இருதயம் மற்றும் பொது மருத்துவ பரிசோதனை மருத்துவ முகாம்.
ராஜபாளையம் ஜவுளி வர்த்தகர்கள் சங்கம், மதுரை அப்பல்லோ மருத்துவ மனை சார்பில் இருதயம் மற்றும் பொது மருத்துவ பரிசோதனை மருத்துவ முகாம் ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்க அரங்கில் நடந்த நிகழ்ச்சிக்கு ஜவுளி வர்த்தக சங்க தலைவர் குமார் தலைமை வகித்தார். செயலாளர் பாலகுமார் வரவேற்றார்.டிரஸ்டிகள் சுப்பிரமணிய ராஜா, செங்குட்டுவன் முன்னிலை வகித்தனர். ராஜபாளையம் மூத்தோர் நல சங்க நிர்வாகிகள், ஜவுளி வர்த்தக சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர்.முகாமில், ஹீமோகுளோபின், இ.சி.ஜி, ரத்த அழுத்தம்,சர்க்கரை அளவு, உள்ளிட்ட மருத்துவபரிசோதனை செய்யப்பட்டு பரிந்துரைகள் வழங்கப்பட்டன.200க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply