25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


நலம் வாழ

Oct 10, 2024

இருதய அடைப்பு, இருதய வலி நீங்குவதற்கு சூரணம்

சுக்கு, மிளகு, கருஞ்சீரகம் வகைக்கு 100 கிராம் வாங்கிவந்து தனித்தனியாக லேசாக வறுத்து தனித்தனியாக இடித்து பொடியாக்கி ஒவ்வொன்றும் 50 கிராம் அளவாக கூட்டி நன்றாக அரைத்து பாட்டிலில் பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டு காலை மாலை திரிகடி வீதம் நாட்டு சர்க்கரையுடன் கலந்து உண்டுவர இருதய அடைப்பு, நெஞ்சு எரிச்சல், மேல்மூச்சு வாங்குதல் நீங்கும் ஆஞ்சியோ, சர்ஜரி செய்ய வேண்டியதில்லை, ஸ்டன்ட் வைக்கும் அவசியமல்லை.

Oct 07, 2024

நின்ற நிலையில் தண்ணீர் குடிக்காதீர்கள்

45 முதல் 60 நாட்களுக்கு தினமும் தண்ணீருடன் திராட்சையும் (ஒரு இரவு ஊற  வைக்கப்பட்ட திராட்சை ) தினசரி உட்கொண்டால் இரத்த சோகை குணப்படுத்தலாம்.நின்ற நிலையில் தண்ணீர் குடிக்காதீர்கள். அது முழங்கால் வலிக்கு வழிவகுக்கிறது, எனவே எப்போதும் உட்கார்த்த நிலையில் தண்ணீர் குடிக்க வேண்டும்.காதுகளில் எலுமிச்சை சாறு 3 முதல் 4 சொட்டுகளை விட்டால், அது கடுமையான காது வலியை குணப்படுத்துவதில் மந்திரம் போன்றது.

Oct 06, 2024

குடல் வாலிலுள்ள கற்கள் வெளியேற…..

குடலில் சேர்ந்து இருக்கும் கற்களைஅகற்ற சுத்தமான விளக்கெண்ணெய் 30 மில்லியும் ,வாழைக்கிழங்கு சாறு அல்லது வாழைத்தண்டு சாறு 30 மில்லியும் கலந்து ,காலை நேரத்தில் உணவிற்கு முன் கொடுக்க வேண்டும்.இப்படி 3 நாட்கள் தர வேண்டும். பலன் குடல் வாலிலுள்ள கற்கள் வெளியேறி விடும். முதல் நாளே வலி இருக்காது.  3 நாட்களில் பூரணக் குணம் தெரியும்.

Oct 04, 2024

நோய்களை உருவாக்கும் உணவுகள் 

டால்டா - மாரடைப்பு, கேன்சர், உடல் பருமன்,இரத்த அழுத்தம். மைதா- மலச்சிக்கல், நீரிழிவு. கணைய பாதிப்பு.  வெள்ளை சர்க்கரை - எலும்பு தேய்மானம், நீரிழிவு, உடல்சூடு, தோல் நோய், ஆண்மையின்மை யின்மை. ரிபைண்ட் ஆயில்(சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் )  - அல்சர், புற்றுநோய், மூட்டுவலி, முடி நரைத்தல், நைஸ் உப்பு ( அயோடின் சேர்த்த உப்பு )  - பக்கவாதம், இரத்தகொதிப்பு, அறிவுத்திறன் பாதிப்பு. அஜீண மோட்டோ: ஜீரண உறுப்புகள் சிதைவு, நோய்களை உருவாக்கும் உணவுகளை தவிர்ப்பது நல்லது .

Sep 30, 2024

குப்பைமேனி இலை சாறு குடிப்பதால்….

குப்பைமேனி இலை சாறு குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன் சைனஸ் நோய்க்கு சிறந்த தீர்வாகும். ரத்த அழுத்தத்தால் உண்டான வாத நோய் குணமாகும். சொத்தைப் பல் உள்ளவர்கள் பல்லில் வலி ஏற்படும் போது 2 அல்லது 3 குப்பைமேனி இலைகளை நன்றாக கழுவி விரல்களால் நசுக்கி சொத்தை பல்லில் வைத்தால், அந்த  பல்லில் உள்ள கிருமிகள் வெளியேறி வலி நீங்கும். நோயாளிகளுக்கு நீண்ட நாட்கள் படுத்திருப்பதால் படுக்கைப்புண் ஏற்படும். இந்த படுக்கைப்புண் நீங்க, குப்பைமேனி இலையுடன் வேப்ப எண்ணெய் சேர்த்து அரைத்து புண்களில் தடவி வந்தால், விரைவிலேயே புண் ஆறிவிடும். படை சொறி, அரிப்பு போன்ற தோல் நோய் உள்ளவர்கள் குப்பைமேனி இலை உடன் மஞ்சள்  மற்றும் கல் உப்பு ஆகியவற்றை அரைத்து, அதை தடவி பின் சிறிது நேரம் கழித்து கழுவி வந்தால் தோல் நோய் இருந்த தடமே இல்லாமல் போய்விடும். அதே போல் சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும், குப்பைமேனி இலையுடன் சிறிது உப்பு சேர்ந்து அரைத்து புண்ணில் தடவி வந்தால் புண் விரைவிலேயே ஆறும். தேள், பூரான் பூச்சிகடிக்கு குப்பைமேனி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து கடித்த இடத்தில் தடவினால் விஷம் முறியும்.

Sep 29, 2024

ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும் உணவுகள்.

முருங்கைக்கீரை, சுண்டைக்காய் பாசிப்பயறு, எள்ளுருண்டை மணத்தக்காளி வத்தல்,அச்சு வெல்லத்தில் பிசைந்த கடலைஉருண்டை விதையுள்ள கருப்பு திராட்சை, நாட்டு மாதுளை, நாட்டுப் பேரீட்சை,*கறிவேப்பிலைத் துவையல், பீர்க்கங்காய்,பிரண்டை, முள்ளங்கி, பனை வெல்லமிட்டு கிண்டிய உளுந்துக்களி,உளுந்து, கேழ்வரகு தோசை, பொன்னாங்கன்னி கீரை ,தண்டுக்கீரை ,வெள்ளாட்டுக்கறி, ஈரல், எலும்பு சூப்,நெல்லிக்காய்ச் சாறு, பழரசம்

Sep 24, 2024

கை தட்டுவது ஒரு விதமான உடற்பயிற்சி

கை தட்டுவது ஒரு விதமான உடற்பயிற்சி தான், கை தட்டுவதன் மூலமாக ஏராளமான நோய்களைக் கட்டுப்படுத்த முடியும் இரண்டு உள்ளங்கைகளையும் சேர்த்து தட்டும்போது, மூளையின் பெரும்பான்மையான பகுதிகள் இயக்கப்படுகின்றன தினமும் காலையில் 10 முதல் 20 நிமிடங்கள் வரையிலும் கைகளைத் தட்டுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.அது நாள் முழுவதும் நம்மை சுறுசுறுப்பாக  வைத்திருக்க உதவும்.

Sep 22, 2024

வயிற்றை சுத்தம் செய்ய சுலப வழி.

வயிற்றை சுத்தம் செய்ய இதை மட்டும் செய்யல் போதும் வயிறு சுத்தமாகி, உடல் ஆரோக்கியமாக இருக்கும். அதற்கு ஏழு நாட்க்கள் தொடர்ந்து ,ஏதாவது ஒரு கீரை கடையல் குழம்பு அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும், இதில் முருங்கைக் கீரை பொரியல் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும் .இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை, இப்படி செய்தால் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

Sep 20, 2024

இரத்த அணுக்களின் அளவு அதிகரிக்க ஊற வைத்த உலர் திராட்சை

தினமும் இரவில் 5 உலர் திராட்சைகளை நீரில் ஊற வைத்து, மறுநாள் காலை அந்த நீரை குடித்துவிட்டு, திராட்சைகளை சாப்பிட வேண்டும். இதனால் இரத்த அணுக்களின் அளவு அதிகரிக்கும், கெட்ட கொழுப்புகள் குறையும், சிறுநீரகப் பிரச்சனைகள் குணமாகும். உடல் வெப்பமும் தணியும், பெண்கள் மாதவிடாய் பிரச்சனைக்கு அருமருந்து, மலச்சிக்கல், எலும்பு பிரச்சனைகள் தீரும் மற்றும் ஆண்கள் விறைப்புத் தன்மையை குணப்படுத்தும்.

Sep 19, 2024

வைட்டமின் பி. கே. நிறைந்துள்ள பச்சைப் பட்டாணி

வயிறு தொடர்பான புற்றுநோய் வராமல் தடுக்கும்.மறதி நோய் வராமல் காக்கும்.சுவாசப் பிரச்னைகளைச் சரிசெய்யும்.இதயத்தைப் பாதுகாக்கும்.சருமச் சுருக்கங்கள் வராமல் தடுக்கும்.எனர்ஜி கொடுக்கும் சிறப்பான உணவு இது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவைச் சமன்செய்யும்.வைட்டமின் பி. கே. நிறைந்துள்ளன.புரதம், நார்ச்சத்து, கால்சியம் நுண்ணூட்டச்சத்துக்கள் நிறைந்தது.

1 2 ... 26 27 28 29 30 31 32 ... 43 44

AD's



More News