலில் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி, ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. வெந்தயத்தில் புரதம், நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. இயற்கையான எடைக் குறைப்புக்கு இது கைகொடுக்கும் மாதவிடாய்க் காலத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் வலியைக் குறைக்கவும், மாதவிடாய்ச் சுழற்சியை முறைப்படுத்தவும் வெந்தயம் பயன்படுகிறது.

Aug 28, 2024

நரம்பு சுருட்டல்  நீங்க…

வசம்பு, மஞ்சள், துளசி, சமபங்கு எடுத்து சோற்றுக்  கற்றாழையில் அரைத்து  தடவி  2 மணி நேரம் உலர விட்டு பின் கழுவ வேண்டும். இவ்வாறு 20 நாள் வரை செய்ய வேண்டும்.புங்கன் விதை மற்றும் ஆமணக்கு எண்ணெய் 10 மில்லி உடன் 5 மில்லி தேன் சேர்த்து 30 நாட்கள் சாப்பிட  வேண்டும். வலி வீக்கம் இருந்தால் பனிக்கட்டி கொண்டு ஒத்தடம் கொடுக்கலாம்.

Aug 23, 2024

தைராய்டு பிரச்சனையை தீர்க்க உதவும் இந்துப்பு

இந்துப்பு கலந்த இளஞ்சூடான நீரில் வாய்க் கொப்பளித்து வர, வாய் துர்நாற்றம் நீங்கிப் பல்வலி, ஈறுவீக்கம் போன்றவை குணமாகும். ரத்த அழுத்தத்தை சீராக்கும் தன்மை இதற்கு உண்டு. உடலில் நீர்ச்சத்தை தக்க வைக்கவும், ரத்தச் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்கவும்உதவுகிறது. தைராய்டு பிரச்சனையை தீர்க்க உதவுகிறது. இதய பாதுகாப்பிற்கு பேருதவி  புரிகிறது.

Aug 14, 2024

சொடக்கு தக்காளி நன்மை

சொடக்கு தக்காளி காய் குமிழ் போன்ற மேல் தோலுக்குள் இருக்கும். நன்கு முற்றிய பழத்தை சாப்பிட்டால் நுரையீரல் நோய்கள் நீங்கும். சிறுநீரகம் கல்லீரல் பிரச்சினைகள், சரியாகும். இந்த பழத்தில் இரும்புச் சத்து அதிகம் இருப்பதால் அநீமியா சோர்வு அறிவுத்திறன் குறைபாடுகள்  சரியாகும் கட்டிகளை கரைக்கும் ஆற்றலும் இந்த பழத்துக்கு உண்டு.

Aug 11, 2024

முட்டையை வேகவைக்கும் போது ....

 முட்டையை சிலர் பொதுவாக சோறு வேகவைக்கும் போது அந்த தண்ணீரிலேயே சோறுடன் சேர்த்து வேக வைப்பர்.. இன்னும் சிலர் குழம்பு செய்யும் போது அதிலும் முட்டையை ஓட்டுடன் முழுசாக வேக வைப்பார்கள்.. இது தவறானதாகும்.ஏனென்றால் அந்த பச்சை முட்டையிலிருந்து வெளிவரும் கெட்ட நீர் .ஒரு இறந்த பிணத்தை குளிப்பாட்டும் நீருக்கு சமமாகும். இதனால் கெடுதி அதிகம் ஏற்படும். ஆகையால் முட்டையை அவிக்கும் போது தனியாக ஒரு பாத்திரத்தில் வேகவைப்பது சிறந்ததாகும்..

Aug 07, 2024

முட்டையின் மஞ்சள் கரு சாப்பிடுவதை குறைத்து கொள்வது நல்லது.

ஓரிடத்திலேயே அமர்ந்து வேலை செய்பவர்கள், நாளைக்கு ஒரு முட்டை எடுத்துக் கொண்டால் போதுமானது, உடல் உழைப்பு அதிகமான வேலைகளில் இருப்பவர்கள், ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முட்டை வெள்ளை கரு சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிடுவதாக இருந்தால் 3 அல்லது 4 முட்டைகள் சாப்பிடலாம், இரவு நேரத்தில் முட்டை சாப்பிடுவதில் தவறில்லை. ஆனால் தூங்க செல்வதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பாக சாப்பிட வேண்டும்மஞ்சள் கருவையும் சேர்த்து முட்டைகளை அதிகமாக சாப்பிடுபவர்களின் உடலில் கொழுப்புச் சத்து அதிகமாகி, இதய நோய்கள் வரக்கூடும் .எனவே மஞ்சள் கரு சாப்பிடுவதை குறைத்து கொள்வது நல்லது.

Aug 06, 2024

தேவையற்ற கொழுப்பை குறைக்க அருகம்புல் சாறு உதவுகிறது

அடிக்கடி சிறுநீர் கழிப்பது அல்லது சிறுநீர் தடைபடுவது சொட்டு சொட்டாக சிறுநீர் போவது இதற்கெல்லாம் அருகம்புல் சாறு சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதலை குணப்படுத்துகிறது.படை, அரிப்பு, சொறி சிரங்கு, கடி போன்றவற்றை குணமாக்க உதவுகிறது. தேவையற்ற கொழுப்பை குறைக்க உதவுகிறது.

Aug 05, 2024

பக்கவாதம் வருவதை தடுக்க உதவும்  நாவல்பழம்

நாவல்பழத்தில்  வைட்டமின் ஏ, சி, சிட்ரிக் அமிலம் உள்ளது. ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதயத்தை பாதுகாக்கிறது. பக்கவாதம் வருவதை தடுக்க உதவுகிறது. ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. சிறுநீரக கற்களைக் கரைக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. மாலைக்கண் மற்றும் மலச்சிக்கலைப் போக்க உதவுகிறது.

Aug 04, 2024

வாய், தொண்டை, இரைப்பை, குடல்  புண்களை அகற்றும் கடுக்காய்

கடுக்காயில் உவர்ப்புசுவை தவிர மீதமுள்ள 5 சுவையும் இருக்கும். இதை  உண்பதன் மூலம் வாய், தொண்டை, இரைப்பை, குடல்  புண்களை அகற்றும்., மலச்சிக்கலை போக்கி குடல் சக்தியை ஊக்கப்படுத்தி இரத்ததை சுத்தப்படுத்தும். பல நன்மைகள் தரும் இதை சித்த மருத்துவத்தில் அதிகம் உபயோகிப்பர். இதை வெளிச்சம் படாத இடத்தில் சேமித்து வைத்தால்  ஒரு வருடம் வரை நன்றாக இருக்கும்.

1 2 ... 28 29 30 31 32 33 34 ... 43 44

AD's



More News